டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகம் முழுவதும் 20 லட்சத்துக் கும் மேற்பட்டோர் எழுதியிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக் கான மதிப்பெண் மற்றும் தரவரிசை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் (கிரேடு-3), மற்றும் கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பல்வேறு பதவிகளில் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இந்த தேர்வை 20 லட்சத் துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். தேர்வில் பொது அறிவு மற்றும் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து ‘‘அப்ஜெக்டிவ்” முறையில் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு வினாவுக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. குரூப்-4 தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதும் தேர்வெழுதியவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் களில் பொறியியல் பட்டதாரிகளும் அடங்குவர். தேர்வு முடிந்து 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில், குரூப்-4 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று மாலை வெளியிடப்பட்டது. 20 லட்சம் பேர் தேர்வு எழுதியிருப்பதால் அனை வரும் ஒரேநேரத்தில் மதிப்பெண் விவரங்களை பார்க்க முயற்சிக் கும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் வாய்ப்பை கருத்தில் கொண்டு முதல்முறையாக 2 சர்வர் கள் மூலம் முடிவுகளை அறிந்து கொள்ள டிஎன்பிஎஸ்சி ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மதிப்பெண் மற்றும் தரவரிசை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக விரைவில் தேர்வுமுடிவுகள் வெளி யிடப்படும். அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கு நேர்காணல் கிடையாது. எனவே, எழுத்துத்தேர்வில் வெற்றி பெற் றாலே ஏதேனும் ஓர் அரசு பணி வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது. RESULT

ஐடிஐ தொழிற் பயிற்சிக்காக ஆக.11 வரை விண்ணப்பிக்கலாம்.

திண்டுக்கல், தொழிற்பயிற்சி நிலைய கல்வி சேர்க்கைக்காக ஆகஸ்ட் 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் முதல் பல்வேறு பொறியியல் மற்றும் இதர தொழிற்பிரிவுகளுக்கான வகுப்புகள் துவங்க உள்ளன. பாடப்பிரிவுகளின் தன்மைக்கேற்ப 8,10,12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இணையத்தில் விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேட்டினை பார்வையிடலாம். ஆர்வமும், தகுதியும் உடையவர்கள் உடன் விண்ணப்பங்களை இணையதளத்தில் சமர்பிக்கலாம். எந்த மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பம் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். ஒருவர் பல மாவட்டங்களில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கும் விண்ணப்பிக்கலாம்.ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பிப்பது அவசியம். மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். இதற்கான தேதி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இதன் மாணவர்கள் இதில் பங்கேற்று தாங்கள் விரும்பும் தொழிற்பிரிவு, தொழிற்பயிற்சி நிலையங்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். என்று கலெக்டர் வினய் கேட்டுக் கொண்டுள்ளார்.

கணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் புதிய விதிகள் அறிவிப்பு.

அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, கல்வித் தகுதியை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.புதிய விதிமுறைப்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, விரைவில் கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், 6,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2,000 கணினி ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர்.இருப்பினும், பல மாவட்டங்களில், கணினி அறிவியல் பாடம் நடத்த, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.இந்நிலையில், 748 அரசு பள்ளிகளில், தலா ஒரு கணினி அறிவியல் ஆசிரியரை நியமிக்க ஓராண்டுக்கு முன், பள்ளிக்கல்வி இயக்குனரகம் முடிவு செய்தது. ஆனால், புதிய பாடத்திட்டப்படி, கலை பாடப்பிரிவுக்கு, 'கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்' என்ற பாடமும், தொழிற்கல்விக்கு, கணினி தொழில்நுட்பம் என்ற பாடமும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்த பாடங்கள் முக்கியமானதாக உள்ளதால், அனைத்து பள்ளிகளிலும், கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கான, கல்வித் தகுதி மாற்றி அமைக்கப்பட உள்ளது.இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, புதிய கல்வித் தகுதிக்கான கோப்பை தயாரித்து, அரசின் அனுமதிக்காக அனுப்பியுள்ளனர்.தற்போதைய நிலையில், கணினி அறிவியல் பாடம் நடத்த, இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், கணினி பயிற்றுனர்கள் என்ற பதவியில் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, பாடம் எடுக்க வேண்டும்.பள்ளிக்கல்வி விதிகளின்படி, பிளஸ் 1, பிளஸ் 2விற்கு, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.எனவே, இந்த விதிகளின்படி, கணினி அறிவியல் பாட ஆசிரியர் பதவிக்கு, முதுநிலை படிப்புடன், பி.எட்., முடித்தவர்களை நியமனம் செய்ய, விதிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமி தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலந்து வருகிறது. இதை தடுப்பதற்காக ரூ.150 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. ஆங்கில வழிக்கல்வி கற்க தனியார் பள்ளி மோகம் இன்னும் உள்ளதால் அதை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் 50 சதவீதம் மாணவர்கள் சேர்க்கையில் ஆங்கில வகுப்பறைகள் அமைத்து கொள்ளலாம் என்று கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. ஆகவே வரும் காலங்களில் ஆங்கில வகுப்பறை ஒன்று இருந்தால் அதை 2-ஆக மாற்றிக்கொள்ளலாம். ஐ.ஏ.எஸ். அகாடமி மாணவர்களின் எதிர்காலத்தை மனதிலே கொண்டு மிக விரைவில் 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ். அகாடமி உருவாக்கப்பட உள்ளது. பல்வேறு நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சி.ஏ. எனப்படும் பட்டய படிப்பாளர் பயிற்சி இந்த ஆண்டு 25 ஆயிரம் மாணவர்களுக்கு முதல் கட்டமாக வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியை 500 பட்டய படிப்பு பயிற்றுனர்கள் (ஆடிட்டர்கள்) வருகிற டிசம்பர் மாதத்திற்கு முன்பு 10 நாட்கள் அளிப்பார்கள். நீட் தேர்வுக்காக அடுத்த வாரம் இறுதிக்குள் 412 மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுதும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஸ்மார்ட் வகுப்பு பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. 3 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பு கொண்டு வருவதற்கும், 9, 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அனைத்தும் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டு இன்டர்நெட் மூலமாக செய்திகளை தெரிந்து கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிந்து வெளி நாகரிகங்களை இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சிவகங்கையில் நூலகங்கள் அமைக்கப்பட்டு பழங்கால பொருட்கள் அங்கு வைக்கப்பட உள்ளது. இதற்காக நிலமும், ரூ.1 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு இன்று தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த 1-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மாநில அரசுக்கான 2,639 எம்பிபிஎஸ் இடங்கள் நிரம்பின. இதேபோல் 11 தனியார் மருத் துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான 862 இடங்கள் நிரப்பப்பட்டன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியின் 153 பிடிஎஸ் இடங்கள் நிரம்பின. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டுக்கான 915 பிடிஎஸ் இடங்களில் 246 இடங்கள் நிரப்பப்பட்டன. 669 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் வேலூர் சிஎம்சி உள்ளிட்ட 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 723 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 16 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 645 பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு இன்றும், நாளையும் நடக்க உள்ளது. நாளை சிறுபான் மையினர் பிரிவு மாணவர்க ளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. இந்தக் கலந்தாய்வில் தமிழ கத்தை பூர்வீகமாகக் கொண்டு மலையாளம் அல்லது தெலுங்கு மொழியை தாய்மொழியாகப் படித்த மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், தற்போது கலந்தாய்வு நடக்கிறது

பிறந்த தேதியில் திருத்தம் செய்ய விரும்பும் அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு தலைமைச் செயலாளர் கடிதம்

தமிழகத்தின் அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- பிறந்த தேதியை மாற்றுவது தொடர்பாக அரசு ஊழியர் வைத்துள்ள கோரிக்கை குறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் வழக்கு ஒன்றில் ஐகோர்ட்டு சில கருத்துகளை தெரிவித்திருந்தது. அதில், பிறந்த தேதியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று யாராவது அரசுக்கு கோரிக்கை விடுத்தால், அவர் 10-ம் வகுப்பு தேர்வை எழுதும்போது 15 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்ற தகுதியை அளவுகோலாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் அந்த வயது தகுதியை அவர் திருப்தி செய்யவில்லை என்றால், அவருக்கு அளிக்கப்பட்ட பணி ஆணையை ரத்து செய்துவிட்டு அனுப்பிவிடலாம். இதனால் இதுபோன்ற கோரிக்கைகள் வருவதை அரசு தவிர்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற கோரிக்கைகளை வைக்கும் ஊழியர்கள், 1977-ம் ஆண்டு வரை நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதும்போது 15 வயதை பூர்த்தி செய்திருந்தார்களா என்பதையும், 1978-ம் ஆண்டுக்கு பிறகு நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதும்போது 14 ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறார்களா என்பதையும் சரிபார்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரியில் பி.டெக் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் கடைசி நாள் ஆகஸ்ட் 4

