TNEA சான்றிதழ் சரி பார்க்க தவறியவர்கள் 14-ந்தேதிக்குள் வரவேண்டும்

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: சான்றிதழ் சரி பார்க்க தவறியவர்கள் 14-ந்தேதிக்குள் வரவேண்டும் அண்ணா பல்கலைக்கழகம் தகவல் | என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்காக சான்றிதழ் சரிபார்ப்பு மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு எப்படி கலந்தாய்வில் கலந்து கொண்டு இடங்களை தேர்வு செய்யலாம் என்ற வீடியோ காண்பிக்கப்பட்டு வருகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு 42 உதவி மையங்களிலும் நடைபெற்று வருகிறது. சான்றிதழ் சரிபார்க்க தவறியவர்கள் எந்த நேரமும் அந்த மையத்திற்கு வரலாம். சான்றிதழ் சரிபார்க்க சென்னையில் மட்டும் 17-ந்தேதி கடைசிநாள். மற்ற மாவட்டங்களில் 14-ந்தேதி கடைசி நாள். இந்த தகவலை அண்ணாபல்கலைக்கழக மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி. ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.

Comments