அண்ணா பல்கலைக்கழகத்தில் 10-ந் தேதி பி.ஆர்க். கல்விக்கான கவுன்சிலிங்.

பி.ஆர்க் என்ற இளநிலை கட்டிடக்கலை பொறியியல் கல்விக்கான கவுன்சிலிங், சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை மையத்தில் 10-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு கவுன்சிலிங் நடக்கிறது. பொதுப்பிரிவில் வரும் மாணவர்களில் 290 கட்ஆப் மதிப்பெண் வரை (பள்ளித்தேர்வு மற்றும் நாட்டா தேர்வு மதிப்பெண் சேர்த்து) எடுத்துள்ளவர்களுக்கு 10-ந் தேதியன்று காலை 9 மணிக்கும், 270 மதிப்பெண் வரை எடுத்துள்ளவர்களுக்கு காலை 10.30 மணிக்கும், 258 மதிப்பெண் வரை எடுத்தவர்களுக்கு மதியம் 12 மணிக்கும், 243 மதிப்பெண் வரை எடுத்தவர்களுக்கு பிற்பகல் 2 மணிக்கும், 225 மதிப்பெண் வரை எடுத்துள்ளவர்களுக்கு பிற்பகல் 3.30 மணிக்கும், தகுதியுள்ள மற்ற அனைத்து மாணவர்களுக்கும் மாலை 5 மணிக்கும் கவுன்சிலிங் நடைபெறும். இந்த தகவலை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான செயலாளர் வெளியிட்டுள்ளார்.

Comments