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட கல் லூரியில் பி.டெக் உணவு தொழி நுட்பவியல் படிப்புக்கு விண்ணப் பிக்கலாம் என்று அந்த பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் சுக.பெலிக்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயல லிதா மீன்வளப் பல்கலைக்கழகம் 7 கல்லூரிகள் மற்றும் 33 உறுப்பு மையங்களுடன் செயல் பட்டு வருகிறது. இந்த பல்கலைக் கழகத்தின் கீழ் புதிதாக மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரி சென்னை மாதவரத்தில் தொடங்கப் பட்டுள்ளது. இந்த கல்லூரியில் இக்கல்வி யாண்டு முதல் தொடங்கப்படும் பி.டெக் (உணவு தொழில்நுட்ப வியல்) 4 ஆண்டு பட்டப்படிப் பானது டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் பாடத்திட்டத்தை கொண்டது. இந்த கல்லூரியில் 21 ஆயிரம் சதுரஅடியில் கல்விக் கூட வசதியுடன் ஸ்மார்ட் வகுப் பறைகள், குளிரூட்டப்பட்ட கணினி அறை, ஆய்வகம், நூலகம் மற்றும் இணையதள வசதியுடன் கூடிய விடுதி உள்ளது. உணவு தொழில்நுட்பவியல் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு உணவு பகுப்பாய்வாளர், தரக்கட் டுப்பாட்டு ஆய்வாளர், உணவு பதப்படுத்தும் பொறியாளர், உணவு வேதியிலர், புலனுணர்வு விஞ்ஞானி, ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் தொழில்முனைவோர் போன்ற வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த பட்டப்படிப்புக்கு விண் ணப்பிப்பவர்கள் மேல்நிலை வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் / கணினி அறிவியல் பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் www.tnjfu.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் மூலம் விண் ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண் ணப்பிக்க ஆக. 4-ம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 2-வது வாரத் தில் கலந்தாய்வு நடைபெற வுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மீன்வள ஆய்வாளர், உதவி ஆய்வாளர் தேர்வுக்கு அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

மீன்வளத் துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. தமிழக அரசின் மீன்வளத்துறை யில் 72 ஆய்வாளர் பணியிடங் களும் 12 உதவி ஆய்வாளர் பணியிடங்களும் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி 2018-ம் ஆண்டுக் கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் அறிவிக்கப் பட்டிருந்தது. தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 2-வது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் அதற்கான எழுத்துத்தேர்வு ஜூலை 15-ம் தேதி நடத்தப் படும் என்றும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால், தேர்வுக் கான அறிவிப்பு இன்னும் வெளியிடப் படவில்லை. இதனால், வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை எதிர்பார்த்து அத்தேர்வுக்கு தயா ராகி வரும் தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, மீன் வளத்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதை விட காலியிடங்களின் எண் ணிக்கை சற்று அதிகரிக்கும் என்று தெரிவித்தனர். மீன்வள ஆய்வாளர் தேர் வுக்கு பிஎப்எஸ்சி பட்டதாரிக ளும், எம்எஸ்சி விலங்கியல், எம்எஸ்சி மரைன் பயாலஜி பட்டதாரிகளும் விண்ணப்பிக் கலாம். மீன்வள உதவி ஆய் வாளர் தேர்வுக்கு பிஎப்எஸ்சி பட்ட தாரிகளும் பிஎஸ்சி விலங்கியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். மேலும், வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையின்படி, குரூப்-2 தேர்வுக்கான (நேர்முகத்தேர்வு உடைய பதவிகள்) அறிவிப்பு மே மாதம் முதல் வாரம் வெளி யிடப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் 1547 காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளனர். ஏற் கெனவே நடத்தப்பட்ட குரூப்-2ஏ (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) தேர்வுக்கு கலந்தாய்வு பணிகள் முடிவடைந்ததும் குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு வெளி யிடப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நகராட்சி ஆணையர் (கிரேடு-2), சார்-பதிவாளர் (கிரேடு-2), துணை வணிகவரி அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) முதலிய பல்வேறு துறைகளில் சார்நிலைப்பணிகளில் அடங்கிய பதவிகள் குரூப்-2 தேர்வின்கீழ் வருகின்றன. குரூப்-2 தேர்வையும், குரூப்-2-ஏ தேர்வையும் தனித்தனியாக நடத் துவதால் தேவையில்லாமல் டிஎன்பிஎஸ்சி-க்கும் தேர்வு எழுது வோருக்கும் காலதாமதம் ஆவதால் முன்பு இருந்து வந்ததைப் போன்று ஒருங்கிணைந்த தேர்வாக நடத்த வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் தேர்வும், குரூப்-4 தேர்வும் தற்போது ஒருங்கிணைந்த தேர்வாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS 2012 - 2016 - CV LIST | சிறப்பாசிரியர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியானது.

DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS 2012 - 2016 - CV LIST | சிறப்பாசிரியர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியானது.
Direct Recruitment of Special Teachers 2012-2016
PUBLICATION OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION

Dated: 27-07-2018

www.kalvisolai.com
Home

தமிழ்வழியில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

தமிழ்வழியில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். சீருடைகள் மாற்றம் ஈரோடு மாவட்டம் கோபி அருகே கூகலூரில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு தொடக்க விழா நடந்தது. விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு ‘ஸ்மார்ட்’ வகுப்பை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் சீருடைகள் மாற்றி அமைக்கப்படும். இதன் மூலம் தனியார் பள்ளிக்கும், அரசு பள்ளிக்கும் இடையே உள்ள வேறுபாடு அகலும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்காக 50 சதவீதம் இடம் ஒதுக்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கம்ப்யூட்டர் மயம் 9, 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவ-மாணவிகள் உலக செய்திகளை தெரிந்து கொள்ளலாம். பட்டயக் கணக் காளர் படிப்பு படிக்க பிளஸ்-2 முடித்த 25 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டு முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், பிளஸ்-2 படித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதத்துடன் இந்த அரசு பல்வேறு புதிய பாடத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளிக்கூடங்களில் 1 லட்சம் மாணவ-மாணவிகள் கூடுதலாக சேர்ந்து உள்ளனர். வரும் கல்வி ஆண்டில் 3 லட்சம் மாணவ, மாணவிகளை அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊக்கத்தொகை தமிழகத்தில் 4 ஆயிரத்து 622 நூலகங்கள் உள்ளன. இதில் கடந்த ஒரு மாதத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளனர். இலங்கையில் உள்ள நூலகத்துக்கு 1 லட்சம் சிறந்த நூல்கள் அரசின் சார்பில் விரைவில் வழங்கப்பட உள்ளது. தமிழ் வழி கல்வி படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த அரசு ஊக்கத்தொகை வழங்க உள்ளது. அதன்படி பள்ளியில் சிறந்த வருகை, ஒழுக்கம், நல்ல மதிப்பெண், சமூக சேவையில் ஆர்வம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரமும், பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.20 ஆயிரமும் என மொத்தம் 960 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அவர் கள் சிறந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேல்நிலை வகுப்புகளில் பாடங்கள் மாற்றத்துக்கு ஒப்புதல் அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- தற்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்த கலைத்திட்ட வடிவமைப்புக்குழு மற்றும் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுக்கள் இந்த கல்வியாண்டில் தொழிற்கல்வி மற்றும் கலைப்பிரிவுகளில் முதன்மைப் பாடப்பிரிவுகளின் பெயர்கள் மற்றும் முதன்மைப் பாடங்களில் மாற்றம் செய்து பரிந்துரை செய்துள்ளன. இதற்கு பள்ளிக் கல்வி வாரியம் ஒப்புதல் வழங்கி, அரசாணை வெளியிட பள்ளிக்கல்வி இயக்குனர் கோரியுள்ளார். அதனை அரசு பரிசீலித்து, மேல்நிலைப் பாடப்பிரிவுகளில் முதன்மை பாடமான கணினி அறிவியல் பாடம், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மற்றும் கலைப்பிரிவுகளில் உள்ள முதன்மைப்பாடங்கள், வணிக கணிதமும் புள்ளியியலும், அறவியலும் இந்திய பண்பாடும், செவிலியம் பொது பாடப்பெயர்களை மாற்றம் செய்துள்ளமைக்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. புதிய தொழிற்கல்வி மற்றும் கலைப்பிரிவு பாடப்பிரிவுகளின் பெயர் மற்றும் முதன்மைப் பாடங்களின் மாற்றம் இந்த கல்வியாண்டில் பிளஸ்-2 வகுப்பிற்கும், அடுத்த கல்வியாண்டில் பிளஸ்-2 வகுப்பிற்கும் நடைமுறைப்படுத்திட அனுமதி அளித்தும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளை ஆய்வு செய்ய இணை இயக்குநர்ககளை நியமித்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியீடு

மாணவ-மாணவிகளுக்கு 14 விதமான நலத்திட்ட உதவிகள் அரசால் வழங்கப்படுகின்றன. இந்த திட்டங்கள் சிறந்த முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வுசெய்ய இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியீடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாண விகளுக்கான நலத்திட்டங்கள் சிறந்த முறையில் செயல்படுத்தப் படுகிறதா என்பதை மாவட்டங்களில் ஆய்வுசெய்ய 20 இணை இயக்குநர்களை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம், நோட்டு, சீருடை, லேப்-டாப், சைக்கிள் உள்ளிட்ட 14 விதமான நலத்திட்ட உதவிகள் அரசால் வழங்கப்படுகின்றன. இந்த திட்டங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த முறையில் செயல்படுத்தப்படுகிறதா என் பதை ஆய்வுசெய்ய இணை இயக் குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக சீர்திருத்தம் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. புதிய கல்வி மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட் டுள்ளன. இந்த நிலையில், அனைத்து மாவட்ட கல்வி அலு வலகங்களையும் ஆய்வுசெய்ய வும், அரசால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மாவட்டங்களில் சரியான முறையில் செயல்படுத் தப்படுகிறதா என்பதை கண்காணிக் கவும் பள்ளிக்கல்வித் துறையைச் சேர்ந்த இணை இயக்குநர்களை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நியமித்து ஆணையிடப்படுகிறது. மாவட்டங்களில் பணி ஒதுக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர்கள் வருமாறு: சென்னை, திருவள்ளூர் - மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குநர் சி.உஷா ராணி, தூத்துக்குடி - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் வை.பாலமுருகன், கோவை, நீலகிரி, திருப்பூர் - அரசு தேர்வுகள் இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) எஸ்.சேதுராமவர்மா, விழுப்புரம் - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் எஸ்.உமா, காஞ்சிபுரம் - பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) பி.ஏ.நரேஷ். கரூர், நாமக்கல் - ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் கே.சசிகலா, திண்டுக்கல் - பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இணை இயக்குநர் சி.செல்வராஜ், வேலூர் - பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர்) பி.குப்புசாமி, கடலூர் - பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) எஸ்.சுகன்யா, மதுரை, தேனி - அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இணை இயக்குநர் எஸ்.நாகராஜ முருகன். தஞ்சாவூர் - தொடக்கக் கல்வி இணை இயக்குநர் (நிர்வாகம்) - கே.தேவி, சிவகங்கை, புதுக்கோட்டை - சி.அமுதவல்லி, திருநெல்வேலி, கன்னியாகுமரி - தொடக்ககல்வி இணை இயக்குநர் (அரசு உதவி பெறும் பள்ளிகள்) - ஆர்.பாஸ்கர சேதுபதி, தருமபுரி, கிருஷ்ணகிரி - அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குநர் கே.செல்வகுமார், சேலம், ஈரோடு - அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குநர் பி.பொன்னையா. விருதுநகர், ராமநாதபுரம் - கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் வை.குமார், நாகப்பட்டினம், திருவாரூர் - பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன், பெரம்பலூர், அரியலூர் - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் (பாடத்திட்டம்) பி.குமார், திருவண்ணாமலை - ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் என்.ஆனந்தி, திருச்சி - பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (என்எஸ்எஸ்) எம்.வாசு இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது ||| DOWNLOAD

அரசு பள்ளிகளில் செப். 30 வரை மாணவர் சேர்க்கை தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலை யில், சேர்க்கையை அதிகப்படுத்த பள்ளிக்கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. நடப்பு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் ஏ.கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு வழங்கப் படும் 14 விதமான நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுவாக பள்ளிகளில் மாண வர் சேர்க்கை ஜூலை மாத இறுதியிலேயே நிறைவடைந்து விடும். கடந்த சில ஆண்டுகளாக ஆகஸ்டு 31 வரை நீடிக்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் செப்டம் பர் 30 வரை நீடிக்கப்பட்டது. அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டி லும் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை நீட்டிப் பைப் பயன்படுத்தி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், வட் டார கல்வி அதிகாரிகளுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஏ.கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத் தின்படி பள்ளிகளில் நவம்பர் 30 வரை மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்கள், நிர்வாகிகள், பணியாளர்கள் மீதான குற்ற வழக்கு விவரத்தை வெளியிட வேண்டும் பள்ளிக்கல்வித் துறை அதிரடி உத்தரவு

பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மீதான குற்ற வழக்கு விவரங்களை பள்ளிகளின் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்க ளுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வேலூர் மாவட்டம் கொண்டா புரத்தைச் சேர்ந்த ஜெ.முகமது அலி சித்திக் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம், வேலூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் பாதுகாப் புக்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை தெரிவிக்க வேண்டும் என கோரியிருந்தார். இதையடுத்து, அந்தத் தகவல் களை அளிக்குமாறு திருவண்ணா மலை மாவட்ட மெட்ரிக் பள்ளி கள் ஆய்வாளருக்கு உத்தரவிடப் பட்டது. ஆனால், எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை. எனவே, முகமது அலி சித்திக் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ், “தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தங்களது இணையதளத்தில் பள்ளியின் தலைவர், அறங்காவலர்கள், முதல்வர், ஆசிரியர்கள், ஓட்டுநர் உள்ளிட்ட இதர பணியாளர்களில் யார் மீதாவது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதைத் தெரிவிக்க வேண்டும். இந்தத் தகவல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு பள்ளிக்கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். குற்ற வழக்குகள் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்கும் தகவல்களை அளிக்குமாறு மாவட்ட குற்ற ஆவண காப்பகங்களுக்கு மாநில குற்ற ஆவண காப்பகத்தின் இயக்குநர் அறிவுறுத்த வேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரக பொது தக வல் அலுவலர், மாநில குற்ற ஆவண காப்பக பொது தகவல் அலுவலர் ஆகியோர் ஆணை யத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டி ருந்தார். இந்நிலையில், மாநில குற்ற ஆவண காப்பகத்தின் பொது தகவல் வழங்கும் அதிகாரி இ.மகேஷ், மாநில தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், “தகவல் ஆணையத்தின் உத்த ரவை தொடர்ந்து மாநில குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி சீமா அகர்வால் ஜூலை 17-ம் தேதி அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட, ரயில்வே காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதேபோல, மத்திய குற்ற ஆவண காப்பகம், அனைத்து மாவட்ட குற்ற ஆவண காப்பகங்களும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது” என்று தெரி வித்துள்ளார். அதேபோல, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் துணை இயக்கு நரும், பொது தகவல் வழங்கும் அலுவலருமான ஆ.அனிதா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடந்த 20-ம் தேதி அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில், “பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் மீது ஏதேனும் குற்ற வழக்கு இருப்பின் அதன் விவரத்தை பொதுமக்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக பள்ளிகள் தங்கள் இணையதளத்தில் வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்” என தெரிவித்துள்ளார். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

சிறப்பாசிரியர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் இன்று (27.07.2018) வெளியாகிறது

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் தேர்வுக் கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டி யலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிடுகிறது. அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய பாடங்களில் சிறப்பாசிரியர் பதவியில் 1,325 காலியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 35 ஆயி ரத்து 781 பேர் எழுதினர். இந்த நிலையில், தேர்வெழுதிய அனை வரின் மதிப்பெண்களும் ஜூன் 14-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் இணையதளத்தில் வெளி யிடப்பட்டது. எழுத்துத்தேர்வானது 95 மதிப்பெண்ணுக்கு நடத்தப் பட்டது. அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு அதில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) பதிவுகாலத்துக்கு ஏற்ப அதிக பட்சமாக 5 மதிப்பெண் அளிக்கப் படும். இறுதியாக எழுத்துத்தேர்வு மதிப்பெண், பதிவுமூப்பு மதிப் பெண், இடஒதுக்கீடு அடிப்படை யில் பணி நியமனம் நடைபெறும். தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்ட நிலை யில் அடுத்த நிலையான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை இன்று வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. பணிநியமன அறிவிக்கையில் குறிப்பிட்டபடி, "ஒரு காலியிடத்துக்கு 2 பேர்" என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர் வர்கள் அழைக்கப்பட உள்ள னர். சான்றிதழ் சரிபார்ப்புப் பணி அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் நடத்துவதற்கான பணி கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் மும்முர மாக நடைபெற்று வருகின்றன. சான்றிதழ் சரிபார்ப்பில் தேவை யான சான்றிதழ்களுடன் (கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ், தமிழ்வழி கல்வி சான்றிதழ் போன்றவை) தேர்வர்கள் கலந்து கொள்ளும் வகையில் 2 வாரங்கள் அவகாசம் அளிக்கவும் சான்றிதழ் சரிபார்ப்பை ஒரேநாளில் நடத்தி முடிக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் அடுத்த சில தினங்களில் இறுதி தேர்வுப் பட்டியல் பெயர், பதி வெண், எழுத்துத்தேர்வு மதிப் பெண், பதிவுமூப்பு மதிப்பெண், இடஒதுக்கீடு உள்ளிட்ட விவ ரங்களுடன் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து, பணிக்கு தேர்வுசெய்யப்பட்ட சிறப்பாசிரி யர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டு பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பின்னர் பணிநியமன ஆணை வழங்கப்படும். சிறப் பாசிரியர் பணிக்கு ஆரம்ப நிலையில் சம்பளம் ரூ.27 ஆயிரம் அளவுக்கு கிடைக்கும். கூடுதல் கல்வித்தகுதிக்கு (பட்டப் படிப்பு, பி.எட். போன்றவை) ஒவ்வொன்றுக்கும் ஒரு இன்சென்டிவ் ( ஒரு இன்சென்டிவ் என்பது 2 இன்கிரிமென்டுகளை குறிக்கும்) வீதம் அதிகபட்சம் 2 இன்சென்டிவ் வழங்கப்படும். அந்த வகையில், உயர்கல்வித்தகுதி உடைய வர்களுக்கு சம்பளம் ரூ.30 ஆயிரத்துக்கு மேல் கிடைக்கும். இதுவரையில் சிறப்பாசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டு வந்தனர். தற் போதுதான் முதல்முறையாக போட்டித்தேர்வு மூலமாக தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள் வெளியீடு விடுமுறை காலமும் அறிவிப்பு

