அக்டோபர் 2018 மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தேர்வு முடிவு இன்று (31.10.2018) வெளியாகிறது.

நடைபெற்ற, செப்டம்பர்/அக்டோபர் 2018 மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தத்தமது தேர்வு முடிவினை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே 31.10.2018 அன்று (புதன்கிழமை) பிற்பகல் தாங்களே இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு: 1. தனித்தேர்வர்கள் வருகிற 31.10.2018 (பிற்பகல்) முதல் தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2. மேற்படி இணையதள முகவரிக்குள் Login செய்தவுடன் “ Provisional Mark Sheet HSE Result – Sep/Oct 2018 ” என்ற Screen தோன்றும். தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்ததேதி ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் Screen-ல் தோன்றும் குறியீட்டினை (Code) அதில் உள்ளது போலவே Type செய்ய வேண்டும்.

NEET UG 2019 | நவம்பர் 1-ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்

நீட் யு.ஜி. 2019 தேர்வுகளுக்கு நவம்பரில் பதிவு தொடக்கம் | 2019-ல் நடைபெறவுள்ள நீட் தேர்வுகள் வரும் 2019 மே 5-ம் தேதி தொடங்குகின்றன. இதற்கு நவம்பர் 1-ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நீட் தேர்வுகளை சி.பி.எஸ்.சி. நடத்தி வந்தது. அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு நிறுவனம் நடத்தவுள்ளது. மத்திய அரசால் அங்கீகார் செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் போன்ற படிப்புகளில் சேர்வதற்காக நீட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நீட் தேர்வுகளை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க என்.டி.ஏ. திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, அதனை ஆண்டுக்கு 2 கட்டங்களாக கம்ப்யூட்டர் மூலம் நடத்தி முடிப்பதற்கு மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் முனைப்பு காட்டுகிறது. அவ்வாறு ஆண்டுக்கு 2 நீட் தேர்வுகளை நடத்தினால் அது மாணவர்களுக்கு கூடுதல் நெருக்கடியை அளிக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கருதுகிறது. வரவிருக்கும் நீட் தேர்வானது கடந்த மே மாதம் நடத்தப்பட்டதைப் போன்று பேப்பர் மற்றும் பேனா மூலம் நடைபெறுகிறது. இதற்கு பதிவு செய்யவும், தேர்வில் பங்கேற்கவும் ஆதார் எண் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம்

கணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணியில் சேர, இனி, முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு, ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.அரசு பள்ளிகளில், 1994ல், கணினி அறிவியல் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. முதலில், கணினி அறிவியல் சார்ந்த, 'டிப்ளமா' படித்தவர்கள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு, கணினி பயிற்றுனர்களாக நியமிக்கப்பட்டனர். அதன்பின், பி.எஸ்.சி., கணினி அறிவியல் பாடம் அறிமுகமானதால், பி.எஸ்.சி., - பி.எட்., முடித்தவர்கள், கணினி பயிற்றுனர்களாக நியமிக்கப் பட்டனர். இந்த அடிப்படையில், 765 ஆசிரியர்கள், தற்போது பணியாற்றுகின்றனர். ஆனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடம் நடத்த, முதுநிலை ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என்ற விதி உள்ளதால், கணினி ஆசிரியர் நியமனத்தில், தமிழக அரசு, புதிய முடிவு எடுத்துள்ளது.அதன்படி, தற்போது, 809 காலியிடங்களை நிரப்ப, முதுநிலை படித்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என, பள்ளி கல்வி செயலகம் உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவுக்கு, ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். அவர்கள், மேல்நிலை பள்ளி முதுநிலை கணினி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலர் பரசுராமன் தலைமையில், நேற்று பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.ஆனால், அதிகாரிகள் கூறியதாவது:பட்டப்படிப்பு முடிக்காதவர்கள், பல ஆண்டுகளாக, கணினி ஆசிரியர்களாக பணியாற்றினர். பட்டப்படிப்பு அறிமுகமானதும், புதிதாக பட்டப்படிப்பு முடித்தவர்கள் நியமிக்கப்பட்டனர். அதேபோல, தற்போது, முதுநிலை படிப்பு முடித்தவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே பட்டப்படிப்பு கல்வி தகுதி யுடன் பணி பெற்றவர்களுக்கு, முதுநிலை அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பி.ஆர்க். படிப்பில் சேர ஆண்டுக்கு 2 முறை நுழைவுத்தேர்வு

