முதுகலை பொருளியல் ஆசிரியர் - நிரந்தர பணிக்கு தேவை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முதுகலை பொருளியல் ஆசிரியர் நிரந்தர பணிக்கு தேவை

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: யுஜிசி கல்வித் தகுதி உடையவர்களை கணக்கெடுக்க உத்தரவு!

அரசு கலை அறிவியல் கல்லூரி களில் பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந் தரம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. யுஜிசி நிர்ணயித்துள்ள கல்வித் தகுதி உடைய கவுரவ விரிவுரை யாளர்களின் விவரங்களை கணக்கெடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு கலை கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் சிறப்பு தேர்வு மூலம் பணிநிரந் தரம் செய்யப்படுவர் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன் பழகன் கடந்த 30-ம் தேதி சட்டப் பேரவையில் அறிவித்தார். இந்த நிலையில், கவுரவ விரிவுரை யாளர்களை பணிநிரந்தரம் செய் வதற்கான ஆயத்தப்பணிகளை கல்லூரி கல்வி இயக்ககம் தொடங்கியுள்ளது.தகுதியுடைய பேராசிரியர்கள்யுஜிசி நிர்ணயித்துள்ள கல்வித்தகுதி உடைய கவுரவ விரிவுரையாளர் விவரங்களை கணக்கெடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியை ஆர்.சாருமதி அனைத்து அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: அரசு கலை அறிவியல் கல் லூரிகள் மற்று்ம் கல்வியி யல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களில் தற்போதைய யுஜிசி விதிமுறை களின்படி உதவி பேராசிரியர் நியமனத்துக்குரிய கல்வித்தகுதி யுடன் பணிபுரிவோரின் எண்ணிக்கை மற்றும் அது தொடர்பான விவரங்களையும், தங்கள் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி அண்ணாமலை பல்கலைக்கழக உபரி பணியாளர்கள் நியமனம் மற்றும் ஆசிரியர்களின் இடமாறு தல் போன்ற காரணங் களினால் பணிவாய்ப்பை இழந்த கவுரவ விரிவுரையாளர்களின் விவரங் களையும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசு பணிகள் பதவி உயர்வு  எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

அரசு பணிகளில் எஸ்சி., எஸ்டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான வழக்கில் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. கடந்த 2006-ம் ஆண்டில் நாகராஜ் என்பவரது வழக்கில் அரசுப் பணி பதவி உயர்வில் எஸ்சி., எஸ்டி, பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க சில நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்தது. அரசு பணி பதவி உயர்வில் எஸ்சி., எஸ்டி., பிரிவினருக்கு போதிய வாய்ப்பின்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட ஊழியரின் பின்தங்கிய நிலை குறித்த ஆதாரம், ஊழியரின் பணித் திறமை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் சார்பில் ஏராளமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு அரசு பணி பதவி உயர்வுக்கான இடஒதுக்கீடு குறித்து தேவையற்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. வாதங்கள் முடிந்த நிலையில் மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமன தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதிமுறை

ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர் வெழுத வாழ்நாள் முழுவதும் தடை விதிக் கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதி முறையை கொண்டு வந்துள்ளது. அதோடு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகும் நபர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத தடைவிதிக்கும் வகை யிலும் நடவடிக்கையை கடுமையாக்க முடிவுசெய்துள்ளது. அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர், அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர், அரசு ஆசிரி யர் பயிற்சி விரிவுரையாளர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் உள் ளிட்ட பணியிடங்களை நிரப்ப ஆசிரி யர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு களை நடத்தி வருகிறது. மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வை யும் அவ்வாரியமே நடத்துகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அரசு பாலி டெக்னிக் விரிவுரையாளர் தேர்விலும், தகுதித்தேர் விலும் மதிப் பெண்ணில் திருத்தம் செய்து முறைகேடு நடந்திருப்பதை ஆசி ரியர் தேர்வு வாரியமே ஆய்வு மூலம் கண்டுபிடித்தது. விடைத் தாள்களை ஸ்கேன் செய்து மதிப் பெண் பதிவுசெய்யப்படும் நிலை யில் இந்த முறைகேடுகள் நடைபெற்றிருப் பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாலிடெக்னிக் விரிவுரையா ளர் தேர்வை ரத்துசெய்த தேர்வு வாரியம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தகுதித்தேர்வில் மதிப் பெண் முறைகேட்டில் ஈடுபட்ட 200 தேர்வர்களின் தேர்ச்சியை ரத்து செய்துள்ளது. அவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. டிஎன்பிஎஸ்சி-யுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவான அலுவலர் களையும், பணியாளர்களையும் வைத்துக் கொண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மிக வேகமாக தேர்வுகளை நடத்தி முடிவுகளை விரைவாக வெளியிடுகிறது என்று தேர்வர்கள் பாராட்டவே செய் கிறார்கள். எனினும், அண்மைக் காலமாக நடந்துள்ள தவறுகள், அதன் காரணமாக தேர்வு ரத்து நடவடிக்கை, மதிப்பெண்ணை திருத்தியவர்கள் தகுதிநீக்கம் ஆகியவை தேர்வு வாரியத்தின் மீது லேசான சந்தேகப் பார் வையை உண்டாக்கியுள்ளது. தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டதும் உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்படுவதால் தேர்வு வாரியத்தின் நம்பகத்தன்மையை தேர்வர்களால் உதாசீனப்படுத்த இயல வில்லை. இந்த நிலையில், தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்ப தாரர்களை தண்டிக்கும் வகையில் விதிமுறை களை ஆசிரியர் தேர்வு வாரியம் கடுமையாக்கியுள்ளது. அதன்படி, ஆசிரி யர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வு களில் தவறு செய்யும் விண்ணப் பதார்ரகள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை விதிக்கும் வகை யில் புதிய விதிமுறை கொண்டுவரப் பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கூட்டத்தில் இதற்கான முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதிய விதிமுறையின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தகுதித் தேர்வில் மதிப்பெண்ணை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்ட 200 விண்ணப்ப தாரர்கள் மீது முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் எந்த தேர்வையும் எழுத முடியாது. அவர்களின் பெயர், முகவரி, பிறந்த நாள், கல்வித்தகுதி, இடஒதுக் கீட்டுப்பிரிவு உட்பட அனைத்து விவரங்களும் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முயற்சி செய்தால் அவர்களின் விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்படும். தவறு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகும் விண்ணப் பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத தடை விதிக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கை: கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 12-ந்தேதி கடைசி நாள்

2018-ம் ஆண்டிற்கான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி(ஐ.டி.ஐ.) நிலையங்களில் மாணவர் சேர்க்கை முதற்கட்டமாக ஜூலை மாதம் 4-ந்தேதி முதல் 19-ந்தேதி வரையிலும், 2-வது கட்டமாக இந்த மாதம் 20-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும் நடைபெற்றது. இருப்பினும் கலந்தாய்வுகளுக்கு பின்னும் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப 3-வது கட்ட கலந்தாய்வுக்கு மாணவர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் இணையதளம் மூலமாக ( www.skilltraining.tn.gov.in ) விண்ணப்பித்து வருகிறார்கள். விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 12-ந்தேதி கடைசி நாள். விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொண்டு சேர விரும்பும் தொழிற்பிரிவு மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை தேர்வு செய்யலாம். 3-வது கட்ட கலந்தாய்வானது செப்டம்பர் 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. கலந்தாய்வு குறித்த விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த தகவலை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் நிர்மலா சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகம் நடத்திய எம்.எல். தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஜூன் மாதம் தனியார் மாணவர்களுக்கான எம்.எல். தேர்வை நடத்தியது. தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இணையதளத்தில் ( www.unom.ac.in) வெளியிடப்படுகிறது. தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்வு எழுத செப்டம்பர் 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு செய்ய விரும்புகிறவர்கள் விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 10-ந்தேதி கடைசி நாள். இந்த தகவல் சென்னை பல்கலைக்கழக தேர்வுகட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகப்பை, காலணிகள் டிசம்பர் மாதத்திற்குள் வழங்க ஏற்பாடு பாடநூல் வாரியம் மும்முரம்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகப்பை மற்றும் காலணிகளை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் வழங்க தமிழ்நாடு பாடநூல் வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், வண்ண பென்சில்கள், புத்தகப்பை, காலணி, சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட 14 பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதன்படி 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் 70 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பைகள் வழங்கப்படுகிறது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் 56 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு காலணிகளும் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் புத்தகப்பைகள் மற்றும் காலணிகள் இதுவரை மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே அவற்றை வழங்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதையொட்டி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் டி.ஜெகன்நாதன், செயலாளர் பழனிசாமி மற்றும் அதிகாரிகள் காலணி, புத்தகப்பைகளை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முன்னதாக வருகிற அக்டோபர் மாதம் வண்ண பென்சில்கள் 1 மற்றும் 2-ம் வகுப்பு பயிலும் 9 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் ‘ஜாமெண்ட்ரி பாக்ஸ்’ 6, 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதேபோல் வண்ண பென்சில்கள் 3 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த பொருட்களை வழங்க தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகம் மும்முரமாக உள்ளது.

தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடியால், தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. வினாத்தாளில் குளறுபடி தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடியால் மதிப்பெண்கள் குறைந்தன. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. டி.கே.ரங்கராஜன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று கடந்த ஜூலை 10-ந் தேதி தீர்ப்பு கூறியது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழகத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கி அமர்வு, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் அளிக்குமாறு மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து ஜூலை 20-ந் தேதி உத்தரவிட்டது. அத்துடன் மதுரை ஐகோர்ட்டு கூறியுள்ளபடி கருணை மதிப்பெண்கள் வழங்கினால், அது நாடு தழுவிய அளவில் மாணவர்களின் தகுதி பட்டியலை பாதிக்கும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள். விசாரணை இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ்.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.எஸ்.இ. தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், மாணவர்கள் தங்கள் மாநில மொழியில் படிப்பது சரி என்றாலும் அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்றும், தமிழ் மொழி பெயர்ப்பில் குளறுபடி உள்ளது என்றால், ஆங்கிலத்தில் உள்ள வினாக்களை பார்த்து சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறினார். மேலும் மருத்துவ படிப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் பயிற்றுவிக்கப்படுகிறது என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், மாநில அரசுகள் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மனுதாரர்கள் தரப்பிலான வாதங்களும் முன்வைக்கப்பட்டன. 196 மதிப்பெண் கிடையாது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்காக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர். இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை முடிந்து விட்டதால் இடைக்கால நிவாரணமும் அளிக்கமுடியாது என்றும், இனி இதுபோன்ற குளறுபடிகள் நடைபெறாமல் இருக்க மட்டுமே உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றும் கூறினார்கள். அத்துடன், நீட் தேர்வுக்கும், மருத்துவ படிப்புக்கும் ஆங்கிலம்தான் முக்கியம் என்ற பட்சத்தில் மாணவர்களுக்கு மாநில மொழியில் தேர்வு நடத்துவது ஏன்? என்று சி.பி.எஸ்.இ.க்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதை சரி செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். பின்னர் வழக்கு விசா ரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அரசு சேவை மையத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யவேண்டும் 18-ந்தேதி கடைசி நாள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- குரூப்-4 தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வை அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி அதன் முடிவுகளை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. சான்றிதழ் பதிவேற்றம் செய்யவேண்டிய விண்ணப்பதாரர்களின் பட்டியல் சமீபத்தில் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டது. இவர்களுக்கு விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்துள்ள செல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பப்பட்டு உள்ளது. அவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகள் அடங்கிய குறிப்பாணையின் நகலுடன் இன்று (வியாழக்கிழமை) முதல் செப்டம்பர் 18-ந்தேதி வரை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இசேவை மையங்களில் மட்டுமே சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும். இச்சேவைக்கென தெரிவு செய்யப்பட்டுள்ள அரசு இசேவை மையங்களின் முகவரிகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 044- 25300336, 044- 25300337 என்ற தொலைபேசி எண்களிலும் மற்றும் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலை பேசியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு 57 ஆயிரம் அரசு பள்ளிகளில் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு 57 ஆயிரம் அரசு பள்ளிகளில் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாதிபாளையம் மற்றும் கொளப்பலூர் ஆகிய ஊராட்சிகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.54 கோடி மதிப்பீட்டில் புதிதாக 640 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, பணியை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உள்கட்டமைப்பு வசதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒவ்வொரு அரசு பள்ளிக்கூடத்திலும் படித்த மாணவர்கள் அந்தந்த பள்ளிக்கூடங்களுக்கு உதவவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் மனிதநேயம் மிக்கவர்களும், அன்புள்ளம் கொண்டவர்களும் முன்வந்துள்ளனர். இவர்களுடன் அரசும் இணைந்து தமிழகத்தில் உள்ள 57 ஆயிரம் அரசு பள்ளிக்கூடங்களை தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு கட்டமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நல்லாசிரியர் விருது மத்திய அரசின் நல்லாசிரியர் விருது இதுவரை ஆண்டுதோறும் 22 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஒருவரை மட்டும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்துள்ளனர். இதுகுறித்து மத்திய அமைச்சருடன் தொடர்பு கொண்டு, மீண்டும் பழைய முறையையே பின்பற்ற வேண்டும். 22 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

பிளஸ்-1 வகுப்பு சிறப்புத்துணை தேர்வில் மறுமதிப்பீடு வருகிற 3, 4-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புத்துணைதேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வெழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் scan.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து வருகிறார்கள். விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்தபிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து செப்டம்பர் மாதம் 3, 4-ந் தேதிகளில் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு 200 பேரின் மதிப்பெண்கள் திருத்தப்பட்டது அம்பலம்

ஆசிரியர் தகுதித்தேர்வில் 200 பேரின் மதிப்பெண்களை திருத்தி முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிக்கூடங்களில் பணி நியமனம் செய்வதற்காக இடைநிலை மற்றும் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வுகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரம் பேர் எழுதினர். அவர்களில் 34 ஆயிரத்து 979 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டில் நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் எழுத்துத் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் போலீசில் புகார் அளித்தது. இதன் காரணமாக ‘ஓ.எம்.ஆர்.’ விடைத்தாள்களை ‘ஸ்கேன்’ செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் வேறு நிறுவனத்திடம் ஒப்படைத்தது. அந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட புதிய நிறுவனத்தின் மூலம் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களது அனைத்து விடைத்தாள்களும் மீண்டும் ஸ்கேன் செய்யப்பட்டன. அப்போது, 200-க்கும் மேற்பட்டவர்கள் போலியான மதிப்பெண்கள் மூலம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்தது. அதாவது ஆசிரியர் தகுதித்தேர்வில் கம்ப்யூட்டர் உள்ளடு செய்து 200 பேருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் மிக அதிகபட்சமாக 100 மதிப்பெண்கள் வரை இதுபோல் தில்லுமுல்லு செய்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இவர்கள் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்படுவதற்கு தகுதி பெற்றவர்கள் என்னும் நிலை உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து முறைகேடு மூலம் கூடுதல் மதிப்பெண் பெற்ற 200 பேரும் பிற தேர்வுகளை எழுத தடை விதிக்கப்பட்டது. மேலும், முறைகேடு மூலம் அதிக மதிப்பெண்கள் பெற்ற 200 பேரிடமும் விசாரணை நடத்தவும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து இருக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக 15 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டது, நினைவு கூரத்தக்கது. ஆசிரியர் தகுதித்தேர்வில் நடந்த முறைகேடு குறித்து அறிய சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுடன் போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர்கள் யாரும் போனை எடுக்கவில்லை.

ஜூலை 1-ந்தேதி முதல் அமல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 1-ந்தேதி முதல் இது அமல்படுத்தப்படுகிறது. 1 கோடியே 10 லட்சம் பேர் பலன் அடைவர். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்குவது வாடிக்கை. ஜனவரி மாதம் 1-ந்தேதி மற்றும் ஜூலை மாதம் 1-ந்தேதி முன் தேதியிட்டு அமல்படுத்துகிற விதத்தில் இந்த அகவிலைப்படி உயர்வு அறிவித்து, வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதன்மூலம் அகவிலைப்படி அளவு 7 சதவீதமாக உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் அவர்களின் அகவிலைப்படி அளவு 7 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால், 48 லட்சத்து 41 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், 62 லட்சத்து 3 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள். மொத்தத்தில் 1 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரம் பேர் பலன் அடைவர். 7-வது ஊதியக்குழு சிபாரிசு அடிப்படையில், ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறையின்கீழ் இந்த அகவிலைப்படி உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வுக்கு, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரத்து 112 கோடியே 20 லட்சம் கூடுதல் செலவு பிடிக்கும். நடப்பு நிதி ஆண்டில் மட்டுமே ரூ.4 ஆயிரத்து 74 கோடியே 80 லட்சம் கூடுதல் செலவாகும்.

பணி நேரத்தின்போது அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு

பணி நேரத்தின்போது அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், அரசுத் துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு பணியாளர் மற்றும் சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.ஸ்வர்னா அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு ஊழியர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின்போது கண்டிப்பாக அணிவதை அந்தந்த துறையின் தலைவர் உறுதி செய்யவேண்டும் என்பதற்கான அறிவுரையை அவ்வப்போது அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு கடந்த 16.7.2018 அன்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், தமிழக அரசின் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் குறிப்பாக, பொதுமக்களிடம் நேரடியாக பணியாற்றும் ஊழியர்களுக்கு 60 நாட்களுக்குள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அடையாள அட்டை அணிவது தொடர்பாக ஏற்கனவே அரசு விதி இருந்தால் அந்த விதியை மிகவும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும், விதியை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ள ஆணையை பின்பற்றி அடையாள அட்டையை கண்டிப்பாக அனைத்து ஊழியரும் அணிய வேண்டும் என்று அவர்களுக்கு துறைத் தலைவர்கள் அல்லது மாவட்ட கலெக்டர்கள் அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அடுத்த வாரம் தொடங்கும் என அமைச்சர் தகவல்

தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அடுத்த வாரத்தில் தொடங்கப்படும் என சென்னை எஸ்ஆர்எம் நைட்டிங்கேல் பள்ளி பொன்விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார். சென்னை மேற்கு மாம்பலம் எஸ்ஆர்எம் நைட்டிங்கேல் மெட்ரிக் குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா, ராமாவரத்தில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் தொழில் நுட்ப நிறுவன அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் கூறியதாவது: எஸ்ஆர்எம் பல்கலைக்கழ கத்தில் 10 ஆயிரம் மாணவர் களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது பாராட்டுக்குரியது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிளஸ் 2 முடிக்கும் மாணவர் களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் அடுத்த ஆண்டு 12 வகையான திறன் மேம்பாட்டுப் பாடங்களை அறிமுகப்படுத்த உள்ளோம். தமி ழகம் முழுவதும் 3 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அடுத்த வாரத்தில் தொடங்கப்பட உள்ளன. தமிழக மாணவர்களை நீட் நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத் தும் வகையில் அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்த வாரம் மாநிலம் முழுவதும் 412 மையங்களில் நீட் தேர்வுக்காக 3,200 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். நீட் பயிற்சி மையத் தில் ஐஐடி, ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். தலைமை உரையாற்றிய பள்ளி யின் நிறுவனரும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தருமான டி.ஆர்.பாரிவேந்தர், ‘‘கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 25 குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் தொடங்கப்பட்ட எஸ்ஆர்எம் நைட்டிங்கேல் நர்சரி பள்ளிதான் விதையாகி இன்றைக்கு 27 கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய எஸ்ஆர்எம் பல்கலைக்கழகமாக வளர்ந்துள்ளது” என்று குறிப்பிட் டார்.

சிறப்பு ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று பணிநியமன ஆணை பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி

தேர்வு வாரியம் மூலம் தேர்வாகும் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று பணிநியமன ஆணை பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்பட இருக்கிற சிறப் பாசிரியர்களுக்கு ஆசிரியர் தின மான செப்டம்பர் 5-ம் தேதி பணி நியமன ஆணை வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உறுதியளித் துள்ளார். தமிழகத்தில் இதுவரையில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நடைபெற்று வந்த தையல், ஓவியம், உடற் கல்வி, இசை ஆகிய சிறப்பாசிரியர் பணிநியமனம் தற்போது முதல் முறையாக ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் போட்டித்தேர்வு மூலமாக மேற்கொள்ளப்பட இருக்கிறது. அந்த வகையில், அரசு பள்ளி களில் 1,325 சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி நடத்தப்பட்டது. அத்தேர்வினை 35,781 பேர் எழுதினர். எழுத்துத்தேர்வு முடிவுகள் ஜூலை 27-ம் தேதி வெளியிடப் பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2,846 பேர் தகுதிபெற்றனர். அவர் களுக்கு கடந்த 13-ம் தேதி அந்தந்த மாவட்டங்களில் சான்றி தழ் சரிபார்ப்பு நடந்தது. அப் போது கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவை சரிபார்க் கப்பட்டு வேலைவாய்ப்பு அலு வலக பதிவுமூப்புக்கு ஏற்ப உரிய மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன. உரிய கல்வித்தகுதி இல்லாமல் விண்ணப்பித்தவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், சான்றிதழ் சரி பார்ப்பில் கலந்துகொண்ட சுமார் 200 தேர்வர்கள் சனிக்கிழமை கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையனை அவரது இல்லத் தில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். சிறப்பாசிரியர் தேர் வுப் பட்டியலை விரைவாக வெளி யிட வேண்டும் என்றும் நடப்பு கல்வி ஆண்டு வரையிலான காலி யிடங்களை சேர்த்து கூடுதல் சிறப்பாசிரியர்களை தேர்வுசெய்ய வேண்டும் என்றும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஓவிய ஆசிரியர் தமயேந்தி வரைந்த அமைச்சர் செங்கோட்டையனின் உருவப்படத்தை அவருக்கு நினை வுப்பரிசாக வழங்கிய தேர்வர்கள், கேரள வெள்ள நிவாரண நிதி யாக ரூ.31 ஆயிரத்துக்கான காசோலையையும் வழங்கினர். அமைச்சரை சந்தித்து வந்த தேர்வர்கள் கூறுகையில், சிறப் பாசிரியர் தேர்வுப்பட்டியல் தயாரிப் புப் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடை பெற்று வருவதாகவும், தேர்வுபட்டி யலை விரைந்து வெளியிட்டு ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ம் தேதி அன்று பணிநியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச் சர் உறுதியளித்ததாகவும் தெரிவித் தனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணையின்படி, சிறப்பாசிரியர் தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே வெளி யிடப்பட்டிருக்க வேண்டும். தேர்வுக் கான அறிவிப்பு வெளியிட்டு ஓராண் டுக்கு மேல் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எஸ்.எல்.சி துணை தேர்வுக்கு செப்.5 முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு.

எஸ்.எஸ்.எல்.சி துணை தேர்வுக்கு செப்.5 முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு. அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 10-ம் வகுப்பு துணை தேர்வு செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு தனித் தேர்வர்கள் செப்டம்பர் 5 முதல் 10-ம் தேதி வரை விண் ணப்பிக்கலாம். அரசு தேர்வுத் துறையால் கல்வி மாவட்ட வாரி யாக அமைக்கப்பட்டுள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று மட்டுமே ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும். அரசு சேவை மையங்களின் பட்டியல் தேர்வுத்துறையின் இணையதளத் தில் (www.dge.tn.gov.in) வெளி யிடப்பட்டு இருக்கிறது. கடந்த 8.6.2018 முதல் 30.6.2018 வரை அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புக்குப் பெயர் பதிவுசெய்துள்ள தேர்வர்கள் செப்டம்பர் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது. அவர் கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் பொதுத்தேர்வு எழுத தகுதியுடையவர் ஆவர். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப் படும் தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். அரசு சேவை மையத்தில் ஆன் லைனில் விண்ணப்பித்த பின்பு தேர்வர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப் பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே பின்னர் குறிப் பிட்ட நாளில் தேர்வுக்கூட அனு மதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். சிறப்பு அனுமதி திட்டம் மேற்குறிப்பிட்ட காலக்கெடுவுக் குள் விண்ணப்பிக்க தவறும் தேர் வர்கள் சிறப்பு அனுமதி திட்டத் தின் கீழ் செப்டம்பர் 11 மற்றும் 12-ம் தேதியில் அரசு சேவை மையத்துக்குச் சென்று விண்ணப் பித்துக்கொள்ளலாம். இதற்கு தேர்வுக்கட்டணம், ஆன்லைன் பதிவுக்கட்டணம் ஆகியவற்றுடன் சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை, கடலூர், வேலூர், சென்னை ஆகிய மண்டல அலுவலகங்களின் தலைமையிடத் தில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும் என்றார்.

ஆசிரியர்கள் நியமன தேர்வு பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

ஆசிரியர்கள் நியமன தேர்வு பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி. ஆசிரியர்கள் நியமன தேர்வு பற்றிய அறிவிப்பு அடுத்தமாதம் (செப்டம்பர்) வெளியாகும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எல்.கேஜி., யு.கே.ஜி. வகுப்புகள் மாதிரிபள்ளியான எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 32 மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாதிரி பள்ளிகளை நிறுவ பரிசீலனை செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது நீட் தேர்வு தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து விரைவில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே போட்டித்தேர்வு வர உள்ளது. போட்டித்தேர்வை எழுதுபவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும். இதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அடுத்த மாதம் (செப்டம்பர்) வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

காவிரி டெல்டாவின் கடைமடை பாசன பாதுகாப்பு

காவிரி டெல்டாவின் கடைமடை பாசன பாதுகாப்பு சி.மகேந்திரன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொன்மை வாய்ந்த காவிரி வடிநிலத்தை பாதுகாக்க வேண்டிய காட்டாய தேவை இன்று எழுந்துள்ளது. பெரும் வெள்ளநீர் பெருகெடுத்து ஓடி வரும் நேரத்தில் கூட, ஒரு துளி நீருக்காக அதே ஆற்றுப் பாசனத்தின் கடைமடை விவசாயிகள் ஏக்கத்துடன் காத்து நிற்கிறார்கள் என்ற உண்மை நம் மனசாட்சியை சுட்டு சாம்பலாக்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய விஞ்ஞான யுகத்தில் இந்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது? டெல்டா என்று புகழ் பெற்ற காவிரி வடிநிலப்பகுதியை அறிய வேண்டுமென்றால் தமிழகத்தின் 3 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை கவனத்துடன் திரும்பி பார்க்க வேண்டும். நமது நீர் மேலாண்மையின் தொன்மை சிறப்புக்கு கல்லணையை தவிர வேறு ஆதாரங்கள் தேவையில்லை. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் நீரியல் துறையில் புதிய சாதனையை படைத்த அறிஞர் ஆர்தர் காட்டன், 1835-ம் ஆண்டில் காவிரியும் கொள்ளிடம் பிரியும் முக்கொம்பில், மேலணையை உருவாக்கினார். அதன் பின்னர் 1837-ம் ஆண்டில் கல்லணையை ஒட்டி, மணல் போக்கிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு ஒரு பேரார்வம் ஏற்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாக சொல்லப்படும் கல்லணையின் அடித்தளம் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அந்த ஆர்வம். ஆவலுடன் ஒரு கோடை காலத்தில் அணையைப் பிரித்து பார்க்கத் தொடங்கினார். 12 அடி ஆழத்துக்கு அணையை தோண்டிப் பார்த்தார். கற்கள் ஒன்றின் மீது, மற்றொன்று அடுக்கப்பட்டிருப்பதைக் கண்டார். கற்களை உறுதியோடு இணைத்து வைக்கும் மரபிசின் அல்லது வேறு கலவைகள் எதுவுமே பயன்படுத்தபடவில்லை. ஆனாலும் அவை உறுதியுடன் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருப்பது உலகின் அதிசயமாக தெரிந்தது அவருக்கு. இதன் காரணத்தை ஆராய்ந்தபோதுதான், ஆர்தன் காட்டனுக்கு தெளிவு கிடைத்தது. அதிக எடையுள்ள கற்களை முதலில் போட்டு இருக்கிறார்கள். எடை காரணமாக அடிமட்டத்திற்கு பறாங்கற்கள் சென்று, அதன் மேல் மணல் மூடி அடித்தளமாக அமைந்து இருக்கிறது. அதன் மீது காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அதைவிடவும் எடைக் குறைந்த கற்களைப் போட்டு அணையை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது அவருக்கு புலப்பட்டது. பின்னாளில், ‘ஓடும் நீரில் அணையைக் கட்டிய இந்த ஆதி தொழில்நுட்பம் உலகில் வேறு எங்கும் இல்லை. தமிழ் மக்களிடம் தான் இருந்திருக்கிறது’ என்று ஆர்தர் காட்டன் குறிப்பிட்டுள்ளார். டெல்டாவின் ஆறுகள் வாய்க்கால்கள் பற்றிய தகவல்கள் பெரும் வியப்பைத் தரக்கூடியவை. பசுமை கொஞ்சும் இந்த சமவெளியில், 36 ஆறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகள் ஒவ்வொன்றின் நீளத்தையும் மொத்தமாக கூட்டி பார்த்தால், இவை 999 மைல் நீளம் கொண்டுள்ளன. இதிலிருந்து பிரிந்து நீர் சுமந்து செல்லும் வாய்க்கால்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 881. ஆறுகள் வாய்கால்கள் ஆகியவற்றின் மொத்த நீளத்தை கூட்டிப் பார்த்தால், 24 ஆயிரத்து 98 மைல்கள் ஆகும். இது ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கு. காவிரி டெல்டாவின் இந்த தொன்மையான கட்டமைப்பை நம்மால் ஏன் இன்று காப்பாற்ற முடியவில்லை? கடைமடைக்கும் தண்ணீர் போய் சேரும் வலிமை கொண்ட பாசன கட்டமை முறைக்கு ஏன் இந்த புதிய நெருக்கடி? இரக்கமற்று ஆற்று மணலை கொள்ளையடித்ததில் ஆறு பள்ளமாகி மதகுகளில் தண்ணீர் ஏறி செல்ல மறுக்கிறது. மணலற்ற ஆறுகளில் சாக்கடை தேங்கி ஆகாய தாமரை முதல் அத்தனை தீங்கு செய்யும் தாவரங்களும் முளைத்து விடுகின்றன. காவிரி டெல்டா நீர் பாசன மேம்பாட்டுக்கு என்று பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளது. உலக வங்கி, ஆசியன் வங்கி, தமிழ்நாடு அரசு வரவு-செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கிய தொகை என்று சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் கடந்த சில ஆண்டுகளில் செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பெருந்தொகை செலவிடப்பட்ட பின்னரும் ஏன் கடைமடைப் பகுதிக்கு நீர் போய் சேரவில்லை? எந்த பொறுப்பும் இல்லாமல் திட்டங்களை வகுத்து பணச் செலவு செய்து கொண்டிருக்கும் அரசு எந்திரம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். எந்த ஒரு திட்டமும் கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடைந்தால் தான், அது வெற்றி திட்டமாக கருதப்படும். கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் கொண்டு சேர்க்க முடியாத அரசின் முழக்கங்கள் வெறும் பொய் முழக்கங்களாகத்தான் இருக்க முடியும். காவிரி வடிநில பகுதிக்கு ஒருங்கிணைக்கப்பட்ட சீரமைப்பு திட்டம் இன்று தேவைப்படுகிறது. இது மக்கள் பங்கேற்று, கண்காணித்து சீரமைக்கும் இயக்கமாக இருக்க வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான ஸ்ரீசாந்தி விஜயா உயர்நிலைப்பள்ளியில், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஓவிய ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து பள்ளியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஆசிரியர்களின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கடந்த 1997-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க முடியும் என்று கூறப்பட்டிருந்தது. உடற்கல்வி அத்தியாவசியமானது இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், கல்யாணசுந்தரம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க உடற்கல்வி அத்தியாவசியமானது. 5 வயது முதல் 18 வயது வரை யோகா உள்ளிட்ட உடற்கல்வியை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க முடியும் என்பது ஏற்புடையது அல்ல. அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். எனவே, 250-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் கவுரவ ஊதிய அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களை தமிழக அரசு பணியமர்த்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை: பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகை பள்ளிகளிலும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளையும், விபத்துகளையும் தடுப்பதற்காக ஆய்வு அலுவலர்களும், பள்ளி தலைமை ஆசிரியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்படுகிறது. பள்ளியின் அனைத்து கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா? என்று ஆய்வு செய்ய வேண்டும். கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு அருகில் மாணவர்களை அனுமதிக்கக் கூடாது. பள்ளியில் மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா, மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் மழைநீர், கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பள்ளி தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கிறிஸ்தவராக இருந்து மதம் மாறியவருக்கு இந்து ஆதிதிராவிடர் சலுகையில் ஆசிரியர் பணி வழங்கியது செல்லும் ஐகோர்ட்டு தீர்ப்பு

கிறிஸ்தவராக இருந்து மதம் மாறியவருக்கு இந்து ஆதிதிராவிடருக்கான சலுகையின் கீழ் ஆசிரியர் பணி வழங்கியது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. திருச்சி மாவட்டம் சிக்கத்தம்பூபாளையத்தைச் சேர்ந்தவர் டெய்சி புளோரா. கிறிஸ்தவ ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த இவர், 1999-ம் ஆண்டு இந்து ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த வானவன் என்பவரை திருமணம் செய்தார். இதற்காக இந்து மதத்திற்கு மாறிய அவர், தனது பெயரை மேகலை என்று மாற்றிக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு இந்து ஆதிதிராவிடருக்கான சாதி சான்றிதழை அதிகாரிகள் வழங்கினர். இந்நிலையில் அவர், 2004-ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறியதால் தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டின் கீழ் பணி வழங்கமுடியாது என்று அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் அவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டின் கீழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வானார். அப்போதும் சாதி சான்றிதழை காரணம்காட்டி அவருக்கு பணி மறுக்கப்பட்டது. இதனால், தன்னை ஆசிரியர் பணியில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று மேகலை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஐகோர்ட்டு வழங்கிய இடைக்கால உத்தரவின்படி, அவர் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இந்தநிலையில் பிரதான வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘மனுதாரர் பிறப்பில் கிறிஸ்தவராக இருந்தாலும் திருமணத்துக்கு பின்பு இந்து மதத்திற்கு மாறி உள்ளார். சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை அளித்ததன் பேரில் அவருக்கு இந்து ஆதிதிராவிடர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்து ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்தவருக்கான சலுகைகளை பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது. எனவே, மனுதாரருக்கு தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவின் கீழ் ஆசிரியர் பணி வழங்கியது செல்லும்’ என்று உத்தரவிட்டார்.

என்ஜினீயரிங் துணை கலந்தாய்வு 26-ந் தேதி தொடங்குகிறது இன்று முதல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு

தமிழகம் முழுவதும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. சேருவதற்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற்றது. பிளஸ்-2 பொதுத் தேர்வில் தேர்ச்சிபெறாமல், மீண்டும் துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்காக வருகிற 26-ந் தேதி முதல் துணை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இந்த கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் நடத்தப்படும். இதற்காக அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி இன்று (வியாழக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது. 25-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். தொழில்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு 27-ந் தேதியும், அருந்ததியினர் பிரிவில் காலியாக உள்ள இடங்களை ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்குவதற்கான கலந்தாய்வு 28-ந் தேதியும் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் செய்துள்ளார்.

போலி மாற்றுச்சான்றிதழ் வழங்கிய பள்ளிக்கு ஐகோர்ட்டு கண்டனம் சம்பந்தப்பட்ட அலுவலரை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவு

மாணவிக்கு போலி மாற்றுச்சான்றிதழ் வழங்கிய பள்ளிக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐகோர்ட்டு, சம்பந்தப்பட்ட அலுவலரை பணி இடைநீக்கம் செய்யவும் உத்தரவிட்டது. கேரள மாநிலம் பாலக்காட்டில் மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றியவர் திரவியம் தினேஷ். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் கீர்த்தனா. தற்போது சென்னையில் வக்கீலாக பணிபுரியும் திரவியம் தினேஷும், அவரது மனைவியும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் திரவியம் தினேஷ் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தனது மனைவி பாலக்காட்டில் உள்ள புனித ரபேல்ஸ் கதீட்ரல் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்த தனது மகள் கீர்த்தனாவுக்கு சென்னை நாகல்கேணியில் உள்ள தனியார் பள்ளியில் படித்ததாக போலி மாற்றுச்சான்றிதழ் பெற்று பெங்களூருவில் உள்ள சிலிக்கான் சிட்டி பப்ளிக் ஸ்கூல் என்ற பள்ளியில் சேர்த்துள்ளார். எனவே, அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- மனுதாரரின் மகள் சென்னை நாகல்கேணியில் உள்ள பள்ளியில் படிக்காத நிலையில் பள்ளி நிர்வாகம் அவருக்கு போலியாக மாற்றுச்சான்றிதழ் வழங்கியது கண்டிக்கத்தக்கது. இதற்கான ஆதாரங்கள் உள்ளதால் அந்த பள்ளியை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இருந்தாலும் அங்கு படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு அதுபோன்ற உத்தரவை பிறப்பிக்கவில்லை. போலி மாற்றுச்சான்றிதழ் வழங்கிய அலுவலரை பள்ளி நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் பணி நீக்கம் செய்ய வேண்டும். குடும்ப பிரச்சினை தம்பதியினருக்கு இடையே மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை, குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பெற்றோர் உணர வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

1 முதல் 5-ம் வகுப்பு வரை என்சிஇஆர்டி பரிந்துரை செய்யாத புத்தகங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட நேரிடும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

1 முதல் 5-ம் வகுப்பு வரை என்சிஇஆர்டி எனும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரை செய்யாத புத்தகங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத்திட்ட விதிகளை மீறி தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரை 8 பாடங்கள் போதிக்கப்படுகின்றன. 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற விதி பின்பற்றப்படுவது கிடையாது. எனவே என்சிஇஆர்டி விதிகளைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கண்டிப்பாக கொடுக்கக்கூடாது என உத்தரவிட்டு இருந்தார்.இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி என்.கிருபாகரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 8 பாடங்களை நடத்துகின்றனர். இதற்காக தனியார் புத்தக பதிப்பகங்களும், சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்களும் கைகோர்த்து புத்தக சுமையை குழந்தைகள் மீது திணிக்கின்றன. இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். 1-ம் வகுப்பு மாணவருக்கு உலகிலேயே மிகச்சிறிய விமானம் எது என்றும், இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எது என்றும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன’’ என்றார். இதுதொடர்பாக மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திக்கேயனிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் நீதிபதி, ‘‘என்சிஇஆர்டி பரிந்துரை செய்துள்ள பாடங்களைத் தவிர தனியார் பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களை வாங்கக்கூடாது. மீறி பயன்படுத்தினால் என்சிஇஆர்டி பரிந்துரை செய்யாத புத்தகங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட நேரிடும்’’ என எச்சரித்து தீர்ப்புக்காக இந்த வழக்கை வரும் 27-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ஆன்லைனில் மட்டுமே நடத்தும் முடிவும் வாபஸ் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ‘நீட்’ தேர்வு கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு அறிவிப்பு.

ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு நடத்தும் முடிவையும், ஆன்லைனில் மட்டுமே தேர்வு நடத்தும் முடிவையும் மத்திய அரசு கைவிட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ‘நீட்’ தேர்வு நடத்தப்படும். மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்தி வந்தது. இந்நிலையில், கடந்த மாதம், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். புதிதாக அமைக்கப்பட்ட தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) ‘நீட்’ தேர்வை இனிமேல் நடத்தும் என்றும், ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்தார். மேலும், ‘நீட்’ தேர்வு, ஆன்லைன் முறையில் மட்டுமே நடத்தப்படும் என்றும் கூறினார். அவரது அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆன்லைன் முறையில் மட்டுமே தேர்வு நடத்தினால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினர். மேலும், மத்திய சுகாதார அமைச்சகமும் இந்த அறிவிப்புக்கு கடிதம் மூலம் அதிருப்தி தெரிவித்தது. ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு நடத்தினால், தேர்வு அட்டவணை, மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை உருவாக்கும் என்றும், ஆன்லைன் முறை தேர்வால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியது. இந்த எதிர்ப்பை தொடர்ந்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தனது முந்தைய முடிவுகளை கைவிட்டுள்ளது. வழக்கம்போல், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ‘நீட்’ தேர்வு நடத்தப்படும் என்றும், ஆன்லைன் தேர்வு முறை கிடையாது என்றும் நேற்று அறிவித்தது. இதுகுறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கடந்த ஆண்டு பின்பற்றிய முறையே இந்த ஆண்டும் தொடர வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது. அதன்படி, இந்த மாற்றம் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ‘நீட்’ தேர்வு நடத்தப்படும். ஆன்லைன் முறை அல்லாமல், பேனா, பேப்பர் முறையிலேயே தேர்வு நடத்தப்படும். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மொழிகளிலேயே தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். அடுத்த ‘நீட்’ தேர்வு, 2019-ம் ஆண்டு மே 5-ந் தேதி நடைபெறும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்காணும் பதவிக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பு - II தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் “www.tnpsc.gov.in”-ல் வெளியிடப்பட்டுள்ளது.http://www.tnpsc.gov.in/results.html

எஸ்.எஸ்.எல்.சி. தேறியவர்கள், பிளஸ்-2 தேர்வு, இனி நேரடியாக எழுத முடியாது அரசு தேர்வு இயக்குனர் அறிவிப்பு

எஸ்.எஸ்.எல்.சி. தேறியவர்கள், பிளஸ்-2 தேர்வை தனித்தேர்வர்களாக நேரடியாக இனி எழுத முடியாது என்று அரசு தேர்வு இயக்குனர் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் இதுவரையில் எஸ்.எஸ்.எல்.சி. (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு எழுதி தேறியவர்கள், தனித்தேர்வர்களாக பிளஸ்-2 தேர்வை நேரடியாக எழுதலாம் என்ற நிலை இருந்து வந்தது. இப்போது கடந்த மார்ச் மாதம் முதல் பிளஸ்-1 தேர்வு அரசு பொதுத்தேர்வாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-2 தேர்வை நேரடியாக எழுத முடியாது. இவர்கள் பிளஸ்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர்தான், பிளஸ்-2 தேர்வு எழுத முடியும். நடைபெறவுள்ள செப்டம்பர் மாத பிளஸ்-2 தேர்விற்கு, இத்துறையால் நடத்தப்பட்ட பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மற்றும் தனித்தேர்வர்கள் தோல்வியுற்ற அல்லது வருகை புரியாத பாடங்களில் தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கலாம். இவர்களுக்கு செப்டம்பர் 2018 தவிர்த்து, இன்னும் ஒரு வாய்ப்பு (2019 மார்ச்) மட்டும் தரப்படும். 27-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் இவர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு சேவை மையங்களுக்கு சென்று 27-ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பிட்டுள்ள தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தனித்தேர்வர்கள் ஆயிரம் ரூபாய் கூடுதல் கட்டணத்துடன் ‘சிறப்பு அனுமதி திட்டத்தில்’ செப்டம்பர் மாதம் 3 மற்றும் 4-ந் தேதி ஆகிய இரு தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தகவல்கள், அரசு தேர்வு இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டு உள்ள அறிக்கையில் இடம் பெற்று உள்ளன.

மருத்துவ கல்விக்கான கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்தது

மருத்துவ கல்வி கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. இந்தியா முழுவதும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) மூலமே மருத்துவ கலந்தாய்வு நடந்தது. இதற்காக தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. மே மாதம் நடந்த நீட்தேர்வை 8,445 பேர் எழுதினார்கள். அவர்களில் 1,037 பேர் நீட் தேர்வில் தகுதிபெற்றனர். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி தொடங்கி ஜூலை 7-ந்தேதி முடிவடைந்தது. மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 72.25 சதவீதம் பேரும், சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட இதர பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் 27.75 சதவீதம் பேரும் தேர்வு ஆனார்கள். 4 பேருக்கு மட்டும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 4 பேருக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது. 4 பேருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த 26 மாணவ-மாணவிகளுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவு நாளை (23.08.2018) வெளியீடு

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட்டது. 561 மாணவர்கள் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தனர். அவர்களின் மறுகூட்டல் முடிவு நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் (www.dge.tn.gov.in ) என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. விண்ணப்பித்த மாணவர்களில் 10 பேருக்கு மதிப்பெண் மாற்றம் உள்ளது. அவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் மாத பிளஸ்-2 தேர்வுக்கான அட்டவணை

பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் மாத தேர்வு அட்டவணையை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

செப்டம்பர் 24-ந் தேதி - தமிழ் முதல் தாள்.

