ஆவின் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆவின் நிறுவனத்தில் சீனியர் தொழிற்சாலை உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) நிறுவனத்தில், 275 சீனியர் தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற் றிருக்க வேண்டும். மேலும், இப்பணியிடங் களுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு, இனசுழற்சி, தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட விவரங்கள் குறித்த அறிவிக்கை www.omcaavinsfarecruitment.com என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவரங்களை முழுமை யாக படித்து தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், இணைய தளம் மூலம் வரும் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments