வனச்சரகர் பணியிடங்களுக்கு செப்டம்பரில் எழுத்துத் தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

வனச்சரகர் தொழில்பழகுநருக் கான 158 பணியிடங்களை நிரப்புவதற்காக செப்டம்பர் மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி
அறிவித்துள் ளது. தமிழக அரசின் வனத்துறை சார்நிலைப்பணியில் ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ் எனப்படும் வனச் சரகர் தொழில்பழகுநர் பதவி யில் 158 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. பிஎஸ்சி (வனவியல்) மற்றும் பொறியியல் பட்டதாரி களும், விவசாயம், தோட்டக்கலை, கால்நடை மருத்துவம், கணிதம், இயற்பியல், தாவர வியல், விலங்கியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மரைன் பயாலஜி, புள்ளியியல் உள்ளிட்ட படிப்புகளில் பிஎஸ்சி பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பிஎஸ்சி வனவியல் பட்டதாரிகளுக்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படும். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உரிய கல்வித்தகுதியும் வயது வரம்புத்தகுதியும் உடைய பட்டதாரிகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தைப் (www.tnpsc.gov.in) பயன்படுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு செப்டம்பர் 23 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும். தேர்வாகும் வனச்சரகர் தொழில்பழகுநர்கள் 20 மாதங்கள் பயிற்சிக்குப் பிறகு, வனச்சரகர்களாக பணியமர்த்தப்படுவார்கள்.
List of Current Notifications
S No.Notification NumberName of the PostOnline RegistrationDate of ExaminationActivity

FromTo
NOTIFICATIONS - 2018
0112/2018 04.07.201801.08.201823.09.2018 TO 30.09.2018 FN&ANAPPLY ONLINE

Comments