25-ந் தேதி - தமிழ் 2-வது தாள்.

26-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள்.

27-ந் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்.

28-ந் தேதி - வேதியியல், அக்கவுண்டன்சி, புவியியல்.

29-ந் தேதி - கணிதம், விலங்கியல், மைக்ரோபயாலஜி, வணிகவியல்.

அக்டோபர் 1-ந் தேதி - கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், மனை அறிவியல்.

3-ந் தேதி- உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்.

4-ந் தேதி - இயற்பியல், பொருளாதாரம் மற்றும் தொழில் தேர்வுகள்.

குடிமைப்பணி தேர்வுகளுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வருகிறது. இங்கு ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை, மெயின் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு நுழைவுத்தேர்வு மூலமாக தகுதி யுள்ள மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் முதன்மை தேர்வுக்குப் பயிற்சி இலவசம். அந்த வகையில், 2019-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு இலவச பயிற்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவ-மாணவிகளை தேர்வு செய்வதற் கான நுழைவுத் தேர்வு வரும் ஜனவரி மாதம் 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத் தில் உள்ள முக்கிய நகரங் களில் நடத்தப்பட உள்ளது. இந் நுழைவுத்தேர்வு எழுத விரும்பு வோர் இன்று (திங்கள்கிழமை) முதல் செப்டம்பர் 19-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். கூடுதல் விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என பயிற்சி மையத்தின் முதல்வர் அறிவித் துள்ளார். இப்பயிற்சி மையத்தில் ஏற் கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழுநேர பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எம்பிபிஎஸ் இறுதி கலந்தாய்வு நாளை தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான இறுதிக்கட்ட கலந் தாய்வு நாளை தொடங்குகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்று அனுமதிக் கடிதம் பெற்று கல்லூரிகளில் சேராததால் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான 600-க்கும் மேற்பட்ட பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு நாளை தொடங்கி வரும் 23-ம் தேதி வரை சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற உள்ளது. காலியிடங்கள் உள் ளிட்ட அனைத்து விவரங்களும் www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் என்று இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யின் 38 படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் 38 படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக் கழகத் துணைவேந்தர் எம்.பாஸ் கரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் யுஜிசி-யின் 12-பி தகுதி பெற்று திறந்தநிலை மற்றும் தொலைநிலைக்கல்வி மூலமாக பல்வேறு படிப்புகளை வழங்கு கிறது. சான்றிதழ், பட்டயம், முது நிலை பட்டயம், தொழில்சார் கல்வி பட்டயங்களைப் பொருத்தவரை, தமிழ்நாடு திறந்தநிலை பல் கலைக்கழகத்தின் சட்ட விதி களின்படி பல்கலைக்கழகமே படிப்புகளை வழங்கலாம் என யுஜிசி அறிவித்துவிட்டது. அதன் படி, தற்போது தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தால் 128 படிப்புகள் வழங்கப்படுகின்றன. நாட்டில் உள்ள 14 திறந்த நிலை பல்கலைக்கழகங்கள், 100-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் யுஜிசி-யிடம் விண்ணப் பித்திருந்தன. அதன்படி, 2018-19 கல்வி ஆண்டு முதல் 2022-23 வரை 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்துக்கு 38 பட்டம், முதுகலை பட்டப் படிப்பு களுக்கு யுஜிசி அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிஎட், பிஎட் (சிறப்பு கல்வி) படிப்புகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மற்றும் இந்திய மறுவாழ்வு கவுன்சில் வழங் கிய அனுமதி ஆணை இப்படிப்பு களுக்கு அனுமதி வேண்டி யுஜிசி-க்கு அனுப்பப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள படிப்புகளுக்கும் விரைவில் அனுமதி பெறப்படும். இவர் அவர் தெரிவித்து்ள்ளார்.

கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

தமிழக கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை தமிழக கல்வித்துறை அதிரடியாக பிறப்பித்து உள்ளது. செல்போன் பேச தடை தமிழகத்தில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை உத்தரவு அமலில் உள்ளது. கல்லூரிகளை பொருத்தவரையில் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடாக செல்போன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. செல்போன்களால் மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுவதை தடுக்க கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதற்கான உத்தரவை கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி அனைத்து மண்டல கல்வித்துறை இணை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அவர்கள் தங்களது எல்லைக்குள் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார். அவரது சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- கல்லூரி வளாகத்திற்குள் மாணவ-மாணவிகள் செல்போன் உபயோகிப்பதை தடை செய்யுமாறு முதல்வர்கள் மற்றும் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. படிப்பு பாதிப்பு இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பேச தடைவிதிக்கப்பட்டதை வரவேற்கிறேன். கல்லூரிகளில் கண்டிப்பாக செல்போனை தடை செய்யவேண்டும். ஏனென்றால் வகுப்பு நேரத்தில் மாணவ-மாணவிகள் செல்போனில் பேசுவதும், வீடியோ எடுப்பதும் சகஜமாக உள்ளது. எனவே படிப்பு பாழ்பட்டுப்போகிறது. மாணவ-மாணவிகள் செல்போனை கல்லூரிகளுக்கு கொண்டு வரலாம். ஆனால் வகுப்பு நேரத்தில் சுவிட்ச் ஆப் செய்து விடவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு கடந்த 16, 17-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவையொட்டி கடந்த 17-ந்தேதி அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. எனவே ஜூன், ஜூலை-2018 பிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் 20-ந்தேதி(நாளை) சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிப்பதற்கு கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 22ந்தேதி பக்ரீத் பண்டிகை

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஆக.22-ம் தேதி கொண்டாடப் படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். முஸ்லிம்களின் ஈகை திரு நாளான பக்ரீத் இந்த ஆண்டில் ஆகஸ்ட் 22-ம் தேதி கொண் டாடப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சகம் கடந்த ஆக.14-ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளி யிட்டது. அதன்படி, பக்ரீத் பண் டிகை ஆக.22-ம் தேதிக்குப் பதில் ஆக.23-ம் தேதி கொண் டாடப்படுகிறது. எனவே, பக்ரீத்துக்கான விடுமுறையும் ஆக.22க்கு பதில் 23-ம் தேதி யாக மாற்றப்பட்டுள்ளதாக தெரி வித்தது. அத்துடன், டெல்லி யில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு ஆக.23-ம் தேதி விடுமுறை அளிக்கப்படு வதாக அறிவித்தது. டெல்லி தவிர்த்த மற்ற பகுதிகளில், அந்தந்த மாநில அரசுகள் அறிவிக்கும் நாளை கொண்டு முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அன்றைய தினமே ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ‘ஆக. 12-ம் தேதி பிறை தெரிந்ததை முன்னிட்டு, பக்ரீத் பண்டிகை ஆக.22-ம் தேதியே தமிழகத் தில் கொண்டாடப் படும்’ என்று கூறப்பட்டிருந்தது. இதன்படி, ஏற்கெனவே தமிழகத்தில் அறிவிக்கப்பட் டிருந்த ஆக.22-ம் தேதியே பக்ரீத் பண்டிகை கொண்டாடப் படுகிறது. அன்றே அரசு விடுமுறையும் அளிக்கப்படு கிறது.

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க 20-ந் தேதி கடைசி நாள்

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க 20-ந் தேதி கடைசி நாள் தமிழகத்தில் உள்ள 509 என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. சேர கலந்தாய்வை ஆன்லைன் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. ஏற்கனவே 4 கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டு விட்டது. இனிமேல் 5-வது கட்ட கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் 20-ந் தேதி நடத்த உள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிறப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு என்ஜினீயரிங் படிப்பில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகிறார்கள். இவர்கள் விண்ணப்பிக்க 20-ந் தேதி கடைசி நாள். இது தொடர்பாக www.annauniv.edu என்ற இணையதளத்தில் தகவல்களை காணலாம்.

கல்வித்துறை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை ஐகோர்ட்டு உத்தரவு

தகராறில் ஈடுபட்ட மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் பிளஸ்-1 படித்த மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில், 7 மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதில் ஒரு மாணவரின் தாயார், பள்ளி நிர்வாகத்தை அணுகி, ‘தன் மகன் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், பிளஸ்-1 தேர்வு எழுதி முடித்ததும், மாற்றுச்சான்றிதழை பெற்றுக் கொள்வதாகவும்’ கூறினார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பள்ளி நிர்வாகம், அந்த மாணவரை ஆண்டு இறுதி தேர்வு எழுத அனுமதித்தது. ஆனால், அந்த மாணவரை பிளஸ்-2 படிப்பையும் தொடர்ந்து படிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது தந்தை கோரிக்கை விடுத்தார். இதை பள்ளி நிர்வாகம் ஏற்காததால், பள்ளிக்கல்வித்துறையில் மாணவரின் சார்பில் புகார் செய்யப்பட்டது. இதை விசாரித்த பள்ளிக்கல்வித்துறை, அந்த மாணவரை மட்டுமல்லாமல் தகராறில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களையும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், ‘பள்ளியில் தகராறில் ஈடுபடும் மாணவர்களை அதே பள்ளியில் மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டால், அது தவறான முன்உதாரணமாகி விடும். பெரும்பாலான மாணவர்கள் சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமலும், ஈகோ போன்றவற்றினாலும், எதிர்காலத்தை வீணடிக்கின்றனர். இப்போது எல்லாம் ஆசிரியர்கள் மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ளவர்களும் அவர்களுக்கு நல்ல பண்புகளை கற்றுக் கொடுப்பது இல்லை. எனவே, பிரச்சினையின் தீவிரம் தெரியாமல், மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரி மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழை பள்ளி நிர்வாகம் ஏற்கனவே வழங்கி விட்டதால், அவர்களை மீண்டும் சேர்க்கத் தேவையில்லை’ என்று கூறியுள்ளார்.

அரசு பள்ளிகளில் விரைவில் 'ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ்'

அரசு பள்ளிகளில் விரைவில் 'ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ்' *மாணவர்களின் படைப்பாற்றல், சிந்தனை திறனைவெளிக் கொண்டு வரும் வகையிலும், வேலை வாய்ப்பு சவால்களை உறுதியோடு எதிர்கொள்ளும் வகையிலும், புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன *பாடப் பகுதி தொடர்பான கருத்து, வீடியோக்கள், தீர்வுகள், கேள்வி, பதில்களை, 'கியூ.ஆர்., கோடு' மூலம் காணும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு நாளில், இரண்டு லட்சம் பேர் வரை, பதிவிறக்கம் செய்ய முடியும் *பாடம் தொடர்பான கூடுதல் விபரங்களை அறிய, இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறையை மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில் செயல்படுத்த முயற்சி செய்தனர் *ஆனால், முதல் முறையாக, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.ஆசிரியர்கள், கற்றல் வழி மட்டுமின்றி, வீடியோக்கள் மூலமாக பாடங்களை நடத்தலாம் *இதற்காக, தமிழக பள்ளிகளில், விரைவில், 'ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ்கள்' அமைக்கப்பட உள்ளன.புதிய பாடநுால்களை படித்தால், போட்டி தேர்வில், சுலபமாக வெற்றி அடையலாம். 99 சதவீத கேள்விகள், அதில் இருந்து தான் கேட்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

TRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

சிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது? என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும், தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிடவில்லை என்று கலை ஆசிரியர் நலச்சங்கம் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இது குறித்து கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறுகையில், "சிறப்பாசிரியர் பணி இடத்திற்கு உண்டான கல்வித் தகுதி இருப்பது போல் உண்மைக்கு மாறான பொய்யான தகவல் கொடுத்துள்ளவர்கள் பெயர் சான்றிதழ் சரிபார்ப்பு கடிதத்தில் இடம் பெற்றுள்ளது என தகவல் அளித்தும் மாவட்ட முதன்மை கல்வி நிர்வாகம் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பியுள்ளது.அதில் தையல் மற்றும் ஓவிய ஆசிரியர் பணிக்கு அரசு தொழில்நுட்பத் தேர்வு மட்டுமே எழுதியவர் ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பாணைப்படி (TECHNICAL TEACHER CERTIFICATE) ஆசிரியர் தொழில் நுட்ப சான்றிதழ் கல்வித் தகுதி இல்லாமல் போலியாக விண்ணப்பித்து போட்டித் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதே போல் ஓவிய ஆசிரியருக்கு அறிவித்துள்ள சான்றிதழ் தகுதிகள் இல்லாத போதும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அவர்கள் அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றுள்ளது. அப்படி என்றால் ஓவிய ஆசிரியர் பணிக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் தற்போது பணி வழங்கப்படும்? என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பிட்ட சான்றிதழ்களே இல்லாதவர்களுக்கு எவ்வாறு பணி வழங்க முடியும்.அரசாணை 242 எண் 12 படி 10+2+3+2 என்ற முறையில் தான்அதற்கு தகுதி பெற்றவர்களுக்கு மட்டும் தான் பணி வழங்க வேண்டும். இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு அளித்தும் எந்த தெளிவும் கிடைக்காததால் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்." என்றார்.

தாழ்த்தப்பட்டோர் பதவி உயர்வுக்கு ‘கிரீமிலேயர்’ பொருந்தாது உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங் குடியினருக்கு பதவி உயர்வு வழங்குவதில் ‘கிரீமிலேயர்’ (பொருளாதார உச்சவரம்பு) அணுகுமுறையை பின் பற்றக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டுள்ளது. அரசு ஊழியர்களாக பணி யாற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வு வழங்குவதிலும் இட ஒதுக்கீடு கொள்கை பின் பற்றப்படுகிறது. இதுதொடர் பான வழக்கு, உச்ச நீதி மன்றத்தின் அரசியல்சாசன அமர்வு முன்பாக விசாரணை யில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்ககானது, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நாரிமன், எஸ்.கே.கவுல், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் முன்வைத்த வாதம்: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வு வழங்கும்போது ‘கிரீமிலேயர்’ கொள்கையை பின்பற்றி, பொருளாதார ரீதி யாக வளர்ந்த பிரிவினரை ஒதுக்க வேண்டும் என்று எந்த சட்டத்திலும் குறிப்பிடப்பட வில்லை. அப்படியே ஒரு சிலர் பொருளாதார ரீதியாக வளர்ந்திருந்தாலும், சமூகத்தில் அவர்கள் மீதான பாரபட்சம் மற்றும் பின்தங்கிய நிலை மாறாததால் அவர்களுக்கான பதவி உயர்வில் ‘கிரீமிலேயர்’ கொள்கையை பின்பற்றுவது பொருத்தமாக இருக்காது. மேலும், தாழ்த்தப்பட்ட மற் றும் பழங்குடியினர் பிரிவில் சிலர் முன்னேறி இருந்தா லும், அவர்கள் அதே சமுதாயத் தில்தான் திருமணம் செய்ய வேண்டிய நிலை நீடிக்கிறது. அவர்கள் வேறு வளர்ந்த சமு தாயத்தைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்ய முடிவ தில்லை. ஜாதி ரீதியான சமூக பாரபட்சம் இன்னும் நீடிப்பதால், அவர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வில் ‘கிரீமிலேயர்’ கொள்கையை கொண்டு வரக்கூடாது. அவ்வாறே, ‘கிரீமிலேயர்’ முறையை கொண்டு வருவது என்றாலும், அதை குடியரசுத் தலைவர் அல்லது நாடாளு மன்றம் மட்டுமே செய்ய முடி யும். இதில் நீதிமன்றம் தலை யிட முடியாது. என்.எம்.தாமஸ் வழக்கில் (1976), 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வும், இந்திரா சாஹ்னி வழக்கில் (1992), 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வும், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே தீர்ப்புகள் வழங்கியுள்ளன. எனவே, இதுகுறித்து மேலும் பரிசீலிக்க வேண்டுமெனில், அதைவிட கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றிய பின்னரே விவாதிக்க வேண்டும் என அவர் வாதிட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெறவுள்ளது. ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக் கும் அதிகமாக வருமானம் உள்ளவர்கள், பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்தவர் களாக கருதி, அவர்களை ‘கிரீமிலேயர்’ பட்டியலில் சேர்க்கும் நடைமுறையை மத்திய அரசு பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகங்களில் எம்.பில், பிஎச்.டி ஆய்வுக்கான சேர்க்கை மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வில் சலுகைகள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை திட்டம்