1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு விடுமுறை காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையில் சீர்திருத்தம் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பதவியேற்ற பின்னர் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக புதிய பாடத்திட்டம், தனியார் பள்ளிகளுக்கு இணையாக சீருடைகள் அறிமுகம் என கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 10, 11 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையிலும், அவர்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கையாகவும் பொதுத் தேர்வு தேதிகள் வகுப்புகள் தொடங்கிய அன்றே அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கை தற்போது 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி தேர்வு கால அட்டவணையும், 10-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இந்த சுற்றறிக்கை மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. தேர்வு கால அட்டவணை விவரம் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு:- * காலாண்டு தேர்வு- செப்டம்பர் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை, * அரையாண்டு தேர்வு- டிசம்பர் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை, * இறுதித் தேர்வு- ஏப்ரல் 10-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை. 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை:- * காலாண்டு தேர்வு- செப்டம்பர் 10-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை, * அரையாண்டு தேர்வு- டிசம்பர் 10-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை, * இறுதித் தேர்வு- ஏப்ரல் 8-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை(9-ம் வகுப்பு மட்டும்). விடுமுறை காலம் செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரையில் காலாண்டு விடுமுறை காலமாகவும், டிசம்பர் 23-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை காலமாகவும், ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 2-ந்தேதி வரை கோடை விடுமுறை காலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன் கூட்டியே விடுமுறை காலம் அறிவிக்கப்பட்டிருப்பது, மாணவர்கள், பெற்றோர்களுடன் சுற்றுலா செல்வது, சொந்த ஊர்களுக்கு செல்வது போன்ற திட்டங்களை வகுப்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

மாணவர்களுக்கான ஊக்கத் தொகை உயர்வு ஆண்டுதோறும் உயரும்

அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை உயர்த்தி முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு மருத்துவக் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் உள்ளிருப்பு பயிற்சி மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவர் அல்லாத முதுநிலை பட்டம், பட்டயம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு அரசு ஊக்கத் தொகை வழங்கி வருகிறது. இது கடந்த 2014-ம் ஆண்டு உயர்த்தப் பட்டது. தற்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இந்த ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கும்படி கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, மாதாந்திர ஊக்கத் தொகையை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்க முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, உள்ளிருப்பு பயிற்சி மாணவர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.13 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது. முதுநிலை பட்ட மருத்துவ மாணவர்களுக்கு முதலாண்டுக்கு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாகவும், 2-ம் ஆண்டுக்கு ரூ.26 ஆயிரத் தில் இருந்து ரூ.37 ஆயிரத்து 500 ஆகவும், 3-ம் ஆண்டுக்கு ரூ.27 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாகவும் உயர்த்தப் பட்டுள்ளது. முதுநிலை பட்டய மாணவர் களுக்கு முதலாண்டுக்கு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாகவும், 2-ம் ஆண்டுக்கு ரூ.26 ஆயிரத்தில் இருந்து ரூ.37 ஆயிரத்து 500 ஆகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு முதலாண்டுக்கு ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாகவும், 2-ம் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரத்தில் இருந்து 43 ஆயிரத்து 500 ஆகவும், 3-ம் ஆண்டு முதல் 6-ம் ஆண்டு வரையிலான ஊக்கத் தொகை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.45 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஊக்கத் தொகையுடன் உள்ளிருப்பு பயிற்சி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.600 உயர்த்தி வழங்கப்படும். அரசு மருத்துவர் அல்லாத முதுநிலை பட்டம், பட்டயம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1,000 உயர்த்தி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ரூ.44.17 கோடி ஆண்டுக்கு கூடுதலாக செலவாகும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள்.

அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் துவங்க, பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்து உள்ளது. தமிழகத்தில், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகள் ஆங்கில வழியில் படிப்பதையே கவுரவமாகவும், பெருமையாகவும் கருதுகின்றனர். இதனால், அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும், ஆங்கில வழி வகுப்புகளை துவங்க, தமிழக பள்ளிக்கல்வித் துறை அனுமதித்துள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்து உள்ள அரசாணை: Click Here FOR OFFICIAL G.O தற்போது, ஆங்கில வழி கல்வி முறைக்கு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் இடையே, பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இதனால், அரசு பள்ளி களில் ஆங்கில வழி கல்வி பிரிவு துவங்க, ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, ஆங்கில வழி பிரிவு துவங்க அனுமதி கேட்டுள்ளனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி பிரிவு துவங்க, அனுமதி அளிக்கலாம் என, அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.தற்போது அனுமதிக்கப் பட்ட தமிழ் வழி பிரிவுகளில் இருந்து மட்டும், ஆங்கில வழி பிரிவுகளை பிரித்து நடத்த வேண்டும். ஆங்கில வழி பிரிவு கோரும் பள்ளிகளில், 50 சதவீதம், கட்டாய தமிழ் வழியாக இருக்க வேண்டும். ஆறு முதல், பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களிடம், ஆண்டு ஒன்றுக்கு தற்போது வசூலிக்கப்படும் ஆங்கில வழி கற்பிப்பு கட்டணம், தொடர்ந்து வசூல் செய்யப்பட வேண்டும். இதை தவிர, ஆங்கில வழி பிரிவு மாணவர்களிடம், வேறு கட்டணம் வசூலிக்க கூடாது.மேலும், அனுமதி கேட்கும் பள்ளிகளில், ஆங்கில வழி பிரிவு நடத்துவதற்கான உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் திறன் பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்ட இதர வசதிகள், போதுமான அளவில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த உத்தரவின் படியே, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், ஆங்கில வழி பிரிவு துவங்க அனுமதி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

அதிக கட்டணம் வசூலிக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை தமிழக அரசு எச்சரிக்கை

அதிக கட்டணம் வசூலிக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கலாம் சி.பி.எஸ்.இ. நிறுவனம் கடந்த 15-ந் தேதி சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டது. அதில் கட்டமைப்பு வசதிக்கு ஏற்ப சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டிற்கான கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்தது. இவ்வாறு நிர்ணயிக்கப்படும் கல்வி கட்டண விவரத்தை பள்ளிகளின் விளம்பர பலகையில் ஒட்ட வேண்டும். பள்ளிக்கூடத்தில் உள்ள கட்டமைப்புக்கு ஏற்ப அந்த கல்வி கட்டணம் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் சரியாக உள்ளதா? என்று முதன்மைக்கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளியின் அங்கீகாரம் ரத்து கல்வி கட்டணம் அதிகம் என்று நினைத்தால் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யும் குழுவிடம் புகார் செய்யலாம். அந்த குழு, அதிகாரி ஒருவரை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அனுப்பி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்று ஆராயும். அப்போது கல்வி கட்டணம் அதிகம் என்று தெரியவந்தால், அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய சி.பி.எஸ்.இ. நிறுவனத்திற்கு சிபாரிசு செய்யப்படும். எனவே தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. மற்றும் அனைத்து தனியார் பள்ளிகளும் கல்வி கட்டணத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பள்ளிகளில் உள்ள விளம்பர பலகையில் ஒட்ட வேண்டும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் கொடுத்தால் முதன்மைக்கல்வி அதிகாரிகள் அந்த பள்ளிகள் மீது தொடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ச.கண்ணப்பன் கூறியுள்ளார்.

வெயிட்டேஜ் தேர்வுமுறை ரத்து; புதிய நடைமுறை அமல் ஜூன் 14-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வைத் தனியாகவும், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்துக்கு ஒரு போட்டித்தேர்வை தனியாகவும் நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை முடிவு

வெயிட்டேஜ் தேர்வுமுறை ரத்து; புதிய நடைமுறை அமல் ஜூன் 14-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வைத் தனியாகவும், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்துக்கு ஒரு போட்டித்தேர்வை தனியாகவும் நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை முடிவு ஜெ.கு.லிஸ்பன்குமார் சென்னை அரசு பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமன முறையில் அதிரடி மாற்றம் கொண்டுவரப் படுகிறது. தற்போதைய வெயிட் டேஜ் முறை ரத்து செய்யப் படுகிறது. அதற்குப் பதிலாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மேலும் ஒரு போட்டித்தேர்வு நடத்தி அதன்மூலம் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் வெயிட் டேஜ் மதிப்பெண் முறை அடிப்படையில் நியமிக்கப் படுகிறார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சிக்கு 60 சதவீத வெயிட்டேஜும், பிளஸ் 2 மதிப்பெண், பட்டப்படிப்பு மதிப்பெண், பி.எட். மதிப்பெண் (இடைநிலை ஆசிரியர் என்றால் பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண்) 40 சதவீத வெயிட்டேஜும் அளிக்கப்படுகிறது. இந்த முறையில், தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் படிப்பு ஆகியவற்றில் மதிப்பெண் குறைவாக எடுத்தி ருந்தால் அவர்கள் பணிவாய்ப்பை இழக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது. தகுதித்தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த தேர்வர்கள் பிளஸ் 2, பட்டப் படிப்பு ஆகியவற்றில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைத்தது. 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் போடப்படுவதில்லை என்றும் சமீப காலமாகவே பிளஸ் 2 தேர்வில் சுமாராக படிக்கும் மாணவர்கள் கூட 1000-க்கும் மேல் மதிப்பெண் பெறுகிறார்கள் என்றும், எனவே, மதிப்பெண் பாகுபாடு ஏற்படுத்தக்கூடிய வெயிட்டேஜ் முறையை கைவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர். வெயிட்டேஜ் முறையை ரத்து செய்துவிட்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் அரசை வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமன முறையில் பள்ளிக் கல்வித் துறை அதிரடி மாற்றத்தைக் கொண்டுவர இருக்கிறது. அதன்படி, தற்போது நடைமுறையில் இருக்கும் வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படுகிறது. அதற்குப் பதிலாக தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மேலும் ஒரு போட்டித்தேர்வு நடத்தி, அதன்மூலம் ஆசிரியர்களை தேர்வுசெய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிநியமனம் தொடர்பாக தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்திருந்தது. அதன்படி, தகுதித்தேர்வு என்பது ஆசிரியர்களின் பணிநியமன தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தேர்வு. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால், இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வேண்டி கோரிக்கை வைக்கிறார்கள். இதனால், தேவையற்ற சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. அச்சூழ் நிலையைக் களைய வேண்டு மானால் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பதைப் போன்று ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது தகுதியை நிர்ணயிக்கும் தனித்தேர்வாகவும், பின்பு அரசு பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர் களுக்கு தனியாக ஒரு போட்டித் தேர்வு நடத்தி ஆசிரியர்களைத் தேர்வுசெய்யும் முறையைப் பின்பற்றலாம் என பரிந்துரை வழங்கியது. பொதுப்பள்ளி கல்வி வாரியத்தின் பரிந்துரைகளை அரசு ஆய்வுசெய்தது. தற்போதைய நடைமுறையில் தகுதித்தேர்வு மதிப்பெண்ணுடன் வெயிட்டேஜ் மதிப்பெண் சேர்த்து அதன் அடிப்படையில் ஆசிரியர்களைத் தேர்வுசெய்யும்போது, பல ஆண்டுகளுக்கு முன்பு தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் தற்போது தேர்ச்சி பெற்றவர்களின் கல்வித்தகுதி மதிப்பெண்ணுடன் ஒப்பிடும்போது வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் வேறுபாடு காணப்படுகிறது. இதனால் சமவாய்ப்பு இல்லாத நிலை ஏற்படலாம் என்பது தொடர்ந்து அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. மேலும், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங் களில் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படவில்லை. தகுதித் தேர்வுக்கும் பணிநியமனத்துக்கும் தனித்தனி தேர்வு நடத்தப்படுகிறது. வெயிட்டேஜ் முறையால் தகு தித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் மதிப்பெண்ணை உயர்த் திக்கொள்ள மீண்டும் மீண்டும் தகுதித்தேர்வு எழுதும் சூழல் ஏற்படுகிறது. மேலும், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆசிரியர் நியமனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் தேர்வர்கள் மத்தியில் ஏற்படுகிறது. இந்த நிலையில், பொதுப்பள்ளி வாரிய பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்யும் வகையில் பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் கடந்த ஜூன் 14-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வைத் தனியாகவும், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்துக்கு ஒரு போட்டித்தேர்வை தனியாகவும் நடத்தலாம் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களின் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தகுதித்தேர்வாகவும் (Qualifying Examination), அரசுப் பள்ளிகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் களைத் தேர்வுசெய்ய, உரிய கல்வித்தகுதியுடன், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று ஆசிரியர் தேர்வு வாரி யம் மூலமாக தனியாக ஒரு போட்டித் தேர்வை (Competitive Exami nation) நடத்தி ஆசிரியர் தேர்வு செய்யும் முறையைப் பின்பற் றலாம் என முடிவு செய்து ஆணை யிடப்படுகிறது. இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியில் இருந்தே மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்ய தொடங்கினர். தமிழ்நாட்டில் 509 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப் படுகின்றன. நடப்பு கல்வி ஆண் டில் பொது கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்பில் சேர 1 லட் சத்து 59,631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர் களில் 1 லட்சத்து 4,453 பேர் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து கலந்தாய்வுக்கு தகுதி பெற்றனர். கடந்த ஆண்டு வரை பொறி யியல் படிப்புகளுக்கு நேரடி கலந் தாய்வு முறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந் தாய்வு நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளது. எனினும் மாற்றுத்திற னாளிகள், முன்னாள் ராணுவத்தின ரின் வாரிசுகள், விளையாட்டு வீரர் கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கும் தொழிற்கல்வி பிரிவு மாணவர் களுக்கும் வழக்கம்போல் நேரடி கலந்தாய்வு நடத்தி முடிக்கப் பட்டது. இந்த நிலையில், பொதுப்பிரி வினருக்கு ஆன்லைன் கலந்தாய்வு முறை ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை 5 அமர்வுகளாக நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. ஒவ்வொரு அமர்வுக்குரிய கட் ஆப் மதிப்பெண், அதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கலந்தாய் வுக் கட்டணம் செலுத்த நிர்ணயிக்கப் பட்ட காலக்கெடு உள்ளிட்ட விவ ரங்களை அண்ணா பல்கலைக் கழகம் இணையதளத்தில் வெளி யிட்டது. அதோடு மாணவர்களுக் கும் அதற்கான போர்ட்டல் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. முதல் அமர்வுக்கு 200 முதல் 195 கட் ஆப் மதிப்பெண் பெற்ற 10,000 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கலந்தாய்வுக்கு கட் டணத்தை ஆன்லைன் மூலமாக வும் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் மூலமாகவும் செலுத்த 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆன் லைன் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்தே மாணவர்கள் கல்லூரியை தேர்வுசெய்யத் தொடங்கியதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்ட படி, மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான கல்லூரிகள் மற் றும் பாடப்பிரிவுகளை வரிசைப் படி தேர்வு செய்து நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக் குள் அதை இறுதி செய்துவிட வேண்டும். அவர்களுக்கு 28-ம் தேதி (சனிக்கிழமை) தரவரிசை மற்றும் விருப்பத்துக்கு ஏற்ப தற்காலிகமாக கல்லூரி மற் றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப் படும். அதை 29-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்குள் அவர்கள் உறுதி செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து 30-ம் தேதி (திங்கள்கிழமை) அவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை பிடிஎப் வடிவில் இ-மெயில் மூலமாக அனுப்பப்படும். அதை பதிவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி யில் ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் சேர்ந்துவிட வேண்டும். ஒரு வேளை தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரி மற்றும் பாடப்பிரிவை ஏற்கவில்லை எனில் அவர்கள் 2-வது அமர்வு கலந் தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். மேற்கண்ட முறையில் ஆன் லைன் கலந்தாய்வுகள் 5 அமர்வு களாக ஒவ்வொன்றாக நடத்தப் படும்.

TNSCHOOLS 2018-2019 SCHOOL CALENDAR DOWNLOAD | 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

TNSCHOOLS 2018-2019 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.| DOWNLOAD

அரசு கலைக்கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளில் காலிப்பணியிடம் 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

அரசு கலைக்கல்லூரிகளில் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி! அரசு கலைக்கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளில் காலிப்பணியிடம் 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. புதிய பாடத்திட்டங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக் குறியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கலை அறிவியில் கல்வி பயில மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த கல்வியாண்டில் பொறியியல் கல்வியை விட அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதிலேயே மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தது இதனால் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் கூடுதலாக 20 சதவீத இடம் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு அதில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தற்போது வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஆண்டுக்காண்டு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதற்கேற்ப புதிய உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வந்தாலும் முழுமை பெறுவதில்லை. மாநிலத்தில் சுமார் 600 கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப கவுரவ விரிவுரையாளர்களும் இல்லை. இதனிடையே கடந்த 2016-17ம் ஆண்டில் ஆயிரத்து 863 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த இடங்களும் நிரப்பப்படவில்லை. இவ்வாறாக சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு தேவைப்படுகின்றனர். இடையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து 500 பேர் மாறுதல் மூலம் நியமிக்கப்பட்டனர். இந்த ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வும் அறிவிக்கப் படவில்லை. சில அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் கெஸ்ட் லெக்சரர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிதி மூலம் தற்காலிக ஆசிரியர்களை வைத்து சமாளிக்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு அறிவித்தபடி காலதாமதமின்றி ஆசிரியர்களை உடனே நியமிக்க உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

TET WEIGHTAGE METHOD CANCELLED | இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை மாற்றி போட்டித்தேர்வு முறை அறிமுகம்.

TET WEIGHTAGE METHOD CANCELLED | இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை மாற்றி போட்டித்தேர்வு முறை அறிமுகம். ஆசிரியர் தகுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போட்டித்தேர்வினை எழுதலாம் | ஆசிரியர் பணி நியமனத்திற்கான ‘வெயிட்டேஜ்’ முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த ‘வெயிட்டேஜ்’ முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும். தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேற்கண்ட தகவலை அரசாணையில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார். DOWNLOAD

ஆசிரியர் ஆக விரும்புபவர்களுக்கு பி.ஏ.-பி.எட். 4 ஆண்டு பட்டப்படிப்பு அடுத்த ஆண்டு முதல் அமல்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், மக்களவையில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மசோதாவை தாக்கல் செய்தார். அதன் மீது நடைபெற்ற விவாதத்துக்கு பதில் அளித்தார். அப்போது, ஆசிரியர் ஆக விரும்புபவர்களுக்காக, அடுத்த ஆண்டு முதல், பி.ஏ.-பி.எட்., பி.எஸ்சி.-பி.எட். மற்றும் பி.காம்.-பி.எட். ஆகிய 4 ஆண்டு கால ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தொடங்கப்படும் என்று அவர் கூறினார். எனவே, 12-ம் வகுப்பு முடித்தவுடன் இந்த படிப்பில் சேரலாம் என்று அவர் கூறினார். ஏற்கனவே, பி.ஏ.-பி.எல். என்ற 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு இருப்பதுபோல், இந்த படிப்பு தொடங்கப்படுவதாக பிரகாஷ் ஜவடேகர் கூறினார். 15 லட்சம் வகுப்புகளில், கரும்பலகைகளுக்கு பதிலாக, டிஜிட்டல் போர்டுகள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு நேரடி சேர்க்கை

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ஜி.அறிவொளி, வெளியிட்ட செய்திக்குறிப்பு:- 2018-19-ம் கல்வி ஆண்டில் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்ட யப் படிப்பு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 6-ம் தேதியும் 2-வது கட்ட கலந் தாய்வு 19-ம் தேதியும் நடத்தப் பட்டு மாணவ-மாணவிகள் சேர்க் கப்பட்டுள்ளனர். தற்போது, மேற்கண்ட கலந் தாய்வுகளில் கலந்துகொள்ள தவறியவர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் பயன்பெறும் வகையில் ஜூலை 24 (இன்று) முதல் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங் களிலும் நேரடி மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவி கள் தங்கள் கல்விச் சான்றிதழ் களுடன் நேரடி சேர்க்கை நடைபெற வுள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்களை அணுகுமாறு கேட்டுக்கொள் ளப்படுகிறார்கள். சென்னை திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பெண்ணாத்தூர், கடலூர் மாவட்டம் வடலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு பெருந்துறை, பெரம்பலூர், திருவாரூர் மன்னார்குடி, புதுக் கோட்டை, விருதுநகர் பாளை யம்பட்டி, தேனி உத்தமபாளையம், நீலகிரி கோத்தகிரி, திருநெல்வேலி முனைஞ்சிப்பட்டி ஆகிய 12 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் (டயட்) நேரடி மா்ணவர் சேர்க்கை நடைபெறும்.

படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மீண்டும் தொடர்வது எப்படி?

பல்வேறு காரணங்களால் சிலர் படிப்பை பாதியிலேயே கைவிட்டிருக்கலாம். குடும்ப சூழல், பொருளாதார வசதிக்குறைவு, பெற்றோரின் திடீர் இழப்பு, திடீர் விபத்தால் உடல் பாதிப்பு, கற்க இயலாமை என்பது போன்ற காரணங்களால் பலர் படிப்பை பாதியிலேயே நிறுத்துவது உண்டு. வயது ஏறிவிட்டால், இடை நின்றவர்களை பள்ளி - கல்லூரிகளில் சேர்க்க தயங்குவார்கள். ஆனால் கல்வியை இழந்தபிறகுதான் பலருக்கும் ஏன் படிப்பதை நிறுத்தினோம்? என்ற எண்ணம் எழும். நம் பெற்றோர் காலத்தில், படிப்பை பாதியில் விட்டவர்கள் மற்றும் பள்ளி செல்லாதவர்களுக்கு அடிப்படை கல்வி அறிவு போதிப்பதற்காக அறிவொளி இயக்கங்கள் செயல்பட்டன. இந்த இயக்கத்தால் எண்ண கற்றுக் கொண்டவர்களும், பெயர் எழுதப்படித்தவர்களும் அனேகம். இன்றும் அதுபோல படிப்பை பாதியில் விட்டவர்கள், இடைநின்றவர்கள் கல்வியைத் தொடர்வதற்காக திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. தேசிய அளவில், படிப்பில் இடை நின்றவர்கள் கல்வி வளர்ச்சிக்காக தேசிய திறந்தநிலைப் பள்ளி (National Institute of Open Schooling-NIOS) எனும் மத்திய அரசு அமைப்பு செயல்படுகிறது. இந்த பள்ளிக் கல்வி அமைப்பில் 8-ம் வகுப்புக்கு குறைந்த படிப்பில் இடை நின்றவர்கள், நேரடியாக 10-ம் வகுப்பு தேர்வெழுத முடியும். அதற்கு அந்த நபர் 10-ம் வகுப்பு படிக்கும் வயதான, 14 வயதை எட்டியிருந்தால் போதும். எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் எந்த வகுப்புடன் படிப்பை நிறுத்தியிருந்தாலும் மேற்கொண்டு படிப்பை தொடர முடியும். அதேபோல 10, 11-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தியவர்கள், நேரடியாக 12-ம் வகுப்பை தேர்வெழுதலாம். இப்படி தேர்வெழுதி தேர்ச்சி பெறுபவர்கள், அதற்குப் பின்பு பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ நேரடியாகச் சேர்ந்து படிக்க முடியும். தேசிய சிறந்த நிலைப் பள்ளிக்கு நாடு முழுவதும் பல்வேறு கிளை மையங்கள் செயல்படுகின்றன. தமிழகத்திலும் இந்த அமைப்பிற்கு கிளை உள்ளது. சென்னை மண்டல கிளையில் தமிழக மற்றும் பாண்டிச்சேரி மாணவர்கள் கல்வி பெறலாம். படிப்பை இடைநிறுத்தியவர்கள் சுய உறுதிமொழி அளித்து சேரலாம். வயது சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிப்பாடங்களில் ஒன்று அல்லது 2 பாடங்கள், மேலும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், வர்த்தகம், உளவியல், இந்திய கலாச்சாரம், ஓவியம், டேட்டா எண்ட்ரி ஆபரரேஷன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் இருந்து ஏதேனும் 3 பாடங்கள் தேர்வு செய்து மொத்தம் 5 பாடங்களை படிக்க வேண்டும். கூடுதலாக ஒன்றிரண்டு விருப்பப் பாடங்களை படிக்கவும் வழி உண்டு. விண்ணப்பக் கட்டணம், புத்தக கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையதளம் மற்றும் அலுவலகங்களில் விசாரித்து தெரிந்து கொள்ளலாம். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணத்தில் சலுகை உண்டு. பாடவகுப்புகளும் நடைபெறும். விருப்பம் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம். ஆண்டிற்கு 2 நிலைகளாக பிரித்து மாணவர் சேர்க்கையில் இடம் அளிப்பார்கள். ஆரம்பகாலத்தில் ஆங்கிலம், இந்தி வழியில் மட்டுமே படிக்க முடிந்த இந்த அமைப்பில் இப்போது தமிழ் வழியிலும் படிக்க முடியும். இது பற்றிய விவரங்களை www.nios.ac.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். சென்னை மண்டல அலுவலகத்தை என்ற 044- 28442239 தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். சென்னை மண்டல அலுவலக முகவரி : மண்டல இயக்குனர், என்.ஐ.ஓ.எஸ்., அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, லேடி வெல்லிங்டன் வளாகம், திருவல்லிக்கேணி, சென்னை-5.

டிப்ளமோ நர்சிங் படிப்பில் சேர விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படுகிறது

டிப்ளமோ நர்சிங் படிப்பில் சேர விண்ணப்பம் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் இன்று (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் வருகிற 30-ந் தேதி வரை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ செயலாளருக்கு 31-ந் தேதிக்குள் வந்து சேர வேண்டும். இந்த தகவலை மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் டாக்டர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.


மாநகராட்சிப் பள்ளிகளை பழுதுபார்க்க நடவடிக்கை புதுப்பொலிவு பெறும்

சென்னை மாநகராட்சியின் கட்டுப் பாட்டில் இயங்கி வரும் பள்ளி களை ரூ.7 கோடியில் பழுது பார்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநகராட்சியில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வரு கின்றன. அதில் 85 ஆயிரத்து 910 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப் பள்ளிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 186 ஆசிரியர், ஆசிரியைகள் பணி புரிந்து வருகின்றனர். மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகளில், முந்தைய ஆண்டுகளை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. பல பள்ளிகளில் 11-ம் வகுப்பில் சேர மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. அதன் காரணமாக மாநகராட்சிப் பள்ளி களின் கட்டமைப்பை ரூ.7 கோடி செலவில் பழுது பார்த்து மேம் படுத்த மாநகராட்சி திட்டமிட் டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “மாநகராட்சிப் சுற்றுச்சுவர்கள், கழிவறைகள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றை பழுது பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ரூ.7 கோடியில் டெண்டரும் கோரப் பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும். இப்பணிகள் முடியும்போது, மாநகராட்சிப் பள்ளிகள் அனைத்தும் புதுப் பொலிவு பெறும்” என்றனர்.

இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இடைநிலை ஆசிரியர்களுக் கான தகுதித்தேர்வு (தாள்-1) கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி நடத்தப்பட்டது. அத் தேர்வை 2 லட்சத்து 41 ஆயிரத்து 555 பேர் எழுதினர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப் பெண் சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) பதி வேற்றம் செய்யப்பட்டு இருக்கி றது. தகுதியுடைய இடைநிலை ஆசிரியர்கள் இந்த இணைய தளத்தில் தங்கள் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப் பிட்டு மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு ஒரு மாதம் காலஅவகாசம் அளிக்கப் படுகிறது. இதில் ஏதேனும் சந்தே கம் இருந்தால் 044-28272455, 7373008144, 7373008134 இந்த ஹெல்ப்லைன் எண்களைத் தொடர்புகொள்ளலாம். தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் செல்லத்தக்கது என்பது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி தொடங்குகிறது.

ஆன்லைன் கலந்தாய்வு 25-ம் தேதி தொடங்குகிறது 5 அமர்வுகளாக நடைபெறும். பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி தொடங்குகிறது. 5 அமர்வுகளாக நடைபெறும் இந்தக் கலந்தாய்வு ஆகஸ்ட் 19-ம் தேதி நிறைவடைகிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 509 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ளன. நடப்பாண்டு பொறியியல் படிப்புகளில் சேர ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 பேர் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். பொறியியல் படிப்புக்கு விண் ணப்பித்தவர்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 28-ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வும், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில், பொதுப்பிரி வினருக்கான ஆன்லைன் கலந் தாய்வு ஜூலை 25-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் நேற்று அறிவித்துள்ளார். இந்த கலந்தாய்வானது 5 அமர்வுகளாக நடைபெற உள்ளது. கலந்தாய்வு குறித்த கூடுதல் விவரங்களை www.tnea.ac.in என்ற இணையதளத் திலும், 1800 425 9779 என்ற உதவி எண்ணில் தொடர்புகொண்டும் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ் வாசிப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி.

சென்னை மாநகராட்சி வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி கல்வித் துறை சார்பில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயி லும் மாணவர்களுக்கு தமிழை இனிமையாக கற்பிக்கும் வகை யில், “தமிழ் வாசிப்பு திறனில் ஏற் படும் சிக்கல்களும், தீர்வுகளும்” என்ற தலைப்பில் ஆசிரியர் களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் மாநகராட்சியின் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மண்டல வாரியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு, கல்வி கற்பிப்பதில் 21 ஆண்டுகள் அனுபவம் மிக்க, மாநகராட்சிப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரியும் கனகலட்சுமி பயிற்சி அளித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 198 பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு தமிழ் வாசிப்பு திறன் பயிற்சி அளித்துள்ளார். கடந்த ஏப்ரல் 19-ம் தேதி உலக சாதனைக்காக 1 லட்சத்து 56 ஆயிரத்து 170 குழந்தைகளை ஒரே நேரத்தில் செய்தித்தாள்களை வாசிக்கவும், எழுதவும் செய்துள்ளார். அவரைக் கொண்டு மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆக்க மும், ஊக்கமும் கிடைப்பதுடன், மாணவர்களுக்கு வாசிப்பு திறன் மேம்படவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

என்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு 25-ந் தேதி தொடங்குகிறது அமைச்சர் அன்பழகன் தகவல்.

தேசிய அளவில் ஜூனியர்களுக்கான ரக்பி செவன்ஸ் சாம்பியன்ஸ் போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 14 முதல் 18 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்கள் அன்பழகன், செல்லூர் ராஜூ ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பழகன் நிருபர்களிடம் கூறும்போது, “2018-19-ம் ஆண்டுக்கான என்ஜினீயரிங் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக அந்தந்த மாவட்ட தலைநகரில் 42 சேவை மையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன” என்றார்.

எம்பிஏ, எம்சிஏ தரவரிசைப் பட்டியல் வரும் 25 முதல் ஆக.4 வரை கலந்தாய்வு.

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வெளியிடப்பட்ட எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவிகள் கார்த்திகா, நித்யா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். கலந்தாய்வு வரும் 25-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக மண் டல மையங்கள், அண்ணா பல் கலைக்கழகம், பாரதியார் பல் கலைக்கழகம், சென்னை பல் கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடத்தப்பட்டு வரும் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் மாணவ, மாணவிகள் அரசு இட ஒதுக்கீட்டில் சேர்ந்து படிப்பதற் கான மாநில அளவிலான கலந் தாய்வு, கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் (ஜிசிடி) நடை பெற உள்ளது. இதற்கான தரவரிசைப் பட்டி யல், டான்செட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தயா ரிக்கப்பட்டுள்ளது. அதை, தமிழ் நாடு எம்பிஏ, எம்சிஏ மாணவர் சேர்க்கை செயலரும், அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல் வருமான பெ.தாமரை நேற்று வெளியிட, ஒருங்கிணைப்பாள ரும், பேராசிரியருமான டி.புரு ஷோத்தமன் பெற்றுக் கொண்டார். அதன் விவரம் வருமாறு: எம்சிஏ படிப்புக்கான தரவரிசை யில் சென்னையைச் சேர்ந்தவர் கள் முதல் 3 இடங்களைப் பிடித் தனர். 70.333 மதிப்பெண் பெற்ற மாணவி எஸ்.நித்யா முதலிடமும், 67.667 மதிப்பெண் பெற்ற மாண வர் ஆர்.ஹரீஷ் 2-வது இடமும், 61.667 மதிப்பெண் பெற்ற மாணவர் ராகுல்பாபு 3-வது இடமும் பெற்றனர். எம்பிஏ படிப்பில் 80.667 மதிப்பெண் பெற்ற சென்னை மாணவி ஆர்.கார்த்திகா முதலிடத் தையும், 80.000 மதிப்பெண் பெற்ற பாளையங்கோட்டை மாணவி ரேஷ்மி 2-வது இடத்தையும், 78.333 மதிப்பெண் பெற்ற ஈரோடு மாணவி ஏ.எஸ்.கார்த்திகா 3-வது இடத்தையும் பிடித்தனர். இதுகுறித்து பெ.தாமரை, செய்தியாளர்களிடம் கூறியதா வது: இந்த ஆண்டு வழக்கம்போல் ஆன்லைன் கலந்தாய்வும், துணைக் கலந்தாய்வும் நடத்தப்பட உள்ளது. டான்செட் நுழைவுத் தேர்வு எழுதி, கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் துணைக் கலந்தாய்வில் பங்கேற் கலாம். எம்சிஏ படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி தொடங்கி 28 வரை நடைபெறும். எம்பிஏ படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 29-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெறும். எம்சிஏ படிப்பில் 11,589 இடங்கள் உள்ளன. இதற்கு 1,552 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதேபோல் எம்பிஏ படிப்பில் 13,752 இடங்கள் உள்ளன. இதற்கு 6,255 பேர் மட்டுமே விண்ணப்பித் துள்ளனர். இதனால் கலந்தாய் வில் பங்கேற்கும் அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்றார்.

கருணை மதிப்பெண் வழங்க உச்ச நீதிமன்றம் தடை..

நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்களாக வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வின்போது தமிழில் கேட்கப்பட்ட 49 வினாக்கள் தவறாக இருந்தன. இதனால், தவறான வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்களாக வழங்க வேண்டும் என கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான டி.கே.ரங்கராஜன், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள், ‘‘நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்களை வழங்க வேண்டும். இந்த 196 மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு 2 வாரத்துக்குள் புதிதாக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு அதனடிப்படையில் கலந்தாய்வை மீண்டும் நடத்த வேண்டும்’’ என கடந்த 10-ம் தேதி உத்தரவி்ட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதி்த்தது. மேலும், இந்த பிரச்சினையை எவ்வாறு சுமுகமாக தீர்ப்பது என்பது குறித்து இருதரப்பும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக மனுதாரருக்கு நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

அரசு பாட புத்தகங்களை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறன: உதயச்சந்திரன்

அரசு பாட புத்தகங்களை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறன: உதயச்சந்திரன் ''சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன,'' என, பள்ளிக்கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலுாரில், பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் தலைமையில் , புதிய பாடத் திட்டம் குறித்து, ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது: வழக்கமாக பாட புத்தகங்கள் எழுதும் பணியை, ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுனரும் சேர்ந்து செய்வர். இந்த முறை, இது மாற்றப்பட்டு, பாடப் புத்தகம் எழுதுவது, மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது.துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளை எளிதாக கையாளும் வகையில், தெரிந்த சொற்களை கொண்டு, அகர வரிசையில் பாடம் நடத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் எட்டு வரை பயிலும் மாணவர்கள், எதில், பலவீனமாக உள்ளனர் என்பதை ஆராய்ந்து, புதிய பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வில், பிளஸ் 1 பாடத்திலிருந்து, 50 சதவீதம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில், 99 சதவீத கேள்விகள், நமது புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளது. இதனால், சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன.பிளஸ் 1 பாட புத்தகத்தில், அனைத்து பாட பிரிவினருக்குமான மேற்படிப்புகள் குறித்தும், அதை எங்கு படிக்கலாம் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய பாடத் திட்டத்தின் மூலம், அடுத்த நான்கு ஆண்டுகளில், தமிழக மாணவர்கள், அகில இந்திய போட்டி தேர்வுகளில், அதிக அளவில் பங்கேற்கும் வாய்ப்பு பெறுவர். மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது, ஆசிரியர்கள் கையில் உள்ளது என்றார்.

அரசு பாட புத்தகங்களை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறன: உதயச்சந்திரன்.

''சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன,'' என, பள்ளிக்கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலுாரில், பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் தலைமையில் நேற்று, புதிய பாடத் திட்டம் குறித்து, ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது: வழக்கமாக பாட புத்தகங்கள் எழுதும் பணியை, ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுனரும் சேர்ந்து செய்வர். இந்த முறை, இது மாற்றப்பட்டு, பாடப் புத்தகம் எழுதுவது, மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது.துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளை எளிதாக கையாளும் வகையில், தெரிந்த சொற்களை கொண்டு, அகர வரிசையில் பாடம் நடத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் எட்டு வரை பயிலும் மாணவர்கள், எதில், பலவீனமாக உள்ளனர் என்பதை ஆராய்ந்து, புதிய பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வில், பிளஸ் 1 பாடத்திலிருந்து, 50 சதவீதம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில், 99 சதவீத கேள்விகள், நமது புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளது. இதனால், சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன.பிளஸ் 1 பாட புத்தகத்தில், அனைத்து பாட பிரிவினருக்குமான மேற்படிப்புகள் குறித்தும், அதை எங்கு படிக்கலாம் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய பாடத் திட்டத்தின் மூலம், அடுத்த நான்கு ஆண்டுகளில், தமிழக மாணவர்கள், அகில இந்திய போட்டி தேர்வுகளில், அதிக அளவில் பங்கேற்கும் வாய்ப்பு பெறுவர். மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது, ஆசிரியர்கள் கையில் உள்ளது என்றார்.

IGNOU - படிப்பில் சேர கூடுதல் அவகாசம்!

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான, 'இக்னோ'வில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, ஜூலை, 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, இக்னோவின் சென்னை மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இக்னோவில், பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, முதுநிலை, 'டிப்ளமா' உள்ளிட்ட வற்றை, தொலைநிலையில் படிக்க, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்கான கடைசி தேதி முடிய இருந்த நிலையில், ஜூலை, 31 வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சி.ஏ., படித்து கொண்டிருப்போர், பி.காம்., மற்றும் எம்.காம்., சிறப்பு படிப்பிலும் சேரலாம்.விண்ணப்பிக்க விரும்புவோர், onlineadmission.ignou.ac.in/admission/ என்ற இணையதள இணைப்பில், பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்கள் தேவைப்படுவோர், சென்னை, வேப்பேரியில் உள்ள, மண்டல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், rcchennaiignou.ac.in என்ற இ- - மெயில் மற்றும் 044- 26618438/ 26618039 ஆகிய, தொலை பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பி.ஆர்க்., 'ரேண்டம்' எண் வெளியீடு.

பி.ஆர்க்., கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கு, 'ரேண்டம்' எண் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 50க்கும் மேற்பட்ட, கட்டட வடிவமைப்பியல் படிப்புக்கான, 'ஆர்கிடெக்' கல்லுாரிகளில், பி.ஆர்க்., பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அண்ணா பல்கலையால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்போருக்கு, கடந்த, 4ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கி, 15ல் முடிந்தது.இதில், அரசு ஒதுக்கீட்டில், 2,200 இடங்களுக்கு, 1,874 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு, தரவரிசை பட்டியலை நிர்ணயம் செய்வதற்கான, ரேண்டம் எண், நேற்று வெளியிடப்பட்டது. இந்த விபரங்களை, அண்ணா பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கான, www.tnea.ac.in/barch2018, என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

CBSE - பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது: உயர்நீதிமன்றம் உத்தரவு!

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி உரிமை சட்டப்படி அனைத்து சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகார சான்று பெற வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அரசின் ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் சி.பி.எஸ்.இ.,பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி மகாதேவன், அரசின் இந்த ஆணைக்கு கடந்த ஜூலை 10-ம் தேதி தடை விதித்திருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடு வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா அமர்வு விசாரித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை கட்டுப்படுத்தவும், ஆய்வு செய்யும் தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவித்துள்ளது. மேலும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையையும் நீக்கம் செய்துள்ளது. Kaninikkalvi.blogspot.com தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்த தனி நீதிபதி மகாதேவன் உத்தரவையும் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. கல்வி கட்டணம் நிர்ணயம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தமிழக அரசு அதில் தலையிடாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் (20.07.2018)

School Morning Prayer Activities - 20.07.2018  | பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.

உரை : பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

பழமொழி :
A little stream will run a light mill.சிறு துரும்பும் பல் குத்த உதவும்

பொன்மொழி:
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே. - நியேட்சே .

இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :
1.நீர் வாயுக்குண்டுவைக் கண்டுபிடித்தவர்? எட்வர்ட் டெய்லர்
2.அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்? ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்

நீதிக்கதை :
நரியும் அதன் நிழலும் (The Fox and His Shadow Story)

ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் பெரியதாக தெரிந்தது. நரிக்கு ஏக குஷி. "நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். அதுவும் இந்த காட்டின் ராஜாவாக உள்ள சிங்கத்தை விடவும் பெரியவனாக நான் உள்ளேன் என நினைத்துகொண்டே வேட்டைக்குச் சென்றது.

செல்லும் வழியில் நரி ஒரு சிங்கத்தை கண்டது. சிங்கமோ சற்று முன்னர் தான் ஒரு மானை வேட்டையாடி அதை உண்ட களைப்பில் மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தது. நரியும் தன்னுடைய நிழல் சிங்கதைவிடவும் பெரியதாக இருபதாக நினைத்துகொண்டு சிங்கம் வரும் வழியில் நடந்து சென்றது. சிங்கமும் நரியை ஒன்றும் செய்யாமல் கடந்து சென்றது.

நரிக்கோ ரொம்ப சந்தோஷம். நாம் சிங்கத்தை விடவும் பெரியதாக இருபதனால் சிங்கம் என்னைகண்டு பயந்து சென்றது என நினைத்துகொண்டு அன்று மாலை தன்னுடைய வீட்டிற்க்கு சென்றது. மாலை வீட்டிற்க்குச் சென்றதும் நரி காட்டில் உள்ள மிருகங்களை எல்லாம் அழைத்தது. அனைத்து மிருகங்களும் நரியின் கூட்டத்திற்கு வந்தன. நரி அனைத்து மிருகங்களிடமும், "இனிமேல் இந்த காட்டிற்கு நான் தான் ராஜா" என்றது.

யானையோ, “இதை நாங்கள் ஏற்க முடியாது என்றது. உடனே நரி காலையில் நடந்த சம்பவத்தைக் கூறி சிங்கமே என்னைக் பார்த்து பயந்து சென்றது” என்றது. கூட்டத்தில் இருந்த மானோ, “சிங்கத்தை உன் முன் மண்டியிடச் சொல் பிறகு உன்னை இந்த காட்டிற்கு ராஜவாக்குகிறோம்” என்றது. அடுத்த நாள் நரி அந்த சிங்கத்தை தேடிச் சென்றது. செல்லும் வழியில் சிங்கம் தன்னுடைய பாதையை நோக்கி வருவதை கண்டு நரி கர்வத்துடன் நின்றது. சிங்கம் வந்தவுடன் சிங்கத்தை பார்த்து, "என் முன்னாள் மண்டியிட்டுச் செல்" என்று நரி கூறியது. சிங்கமோ மிகவும் கோவம்கொண்டு தரக்குறைவாக பேசிய நரியை பார்த்து, "உன்னை மன்னித்து விடுகிறேன் உடனே இங்கிருந்து செல்" என்றது.
நரியோ சிங்கம் தன்னை கண்டு பயந்து விட்டது என நினைத்து “முடியாது” என்று பதில் கூறிக்கொண்டே தன்னுடைய நிழலைப் பார்த்தது. அது மதிய நேரம் என்பதால் நிழல் உண்மையான அளவில் இருந்தது. அபொழுது தான் நரிக்கு புரிந்தது சூரிய ஒளியில் தான் தனுடைய நிழல் பெரியதாக இருந்தது என்று. இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கம் நரியை ஒரே அடியினால் கொன்றது.

நீதி: முட்டாள் தனமாக பெரிதாக யோசித்தால் அதற்கான இழப்பும் பெரிதாக இருக்கும்.

இன்றைய செய்தி துளிகள் :
1.சி.பி.எஸ்.இ. பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது: உயர்நீதிமன்றம் உத்தரவு
2.குரூப் 1 தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு
3.2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு
4.தமிழகம் முழுவதும் ஆர்டிஓ அலுவலகங்களில் லைசென்ஸ் பெற ‘ஹெச் டிராக்’ முறை
5.911 புள்ளிகள் பெற்று அசத்தல் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் கோஹ்லி தொடர்ந்து முதலிடம்