எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு  இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது. நாளையுடன் கலந்தாய்வு நிறை வடைகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் அரசு கல்லூரிகளின் இடங்கள், தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் நிரம்பின. வேலூர் சிஎம்சி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 30, 31 மற்றும் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதிகளில் நடை பெற்றது. இதில் நிர்வாக ஒதுக்கீட் டுக்கான இடங்கள் நிரம்பின. அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் 98 எம்பிபிஎஸ் இடங் கள், 15 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு திரும்ப ஒப்படைக்கப் பட்டது. முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளில் சேர்வ தற்கான அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர்கள் சேராததால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 30 எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 113 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத் துவக் கல்லூரியில் 12 பிடிஎஸ் இடங்கள் காலியாக இருந்தன. இந்நிலையில் காலியாகவுள்ள 241 எம்பிபிஎஸ் இடங்கள், 27 பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற் கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் கலந்தாய்வுக்கு 2,273 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. 893 பேர் வந்திருந்தனர். இதில் 35 பேருக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. 42 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். 412 பேர் மறுஒதுக்கீடு பெற்றனர். இன்று நடைபெறும் இரண்டாம் நாள் கலந்தாய் வுக்கு 1,760 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Comments

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||