11 மற்றும் 12-ம் வகுப்பு - பாட பெயர்கள் மாற்றம் - தேர்வுத்துறைக்கு பள்ளி கல்வித்துறை பரிந்துரை

மாணவர்களின் உயர்கல்வி வசதிக்காக, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், பல்வேறு பாடங்களின் பெயர்களை மாற்றி, சான்றிதழ் வழங்க, தேர்வுத்துறைக்கு, பள்ளி கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளதுதமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட பாடப்பிரிவுகளில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள் நடத்தப்படுகின்றன. சிக்கல் :அந்த பாடங்களின் பெயரிலேயே, தேர்வுத்துறையால் சான்றிதழ் வழங்கப்படுகிறதுஆனால், பல பாடங்களின் பெயர்களால், தற்போதைய உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. உதாரணமாக, டில்லியில் செயல்படும், ஸ்ரீராம் வணிகவியல் கல்லுாரி மற்றும் லேடி ஸ்ரீராம் வணிகவியல் பெண்கள் கல்லுாரி ஆகியவற்றில், தமிழகவணிக கணித மாணவர்கள் சேர முடியவில்லை. அவர்களின் சான்றிதழில், புள்ளியியல் பாடம் இல்லை என, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றனமாணவர்கள் வணிக கணிதத்துடன், புள்ளியியல் பாடம்படித்திருந்தாலும், சான்றிதழில் அந்த பெயர் வராததால், மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு அனுமதிக்கப்படவில்லை. இது குறித்த, பெற்றோரின் கருத்துக்கள் அடிப்படையில், சில பாடங்களுக்கு பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த பாடங்களுக்கான தேர்விலும், புதிய பெயரிலேயே சான்றிதழ் வழங்க வேண்டும் என, அரசு தேர்வுத் துறைக்கு, பள்ளி கல்வித் துறை கடிதம் அனுப்பியுள்ளது. பரிந்துரை:பாடத்தின் பெயர் மாற்ற அடிப்படையில், சான்றிதழ்களை வழங்கும்படி, அரசு தேர்வுத்துறைக்கு, பள்ளி கல்வியின் பாடத்திட்ட மேலாண்மை பிரிவான, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. முதல்கட்டமாக, பிளஸ் 1க்கு இந்த ஆண்டும், பிளஸ் 2வுக்கு அடுத்த ஆண்டும், சான்றிதழ்களில் பெயர் மாற்றம் இடம் பெறும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு -ஊழியர்கள் கடும் கொந்தளிப்பு!

அக்டோர் 4ம் தேதி விடுப்பு எடுக்கும் ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட எந்த அலவன்சும் வழங்கப்படாது என்று தமிழக தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது அரசு ஊழியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும், மத்திய அரசின் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மாநில அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு 1.1.16 முதல் வழங்கும் வகையில் உடனடியாக மாநில அரசின் 8-வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும். மாநில அரசின் 8-வது ஊதியக் குழுவை அமல்படுத்துவதற்கு முன்னதாக, இடைக்கால நிவாரணமாக 20 சதவிகிதம் வழங்க வேண்டும். 1.4.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தைத்தொடர்வதற்கான பரிந்துரை வழங்க அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, பழைய ஓய்வூதிய திட்டத்தைப் பரிந்துரையில் சேர்த்து, விரைவில் முதல்வரிடம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் முடிவில் அக்டோபர் 4ம் தேதி ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவது, அக்டோபர் 13ம் தேதி சேலத்தில் வேலை நிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது, அக்டோபர் 19ம் தேதிமுதல் 23ம் தேதி வரை காலவரையற்ற போராட்டம் குறித்து பிரசாரம் மேற்கொள்வது, நவம்பர் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 4ம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டதில் பங்கேற்குமாறு அரசு ஊழியர்களுக்கு சங்கங்கள் தற்போது அழைப்பு விடுத்து வருகின்றன. இதற்கு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் காணப்படுகிறது. இந்தநிலையில், போராட்டத்தை ஒடுக்கும் வகையில், தமிழக அரசு அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒட்டுமொத்ததற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்போவதாக அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு, அரசு அலுவலகப் பணிகளை பாதிக்கும் என்பதால் அனுமதியின்றி எடுக்கப்படும் விடுப்புக்கு ஊதியம் வழங்கப்படாது. இவ்வாறு தமிழக அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் அனைத்து அலுவலக ‌வருகைப் பதிவு நிலையை காலை 10.30 மணிக்குள், கிராம, தாலுகா, மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் சேகரிக்க வேண்டும். பின்னர் அதை தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். எனினும் உரிய காரணங்கள் இருப்பின் உண்மைத் தன்மையை அறிந்து விடுப்பு அளிக்கலாம் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தலைமைச் செயலாளரின் இந்த உத்தரவு அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. * ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு, அரசு அலுவலகப்பணிகளை பாதிக்கும் என்பதால் அனுமதியின்றி எடுக்கப்படும் விடுப்புக்கு ஊதியம் வழங்கப்படாது. * அக்டோபர் 4ம் தேதி அனைத்து அலுவலக ‌வருகைப் பதிவு நிலையை காலை 10.30 மணிக்குள், கிராம, தாலுகா, மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் சேகரிக்க வேண்டும். * உரிய காரணங்கள் இருப்பின் உண்மைத் தன்மையை அறிந்து விடுப்பு அளிக்கலாம்.

உதவி பேராசிரியர் பணி : TRB தேர்வு தேதி அறிவிப்பு

சட்ட கல்லுாரி உதவி பேராசிரியர் தேர்வுக்கான தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அரசு சட்ட கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில், 186 காலியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., வழியாக, இந்தாண்டு, ஜூலை, 18ல் நியமன அறிவிக்கை வெளியானது. இதற்கான போட்டி தேர்வுக்கு, ஆக., 6 வரை ஆன்லைனில் விண்ணப்ப பதிவு முடிந்தது ஆனால், டி.ஆர்.பி.,யில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடு புகார்களால், தேர்வை அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது இதுகுறித்து, நாளிதழில் விரிவான செய்தி, ஒரு வாரத்திற்கு முன் வெளியானது இதையடுத்து, உதவி பேராசிரியர் பணிக்கான போட்டி தேர்வு, அக்., 14 முதல், 17 வரை தேர்வு நடக்கும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது தேர்வு தேதி விபரங்களை, http://trb.tn.nic.in/law2018 என்ற, இணையதள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்

+1, மற்றும் +2 வில் பாட பெயர்கள் மாற்றம் தேர்வுத்துறைக்கு பள்ளி கல்வித்துறை பரிந்துரை

மாணவர்களின் உயர்கல்வி வசதிக்காக, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், பல்வேறு பாடங்களின் பெயர்களை மாற்றி, சான்றிதழ் வழங்க, தேர்வுத்துறைக்கு, பள்ளி கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட பாடப்பிரிவுகளில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள் நடத்தப்படுகின்றன சிக்கல் : அந்த பாடங்களின் பெயரிலேயே, தேர்வுத்துறையால் சான்றிதழ் வழங்கப்படுகிறது ஆனால், பல பாடங்களின் பெயர்களால், தற்போதைய உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது உதாரணமாக, டில்லியில் செயல்படும், ஸ்ரீராம் வணிகவியல் கல்லுாரி மற்றும் லேடி ஸ்ரீராம் வணிகவியல் பெண்கள் கல்லுாரி ஆகியவற்றில், தமிழக வணிக கணித மாணவர்கள் சேர முடியவில்லை. அவர்களின் சான்றிதழில், புள்ளியியல் பாடம் இல்லை என, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன மாணவர்கள் வணிக கணிதத்துடன், புள்ளியியல் பாடம் படித்திருந்தாலும், சான்றிதழில் அந்த பெயர் வராததால், மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு அனுமதிக்கப்படவில்லை இது குறித்த, பெற்றோரின் கருத்துக்கள் அடிப்படையில், சில பாடங்களுக்கு பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த பாடங்களுக்கான தேர்விலும், புதிய பெயரிலேயே சான்றிதழ் வழங்க வேண்டும் என, அரசு தேர்வுத் துறைக்கு, பள்ளி கல்வித் துறை கடிதம் அனுப்பியுள்ளது பரிந்துரை: பாடத்தின் பெயர் மாற்ற அடிப்படையில், சான்றிதழ்களை வழங்கும்படி, அரசு தேர்வுத்துறைக்கு, பள்ளி கல்வியின் பாடத்திட்ட மேலாண்மை பிரிவான, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது முதல்கட்டமாக, பிளஸ் 1க்கு இந்த ஆண்டும், பிளஸ் 2வுக்கு அடுத்த ஆண்டும், சான்றிதழ்களில் பெயர் மாற்றம் இடம் பெறும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

சமக்ரா சிக்‌ஷா அபியான் (SSA + RMSA ) திட்டம் :3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் திடீர் நிறுத்தம்: 15 மாணவர்கள் இல்லாத பள்ளிகளை மூட திட்டம்

சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டத்தில் கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் செயல்பட்டு வருகின்ற 15 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள 3 ஆயிரம் பள்ளிகளுக்கு அரசின் ஒருங்கிணைந்த பள்ளி மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளி மானியமும், அரசு பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியமும் வழங்கப்பட்டு வந்தது தற்போது 2018-19ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் (சமக்ரா சிக்‌ஷா அபியான்) அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி கற்பதற்கு ஏற்றவாறு தேவையான வசதிகளை மேம்படுத்த ஒருங்கிணைந்த பள்ளி மானியம் அனுமதிக்கப்பட்டுள்ளது 2018-19ம் ஆண்டு வரைவு திட்ட ஒப்புதலில் தமிழகத்தில் 31 ஆயிரத்து 266 அரசு ெதாடக்க பள்ளிகள் மற்றும் அரசு நடுநிலை பள்ளிகளுக்கு ₹97 கோடியே 18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஆனால் ஆண்டு வரைவு திட்ட ஒப்புதலில் 15 மாணவர்கள் எண்ணிக்கைக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே இந்த மானியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது அந்த வகையில் முதல்கட்டமாக 15 மாணவர்கள் எண்ணிக்கைக்கு மேல் உள்ள 28 ஆயிரத்து 263 அரசு தொடக்க மற்றும் மாவட்ட நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் ₹89.67 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது 15 மாணவர்கள் எண்ணிக்கைக்கு மேல் உள்ள நிதி ஒதுக்கீடு பெறப்பட்டிருக்கும் அரசு, ஊராட்சி, நகராட்சி, ஆதி திராவிடர், கள்ளர் சீரமைப்பு, வனத்துறை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மட்டுமே மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் இந்த மானியம் வழங்கப்பட வேண்டும் நிதி ஒதுக்கீடு தொகைக்கு கூடுதலாக எந்த காரணத்தை கொண்டும் ஒருங்கிணைந்த பள்ளி மானியம் வழங்கக்கூடாது என்று சமக்ரா சிக்‌ஷா அபியானின் மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். மேலும் விடுவிக்கப்படுகின்ற பள்ளி மானிய தொகையில் 10 சதவீதம் ஸ்வச்சா திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் 15 மாணவர்கள் எண்ணிக்கைக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான அறிவுரைகள் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட வில்லை தமிழகத்தில் 3003 பள்ளிகள் 15 மாணவர்களின் எண்ணிக்கைக்கு குறைவாக உள்ளவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த பள்ளிகளுக்கு மூடு விழா நடத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது தமிழக அரசு ஏற்கனவே 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை அருகே உள்ள பள்ளிகளுடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தற்போது 15 மாணவர்களுக்கும் குறைவாக மாணவர்கள் எண்ணிக்கையுடன் செயல்படுகின்ற பள்ளிகளை அருகே உள்ள நடுநிலை, உயர்நிலை பள்ளிகளுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாலேயே ஒருங்கிணைந்த பள்ளி மானியம் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர் இதன் காரணமாக பல்வேறு கிராமங்களில் அரசு பள்ளிகள் இல்லாத நிலை ஏற்படும் தமிழக அரசு பள்ளிகள் மாணவர்கள் எண்ணிக்கை: தமிழகத்தில் 2018-19ம் கல்வியாண்டு கணக்கின்படி 31,266 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன, 15 முதல் 100 மாணவர்கள் வரை எண்ணிக்கையில் 21 ஆயிரத்து 378 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன, 101 முதல் 250 மாணவர்கள் வரை எண்ணிக்கையுடன் 6167 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது 251 முதல் 1000 மாணவர்கள் வரை உள்ள பள்ளிகள் 714 ஆகும். ஆயிரம் மாணவர்களுக்கு மேல் 4 பள்ளிகள் மட்டுமே உள்ளன.3003 பள்ளிகளில் 15க்கும் குறைவான மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்

2,000 பாதுகாப்பு படையினர் நியமனம் இந்து சமய அறநிலையத் துறை முடிவு

சிலை கடத்தலைத் தடுக்க தமிழகம் முழுவதும் ஆயுத பயிற்சியுடன் கூடிய 2,000 பாதுகாப்பு படையினர் நியமனம் இந்து சமய அறநிலையத் துறை முடிவு | சிலைக் கடத்தலைத் தடுக்க தமி ழகம் முழுவதும் ஆயுதப் பயிற்சி யுடன் கூடிய 2,000 பாதுகாப்புப் படையினரை நியமிக்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 42,000-க் கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றில், ஆயிரக்கணக்கான சிலைகள் காணாமல் போயுள்ளன. இதுதொடர்பாக, சிலைக் கடத் தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் விசாரணை நடத்தி வருகிறார். பல சிலைகள் வெளி நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. அவற்றை, மீட்கும் முயற்சியில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரி வினர், தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில், சிலைகள் அந்தந்த கோயில் ஊழியர்களின் துணையுடன் வெளிநபர்கள் மூலம் கடத்தப்படுவதாக பல்வேறு அமைப்பினர் குற்றம்சாட்டி வரு கின்றனர். கோயில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழகம் முழுவதும் அந்தந்த கோயில் நிர்வாகத்தினர் மூலம் தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப் பினும், பாதுகாப்புப் பணியை இவர்களால் சிறப்பாக மேற் கொள்ள முடியவில்லை. தொடர்கதையாகும் திருட்டு சிலை, நகைகள் காணாமல் போவது தொடர்கதையாக இருந்து வருகிறது. எனவே, சிலை, கோயில் களுக்கு சொந்தமான நகைகளைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நட வடிக்கைகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில், தமிழகம் முழுவ தும் சிலைக் கடத்தலைத் தடுக்க வும், கோவில்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் பாதுகாப்புப் படைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 2,000 பாதுகாப் புப் படையினர் நியமிக்கப்பட உள் ளனர். இவர்களுக்கு காவல்துறை மூலம் ஆயுதப் பயிற்சி வழங்கப் பட உள்ளது. பணியில் இருக்கும் போது, துப்பாக்கியுடன் பாதுகாப் புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் சிலை பாதுகாப் புப் படையினரை பணியமர்த்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, இந்து சமய அற நிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காவல்துறையினர் எப்போதும் கோவில் பாதுகாப்பில் மட்டும் கவனம் செலுத்த முடி யாது. எனவே, இந்து சமய அறநிலை யத்தின் மூலம் பாதுகாப்புப் படையை உருவாக்க முடிவு செய்துள்ளது. 24 மணி நேரமும்... முதற்கட்டமாக, 2,000 பாதுகாப் புப் படையினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு காவல்துறை மூலம் ஆயுதப் பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளோம். இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக துப்பாக்கி கள் வழங்கப்படும். இதன் மூலம், இரவு நேரங்களில் யாரேனும் கொள்ளையடிக்க வந்தால் அவர் களை சுலபமாக சமாளிக்க முடி யும். இவர்கள், முக்கிய கோயில் களில் பணி அமர்த்தப்பட்ட பிறகு, படிப்படியாக தமிழகம் முழுவ தும் உள்ள அனைத்து கோயில் களுக்கும் நியமிக்கப்படுவார்கள். சிலை, கோயிலுக்கு சொந்தமான நகை உள்ளிட்டவற்றை பாது காப்பது மட்டுமே இவர்களின் பிரதான பணியாக இருக்கும். இதன் மூலம், கோயில்களில் சிலை, நகைகள் கொள்ளையடிப்பது தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக துப்பாக்கி கள் வழங்கப்படும். இதன் மூலம், இரவு நேரங்களில் யாரேனும் கொள்ளையடிக்க வந்தால் அவர்களை சுலபமாக சமாளிக்க முடியும். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிகமாக 1,474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க அனுமதி மாதம் ரூ.7,500 தொகுப்பூதியம் வழங்கப்படும்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 1,474 தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமித் துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் காலியாக வுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப சிறிது காலம் ஆகக்கூடும் என்பதால் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் நலன் கருதி முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரி யர் கழகம் மூலம் உடனடியாக நிரப்பிக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக வுள்ள 1,474 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் வரை செப்டம்பர் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி முடிய 6 மாதங்களுக்கு மட்டும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக அந்தந்த பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதியில் உள்ள தகுதியுள்ள நபர்களை நியமிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அரசு மேல் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், மூத்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் அடங்கிய குழு தகுதியான முதுகலை ஆசிரியர்களை (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கி யல், வரலாறு, வணிகவியல், பொருளாதாரம் ஆகிய பாடங் களுக்கு மட்டும்) தேர்வுசெய்யும். இந்த நியமனம் முற்றிலும் தற் காலிகமானது என்பதை சம்பந்தப் பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். தற்காலிக ஆசிரியர் களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மாதம் ரூ.7,500 தொகுப்பூதியம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது. முதுகலை பட்டதாரிகள் வேதனை அனுமதிக்கப்பட்ட காலியிடங் களில் எண்ணிக்கையின்படி அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 135 காலியிடங்களும், வேலூரில் 120 காலியிடங்களும், திருவண்ணாமலையில் 117 காலியி டங்களும், திருவள்ளூரில் 106 காலி யிடங்களும் இடம்பெற்றுள்ளன. வாரம் 3 அரை நாள் வீதம் மாதத்தில் மொத்தமாக வெறும் 6 நாட்கள் மட்டுமே பணியாற்றி வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு (தையல், ஓவியம், உடற்கல்வி) ரூ.7,700 தொகுப்பூதியம் வழங்கப் பட்டு வரும் நிலையில், முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பிஎட் முடித்துவிட்டு மாதம் முழுவதும் பணியாற்ற உள்ள தற்காலிக முதுகலை ஆசிரியர்களுக்கு வெறும் ரூ.7,500 தொகுப்பூதியம் நிர்ணயித்திருப்பது பிஎட் முடித் துள்ள முதுகலை பட்டதாரிகளை கடும் வேதனையில் ஆழ்த்தி யுள்ளது. தொகுப்பூதியத்தை குறைந்த பட்சம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவம்பர் 18 முதல் போராட்டம் ஆசிரியர் அமைப்பு அறிவிப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் நவம்பர் 18 முதல் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆசிரியர் அமைப்பு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் செய்தியாளர் களிடம் நேற்று கூறியது: இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந் துரைகளை அமல்படுத்தியபோது தரவேண்டிய 21 மாத கால நிலுவைத்தொகையை உடனடி யாக வழங்க வேண்டும். மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத் தும் வகையில் அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது. இவ்வாறு தனியாக பயிற்சி அளிக்காமல் பிளஸ் 1 வகுப்பிலிருந்தே நீட் தேர்வுக்கான பயிற்சியை பள்ளியில் தொடங்கிவிட வேண்டும். பள்ளிகளில் கணினி கல்வியை மேம்படுத்தும் வகையில் கணினி ஆசிரியர்களை உடனடியாக நிய மிக்க வேண்டும். புதிய பங்க ளிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு அரசு ஊழியர் கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண் டும் பழைய ஓய்வூதிய திட் டத்தை நடைமுறைப்படுத்த வேண் டும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக முதல்வரை சந்தித்து மனு அளிப் போம். கோரிக்கைகள் நிறைவேற் றப்படாவிட்டால் நவ. 18-ம் தேதி சென்னையில் தொடர் முழக்கப் போராட்டமும், ஜனவரியில் தொடர் போராட்டமும் நடத்தப்படும். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

6, 9-ம் வகுப்புகளில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பாடம் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

6, 9-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த பாடம் சேர்க்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:- ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, முதல்கட்டமாக ஒரு மாவட்டத்தில் 10 பள்ளிகள் வீதம் என்ற அடிப்படையில் தமிழகம் முழுவதும் 320 பள்ளிகளில் விழிப்புணர்வு பணி இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படும். அப்போது, பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் கேடுகள், அவற்றை தவிர்ப்பது எப்படி என்பது தொடர்பான கையேடுகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். இதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக தனியார் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் இந்த விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்படும். 6, 9-ம் வகுப்பு பாடத்திட்டத்தில், பிளாஸ் டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பாடத்தை சேர்க்க வும் முடிவுசெய்துள்ளோம் என்றார்.

பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் அதிரடி ஆய்வு

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த அரசாணை கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல பள்ளிகள் ரகசியமாக சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதை பெற்றோரும் கண்டுகொள்வதில்லை.இந்த நிலையில் கடந்த 21ம் தேதி மொகரம் பண்டிகை விடுமுறை. 22ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அரசே விடுமுறை அறிவித்திருந்தது. 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. மேலும் 24ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் மாவட்டம் முழுவதும் பல பள்ளிகள் அந்நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தி உள்ளன.குறிப்பாக மொகரம் மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாட்களில் பல பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வகுப்புகளை நடத்தின.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் ஆசிரியர்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், பெயர் திருத்தம் உள்ளிட்ட பணிகளில் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் மற்றும் லட்சுமிபுரம் நடுநிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களான சி.சிவபாக்கியம், எம்.முத்துமீனா உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: தேர்தல் பணி மட்டுமின்றி, வாக்காளர் பட்டியல் பெயர் சரிபார்ப்பு, திருத்தம் உள்ளிட்ட களப் பணிகளை மேற்கொள்ளவும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் வாக்குச்சாவடி மைய அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு அவர்களிடம் பணிகள் ஒப்படைக்கப்படுகின்றன. பள்ளி வேலை நேரத்துக்குப் பிறகு கூடுதல் பணியாக இவற்றை ஆசிரியர்கள் பார்க்க வேண்டியுள்ளது. இந்தப் பணிகளுக்காக பெரும்பாலும் பெண் ஆசிரியைகளே ஈடுபடுத்தப்படுகின்றனர். குறைந்தபட்சம் ஒரு ஆசிரியர் ஆயிரம் வீடுகளுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் பணியில் பாதிப்பு ஏற்படுவதுடன், நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரமும் கேள்விக்குறியாகி உள்ளது. அரசின் பிற துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கோ, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கோ இதுபோன்ற தேர்தல் பணிகள் வழங்கப்படுவதில்லை. வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்க தனியாக ஒரு துறையை உருவாக்கி அதற்காக பணியாளர்களை நியமிக்காமல், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தப் பணிகளை கூடுதல் சுமையாக தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் கொடுத்து வருகிறது. எனவே, இதுபோன்ற பணிகளுக்கு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் ஆகியவை இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்

சி.பி.எஸ்.சி - 10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு முன்கூட்டியே தேர்வு.

'சி.பி.எஸ்.சி., 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடக்கும்; அடுத்த வாரம், தேர்வு தேதி வெளியாகும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் ஏப்ரலில் நடத்துவதற்கு பதில், மார்ச்சில் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணை, இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். தற்போதைய நிலையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 240 பாடங்களுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இதில், திறன் மேம்பாடு தொடர்பான தொழிற்கல்வியில், 10ம் வகுப்பில், 15 பாடங்களும்; பிளஸ் 2வில், 40 பாடங்களும் நடத்தப்படுகின்றன. மேலும், டைப்போகிராபி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், வெப் அப்ளிகேஷன், கிராபிக்ஸ் மற்றும் ஆபீஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற பாடங்களில், மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் படிக்கின்றனர். இந்த பாடங்களுக்கும், தொழிற்கல்வி பாடங்களுக்கும், பிப்., மூன்றாம் வாரத்தில், தேர்வுகள் துவங்கும். மற்ற முக்கிய பாடங்களுக்கு, ஏப்ரலுக்கு பதில், மார்ச்சிலேயே தேர்வுகள் துவங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இனிமேல் 10ஆம் வகுப்பு கணக்கு தேர்வுக்கு 2 வினாத்தாள்

வரும் கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு கணக்கு தேர்வில் இரண்டு விதமான வினாத் தாள்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாணவர்கள் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 10ம் வகுப்பு தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு முதல், 10ம் வகுப்பு கணக்கு தேர்வுக்கு இரண்டு விதமான வினாத் தாள்கள் வழங்க சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளது. இதில் ஒரு வினா தாளில் வழக்கமான கேள்விகளும், இன்னொரு வினாத் தாளில் கடினமான கேள்விகளும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் ஒன்றை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். 10ம் வகுப்பு தேர்வுக்கான விண்ணப்பம் பூர்த்தி செய்யும்போது அதில் தங்கள் தேர்வை மாணவர்கள் குறிப்பிட வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு பின் கணக்கை முக்கியப் பாடமாக எடுத்து படிக்க விரும்புவோருக்காக இந்த இரண்டு தேர்வுகள் வழங்கப்படுவதாக சி.பி.எஸ்.இ தெரிவித்துஉள்ளது. இரண்டு வினா தாள்களை தயார் செய்வதற்காக, 15 பேர் அடங்கிய கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி மற்றும் பல்கலைகளை சேர்ந்த கணித நிபுணர்கள் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலை சேர்ந்த ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். இரண்டு வினாத்தாள் முறை 10ம் வகுப்பு கணக்கு பாடத்தில் சோதனை முறையில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின் பிளஸ்2வுக்கு விரிவுபடுத்தப்படுவதோடு அனைத்துப் பாடங்களிலும் இந்த இரண்டு வினாத் தாள் முறை அமல்படுத்த சி.பி.எஸ்.இ திட்டமிட்டுள்ளது

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் சென்னையில் நடந்த மாநாட்டில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநில மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு அமைப்பின் மாநில தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ச.மயில் கோரிக்கையை விளக்கிப் பேசினார். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசினர். திமுகவைச் சேர்ந்த முன்னாள் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, “கடைக்கோடி கிராமங்களில் மிகவும் கடினமான சூழலில் பணி செய்தாலும், தலைசிறந்த மாணவர்களை உருவாக்கும் பணியை மேற்கொள்வோர் இடைநிலை ஆசிரியர்கள். அத்தகைய ஆசிரியர்களுக்கு ஏன் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது என்று கேட்கும் மாநாடு இது. ஆசிரியர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் கடமை அரசுக்கு உள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் தொடக்கப்பள்ளிகளை மூடும் அல்லது இணைக்கும் திட்டம் குறித்து பேசப்படுகிறது. இதை ஒருபோதும் ஆசிரியர்கள் ஏற்க கூடாது” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் கே.சுப்பராயன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் மற்றும் காங்கிரஸ், பாமக, தமாகா நிர்வாகிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டின் நிறைவில், வரும் நவம்பர் 26-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மறுக்கும் அரசாணை நகல் எரிக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மாநிலம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி வருமாறு:- பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள நூலகங்கள் அனைத்திற்கும் 5 ஆண்டுகளுக்கு ஏ.சி.டி. நிறுவனம் இலவசமாக ‘வைபை’ வசதி தர ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 100 நூலகங்கள் பயன்பெறும். பகுதி நேர ஆசிரியர்களில் ஒரு பிரிவினர் தான் சிறப்பு ஆசிரியர்கள். இவர்கள் தற்போது உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். பகுதி நேர ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் 16 ஆயிரத்து 500 பேர் பணியில் அமர்த்தப்பட்டார்கள். மத்திய அரசு வழங்கிய நிதி மூலம் முதல்கட்டமாக ரூ.5 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டது. வாரத்திற்கு மூன்று நாட்கள் 2 மணி நேரம் பணி செய்ய அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. சம்பளம் தற்போது ரூ.7,700 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. பகுதி நேர பணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் அவர்கள் விருப்பப்படும் இடங்களுக்கு பணிமாறுதல் பெற சங்கம் மூலம் மனு அளிக்கலாம் என்று அவர்களிடம் தெரிவித்திருக்கிறோம். பணி நிரந்தரம் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை. அவர்களை பணியில் அமர்த்தும்போது பணி நிரந்தம் செய்ய வாய்ப்பு இல்லை என்றுதான் 8 ஆண்டுகளுக்கு முன்னர் பணி வழங்கப்பட்டது. தற்போது உள்ள நிதி நிலையின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை. போராட்டம் செய்யவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது இருக்கும் நிலையை அவர்களிடம் தெரிவித்துள்ளார்கள். அரசு பள்ளிகளை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள் 172 பேர் முன்வந்துள்ளனர். அவர்கள் பணிகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு.

NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP Scheme Examination தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு அறிவார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். எந்த ஒரு போட்டித் தேர்வு எழுத தயாராகும்போதும், அத்தேர்வினைப்பற்றிய முழு அறிவு அவசியம். தேசிய வருவாய்வழி மற்றும் திறனறித் தேர்வு (NMMS) - ஒர் அறிமுகம் ... NMMS தேர்வு எழுதுவதற்கான மாணவருக்கு உரிய தகுதிகள் எவை? தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேர்வுக்குரிய பாடத்திட்டம் என்ன? தேர்வின் பகுதிகள் எவை? மாணவர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றார்கள்? தேர்வின் மூலம் கிடைக்கும் உதவித்தொகை எவ்வளவு? போன்ற விபரங்களை அறிதல் மிகவும் அவசியமான ஒன்றாகும். தேசிய வருவாய்வழி மற்றும் திறனறித் தேர்விற்கு (National Means cum Merit Scholarship Exam) தயாராகும் முன்னர் ...... அரசு / அரசு உதவி பெறும் / ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுள் ஏழாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் 55% மதிப்பெண்களுக்கு குறையாமல் மதிப்பெண் பெற்ற மாணவ / மாணவியர்கள் இத்தேர்வினை எழுதலாம். (SC / ST மாணவ / மாணவியர்கள் 50% மதிப்பெண்கள் மட்டும் பெற்றிருந்தால் போதுமானது). NMMS தேர்வு எழுதுவதற்கான தகுதிகள் : மாணவ/மாணவியரின் பெற்றோர் வருமானம் ஆண்டிற்கு 1,50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். தொடர்ந்து பள்ளிக்கு வரும் மாணவ / மாணவியராக (Regular Student) இருக்க வேண்டும். NMMS தேர்வு எழுதுவதற்கான தகுதிகள் : பொதுவாக செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளிவரும். http://www.dge.tn.gov.in/index.html என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது அவ்விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி விண்ணபிக்கவேண்டும். மேலும், அரசால் அந்தந்த வருடத்தில் வெளியிடப்படும் புதிய நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும். தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை : NMMS தேர்வானது இரு பகுதிகளை (தேர்வுகளை) உள்ளடக்கியதாகும். பகுதி - I (மனத்திறன் தேர்வு - MAT) பகுதி - II (படிப்பறிவுத் திறன் தேர்வு - SAT) தேர்வின் பகுதிகள் : மனத் திறன் தேர்வானது (MAT) மாணவர்களின் பகுத்தாயும் திறன், காரணம் அறியும் திறன், சிந்திக்கும் திறன், முப்பரிமாணவெளியில் காட்சிப்படுத்தி கண்டறியும் திறன் (ability to visualize in space) போன்றவற்றை சோதித்து அறிவதாக அமையும். பகுதி - I (மனத்திறன் தேர்வு) MENTAL ABILITY TEST(MAT) மனத்திறன் தேர்வில் எண் தொடர்கள், எழுத்து தொடர்கள்,ஆங்கில அகராதிப்படி எழுத்துக்களை வரிசைப்படுத்துதல், தனித்த எண்ணை கண்டறிதல், வெண் படங்கள், ஒத்த உருவங்கள், கண்ணாடி பிம்பங்கள், குறியிடல், சிந்தனைக் கேள்விகள், கனசதுரம் அமைத்தல் போன்ற வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். அவற்றிற்கு 4 மாற்று விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். வினாவின் பொருத்தமான விடைக்குரிய எண் உள்ள பகுதியை OMR விடைத்தாளில் கருப்பு / கருநீல பேனாவினால் தீட்ட வேண்டும். பகுதி - I (மனத்திறன் தேர்வு) MENTAL ABILITY TEST(MAT) மனத்திறன் தேர்வில் 90 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவிற்கும் 1 மதிப்பெண் அளிக்கப்படும்.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். தவறான விடைக்கு குறை மதிப்பெண் ( Negative Marks) கிடையாது. இத்தேர்விற்கு 90 நிமிடங்கள் ஒதுக்கப்படும். பகுதி - I (மனத்திறன் தேர்வு) MENTAL ABILITY TEST(MAT) இத்தேர்வானது மாணவ, மாணவியர்கள் தங்கள் எதிர்காலத்தில் எழுதவுள்ள பல போட்டித் தேர்வுகளுக்கு (TRUST, NTSE, SSC, TNPSC, RRB, UPSC etc.) அடிப்படையாகவும், தூண்டுகோலாகவும் அமையும் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை. மேலும் இத்தேர்வின் மூலம் மாணவ, மாணவியரின் விரிசிந்தனை, சிக்கலுக்கு தீர்வு காணும் ஆற்றல், பகுத்தறியும் திறன் மேம்படுவதால் தங்களின் வாழ்வியல் சிக்கல்களுக்கு ஆராய்ந்து தீர்வு காணும் திறமையும் உருவாகின்றது. பகுதி - I (மனத்திறன் தேர்வு) MENTAL ABILITY TEST(MAT) மனத்திறன் தேர்வு ஒரு கடினமான தேர்வு அல்ல. ஆனால் வித்தியாசமான தேர்வு. முறையான பயிற்சி, கடின உழைப்பினால் மனத்திறன் தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம். படிப்பறித் திறன் தேர்வானது (SAT) மாணவர்கள் பாடப்பொருளில் பெற்றுள்ள அறிவை சோதித்து அறிவதாக அமையும். இத்தேர்வில் 7 ஆம் வகுப்பு அறிவியல், கணக்கு மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் (மூன்று பருவங்கள்) மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல், கணக்கு மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் (முதல் இரு பருவங்கள்)இருந்து வினாக்கள் கேட்கப்படும். பகுதி II படிப்பறித் திறன் தேர்வு படிப்பறித் தேர்வில் 90 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவிற்கும் 1 மதிப்பெண் அளிக்கப்படும். அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். தவறான விடைக்கு எதிர் மதிப்பெண் ( Negative Marks) கிடையாது. இத்தேர்விற்கு 90 நிமிடங்கள் ஒதுக்கப்படும். பகுதி II படிப்பறித் திறன் தேர்வு அறிவியல் - 35 மதிப்பெண்கள் கணக்கு - 20 மதிப்பெண்கள் சமூக அறிவியல் - 35 மதிப்பெண்கள் மொத்தம் : 90 மதிப்பெண்கள் மதிப்பெண் பங்கீடு : மனத்திறன் தேர்வு மற்றும் படிப்பறித்திறன் தேர்வு ஆகிய ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெறுபவர்கள் தேர்வில் தகுதி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். SC / ST பிரிவினர் குறைந்தபட்சம் 32% மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது. மாணவ / மாணவியர்கள் தேர்வு செய்யப்படும் விதம் : மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) நாடு முழுவதும் ஆண்டொன்றிற்கு 1,00,000 மாணவ மாணவியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தலாரூ.1000 வீதம் 4 வருடங்களுக்கு அளிக்கின்றது. மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டின்படி தகுதி பெற்ற மாணவ மாணவியர்களில் இருந்து 6695 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 6695 மாணவர்கள் மாநில இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் (3% மாற்றுத்திறனாளிகள் உட்பட). || http://www.dge.tn.gov.in/docs/Otherexam/NMMS_inst_2019_20_140918.pdf || NMMS APPLICAION 2018 || MENTAL ABILITY TEST QUESTION BANK || SCHOLASTIC APTITUDE TEST QUESTION BANK ||

1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு!

1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு! அரசாணை எண் - 619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்து கொள்ள ஆணை. தமிழக அரசுப் பள்ளிகளில்.. 1474 காலிப் பணி இடங்கள் G.O. 619 நாள் : 19.09.18 PTA - PG Teachers for handling XI & XII STD. தற்காலிகப் பணியிடங்கள்.. (செப்-18 முதல் பிப்.19 வரை 6 மாதங்கள் ஒப்பந்த அடிப்படையில்..) தொகுப்பு ஊதியம் : ரூ.7500/- பாடங்கள் : தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் (11 பாடங்கள் மட்டும்..) காலிப்பணியிட விபரங்கள் : அரியலூர் - 21 சென்னை - 14 கோவை - 45 கடலூர் - 35 தர்மபுரி - 17 திண்டுக்கல் - 21 ஈரோடு - 61 காஞ்சிபுரம் - 77 கன்னியாகுமரி - 17 கரூர் - 23 கிருஷ்ணகிரி - 33 மதுரை - 15 நாகை - 135 நாமக்கல் - 30 பெரம்பலூர் - 20 புதுக்கோட்டை - 46 ராமநாதபுரம் - 28 சேலம் - 30 சிவகங்கை - 12 திருவண்ணாமலை - 117 தஞ்சாவூர் - 60 நீலகிரி - 67 தேனி - 11 நெல்லை - 35 திருப்பூர் - 36 திருவள்ளூர் -106 திருவாரூர் - 97 திருச்சி - 31 தூத்துக்குடி - 32 வேலூர் - 120 விழுப்புரம் - 62 விருதுநகர் - 20 | DOWNLOAD

உயர் நீதிமன்ற உத்தரவு எதிரொலி 2-ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் எதுவும் தரக் கூடாது  பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில், 2-ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், வட்டார கல்வி அதிகாரிகள் ஆகி யோருக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: பள்ளிகளில் 2-ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் எதுவும் தரக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் ஓர் உத்தரவை பிறப்பித்தது. உயர் நீதிமன்ற உத்தரவை நடை முறைப்படுத்தும் வகையில், 2-ம் வகுப்பு வரை குழந்தை களுக்கு வீட்டுப்பாடம் எதுவும் தரப்படவில்லை என்பதை அனைத் துப் பள்ளிகளும் உறுதிசெய்ய வேண்டும். ஆலோசனைக் கூட்டம் இதுதொடர்பாக ஆய்வு அதிகாரிகளான கல்வி அதிகாரி கள் பள்ளிகளின் நிர்வாகி களுடன் உடனடியாக ஆலோ சனை கூட்டம் நடத்த வேண் டும். உயர் நீதிமன்ற உத்தர வின் முக்கியத்துவத்தை உணரச் செய்து அதை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்த வேண்டும். மேலும், குழந்தைகளின் புத்த கப் பை சுமையையும் வீட்டுப் பாடத்தின் அளவையும் குறைக்க வேண்டும் என்ற சிபிஎஸ்இ உத்த ரவை அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் கறாராக நடைமுறைப் படுத்த வேண்டும். தமிழக அரசின் அங்கீகாரம் பெற்று இயங்கும் அனைத்துப் பள்ளி களும் பொது பள்ளிக்கல்வி வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட பாடப் புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TET ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பருக்குள் நடத்தப்படும் - (TRB)தேர்வு வாரியம் அறிவிப்பு!

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒன்றாம் முதல் 8-ம் வகுப்பு வரை பணியில் சேர இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் (TET) என்னும் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா, சிபிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளில் இந்த வகை ஆசிரியர்கள் CTET என்னும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழ்நாடு அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வினை தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகளில் சுமார் 1 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்ச்சியடைந்து பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிமுறையின்படி, ஆண்டுதோறும் இந்த தகுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு தேர்வுக்கான அறிவிப்பு என்று வெளியாகும் என இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும், பிஎட் பட்டதாரிகளும் காத்திருந்தனர். குறிப்பாக, 2018 டிசம்பர் மாதத்திற்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு - வருமான வரித்துறை அறிவிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு - வருமான வரித்துறை அறிவிப்பு வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் செப். 30ம் தேதி என்றிருந்த நிலையில், அக். 15ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

வழக்குகளை சமாளிப்பது எப்படி? பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை

பள்ளிக்கல்வி துறையில் நிலுவையில் உள்ள, 7,500 வழக்குகளை விரைந்து முடிக்க, துறையின் முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறையில், பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் கீழ் உள்ள பள்ளிகள், அலுவலகங்கள் மீது, 4,500 வழக்குகளும், தொடக்க கல்வி இயக்குனரகத்திற்கு எதிராக, 3,000 வழக்குகளும், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. பெரும்பாலானவை, ஆசிரியர்கள் நியமனம், பணி வரன்முறை, ஒழுங்கு நடவடிக்கைகள், உயர்கல்வி ஊதிய உயர்வு கோருதல், நீண்டகாலம் விடுப்பு எடுத்து, மீண்டும் பணி கேட்பது உள்ளிட்டவையாகும். இவற்றை முடிக்க முடியாமல், பள்ளிக்கல்வி துறை திணறி வருகிறது. இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனர், இணை இயக்குனர்கள், வழக்கு விசாரணை பிரிவு அலுவலர்கள் ஆகியோருடன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், தலைமை செயலகத்தில், நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து, அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, வழக்கு களை விரைந்து முடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, செயலர் உத்தரவிட்டார். வழக்குகளால், நிர்வாக பணிகள் பாதிக்காமல், வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

ஒரே பள்ளி வளாகத்தில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரையிலான, வகுப்புகளை நடத்த, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் நிர்வாகங்களின் கீழ், 57 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில், அரசு பள்ளிகள் மட்டும், 37 ஆயிரம். அவற்றில், 24 ஆயிரம் தொடக்க பள்ளிகள்; 7,200 நடுநிலை; 3,000 உயர்நிலை; 2,800 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. தொடக்க பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி என, தனித்தனி வளாகங்களில் இயங்குவதால், மாணவர்கள், அவ்வப்போது பள்ளி மாற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, பல மாணவர்கள், மாற்று சான்றிதழ் பெற்று, பின், எந்த பள்ளியிலும் சேராமல், படிப்பை பாதியில் விடுகின்றனர். அதை தவிர்க்க, ஒரே வளாகத்தில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை படிக்கும் வசதியை ஏற்படுத்த, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக, மாவட்டத்திற்கு ஒன்று என, 32 பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை, ஒரே பள்ளியில் படிக்க வசதி செய்யப்படுகிறது. இதை படிப்படியாக, வட்டார அளவில் விரிவுபடுத்தவும், பள்ளி கல்வி துறை முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து, சென்னையில் நடந்த, முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில், பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் விவாதித்துள்ளார். அப்போது, 'இந்த திட்டத்தை, உடனே செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதுகுறித்து, அரசியல் ரீதியான பிரச்னைகள் வந்தால், அவற்றையும் எதிர்கொண்டு, இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்' என, அவர் குறிப்பிட்டு உள்ளார். இத்திட்டம் அமலுக்கு வந்தால், ஒன்றுடன் ஒன்று என, பல பள்ளிகள் இணைக்கப்படும். அதனால், குறைந்தபட்சம், 1,000 பள்ளிகளுக்கு மேல் மூடப்படும் என, தெரிகிறது. பள்ளிகள் இணைப்பு ஏன்? அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்ததால், பல பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்; ஆனால், தலா, இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களுக்கு, மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை, ஊதியமாக செலவிடப்படுகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளால், கடும் நிதிச்சுமை ஏற்படுகிறது. மாணவர் எண்ணிக்கை குறைவு காரணமாக, 3,003 பள்ளிகளுக்கு, மத்திய அரசின் நிதியுதவியும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த பள்ளிகளை, ஒன்றுடன் ஒன்று இணைக்க, பள்ளி கல்வி முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒரே வளாகத்தில், பிளஸ் 2 வரையிலான கல்வி என்ற திட்டத்தை, அமல்படுத்த வேண்டிய கட்டாயம், அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

NEET & JEE EXAM 2019 - IMPORTANT DATES !

  1. அரசுப் பள்ளிகளை மூடவோ இணைக்கவோ திட்டம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
  2. பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கி உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்
  3. அக்.,1 முதல் அரசு தேர்வுத்துறை மண்டல அலுவலகங்கள் கலைப்பு : மாவட்ட அலுவலகங்கள் உதயம்
  4. சிறுபான்மையினர் படிக்க உதவித்தொகை
  5. ஒருங்கிணைந்த கல்வி திட்டம்: அதிகாரிகளுக்கு பயிற்சி
  6. மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை வேறு பள்ளிகளுடன் இணைக்க முடிவு கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை
  7. போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி பெற வேண்டுமா?

அரசுப் பள்ளிகளை மூடவோ இணைக்கவோ திட்டம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

அரசு பள்ளிகளை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகளும் 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும் 12,419 தனியார் சுயநிதி பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒரு கோடியே 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர். அரசு பள்ளிகளில், நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களையும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையையும் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. , சுமார் 900 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 15-க்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகேயுள்ள பள்ளிகளுடன் இணைக்கலாமா என்று அரசுதிட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், மாணவர் சேர்க்கை 10-க்கும் குறைவாக உள்ள 890 அரசு தொடக்கப்பள்ளிகளை மூட அரசு பரிசீலித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.இதுதொடர்பாக சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:அரசு தொடக்கப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் உடைய பள்ளிகளாக 892 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவர் எண்ணிக்கை குறையாமல் இருக்கவும் என்னென்ன வழிவகைகளை செய்யலாம் என்று ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். அரசு பள்ளிகளை மூடும்நோக்கம் அரசுக்கு இல்லை.

பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கி உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்

கணினி ஆசிரியர் பணியிடமும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நிரப்பப்படுவார்கள். வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட்டதால் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 82 ஆயிரம் பேர் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையில் உள்ள பழமையான யாழ்பாண நூலகத்துக்கு 50 ஆயிரம் நூல்களும், அங்குள்ள 10 இந்து கல்வி நிறுவனங்களுக்கு 5,000 நூல்களும், இலங்கை கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கு 50,000 நூல்களும் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கி உள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.7,500 சம்பளத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். அந்த பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும்போது பகுதி நேர ஆசிரியர்கள் நீக்கப்படுவார்கள். தற்போது, வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால் கடந்த 2013 முதல் 2017 வரை ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 82,000 பேருக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் இதுவரை செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வில் கலந்து கொண்டு வந்தனர். இந்த முறை இந்த ஆண்டு மட்டும் நடைமுறையில் இருக்கும். அடுத்த ஆண்டு முதல் அவர்களும், ஜூன் மாதமே தேர்வெழுத முடியும். அதேநேரம் 11ம் வகுப்புக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 12ம் வகுப்புக்கு செல்ல முடியும். மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, 12ம் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை மட்டுமே உயர் கல்விக்காக ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நடக்கிறது. 9 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். அந்த பணி முடிவுற்றவுடன், தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக கணினி ஆசிரியர் பணியிடம் ரூ.7500 சம்பளத்தில் நிரப்பப்படும். கணினி ஆசிரியர் பணியிடமும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நிரப்பப்படுவார்கள். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

அக்.,1 முதல் அரசு தேர்வுத்துறை மண்டல அலுவலகங்கள் கலைப்பு : மாவட்ட அலுவலகங்கள் உதயம்

தமிழகத்தில் அரசு தேர்வுத்துறை மண்டல அலுவலகங்கள் கலைக்கப்பட்டு, அக்.,1 முதல் மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களாக செயல்படவுள்ளன.கல்வித்துறையில் 1975ல் தனி இயக்குனரகமாக தேர்வுத்துறை உருவானது. சென்னை, மதுரை உட்பட 7 மண்டல அலுவலகங்கள் துணை இயக்குனர் கீழ் செயல்பட்டன.இதன் மூலம் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உட்பட 40 வகை தேர்வுகள் நடத்தப்படுகின்றன.தேர்வு முடிவு, மதிப்பெண் சான்றிதழ், மறுகூட்டல், விடைத்தாள் நகல் வழங்கல் பணிகளில் இத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதால், மண்டல அலுவலகங்கள் கலைக்கப்பட்டு மாவட்ட அலுவலகங்கள் துவங்கப்படுகின்றன. இதற்காக புதிதாக உதவி இயக்குனர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர் நியமிக்கப்படவுள்ளனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அக்.,1 முதல் 32 மாவட்டங்களிலும் புதிய அலுவலகங்கள் செயல்பட சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது,' என்றார்.மதுரையில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் ஆர்.எம்.எஸ்., ரோட்டில் செயல்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், தேர்வுத்துறை அலுவலகமாக செயல்படும்.

சிறுபான்மையினர் படிக்க உதவித்தொகை

சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கிவருகிறது. சிறுபான்மையினருக்கான அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், பார்சிகள், சமணர்கள் உள்ளிட்ட ஆறு சிறுபான்மை சமூகத்தினருக்கு 2018-19 ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை அறிவிப்பு வெளியாகியுள்ளது. மெட்ரிக்குக்கு முந்தைய (Pre-Matric), மெட்ரிக்குக்குப் பிந்தைய (Post-Matric), தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் (Merit-cum-Means based) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இந்த உதவித்தொகை வழங்கப்படும். அடிப்படைத் தகுதி இந்த உதவித்தொகையைப் பெற மேலே குறிப்பிட்ட ஆறு பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதேபோல இந்தியாவில் உள்ள அரசு அல்லது தனியார் பள்ளியிலோ கல்லூரியிலோ அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்திலோ படித்துக் கொண்டிருக்க வேண்டும். ஓராண்டு அல்லது அதற்கும் கூடுதலான ஆண்டு காலப் படிப்பாக இருக்க வேண்டும். கடைசியாக எழுதிய பொதுத் தேர்வு அல்லது வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் www.scholar ships.gov.in இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தேசிய உதவித்தொகை இணையதளத்தின் முகப்புப் பக்கத்திலேயே இது தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெறலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 செப்டம்பர் 2018 கூடுதல் விவரங்களுக்கு: www.minorityaffairs.gov.in

ஒருங்கிணைந்த கல்வி திட்டம்: அதிகாரிகளுக்கு பயிற்சி

தமிழகத்தில் இதுவரை தனித்தனி திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வந்த ‘அனைவருக்கும் கல்வி’ திட்டமும் (எஸ்எஸ்ஏ), மத்திய இடைநிலை கல்வி திட்டமும் (ஆர்எம்எஸ்ஏ) இந்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் (சமக்ர சிக்சா அபியான்-எஸ்எஸ்ஏ) என்ற பெயரில் நடை முறைப்படுத்தப்படுகிறது. இப் புதிய திட்டத்தை செயல்படுத் துவது குறித்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான ஒருநாள் பயிற்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இப்பயிற்சியை பள்ளிக்கல்வித் துறையின் முதன் மைச் செயலர் பிரதீப் யாதவ் தொடங்கிவைத்தார். இதில், எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்கு நர் சுடலைகண்ணன், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ் வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஏ.கருப்பசாமி, மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கல்வி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த கல்வி திட்ட அதிகாரிகள் புதிய திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்தனர்.

மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை வேறு பள்ளிகளுடன் இணைக்க முடிவு கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை

மாணவர்கள் குறைவாக உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அருகில் உள்ள அரசு பள்ளிகளுடன் இணைப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சியை தேசிய கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத்திற்கான பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அளித்துவருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது, நிதியை எவ்வாறு பயன்படுத்துவது, மாணவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவது, மாணவர்கள் கல்வி அறிவை அதிகரிப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கல்வித்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி 5 நாட்கள் அளிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் சுடலை கண்ணன், தேசிய கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத்திற்கான பல்கலைக்கழக பேராசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் மற்றும் இணை இயக்குனர்கள், 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பள்ளிகளை இணைக்க இந்த கூட்டத்தில், அரசு பள்ளிகளின் தற்போதையநிலை, மாணவர்களுடைய எண்ணிக்கை, மத்திய, மாநில அரசு திட்டங்களின் நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டன. குறைந்த மாணவர்களை கொண்ட அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அருகில் இருக்கும் அரசு பள்ளிகளுடன் இணைப்பது குறித்தும், சமக்ர சிக்‌ஷா அபியான் என்ற ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் இந்த பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள 1,053 ஓராசிரியர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், மாணவர்-ஆசிரியர் விகிதத்தின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்தல், ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பணியிட மாறுதலை மாவட்ட கல்வி அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என்பன ஆய்வில் முக்கியமானவை ஆகும். ஒரு மாணவர் கூட இல்லை 2017-2018-ம் ஆண்டில் 10 கடலோர மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், பள்ளி செல்லும் வயதில் உள்ள 36,930 மாணவர்களில் 35 ஆயிரம் பேர் மட்டுமே பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளது தெரிந்தது. அந்த குறையை சரிசெய்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக தெரிகிறது. பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் 1,500 அரசு ஆரம்ப பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் கீழ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள 878 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ளனர். இதில் 32 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 249 பள்ளிகளில் மட்டும் மாணவர்கள் எண்ணிக்கை சற்று கூடியிருக்கிறது. மீதமுள்ள பள்ளிகளிலும் இந்த மாத இறுதிக்குள் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அப்படி மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்காத தொடக்கப் பள்ளிகளை வேறு அரசு பள்ளிகளோடு இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி பெற வேண்டுமா?

போட்டிகள் மிகுந்த காலம் இது. ஆயிரம் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டால் பல லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள். படித்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். ஏராளமானவர்கள் படித்த படிப்புக்கு சம்பந்தமில்லாத பணியில், குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி நிரந்தர வேலையின்றி தவிக்கும் பலருக்கும் அரசு வேலை என்பது பெருங்கனவாக இருக்கிறது. எப்படியாவது படித்து ஒரு அரசு வேலைக்குப் போய்விட வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்படும் இளைஞர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களின் ஆர்வத்திற்கேற்ப, அடுக்கடுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள், ஆசிரியர் பயிற்சி தேர்வுகள், வங்கிப் பணிகளுக்கான தேர்வுகள், ரெயில்வே தேர்வுகள், மத்திய அரசு பணிகளுக்கான எஸ்.எஸ்.சி. தேர்வுகள், யூ.பி.எஸ்.சி. தேர்வுகள், ராணுவ பணிகளுக்கான தேர்வுகள், குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் என தேர்வுகள் வரிசை கட்டி நிற்கின்றன. இவற்றில் தங்களுக்கு விருப்பமான பணிக்கு செல்வதற்கான தேர்வை தேர்வு செய்து அதற்கான தயாரிப்புகளில் ஈடுபடுபவர்கள் உண்டு. இல்லை ஏதாவது ஒரு அரசு பணிக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக பல்வேறு தேர்வுகளையும் எழுதுபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு இருக்கும் ஒரே சவால், தேர்வுக்கான தயாரிப்புகளை மேற்கொள்வது மற்றும் பயிற்சியில் பங்கெடுப்பது இவைதான். பலருக்கு அதிக கட்டணம் செலுத்தி தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சிக்கு செல்ல முடியாது. அவர்கள் சிரமமின்றி பயிற்சி பெறுவதற்கு வசதியாக அரசும் இலவசமாக போட்டித் தேர்வுக்கான பயிற்சிகளை வழங்குகிறது என்பதை பலரும் அறிந்திருப்பதில்லை. தமிழக அரசு வழங்கும், குடிமைப் பணிகளுக்கான பயிற்சி பற்றி இந்த பகுதியில் ஏற்கனவே பார்த்தோம். குடிமைப் பணிகள் அல்லாத போட்டித் தேர்வுகளான டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., ஐ.பி.பீ.எஸ். உள்ளிட்ட தேர்வுகளுக்கான பயிற்சிகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. தற்போது இந்த போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொது பிரிவினருக்கு 31 சதவீத இடங்களும், பிற்படுத்தப்பட்டோர்-26.5 சதவீதம், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்-3.5 சதவீதம், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர்-20 சதவீதம், ஆதி திராவிடர்-15 சதவீதம், அருந்ததியர்-3 சதவீதம், பழங்குடியினர்-1 சதவீதம் இடம் அளிக்கப்படுகிறது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயர் கல்லூரி வளாகத்தில் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை 3 மாத காலம் பயிற்சி வழங்கப்படுகிறது. அக்டோபர் மாதம் பயிற்சி ஆரம்பமாகிறது. விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களைcecc.examsonline.co.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 3-10-2018-ந் தேதியாகும்.

சென்னை பல்கலை. தொலைதூரக்கல்வி முதுகலை தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழக பதிவா ளர் இரா.சீனுவாசன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த மே மாதம் நடைபெற்ற தொலைதூரக்கல்வி நிறுவன முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகளின் முடிவுகள் 24-ம் தேதி (இன்று) வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை மாலை 6 மணி முதல் தொலைதூரக்கல்வி நிறுவன இணையதளத்தில் (www.ideunom.ac.in) அறிந்துகொள்ளலாம். மறு மதிப்பீடு செய்ய தகுதியுடைய வர்களும், மறுகூட்டல் செய்ய விரும்புவோரும் 25-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.1000. மறுகூட்டலுக்கு கட்டணம் ஒரு தாளுக்கு ரூ.300. கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்திவிடலாம்.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். விரைவில் நிரப்பப்படும் ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அவருடைய இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2011, 2014 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் 82 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி உள்ளனர். இவர்களுக்கு வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் ஒரு தேர்வு வைக்கப்பட்டுள்ளது. அதில் வெற்றிபெறும் ஆசிரியர்களை கொண்டு காலிப்பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ள பள்ளிக்கூடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ரூ.7 ஆயிரத்து 500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடைய உள்ளது, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கு அந்த வாய்ப்புகள் வழங்கப்படும். மறுதேர்வு 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளை கணினிமயமாக்கவும், 3 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்தவுடன் கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். 10, 11, 12 ஆகிய வகுப்பில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற 2 மறுதேர்வுகள் நடத்தப்படும். அடுத்த கல்வியாண்டு முதல் ஜூன் மாதம் மட்டுமே மறுதேர்வு நடைபெறுமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு நூல்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்கள் என்ற முறையில் தேர்வு எழுதி வெற்றிபெறும் மாணவர்கள் உயர்கல்வி செல்வதில் எந்த சிக்கலும் இருக்காது. சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் 500 மதிப்பெண்கள்தான் கணக்கிடப்படுகிறது. இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள மிகப்பழமையான நூலகத்திற்கு 50 ஆயிரம் நூல்களும், தமிழர் வாழ்கின்ற பகுதிகளில் உள்ள 5 நூலகங்களுக்கு 50 ஆயிரம் நூல்களும், 10 பள்ளிக்கூடங்களுக்கு தலா 500 நூல்களும் என மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரம் நூல்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் 5 ஆயிரம் பணியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலி குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் பாதிக்கும் அபாயம் 

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் 5,000-க்கும் மேற் பட்ட அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலி யாக உள்ளதால் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல் பட்டு வருகின்றன. இந்த மையங் களை அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் நிர்வகித்து வரு கின்றனர். அங்கன்வாடி பணியாளர் கள், உதவியாளர்கள் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சத்துணவு, சுகாதாரம், முன்பருவ கல்வியை வழங்கி வருகின்றனர். விழிப்புணர்வு பணி இதுமட்டுமின்றி, வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட் டும் தாய்மார்களுக்கு இணை உணவு வழங்குவதுடன், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 5,000 அங்கன்வாடி பணியாளர்கள் ஆனால், அங்கன்வாடி மையங் களில் ஏற்பட்டுள்ள அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப நட வடிக்கை எடுக்காததால் இந்தப் பணிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன்படி, தமிழகம் முழுவதும் சிவகங்கை, திருவா ரூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 5,000-க் கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 5 மையங்கள் வரை... காலிபணியிடங்கள் உள்ள மாவட்டங்களில், ஒரு அங்கன்வாடி பணியாளர், 5 மையங்கள் வரை நிர்வகிக்க வேண்டியுள்ளது. இத னால், அங்கன்வாடி மையங்களின் பலன்களை முழுமையாகப் பெற முடியாமல் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், பாலூட்டும் தாய் மார்கள் பரிதவித்து வருகின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் டெய்சி கூறியதாவது: தமிழகம் முழுவதும் சிவகங்கை, திண்டுக்கல், திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 5,000-க் கும் மேற்பட்ட அங்கன்வாடி பணி யாளர், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதுதவிர, குறிப்பிட்ட கால இடைவேளியில் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றிய 2,000-க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், இந்தப் பணியிடங்களும் அவ்வப்போது நிரப்பப்படவில்லை. இதனால், ஒரு அங்கன்வாடி பணியாளர் 5 மையங்கள் வரை நிர் வகிக்க வேண்டியுள்ளது. அன்றாடப் பணிகளை மேற்கொள்ளக்கூட சிரம மாக உள்ளது. எனவே, காலி பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட ஆட்சியர் பொறுப்பு இதுகுறித்து , ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டியது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு. எனவே, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்களும் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்றவர்களின் காலிப்பணி யிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், தற்போது பணியில் இருக்கும் பணியாளர்களைக் கொண்டு அங்கன்வாடி மையங் களைச் சிறப்பாகவே நிர்வகித்து வருகிறோம். எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கான தடையை நீக்கியது தவறில்லை ஐகோர்ட்டு உத்தரவு

உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது தவறு இல்லை என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. உதவி பேராசிரியர் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கு தமிழ் துறையில் 13 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த பணியிடங்களை நிரப்பும் நடைமுறைகள், பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளின்படி மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி முத்துகுமார் என்பவர் 2015-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, உதவி பேராசிரியர் பணியிடத்தில் ஒரு இடத்தை மட்டும் காலியாக வைத்திருக்க வேண்டும் என்றும், அந்த இடத்தை நிரப்ப தடை விதித்தும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த இடைக்கால தடையை நீக்கக்கோரி பல்கலைக்கழகம் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தடை நீக்கம் இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, உதவி பேராசிரியர் பணியிடத்தை காலவரம்பின்றி நிரப்பாமல் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை எனக்கூறி கடந்த ஜூலை மாதம் தடையை நீக்கியது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் முத்துகுமார் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர், ‘மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என்பதால் உதவி பேராசிரியர் இடத்தை நீண்டகாலத்திற்கு காலியாக வைத்திருக்க முடியாது என்று கருதி தனி நீதிபதி அந்த தடையை நீக்கியுள்ளார். இதில் எந்த சட்டவிரோதமோ, தவறோ இல்லை. இதனால் மனுதாரருக்கு பாதிப்பும் இல்லை. இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

உரிமையியல் நீதிபதி பதவியில் அடங்கிய 320 பணியிடங்களுக்கு நேர்காணல் தேர்வு 27-ந்தேதி தொடங்குகிறது.

தமிழ்நாடு மாநில நீதிப்பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் அடங்கிய 320 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த மாதம் 11 மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெற்றது. அதற்கான நேர்காணல் தேர்வு வருகிற 27-ந்தேதி(வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம்(அக்டோபர்) 5-ந்தேதி வரை சென்னை பிரேசர் பாலச்சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் இருந்து அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் நேர்காணலுக்கு கலந்து கொள்ள தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாது. நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் தேர்வு செய்யப்பட முழுத்தகுதி பெற உறுதி அளிக்கப்பட்டதாக கருத இயலாது. மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் வழக்கு தாக்கல்: தேர்வுத்துறை இயக்குனருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு

நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் வழக்கு தாக்கல் செய்த அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மதிப்பெண் வித்தியாசம் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், 2005-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 998 மதிப்பெண்கள் எடுத்தார். பின்னர், வீரச்சிபாளையத்தில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் அரசு இடஒதுக்கீட்டின்கீழ் சேர்ந்தார். முதலாம் ஆண்டு படிப்பை முடித்தநிலையில், சான்றிதழ் சரிபார்ப்பின்போது ராஜேஸ்வரியின் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழில் பாடவாரியாக உள்ள மதிப்பெண்களுக்கும், மொத்த மதிப்பெண்ணுக்கும் வித்தியாசம் உள்ளது தெரிந்தது. இதுகுறித்து பொதுத்தேர்வு துறை இணை இயக்குனர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் 2007-ம் ஆண்டு ராஜேஸ்வரியை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இருந்து நீக்கி நிர்வாகம் உத்தரவிட்டது. புதிய சான்றிதழ் இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராஜேஸ்வரி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘மதிப்பெண்களில் திருத்தம் செய்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அரசு வழங்கிய சான்றிதழை தான் பள்ளியில் சமர்ப்பித்தேன். இதில் என் மீது எந்த தவறும் இல்லாததால், என்னை மீண்டும் பள்ளியில் சேர்க்கும்படி உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மாணவியை பள்ளியில் இருந்து நீக்கிய உத்தரவை ரத்து செய்து, அவரை மீண்டும் சேர்க்க உத்தரவிட்டது. அதோடு பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழில் உள்ள தவறுகளை திருத்தம் செய்து புதிய சான்றிதழை வழங்கவும் உத்தரவிட்டது. ரூ.5 ஆயிரம் அபராதம் இந்த உத்தரவின்படி, பள்ளியில் மீண்டும் சேர்ந்த ராஜேஸ்வரி 2-ம் ஆண்டு படிப்பை முடித்தார். ஆனால் அவரது தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதையடுத்து, சேலம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ராஜேஸ்வரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், ராஜேஸ்வரியின் தேர்வு முடிவுகளை வெளியிட்டு, அவரது சான்றிதழ்களை வழங்கவும், அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் தேர்வுத்துறை இயக்குனருக்கு 2010-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விசாரித்தார். பின்னர், ‘நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறேன். ராஜேஸ்வரியின் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட்டு, சான்றிதழ்களை அவருக்கு வழங்கவேண்டும். அதேநேரம், ஐகோர்ட்டு உத்தரவை மீறும் வகையில் தேர்வுத்துறை இயக்குனர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதனால், அவருக்கு ரூ.5 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கிறேன். இந்த தொகையை அந்த மாணவிக்கு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

ஜனவரி ஜெஇஇ நுழைவுத்தேர்வுக்கு செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர ஜெஇஇ நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இது ஜெஇஇ மெயின், ஜெஇஇ அட்வான்ஸ்டு என இரு தேர்வுகளை உள்ளடக்கியது. ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வெழுதலாம். என்ஜடி, ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர ஜெஇஇ மெயின் தேர்வு மதிப்பெண் போதும். ஆனால், ஐஐடி-யில் சேர வேண்டுமானால் ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர் வெழுத வேண்டும். கடந்த ஆண்டு வரையில் ஜெஇஇ நுழைவுத் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வந்தது. ஆனால், நடப்பு கல்வி ஆண்டு (2018-19) முதல் தேசிய தேர்வு முகமை என்ற மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் புதிய அமைப்பு ஜெஇஇ நுழைவுத் தேர்வுகள் மட்டுமின்றி நீட், யுஜிசி நெட் உட்பட தேசிய அளவிலான பல்வேறு தேர்வுகளை நடத்த இருக்கிறது. அந்த வகையில், தேசிய தேர்வு முகமை, இந்த கல்வி ஆண்டு இரு ஜெஇஇ மெயின் தேர்வை நடத்துகிறது. முதல் தேர்வு வரும் ஜனவரி மாதத்திலும், 2-வது தேர்வு ஏப்ரல் மாதத்திலும் நடத்தப்படும். தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் ஏதேனும் ஒரு தேர்வை எழுதினால் போதும். எனினும் விருப்பப்பட்டால் இரு தேர்வுகளையும் எழுதலாம். அதில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ அது ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான தகுதிக்கு கருத்தில்கொள்ளப்படும். இந்த நிலையில், ஜனவரி 6 முதல் 20-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக ஆன்லைனில் நடத்தப்பட உள்ளன. ஜெஇஇ மெயின் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது நடந்துகொண்டிருக்கிறது. தேர்வெழுத விரும்பும் பிளஸ் 2 மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தை (www.nta.ac.in) பயன்படுத்தி செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம், தேர்வு மையம் உள்ளிட்ட முழு தகவல் களும் இந்த இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரல் மாத ஜெஇஇ மெயின் தேர்வானது ஏப்ரல் 6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்படும். அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு தனியே பின்னர் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மத்திய அரசு பணி: 1,136 காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை தேர்வுக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசிநாள்

மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம்(சென்னை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் ஆகியவற்றில் 1,136 காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 130 பிரிவுகளைச் சேர்ந்த இந்தப் பணியிடங்கள் கணினி அடிப்படையிலான தேர்வு முறையில் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வு குறித்த தகுதி விவரம் மற்றும் இதர நிபந்தனைகள், விண்ணப்பப்படிவம் www.ssc.nic.in என்ற ஆணையத்தின் வலைத் தளத்திலும் www.sscsr.gov.in என்ற தெற்கு மண்டல அலுவலகத்தின் வலைத்தளத்திலும் கிடைக்கும். இதில் தென்மண்டலத்திற்கு மட்டும் 13 வகை பணியிடங்களில் 55 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த காலிப்பணியிடங்களில் 8 பட்டதாரி நிலையிலும், 4 மேல்நிலை வகுப்பு நிலையிலும், 1 மெட்ரிக் நிலையிலும் இருக்கும். விண்ணப்பதாரர்களில் பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ‘ஆன்-லைன்’ மூலம் www.ssconline.nic.in என்ற ஆணையத்தின் வலைத்தளத்தில் வருகிற 30-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் வருகிற அக்டோபர் மாதம் 27, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு சித்த மருத்துவக்கல்லூரிகளில் எம்.டி. படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் அக்டோபர் 11-ந் தேதி கடைசி நாள்

சென்னை மற்றும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசினர் சித்த மருத்துவக்கல்லூரிகளில் 2018-19-ம் கல்வி ஆண்டிற்கான 3 ஆண்டு எம்.டி. (சித்தா) பட்ட மேற்படிப்பில் சேர மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் மொத்தம் 94 இடங்கள் உள்ளன. இதற்கான தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்ப படிவங்களை சுகாதாரத்துறையின் இணையதளமான www.tnhealth.org -ல் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘தேர்வுக்குழு அலுவலகம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, சென்னை’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந் தேதி கடைசி நாளாகும். இந்த தகவல் அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ள அரசு ஊழியர்கள் துறைத் தேர்வுகளுக்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ள அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகளில் தேர்வுக்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இரா.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகள் டிசம்பர் 22 முதல் 30-ம் தேதி வரை (25-ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை நீங்கலாக) நடைபெற உள்ளன. வழக்கமாக துறைத்தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பத்தில் அஞ்சலக செலானுடன் ஆளறிச்சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்போது அதற்கு பதிலாக முற்றிலும் ஆன்லைன்வழி விண்ணப்பமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, அஞ்சலக செலானுக்குப் பதிலாக தேர்வுக்கட்டணத்தை நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக செலுத்திவிடலாம். துறைத்தேர்வுகளுக்கு விண் ணப்பிக்க விரும்புவோர் தேர் வாணை இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ள துறைத்தேர்வு விதிமுறைகள், கால அட்டவணை மற்றும் அனுமதிக்கப்பட்ட புத்தகங்களின் விவரங்களை அறிந்து கொள்ள லாம். www.tnpscexam.net, www.tnpscexam.in ஆகிய இரு இணைய தளங்கள் மூலமாக துறைத்தேர்வு களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டையும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள லாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உரிமையியல் நீதிபதி பதவிக்கான நேர்முகத்தேர்வு செப்.27-ல் தொடக்கம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

உரிமையியல் நீதிபதி பதவிக்கான நேர்முகத்தேர்வு செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 320 காலிப் பணியிடங்கள் 2014 - 2015 மற்றும் 2016 - 2017-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில நீதிப்பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் அடங்கிய 320 காலிப் பணியிடங் களை நிரப்பும் பொருட்டு கடந்த ஆகஸ்டு 11, 12-ம் தேதிகளில் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேர்காணல் தேர்வுக்கு தகுதியுள்ள விண்ணப்ப தாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். நேர்முகத்தேர்வு, செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை சென்னையில் உள்ள டிஎன் பிஎஸ்சி அலுவலகத்தில் நடை பெறும். நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்ப தாரர்களுக்கு இதற்கான அழைப் புக்கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பபட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது இதுதொடர்பான விவரங்கள் தேர்வாணையத்தின் இணைய தளத்திலும் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள், அவரவர் களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாளில் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் நேர்காணலில் கலந்து கொள்ளத் தவறும் விண்ணப்பதார்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படாது. நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப் பட்டதாலேயே அவர்கள் தெரிவு செய்யப்பட முழுத்தகுதி பெற உறுதி அளிக்கப்பட்டதாக கருத இயலாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வருகிற கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு ரத்து அரசாணை வெளியீடு

வருகிற கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்வு முறை கடந்த 1911-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 1952-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. 1978-ம் ஆண்டு மேல்நிலை பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 1980-ம் ஆண்டு முதல் 12-ம் வகுப்புக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வும், செப்டம்பர் மாதத்தில் துணைத் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெறும் பொதுத்தேர்வில் தோல்வி அடையும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்ச்சி அடையாத அனைத்து பாடங்களிலும் தேர்வு எழுதுவதற்காக ஜூன், ஜூலை மாதங்களில் உடனடி சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் எண்ணிக்கை குறைவு உடனடி சிறப்பு துணைத்தேர்வின் மூலம் 10, 12-ம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை மாணவர்கள் எழுதி, தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்ந்தனர். அரசு பொதுத்தேர்வு, உடனடி சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செப்டம்பர் மாதம் நடைபெறும் துணைத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தற்போது செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டு வரும் பொது தேர்வினை வரும் கல்வியாண்டு (2019-2020) முதல் ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 3 பருவ தேர்வுகள் இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:- அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியுள்ளவாறு, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மற்றும் ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 பருவங்களில் நடத்தப்படுகின்றன. மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் ஜூன், ஜூலை மாதம் சிறப்பு துணைத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி தேர்வுக்கு பின் அனைத்து பணிகளும் ஆகஸ்டு மாதத்தில் நிறைவடையும். இதைத்தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் பருவத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டு தேர்வுக்கு பின்னர் அனைத்து பணிகளும் நவம்பர் மாத இறுதியில் நிறைவடையும். மார்ச் பொதுத்தேர்வுக்காக புதிய தேர்வு மையம் அமைத்தல், பெயர் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள் ஆகஸ்டு மாதத்திலேயே தொடங்கிவிடும். மார்ச் பொதுத் தேர்வுக்கான முன்னிலை பணிகள் நடைபெறும் போதே செப்டம்பர் தேர்வுக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. கற்பித்தல் பணி பாதிப்பு மேலும் ஜூன், ஜூலை உடனடி சிறப்பு துணைத் தேர்வு அறிவிக்கப்பட்ட பின்னர், செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குறைவான தேர்வர்கள் விண்ணப்பித்தாலும் மார்ச் பருவத் தேர்வுகளை நடத்துவது போலவே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே, செப்டம்பர் மாதம் நடத்தப்படும் துணை தேர்வினை ரத்து செய்துவிட்டு ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் உடனடி சிறப்பு துணைத் தேர்வு மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு மட்டும் நடத்திட அரசு அனுமதிக்க வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அரசிடம் கேட்டுள்ளார். துணைத்தேர்வுகள் ரத்து அதனை அரசு கவனமுடன் பரிசீலித்து, தமிழகத்தில் வரும் (2019-2020) கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு, ஜூன், ஜூலை சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும். செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுகளை ரத்து செய்யலாம் என அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 66 வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்த துணைத்தேர்வு முறை முடிவுக்கு வருகிறது.