மாவட்ட வாரியாக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் நீட் தேர்ச்சி விவரம்

அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் | தமிழகத்தில் நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகள் 1,337 பேர் தேர்ச்சி பெற்றனர். பொதுப்பிரிவினருக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக 119, இதர பிற்பட்டோர், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினருக்கு 96 என்றும் உள்ளது. இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்து, அரசு பயிற்சி மையங்களில் பயிற்சி முடித்தவர்களில் 7 பேர் 300 மதிப்பெண்களுக்கு மேலும், 8 பேர் 250 முதல் 300 மதிப்பெண்களும், 29 பேர் 200 முதல் 250 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் 392 மதிப்பெண் எடுத்துள்ளார். இவர்களில் எத்தனை மாணவர்களுக்கு மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைக்கும் என்பது கலந்தாய்வின்போது தான் தெரியும்.

Comments