தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் பதவி உயர்வு மற்றும் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பதவி உயர்வு மற்றும் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழாவில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் மாநிலத்தலைவர் சாமி.சத்தியமூர்த்தி, மாநில பொதுச்செயலாளர் பி.நடராசன், மாநிலப்பொருளாளர் பி.இரவிச்சந்திரன்,  மாநில அமைப்புச்செயலாளர் அ.பீட்டர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். 20-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்களுக்கும்,  20-க்கும் மேற்பட்ட பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற சாமி.சத்தியமூர்த்திä, துணை இயக்குநராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்ற மா.தமிழ்ச்செல்வன், மாவட்டக்கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்ற உ.பரமசிவம் ஆகியோர் இவ்விழாவில் சிறப்பு செய்யப்பட்டனர் மாவட்டத்தலைவர் கு.திராவிடசெல்வம் தலைமையில் மாவட்டச்செயலளர் மனவாளன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் கல்வி மாவட்டத்தலைவர் இராஜீ நன்றி கூறினார்

Comments