பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் தொடக்கம்

கல்வி உரிமை சட்டத்தை கண்காணிக்க பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் தொடக்கம் பணிகள் குறித்து வசந்திதேவி விளக்கம் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள் ளது. இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் தலைவரும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வே.வசந்திதேவி, இயக்கத்தின் செயலாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ``பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு, கல்வி உரிமைச் சட்டம் - 2009, நாடாளுமன்றத் தில் நிறைவேற்றப்பட்டது. இது அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டம். ஆனால், நாடு முழுவதிலும் 10 சதவீத பள்ளிகள்தான் இந்தச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்துகின்றன. சட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய அரசுகள் பொறுப்பற்று இருக்கின்றன. மக்களிட மும் இதுகுறித்த புரிதல் இல்லை. எனவே, கல்வி உரி மைச் சட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறா என்ப தைக் கண்காணிக்கும் முயற்சி யாக பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மைக் குழு அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை மேற்பார்வையிடுவது, பள்ளிக்கு வேண்டியதை திட்டமிடுவது ஆகிய அதிகாரங்களைப் பள்ளி மேலாண் மைக் குழுவிடம்தான் கல்வி உரிமைச் சட்டம் அளித்துள்ளது. ஆனால், பள்ளிகளில் பெயரளவில்தான் அந்த குழுக்கள் இருக்கின்றன. பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடந்ததாகக் கையேட்டில் எழுதி, உறுப்பினரின் கையழுத்தைப் பெறுகின்றனர். மற்றபடி, பள்ளியில் எந்த மாற்றமும் நடப்பதில்லை. எனவே, பள்ளி மேலாண்மைக் குழுக்கள் உரிய வகையில் நிறுவப்பட்டு, அவற்றை சிறப்பாக இயங்க வைப்பதே எங்கள் இயக்கத்தின் குறிக்கோள்” என்றனர். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

Comments