கால்நடை மருத்துவ கவுன்சிலிங் தேதி அறிவிப்பில் தாமதம் ஏன்?

கால்நடை மருத்துவ கவுன்சிலிங் தேதி அறிவிப்பில் தாமதம் ஏன்? தரவரிசை பட்டியல் வெளியிட்டு, 10 நாட்களாகியும், கால்நடை மருத்துவ கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படாதது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசின் கால்நடை மருத்துவ பல்கலையின் கீழ் உள்ள நான்கு அரசு கல்லுாரிகளில், கால்நடை மருத்துவம்; கால்நடை பராமரிப்பு படிப்புக்கு, 360 இடங்களும், அதை சார்ந்த, டிப்ளமா படிப்புகளுக்கு, 100 இடங்களும் உள்ளன. இந்த படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க, 11 ஆயிரத்து, 745 பேர் தகுதி பெற்றுள்ளனர்.இதற்கான தரவரிசை பட்டியல், ஜூலை, 3ல் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய துணைவேந்தர் பாலச்சந்திரன், &'இந்த மாத இறுதிக்குள் கவுன்சிலிங் நடைபெறும்; கவுன்சிலிங் தேதி, ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்&' என்றார். ஆனால், தரவரிசை வெளியிட்டு, 10 நாட்களாகியும், கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படவில்லை.இதுகுறித்து, கால்நடை மருத்துவ பல்கலை அதிகாரிகள் கூறுகையில், &'கால்நடை மருத்துவ படிப்புக்கான முதல் நாள் கவுன்சிலிங்கில், அமைச்சர் ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார். இதனால், அவரிடம் தேதி கேட்கப்பட்டுள்ளது. அவர், தேதி கொடுத்தப்பின், கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும்&' என்றனர்.

Comments