கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு இலவசப் பாடப் புத்தகங்கள், சீருடைகள் இன்றே வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதிமுதல் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி, 43 நாள் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (வெள்ளிக்கிழமை) திறக்கப்படுகின்றன. இந்தக் கல்வியாண்டில் சீருடை மாற்றப்பட்ட 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளின் மாணவ, மாணவிகள் புதிய சீருடை யில் பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளன்றே இலவச பாடப் புத்தகங்களும், இலவச சீருடைகளும் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||