எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு  இரண்டாம் கட்ட கலந்தாய்வு  விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் அரசு கல்லூரிகளின் இடங்கள், தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக் கீட்டுக்கான இடங்கள் நிரம்பின. தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டுக்கான 669 பிடிஎஸ் இடங்கள் மட்டும் காலியாக இருந் தன. வேலூர் சிஎம்சி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரி களின் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 30, 31 மற்றும் கடந்த 3-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்கள் நிரம்பின. இந்நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு இந்த வார இறுதி யில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments