பி.எட். படிப்புக்கான 2-வது கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேருவதற்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை சென்னை கடற்கரை சாலையில் உள்ள லேடி வில்லிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்றது. அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் சில இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனையடுத்து பி.எட். படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு லேடி வில்லிங்டன் சீமாட்டி கல்வியியல் நிறுவனத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் லேடி வில்லிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன இணையதளத்திலும் 2-ம் கட்ட கலந்தாய்வு குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித் துள்ளது.

Comments