தொழிலாளர்கள் நல வாரியத்தில் கல்வி உதவி பெற விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்கள் நல வாரியம் வழங்கும் பல்வேறு உதவித் தொகைகளைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட் டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலரும், கூடுதல் தொழிலாளர் நல ஆணையருமான உமாதேவி, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ``தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நலநிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற் கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல் 10 மாணவர்கள் பிளஸ் 1 முதல் முதுகலை பட்டப் படிப்புக்கும், பொறி யியல், மருத்துவம், சட்டம், விவசாயம், ஆசிரியர் பயிற்சி, உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு, பட்டயப் படிப்பு ஆகியவற்றுக்கும் தொழிற் பயிற்சி கல்வி மற்றும் மேல் நிலைக்கல்வி படிப்புக்கும் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறுவோருக் கும் (முதல் 10 மாணவர்கள்) கல்வி உதவித்தொகை வழங்கப்படும். விவரங்கள் அறிய... கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் விளக்கவுரையை, `செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண் 718, தேனாம்பேட்டை, சென்னை- 600 006’ என்ற முகவரிக்கு சுயவிலாசமிட்ட தபால் தலை ஒட்டிய தபால் உறையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். www.labour.tn.gov.in என்ற இணையதளத்திலும் விவரங்கள் அறியலாம். கடைசி நாள் அக்.31 கூடுதல் விவரங்கள் அறிய 044-24321542 என்ற தொலை பேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 31-ம் தேதி ஆகும்.’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

Comments