பி.ஆர்க். படிப்பில் சேர கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடும் கிராக்கி

பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகள் கட்டிடக்கலை (பி.ஆர்க்.) படிப்பில் சேர தேசிய கட்டிடக்கலை திறனாய்வு(நாட்டா) என்ற தேர்வை எழுதவேண்டும். அவ்வாறு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் அந்த தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பி.ஆர்க். படிப்பு உள்ள கல்லூரிகளில் சேர அண்ணா பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தனர். கலந்தாய்வு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள 52 பி.ஆர்க். கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 1961 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 1,603 மாணவ- மாணவிகள் அழைக்கப்பட்டனர். கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்களும், மாணவிகளும் அண்ணாபல்கலைக்கழகத்தின் கட்டிடக் கலை கல்லூரியில் சேர இடம் கிடைக்க வேண்டும் என்று போட்டி போட்டனர். பி.ஆர்க். படிப்பில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர இன்று (சனிக்கிழமை) நுழைவுத் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரலாம்.

Comments