டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு 37 ஆக உயர்வு முதல்வருக்கு வேண்டுகோள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-1ஏ, குரூப்-1பி தேர்வுகளுக்கான வயது வரம்பை 37 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், கோட்ட தீயணைப்பு அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடி யாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இதேபோல், தமிழக அரசின் வனத்துறையில் உதவி வனப்பாதுகாவலர் பணியிடங் களை நேரடியாக நிரப்புவதற்கு குரூப்-1ஏ தேர்வும், இந்துசமய அறநிலைய ஆட்சித் துறையில் உதவி ஆணையர் பதவியை நேரடியாக நிரப்புவதற்கு குருப்-1பி தேர்வும் நடத்தப்படுகின்றன. இதுவரையில், குரூப்-1, குரூப்-1ஏ, குரூப்-1பி தேர்வுகளுக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 ஆகவும் இருந்து வந்தது. இந்த நிலையில், குரூப்-1, குரூப்-1ஏ, குரூப்-பி தேர்வுக ளுக்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்காக 30-லிருந்து 32 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35-லிருந்து 37 ஆகவும் உயர்த்தப்படும் என கடந்த ஜூன் 1-ம் தேதி சட்டப்பேரவையில் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் கே.பழனிசாமி ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில், அவரது அறி விப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலர் எஸ்.ஸ்வர்ணா வெளியிட்டுள்ள ஓர் அரசாணையில் (அரசாணை எண் 93, நாள் 17.7.2018) கூறியிருப் பதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1, குரூப்-1ஏ, குரூப்-1பி தேர்வுகளுக்கான வயது வரம்பு எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிஎன்சி, பிசி வகுப்பினருக்கு 37 ஆகவும், பொதுப்பிரிவினருக்கு (ஓ.சி.) 32 ஆகவும் உயர்த்தி ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த அரசாணையைத் தொடர்ந்து, இனிமேல் வரவிருக்கும் குரூப்-1, குரூப்-1ஏ, குரூப்-1பி தேர்வுகளுக்கு வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும். இதற்கிடையே, குஜராத், அரியானா, பிஹார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருப்பதைப் போன்று குரூப்-1 தேர்வுக் கான வயது வரம்பை பொதுப்பிரி வினருக்கு 40 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று குரூப்-1 தேர்வுக்குப் படித்து வரும் கிராமப்புற இளைஞர்கள் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவ்வாறு செய்ய இயலாவிட்டால் குறைந்தபட்சம் இந்த வயது வரம்புக்குள் இருப் பவர்களுக்கு தேர்வெழுதவாவது ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

Comments