பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் உள்பட சிறப்பு துணைத் தேர்வு எழுதியவர்களில் விடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த மாணவ- மாணவிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) விடைத்தாள் நகல்கள் வெளியிடப்படுகின்றன. அவர்கள் பிற்பகல் 2 மணி முதல் scan.tnd-ge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இவ்விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து வருகிற 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுதுறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Comments