பல்கலைக்கழகங்களில் எம்.பில் மற்றும் முனைவர் (பிஎச்.டி) பட்டத்துக்கான ஆய்வு மாணவர் கள் சேர்க்கையில், இரு புதிய சலுகைகளைக் கொண்டு வர மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின் படி எம்.பில், பிஎச்.டி ஆய்வு பட்டங்களுக்கான உயர்க்கல்விக்கு நுழைவுத்தேர்வு மற்றும் நேர் முகத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பொது மற்றும் ஒதுக்கீடு என அனைத்து தரப்பு மாணவர் களும் 50 சதவிகித மதிப்பெண் பெற வேண்டும். சில நேரங்களில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற முடியாமல் போவதால் நாட்டின் பல பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கையின் சில இடங்கள் நிரப்ப முடியாமல் வீணாகி விடுகின்றன. இதை தடுப்பதுடன் அதன் பலன் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் களுக்கு கிடைக்க மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை திட்ட மிட்டுள்ளது. இந்த புதிய சலுகை களை மாணவர் சேர்க்கை விதி முறைகளில் சேர்க்க பல்கலைக் கழக மானியக் குழுவுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை விரைவில் உத்தரவிட உள்ளது. இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டு துறை வட்டாரம் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘இந்த சலுகை களின்படி, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு நுழைவு தேர்வில் 40 சதவிகித மதிப்பெண் பெற்றால் போதுமானது. அதன் பிறகும் நிரப்ப முடியாமல் நிலுவையில் உள்ள இடங்களை நிரப்பும் அதிகாரம் பல்கலைக்கழகங்களுக்கு அளிக் கப்படும். இதற்காக, பல்கலைக் கழகங்கள் தனது நுழைவுத் தேர்வின் மதிப்பெண்களில் மேலும் சில சலுகைகளை ஒதுக்கீடு மாணவர்களுக்கு அளிக்கலாம்’’ என்று தெரிவித்தனர். இதற்கிடையில், உயர்க்கல்விக் கான மாணவர் சேர்க்கையில் யுஜிசி.யின் விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி அதன் அலுவலகம் முன்பாக டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், விதிமுறை களை முன்புபோல் பல்கலைக் கழகங்களின் நிர்வாகங்களிடம் அளிக்க வேண்டும் என வலி யுறுத்தி வருகின்றனர். இதற்கு சில பாடப்பிரிவுகளின் நுழைவுத் தேர்வு மிகக்கடுமையாக இருப்பது காரணம். இதனால், பல்வேறு சூழல்களில் இருந்து பல்கலைக் கழகங்களில் உயர்க்கல்வி பெற வரும் சில மாணவர்களால் குறைந்தபட்ச மதிப்பெண் கூட பெற முடிவதில்லை எனப் புகார் உள்ளது. இந்த ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் தாவரவியல், புள்ளியியல், மண்ணியல் மற்றும் பெர்ஷியன் ஆகிய பாடப் பிரிவு களின் நுழைவுத்தேர்வு நடை பெற்றது. இதில் ஒரு மாணவர் கூட குறைந்தபட்ச மதிப்பெண் பெறவில்லை. அதனால் எல்லா இடங்களும் காலியாகவே உள்ள தாகக் கூறப்படுகிறது. எனவே, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை புதிய சலுகைகளை அறி விக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வை ஒரு முறை மட்டுமே எழுத முடியும் என்ற நிலை உருவாக்கப்படும் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 10 சதவீத மாணவர்களுக்கு பார்வை குறைபாடு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற் றார். அப்போது அவர் கூறியது: தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வை ஒரு முறை மட்டுமே எழுத முடியும் என்ற நிலை உருவாக்கப்படும். பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் முதல் கட்டமாக 25 ஆயிரம் மாண வர்களுக்கு பட்டயப் படிப்புக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களில் 10 சதவீதம் பேருக்கு பார்வைக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சுகாதாரத் துறை வாயிலாக அனைத்துப் பள்ளிகளிலும் பரி சோதனை செய்து மாணவர்களின் கண் குறைபாட்டை சரிசெய்ய வேண்டும் என்றார். கிராமப்புற மாணவர்கள் தொலைதூரம் சென்று கற்கும் பொழுது ஏற்படும் சிரமத்தை போக்க இந்தாண்டு நான்கு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாகவும் ,மூன்று உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இந்தாண்டு பெற்றுள்ள நூறு சதவீத தேர்ச்சியை விட வரும் கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் நூறு சதவீத தேர்ச்சியினை எட்ட வேண்டும்.இந்த நல்லாட்சியில் இந்தியாவில் சுறுசுறுப்பாக பி.டி.உஷாவைப் போல் வேகமாக ஓடிக் பொண்டிருப்பவர் நமது கல்வி அமைச்சர் தான் .நான் கூட அவரை போல ஓட நினைத்தாலும் வேகத்திலே சுறுசுறுப்பிலே எனக்கு முன்னோடி அவர் தான்..அவர் தான் ஓடுவது மட்டுமல்லாமல் தன் துறையையும் வேகமாக ஓட வைப்பவர்.. தாம் பொறுப்பு ஏற்றது முதல் இந்த பள்ளிக் கல்வித் துறையை சீர்மிகு துறையாக மாற்றியுள்ளார்.கனவு ஆசிரியர் விருது,புதுமைப் பள்ளி விருது பெற்ற ஆசிரியர்கள் பாராட்டுச் சான்றிதழை என்னிடம் காண்பிக்கும் பொழுது என்மனம் மகிழ்வாக உள்ளது.மேலும் கல்வித்துறையில் ஆன்லைன் கலந்தாய்வு,கனவு ஆசிரியர் விருது,தேர்வு முறையில் மாற்றம் ,ரேங்க் முறையில் மாற்றம் என பல புரட்சிகளை வெகுறைந்த நாட்களில் கொண்டு வந்தவர் பள்ளிக்கலவித் துறை அமைச்சர்..கழிவு நீர் குட்டையில் கிடந்த குழந்தையையும் அரசு மருத்துமனையில் சேர்த்து தாய்ப்பால் வழங்கும் ஒரே அரசு நம் அரசு தான்.மேலும் கூடுதல் கட்டிடம்,பள்ளிகள் தரம் உயர்வு பற்றி எக்கோரிக்கைகள் கேட்டாலும் உடனே செய்து கொடுப்பவர் நம் அமைச்சர் .மாணவ,மாணவிகளை பயிற்றுவிப்பது ரொம்ப கடினம் ,அதிலும் நூறுசதவீத தேர்ச்சி பெற வைப்பது மிகவும் கடினமான காரியம்..பெரும்பாலும் நான் புதுக்கோட்டை மாவட்ட விழாக்களில் கலந்து கொள்ளும் பொழுது மாணவர்களிடம் சொல்லும் வார்த்தை தம்பி நீ நன்றாக படிக்கனும்.புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில் டாக்டராக படிக்கனும் என்பேன்..மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது..ஆசிரியர்களின் நாவில் வரும் சொற்களில் தான் உள்ளது...மேலும் தான் தனது சொந்த நிதியை 310 பள்ளிக்கு பள்ளிக்கு ஆயிரம் வீதம் புரவலர் நிதியாக வழங்கியுள்ளேன்..மேலும் மாணவர்களுக்கு பயிற்சி கையேடு வழங்க உள்ளேன்..ஆசிரியர்களுக்கு இந்த அரசு என்றும் துணை நிற்கும் என்றார். விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிப் பேசியதாவது:.இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் தமிழக கலவித்துறை செயல்பாட்டு வருகிறது.. மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்கும் வகையில் 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது..பள்ளி மாணவர்களுக்கு மடிகணினி,மிதிவண்டி வழங்கிய பெருமை நம் தமிழகத்திற்கே உண்டு..ஆசிரியர்கள் கலந்தாய்வு வெளிப்படையாகவே நடத்தப்பட்டது..ஒரு சில மாவட்ட ஆசிரியர்கள் ஏன் கன்னியாகுமரி,தூத்துக்குடி செல்ல முடியவில்லை என நினைக்கிறார்கள்..அங்கே ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இங்குள்ளவர்கள் அங்கு செல்ல முடியவில்லை..ஒரு காலத்தில் ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் மாணவர்களை கண்டிக்க கூறுவார்கள் ஆனால் இன்று அப்படி இல்லை.இருந்தாலும் கிராம்ப் புறங்களில் இருந்து வரும் ஏழைக் குழந்தைகளை கருத்தில் கொண்டு ஆசிரிநர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்..அரசு பள்ளி ஆசிரியர்கள் மதிப்பெண் அடிப்படையில் தகுதி தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்..அரசுப் பள்ளியில் படித்தவர்களே குடியரசுத் தலைவர் ,அரசு உயரதிகாரிகள் என பல்வேறு நிலைகளில் உள்ளனர்..இது வரை நான்கு ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் நிரப்ப படாமல் இருந்தது..இந்த ஆண்டு ஒரே நாளில். தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி வரலாற்று சாதனை படைத்துள்ளோம். 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு சீருடைகளில் மாற்றம் கொண்டு வரப்படும்... 11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மடிகணினி,சைக்கிள் வழங்கப்படும்..மூவாயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும்.. இனிவரும் காலங்களில் மொழிப்பாடங்களில் இரண்டு தேர்வுகள் ஒரு தேர்வாக மாற்றப்பட்டுள்ளது...ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது..எனவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறப்பாக முறையில் கல்வி கற்பித்து எதிர்கால மாணவர்களை சிறந்த மாணவர்களாக உருவாக்க வேண்டும் என்றார். விழாவில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ் திட்டவிளக்கவுரையாற்றினார்.. விழாவில் மார்ச்/ ஏப்ரல் 2018 ல் நடைபெற்ற பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 100%தேர்ச்சி பெற்ற பள்ளிகள்,100% தேர்ச்சி பெற்றுத் தந்த ஆசிரியர்கள்,தங்கள் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்றுத் தந்த ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டில் மாநில மற்றும் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுத் தந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றுகளும் கேடயமும் வழங்கப்பட்டது.. விழாவில் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் சுகன்யா,முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி,கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முனைவர் இரா.சின்னத்தம்பி,மதியநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.ராமசாமி, இலுப்பூர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் குரு.ராஜமன்னார்,ஆத்ம குழுத் தலைவர் ப.சாம்பசிவம்,புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் சா.சத்தியமூர்த்தி,அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கு.திராவிடச் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் க.குணசேகரன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்,அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்...முடிவில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா நன்றி கூறினார்..