கட்டிடக்கலை கல்விக்கான தேசிய திறனறிவுத் தேர்வை (என்.ஏ.டி.ஏ) ஆண்டுக்கு இருமுறை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கட்டிடக்கலை வல்லுநர்கள் (ஆர்க்கிடெக்சர்) கவுன்சில் தலைவர் விஜய் கார்க் கூறினார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் 450-க்கும் மேற்பட்ட கட்டிடக்கலை கல்லூரிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயில்கின்றனர். தேசிய அளவில் சுமார் 20 லட்சம் கட்டிடக்கலை வல்லுநர்கள் தேவைப்படும் நிலையில், சுமார் ஒரு லட்சம் பேர் மட்டுமே இந்திய கட்டிடக்கலை வல்லுநர்கள் கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். கட்டிடக்கலை துறையில் உள்ள வேலை வாய்ப்புகளை மாணவ, மாணவிகளிடம் கொண்டு செல்வதற்கான விழிப்புணர்வு வீடியோ தயாரிக்கப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் முதல் பள்ளிகளில் இந்த விழிப்புணர்வு வீடியோவை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளோம். பி.ஆர்க். படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த கட்டிடக்கலை வல்லுநர்கள் கவுன்சில் முடிவு செய்துள்ளது. தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகள், அரசு பொதுத் தேர்வுகளால் தேசிய கட்டிடக்கலை கல்விக்கான திறனறிவுத் தேர்வில் (என்.ஏ.டி.ஏ). பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு, இது மிகவும் உதவியாக இருக்கும். ஏப்ரல் மற்றும் ஜூலையில் நடைபெறும் தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்கலாம். 2 தேர்வில் பங்கேற்றாலும்கூட, எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ அதை கணக்கில் கொள்ளலாம். மேலும், படம் வரைதல் தேர்வுக்கான நேரத்தையும் அதிகரித்துள்ளோம். பி.ஆர்க். படிப்புகளுக்கான கவுன்சலிங்கை தேசிய அளவிலான கவுன்சலிங்காக மாற்ற திட்டமிட்டுள்ளோம். பி.ஆர்க். பயில கணிதம், ஆங்கிலம் மட்டுமே போதுமானதாக இருந்த நிலையில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களைப் படித்திருப்பது அவசியம் என்ற மாற்றத்தை கொண்டுவந்துள்ளோம். வரும் கல்வியாண்டு முதல் இந்த முறைகள் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

2011-2016 வரையிலான காலகட்டத்தில்  விடுபட்டுபோன பதிவை புதுப்பிக்க சிறப்பு சலுகை வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவிப்பு

கடந்த 2011 முதல் 2016 வரை யிலான காலகட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பித்துக் கொள்ளத் தவறி யவர்கள் மீண்டும் பதிவைப் புதுப்பிக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, விடுபட்ட பதிவை வரும் ஜனவரி மாதம் 24-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ புதுப்பித்துக் கொள்ளலாம். இதுதொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற் றும் பயிற்சித் துறை ஆணையர் பா. ஜோதிநிர்மலா சாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2011, 2012, 2013, 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங் களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வசதியாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு அளித்துள்ளது. இதற்கான அரசாணை 25.10.2018 அன்று வெளியிடப்பட்டது. 3 மாதங்களுக்குள்.. அந்த அரசாணையில் தெரி வித்தவாறு புதுப்பித்தல் சலுகை யைப் பெற விரும்பும் பதிவு தாரர்கள் அரசாணை வெளி யிடப்பட்ட நாளான அக்டோபர் 25 முதல் 3 மாதங்களுக்குள் (அதாவது வரும் ஜனவரி மாதம் 24-ம் தேதிக் குள்) ஆன்லைன் மூலமா கவோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சம்பந்தப் பட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்துக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து புதுப் பித்துக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக பதிவைப் புதுப்பிக்க விரும்புவோர் http://tnvelai vaaippu.gov.in என்ற இணைய தளத்தை பயன்படுத்துமாறு கேட்டு கொள் ளப்படுகிறார்கள். இவ்வாறு வேலைவாய்ப்பு, பயிற்சி துறை ஆணையர் கூறியுள்ளார்.

பள்ளி, கல்லூரிகள் செயல்படாது: தீபாவளிக்கு முந்தைய தினமான 5-ந் தேதியும் அரசு விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 5-ந்தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் தீபாவளிக்கு முந்தைய தினமான 5-ந்தேதி(திங்கட்கிழமை) அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் பொதுத்துறை முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக 5-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 2-வது சனிக்கிழமையான வருகிற 10-ந்தேதி அன்று பணிநாள் ஆகும். இந்த உள்ளூர் விடுமுறை தினமானது செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர்கள் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நவம்பர் 4-ந்தேதி(ஞாயிற்றுக் கிழமை), நவம்பர் 5-ந்தேதி (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் விடுமுறையுடன் கூடுதலாக அரசு விடுமுறை கிடைத்திருப்பதால், சொந்த ஊர்களுக்கு சென்று மக்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

கல்வித்துறையில் 4 இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்

கல்வித்துறையில் 4 இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம் | இணை இயக்குனர்கள் மாறுதல் விவரம் திரு நரேஷ். ஆசிரியர் தேர்வு வாரியம் திரு நாகராஜமுருகன் பணியாளர் தொகுதி JD(P) திருமதி ஆனந்தி தொடக்க கல்வித்துறை இணை இயக்குனர் நிர்வாகம் JD Admin திருமதி ஸ்ரீ தேவி மெட்ரிகுலேஷன் பள்ளிகள்

TNPSC GROUP-I MAINS RESULT குறித்த அறிவிப்பு.

TNPSC Group-I Mains Result குறித்த அறிவிப்பு. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்திக்குறிப்பு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், தொகுதி-I இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதனிலைத் தேர்வினை 19.02.2017 அன்று நடத்தி அதற்கான முடிவினை 21.07.2017 அன்று வெளியிட்டு முதன்மைத் தேர்வினை 13.10.2017, 14.10.2017 மற்றும் 15.10.2017 ஆகிய தேதிகளில் நடத்தியது. இதற்கான தேர்வுமுடிவுகள் 2018 டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிட உத்தேசிக்கப்பட்டு அது தொடர்பான விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விடைத்தாள்கள் திருத்தும் பணி மிகவும் நேர்மையாகவும், பாதுகாப்பாகவும், ரகசியம் காப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடனும் நடைபெற்று வருவதால் தேர்வர்கள் இதுகுறித்து அவ்வப்போது வெளியாகும் தவறான / அவதூறான செய்திகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. மேலும் ஏமாற்றுக்காரர்கள் மற்றும் இடைத்தரகர்களின் தவறான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இரா. சுதன், இ.ஆ.ப., தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் B.ED படிக்கலாம்!

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் இளநிலை ஆசிரியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பல்வேறு காரணங்களுக்காக படிப்பை இடை நிறுத்தியவர்கள், கல்வியை மீண்டும் தொடர்ந்து தங்கள் லட்சியத்தை எட்டுவதற்காக திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் ஏராளமானவர்களின் இடைநின்ற கல்விக் கனவை நிறைவேற்றி உள்ளது. தற்போது இந்த பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் இளநிலை ஆசிரியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் 11+1+3 அல்லது 10+2+3 என்ற கல்விதிட்ட முறையில் இளநிலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தொடக்க கல்வி ஆசிரியராகப் பணியாற்றி இருக்க வேண்டும். என்.சி.டி.இ. சான்றிதழ் பெற்றிருப்பதும் அவசியம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை குறிப்பிட்ட முகவரிகளில் நேரடியாகவும் கொடுக்கலாம். தபால் மூலமும் அனுப்பலாம். நவம்பர் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 1000 பேர் இந்த படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சி வழங்கப்படுகிறது. இரு பிரிவிலும் தலா 500 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இது 2 ஆண்டு கால படிப்பாகும். கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் இதில் சேர்க்கப்படுகிறார்கள். தமிழகம் முழுவதும் 10 மையங்களில் இவர் களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் தலா 100 பேர் பயிற்சியில் சேரலாம். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கணித அறிவியல், வணிகவியல், பொருளாதாரவியல் பாடத்துறைகளுக்கு பி.எட் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். விரிவான விவரங்களை www.tnou.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

அடுத்த மாதம் 27-ந் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவிப்பு

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தமாதம்(நவம்பர்) 27-ந்தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். உயர்மட்டக்குழு கூட்டம் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கு.தியாகராஜன், மு.அன்பரசு, செ.முத்துசாமி, இரா.தாஸ், மு.சுப்பிரமணியன், ச.மோசஸ், ஆர்.தாமோதரன், கு.வெங்கடேசன், க.மீனாட்சிசுந்தரம் உள்பட ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் ஒருங்கிணைப்பாளர்கள் கு.தியாகராஜன், மு.அன்பரசு, செ.முத்துசாமி ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:- திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு முரண்பாடு களைய வேண்டும். 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள் உள்பட அரசு ஊழியர்களுக்கான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறோம். கடந்த 4-ந்தேதி தற்செயல் விடுப்பு போராட்டமும், சேலத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆயத்த மாநாடும் நடத்தினோம். ஆனால் இதுவரை கோரிக்கைகள் குறித்து அரசு அழைத்து பேசவில்லை. எனவே வருகிற 27-ந்தேதி திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்துவோம். இதில் 14 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பார்கள். அழைத்து பேச வேண்டும் அதற்கு முன்னதாக வருகிற 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை விளக்க கூட்டங்களும், வருகிற 24-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆயத்த மாநாடும் நடத்த இருக்கிறோம். ஸ்ரீதர் அறிக்கை குழுவின் பரிந்துரை வராமலேயே, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று முதல்-அமைச்சர் சொல்லி இருப்பதை கண்டிக்கிறோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் களை அழைத்து பேசி எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் வீரியமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அரசு மழலையர் பள்ளியில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி

ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறியது: பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகை யில், பட்டயக்கணக்காளர் (ஆடிட் டர்) பணிக்கான தேர்வை எழுத பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி அளிப்பதற்காக, அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் மாவட்டத் துக்கு 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் மாணவர் கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வுக்கு விண்ணப்பம் வழங்க அரசு ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. அரசு தொடங்கும் மழலையர் பள்ளியில் தமிழ்மொழிக்கு முன்னு ரிமை அளிக்கப்படும். 2-வதாக ஆங்கிலம் பாடம் இடம்பெறும். ஜனவரி முதல் தேதியில் இருந்து 52 ஆயிரம் குழந்தைகளுக்கு மழலை யர் பாடத்திட்டம் மூலம் பாடம் கற்பிக்க முதல்வர் ஒப்புதல் அளித் துள்ளார். வரலாறு, அறிவியல் பாடத்தில் பழைய பாடத்திட்டத்தில் உள்ள அனைத்தும் இடம்பெறும். அது தவிர வளர்ந்து வரும் நவீன உலகத்துக்கு ஏற்ப, மத்திய அரசு கொண்டு வரும் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படும் என்றார்.

ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு நவ. 12 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு மற்றும் சுய நிதி மருத்துவக் கல்லூரி களில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா பட்டப்படிப் பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை உயர் நீதிமன்றம் கடந்த அக்.12-ம் தேதி சுட்டிக்காட்டிய விடுபட்ட விதிகளின்படி, இந்தப் பட்டப்படிப்புகளில் சேர சில வகுப்பினருக்கான குறைந்த பட்ச கல்வித்தகுதி மதிப்பெண்ணில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தகுதியான மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்புகளை, அக்.29 முதல் நவ.12-ம் தேதி வரை வரை நெல்லை, சென்னை அரும்பாக்கம், மதுரை, நாகர்கோவிலில் அரசு இந்திய முறை மருத்துவக் கல்லூரி முதல்வர்களிடம் இருந்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை அடுத்த வாரம் வழங்கப்படும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை அடுத்த வாரம் வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- போனஸ் ஒதுக்கீடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக அரசு ரூ.215 கோடியே 99 லட்சம் ஒதுக்கியுள்ளது. டீசல் விலை ஏற்றத்தால் ஏற்படும் கூடுதல் செலவை ஈடு செய்ய 20.1.2018 முதல் 30.9.2018 வரையிலான காலத்திற்கு ரூ.198 கோடியே 66 லட்சம் மானியமாக அரசு வழங்கியுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களில் டிசம்பர்-2017 முதல் மார்ச்-2018 வரையில் நிலுவையிலுள்ள பணப்பயன்களை வழங்க ரூ.251 கோடியே 2 லட்சம் அரசு வழங்கியுள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 1,113 பேருக்கு வருங்கால வைப்பு நிதியும், 1,576 பேருக்கு பணிக்கொடையும், 1,837 பேருக்கு ஈட்டியவிடுப்பு தொகையும், 714 பேருக்கு ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையும் வழங்கப்படுவதோடு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 118 பயனாளிகளும் பயன்பெறுகிறார்கள். மொத்தமாக ரூ.665 கோடி அரசு வழங்கியுள்ளது. இந்த 7 ஆண்டுகளில் அரசால் ரூ.13 ஆயிரம் கோடி போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலவச பயண அட்டை பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், விழா காலங்களில் 22 ஆயிரம் பேருந்துகளை அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தில் இயக்குகிறது. தீபாவளிக்காக முன்பதிவு நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சிறப்பு முன்பதிவு மையங்கள் தொடங்கப்படும். சென்னையில் விரைவில் 100 மின்சார பேருந்துகள் இயக்க ஆவன செய்யப்படும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை அடுத்த வாரத்தில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பள்ளிகளில் தொடங்க உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பு பாடத்திட்டம் அடுத்த மாதம் இறுதி செய்யப்படும் கல்வித்துறை அதிகாரி தகவல்

அரசு பள்ளிகளில் தொடங்கப்படும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான பாடத்திட்டம் அடுத்த (நவம்பர்) மாதம் இறுதி செய்யப்படும் என கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார். மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனவே அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை உருவாக்கி, மாநிலம் முழுவதும் அங்கன்வாடிகளில் உள்ள சுமார் 1 லட்சம் குழந்தைகளை எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். இந்த வகுப்புகளுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, மக்களின் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் குறித்து சென்னை டி.பி.ஐ.வளாக கல்வித்துறை அதிகாரி கூறியதாவது:- கருத்து கேட்பு எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான பாடத்திட்டம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் க.அறிவொளி ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்டு www.tnsc-ert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்கள், வல்லுனர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை கடிதம் வழியாகவோ அல்லது aw-pb2018 gm-a-il.com என்ற மின்அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தபால் மூலமும், மின் அஞ்சல் மூலமாகவும் இதுவரை 900-க்கு மேற்பட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்துகளை தெரிவிப்பதற்கு இந்த மாதம் கடைசி என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி வரை பொதுமக்களின் கருத்து ஏற்கப்படும். பின்னர் இந்த பாடத்திட்டம் தொடர்பாக நவம்பர் 3-வது வாரத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி அதில் இறுதி செய்யப்படும். இந்த திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக அரசு பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்வார்கள். 2-வது கட்டமாக பள்ளிகள் அல்லாத இடங்களில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்காவிட்டால் ஓய்வூதியம் நிறுத்தப்படும் வருங்கால வைப்பு நிதி கமிஷனர் அறிவிப்பு

மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் பி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்ட டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழ் பதிவுசெய்ய மற்றும் சமர்ப்பிக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் மாதத்துக்கு பிறகு உயிர்வாழ் சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கி கிளையின் மூலமாகவோ, இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திலோ டிஜிட்டல் முறையில் பதிவு செய்யவேண்டும். ஏற்கனவே ஆதார் எண் இணைக்கப்பட்ட ஓய்வூதியதாரர்கள் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதபட்சத்தில், வங்கி மேலாளர் கையொப்பம் இட்ட பூர்த்திசெய்த உயிர்வாழ் சான்றிதழ் படிவத்தை சமர்ப்பிக்கலாம். ஆதார் அட்டை உபயோகத்தில் உள்ள செல்போன் எண், ஓய்வூதியம் ஆர்டர் மற்றும் ஓய்வூதியம் பெறும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகலை தவறாமல் எடுத்துச்செல்ல வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் வருகிற ஜனவரி 20-ந்தேதிக்குள் சமர்ப்பிக்காத பட்சத்தில் அந்த மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தனித் தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் தனித் தேர்வர்களாக தேர்வு எழுத ஆன்லைன் மூலம் இன்று முதல் நவம்பர் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல் தொழில் கல்வி பாடங்ளுக்கான தேர்வுகளை பிப்ரவரியிலும், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகளை மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அதற்கான மாதிரி படிவங்கள், விவரங்களை தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் மற்றும் திரும்ப எழுத வேண்டிய அவசியம் உள்ள மாணவர்கள் 2019ம் ஆண்டு நடக்க இருக்கும் பொதுத் தேர்வில் தனித் தேர்வர்களாக தேர்வு எழுத விரும்பினால் இன்று தொடங்கி நவம்பர் 17ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க தவறும் மாணவர்கள் நவம்பர் 23ம் தேதி வரை அபராத கட்டணமாக 500 கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அபராத காலத்துக்குள் விண்ணப்பிக்க தவறும் மாணவர்கள், நவம்பர் 30ம் தேதிவரை அபராத கட்டணமாக 1000 செலுத்தியும் விண்ணப்பிக்கலாம். அதற்கு பிறகும் கால நீட்டிப்பு டிசம்பர் 7ம் தேதி வரை செய்யப்படும். அதற்கான அபராத கட்டணம் 2000, இறுதி வாய்ப்பு டிசம்பர் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படும். அதற்கு 5000 ஆயிரம் வரை அபராத கட்டணம் செலுத்த வேண்டி வரும். தேர்வுக் கட்டணம் குறித்த விவரங்களை சிபிஎஸ்இ இணைய தளத்தில் மாணவர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். பார்வைத் திறனற்ற மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் இல்லை.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவு வெளியீடு

மனிதநேய மையத்தில் படித்த 45 பேர் வெற்றி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் மனிதநேய மையத்தில் படித்த 45 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சிவில் நீதிபதி பதவிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 320 சிவில் நீதிபதி பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. முதன்மை ஆகஸ்டு மாதம் 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடந்தது. இந்த தேர்வு முடிவு கடந்த மாதம் (செப்டம்பர்) 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 27-ந்தேதி முதல் கடந்த 5-ந்தேதி வரை நேர்முகத்தேர்வு நடந்தது. இந்த நேர்முக தேர்வுக்கான மதிப்பெண் கடந்த 5-ந்தேதியே வெளியானது. மனிதநேய மையம் அந்தவகையில் தற்போது 222 பேர் இந்த பதவிகளுக்காக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 3 பேரின் தேர்வு முடிவுகள் சில ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்கள் தாக்கல் செய்ய வேண்டி இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. தேர்வு செய்யப்பட்டுள்ள 222 பேரில், சைதை துரைசாமியின் மனிதநேய மையமும், சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் சங்கமும் இணைந்து நடத்திய இலவச பயிற்சியில் படித்த 45 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் பேனி ராஜன் என்பவர் முதல் மதிப்பெண் பெற்று இருக்கிறார். 45 பேர் தேர்வு இந்த தேர்வுக்கான பயிற்சியை மனிதநேய மையமும், சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் சங்கமும் இணைந்து மூத்த வக்கீல்கள், சட்டக்கல்வி பயிற்சியாளர்கள், முன்னாள் நீதிபதிகள் கொண்டு வழங்கியது. அதோடு மட்டுமில்லாமல், எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளை கொண்டு பயிற்சி வகுப்புகள், மாதிரி நேர்முகத்தேர்வுகளும் வழங்கப்பட்டன. மனிதநேய மையம் நடத்திய பயிற்சிகளில் இப்போது தேர்வாகி உள்ள 45 பேருடன் சேர்த்து இதுவரை 145 மாணவ-மாணவிகள் தேர்வு பெற்று நீதிபதிகளாக பதவி வகிக்கின்றனர். மேற்கண்ட தகவலை மனிதநேய மையத்தின் இயக்குனர் ம.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

TNPSC - C.V cum Counselling for the Post of Assistant Horticultural Officer held on 23.10.2018

TNPSC - C.V cum Counselling for the Post of Assistant Horticultural Officer held on 23.10.2018 தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2016-17-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு தோட்டக் கலை சார்நிலைப் பணியில் அடங்கிய உதவி தோட்டக்கலை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் (Short fall vacancies for SC/ST candidates only) பதவிக்காக மொத்தம் 805 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு 11.08.2018 முற்பகல் மற்றும் பிற்பகல் அன்று நடைபெற்றது. இத்தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு அடிப்படையில் எழுத்து தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு தெரிவு செய்யப்பட்ட 727 விண்ணப்பதாரர்கள் 23.10.2018 அன்று நேரடியாக தேர்வாணைய அலுவலகத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அன்றே கலந்தாய்வும் நடத்தப்பட்டது. இக்கலந்தாய்வில் 634 தகுதியான தெரிவாளர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. ஒரே நாளில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மூலம் இப்பணியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முதன்முறையாக செய்துள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. நாள்:24.10.2018 செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

2020 ஏப்ரல் 1 முதல் பிஎஸ் 4 வாகனங்களுக்குத் தடை 

2020 மார்ச் 31க்குப் பிறகு பிஎஸ் 4 வகை வாகனங்களின் விற்பனை மற்றும் பதிவுகளுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் பிஎஸ் 6 வகை வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் நேற்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிஎஸ் 4 வகை வாகனங்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பதிவு ஆகியவற்றை 2020 மார்ச் 31 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவ தாகவும், ஏப்ரல் 1லிருந்து பிஎஸ் 6 வகை வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆட்டோமொபைல் உற்பத்தி யாளர்கள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, பிஎஸ் 4 வாகனங்களுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கெடு தேதிக்கு முன்னரே பிஎஸ் 4 வாகனங்கள் உற்பத்தியை நிறுத்தி விடுவதாக உறுதியளித்தனர். ஆனால், உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களின் விற்பனை 2020 மார்ச்சுக்குப் பிறகு ஆறு மாதம் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பிஎஸ் 6 வகை வாகனங்களின் உற்பத்தியை 2019 டிசம்பரிலிருந்தே தொடங்க வேண்டியிருக்கும். இது சற்று கடினமானது என்று வாதிட்டனர். இந்த விவகாரத்தில் பெட்ரோ லியத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் முன்பு இருந்த நிலைபாட்டிலிருந்து முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளன. முன்பு, 2020 மார்ச் 31க்குப் பிறகு பிஎஸ் 4 வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை அனு மதிக்கக்கூடாது என கூறியிருந் தன. ஆனால், தற்போதுகெடு தேதிக்குப் பிறகு சில மாதங் கள் அனுமதிக்கலாம் என ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்குச் சாதகமாகக் கூறியுள்ளன. ஆனால், உச்ச நீதிமன்றம் உறுதி யாக மறுப்பு தெரிவித்துவிட்டது. 2020 மார்ச் 31 வரை மட்டுமே பிஎஸ் 4 வாகனங்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்று தீர்மானமாகத் தெரிவித்துள் ளது.

எஸ்எஸ்எல்சி துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு

அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு துணை பொதுத்தேர்வு எழுதிய தனி்த்தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உட்பட) தங்கள் தேர்வு முடிவை தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக 25-ம் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் முதல் தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக் கம் செய்யும்போது, தங்கள் பதிவெண், மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப் பிக்க விரும்புவோர் வரும் 26, 27-ம் தேதியில் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலு வலகத்துக்கு நேரில் சென்று உரிய கட்டணத்தை செலுத்தி பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

அஞ்சல் முகவர் பணிக்கு 31-ம் தேதி நேர்காணல்

அஞ்சல்துறை சார்பில், அஞ்ச லக ஆயுள் காப்பீடு நேரடி விற் பனை முகவர் பணிக்கு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற் கான நேர்காணல் வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது. 5,000-க்கும் குறை வான மக்கள் தொகை உள்ள பகுதியில் வசிப்போருக்கு கல்வித் தகுதி 10-ம் வகுப்பும், அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட பகுதியில் வசிப்போர் எனில் 12-ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். வேலையில்லாதவர்கள், சுய தொழில்புரிபவர்கள், இளைஞர் கள், ஏதேனும் காப்பீடு ஆலோச கராகப் பணிபுரிந்து முன் அனுப வம் உள்ளவர்கள், காப்பீடு விற்பனையில் முன் அனுபவம் பெற்றவர்கள், கணினி பயிற்சி பெற்றவர்கள், அங்கன்வாடி, சுயஉதவிக் குழுக்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் எண். 3 மற்றும் 4, டிபிஏ வளாகம், எத்திராஜ் சாலை, எழும்பூர், சென்னை-8 என்ற முகவரியில் உள்ள முதுநிலை அஞ்சல்கோட்ட கண்காணிப்பாளர், சென்னை வடகோட்டம் என்ற அலுவலகத்தில் வரும் 31-ம் தேதியன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும். நேர்காணலுக்கு வருபவர்கள் சுயவிவரம், வயது, கல்வித் தகுதி, அனுபவ சான்றிதழ்களை உடன் கொண்டுவர வேண்டும் என அஞ்சல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் எத்தனை பேர் பணியில் உள்ளனர்? தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், மொழிவாரி சிறுபான்மையினர் அமைப்பின் தலைவர் டாக்டர் சி.எம்.கே.ரெட்டி கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில், ‘தெலுங்கை மொழிப்பாடமாக படித்து வரும் மாணவர்கள், தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு அளித்து தங்களது தாய்மொழியான தெலுங்கில் மொழிப்பாடத்தேர்வை எழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதேபோன்று கன்னடம், இந்தி, உருது ஆகியவற்றை மொழிப்பாடமாக படித்து வரும் மாணவர்களும் தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது ஆகியவற்றை மொழிப்பாடமாக படித்து வரும் மாணவர்கள் கடந்த ஆண்டு தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு அளித்து அவர்களது தாய் மொழியில் மொழிப்பாடத்தேர்வு எழுத அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், அப்துல் குத்தூஸ், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகளில் படித்து வரும் எத்தனை மாணவர்களுக்கு இதுவரை தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எத்தனை மாணவர்கள் தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு கோரி உள்ளனர். இந்த விவரத்தை அந்த மாணவர்கள் படித்து வரும் பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக அரசு தெரிவிக்க வேண்டும். மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகள் எத்தனை உள்ளன?, அவற்றில் எத்தனை தமிழ் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்? என்ற விவரத்தை தமிழக அரசு அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 31-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் இளநிலை உதவியாளர் பதவியில் 66 காலியிடங்களும் கணினி இயக்குபவர் (Data Entry Operator) பதவியில் 111 காலியிடங்களும் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.

கட்டுமானத் தொழிலாளர் நல வாரியப் பணி தமிழக அரசின் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் இளநிலை உதவியாளர் பதவியில் 66 காலியிடங்களும் கணினி இயக்குபவர் (Data Entry Operator) பதவியில் 111 காலியிடங்களும் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. தேவையான தகுதி இளநிலை உதவியாளர் பதவிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குபவர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினியில் சான்றிதழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். அதோடு ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் எழுத்துக்களைத் தமிழ், ஆங்கிலத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 1.7.2018 தேதியின்படி, வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் பி.சி., எம்.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எனினும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினரும் (எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி.), பொதுப்பிரிவில் உள்ள கணவனை இழந்த பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்சக் கல்வித் தகுதியான எஸ்.எஸ்.எல்.சி.-யைக் காட்டிலும் கூடுதல் கல்வித் தகுதி (பிளஸ் 2, பட்டப் படிப்பு, முதுகலைப் பட்டம்) பெற்றிருந்தால் அவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. தேர்வு விவரம் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். நேர்முகத் தேர்வு கிடையாது. கணினி இயக்குபவர் பணிக்கு மட்டும் கூடுதலாகக் கணினி தட்டச்சுத் திறன் தேர்வு நடத்தப்படும். இரண்டு பதவிகளுக்கும் அடிப்படைச் சம்பளம் ரூ.19,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி, வீட்டுவாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவ படி போன்றவற்றைச் சேர்த்தால் சம்பளம் தோராயமாக ரூ.27 ஆயிரம் கிடைக்கும். உரிய கல்வித்தகுதியும், வயது வரம்புத் தகுதியும் உடையவர்கள் தமிழ்நாடு தொழிலாளர் துறையின் இணையதளத்தில் (www.labour.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும், விண்ணப்ப கட்டணமாக "The Secretary, TNCWWB" என்ற பெயரில் ரூ.100-க்கு எடுக்கப்பட்ட கேட்பு வரைவோலையையும் (Demand Draft) இணைத்து "செயலாளர், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், 8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 600 034" என்ற முகவரிக்கு நவம்பர் மாதம் 2-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மாற்றுத்திறனாளிகள், ஆதி திராவிடர், பழங்குடியினர், அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. கூடுதல் விவரங்களைத் தமிழ்நாடு தொழிலாளர் துறையின் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.வேலை வேண்டுமா?

ஆசிரியர், கட்டுமான தொழிலாளர்களுக்கு துபாயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு தமிழக அரசு நிறுவனம் ஏற்பாடு

துபாயில் பள்ளி ஆசிரியர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்கு தமிழக அரசு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: துபாய் நாட்டில் உள்ள கல்வி நிறுவனத்துக்கு ஆங்கில வழியில் படித்து சிபிஎஸ்இ பள்ளியில் பணி அனுபவம் பெற்ற முதல்வர், இளநிலை, முதுநிலை ஆசிரியர்கள், மழலையர் பள்ளி ஆசிரியர், ஆரம்பப் பள்ளி ஆசிரி யர், சமூக அறிவியல் ஆசிரியர், பாடப்பிரிவு தலைமை ஆசிரியர், முஸ்லிம் ஆசிரியைகள் தேவைப் படுகிறார்கள். கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட விவரங் களை www.omcmanpower.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். முதல்வர் பதவிக்கு மாத ஊதியம் ரூ.3 லட்சம், இளநிலை, முதுநிலை ஆசிரியர் பணிக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், மற்ற ஆசிரியர் களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை வழங்கப் படும். தகுதியுடைய நபர்கள் தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண் ணப்பத்துடன் கல்வித் தகுதி, பணி் அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் புகைப்படத்துடன் omcresum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனே அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-22505886, 22502267 என்ற தொலைபேசி எண்களில் அல்லது 82206 34389, 9566239685 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதேபோல் துபாயில் உள்ள கட்டுமான நிறுவனத்துக்கு 2 ஆண்டு பணி அனுபவத்துடன் 27 முதல் 45 வரையுள்ள கொத் தனார்கள், பிளாஸ்டரிங் மெஷின் ஆபரேட்டர்கள், சென்ட்ரிங் கார்பென்டர்கள், போர்மேன்கள் தேவைப்படுகிறார்கள். கொத்தனார்கள், பிளாஸ் டரிங் மெஷின் ஆபரேட்டர் கள், சென்ட்ரிங் கார்பென்டர் பதவிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது இசிஎன்ஆர் பாஸ்போர்ட் அவசியம். போர் மேன் வேலைக்கு டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் தேர்ச்சி யும், வளைகுடா நாட்டில் பணியாற்றிய அனுபவமும் வேண்டும். போர்மேன்களுக்கு மாத ஊதியம் ரூ.40 ஆயிரமும், இதர பணிகளுக்கு ரூ.24 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையும் கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு இலவச இருப்பிடம் மற்றும் அந்நாட்டின் சட்டத்துக்கு உட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும். உரிய தகுதியுடைய நபர் கள் தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, பணி அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப் படங்களுடன் வரும் 28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை கே.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெறும் முதல் கட்ட நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள் ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்ட இணைய தளத்தைப் பார்க்கலாம். அல்லது தொலைபேசி, செல்போன் எண் களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

பள்ளிகளுக்கு புதிய விதிகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ., என்ற மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கு, புதிய விதிகள் வெளியிட பட்டுள்ளன. உள் கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை, இடத்தின் அளவு உள்ளிட்ட அனைத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், சி.பி.எஸ்.இ., அங்கீகாரத்தில் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகளில், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளிகள் தரப்பில் போலி ஆவணங்கள் கொடுத்து, அங்கீகாரம் பெற்று விடுவதாக, புகார்கள் எழுந்தன.அதேபோல, ஆசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கை, கட்டண வசூல் ஆகியவற்றிலும், முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் குவிந்தன.இது குறித்து, மத்திய மனிதவள அமைச்சகம் ஆலோசனைநடத்தி, புதிய விதிகளை உருவாக்க உத்தரவிட்டது. இதன்படி, சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் வழங்குவதில், ஒவ்வொரு மாநில அரசுக்கும் கூடுதல் அதிகாரம் அளித்து, விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதற்கான முறையான அறிவிப்பை, அக்., 18ல், மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் வெளியிட்டார். இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட அங்கீகார இணைப்பை பெறுவதற்கான, புதிய விதிகள் சி.பி.எஸ்.இ.,யின்,http://cbse.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.இதில், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறை களின் தரம், கல்வி தரம், பின்பற்ற வேண்டிய புத்தகம், மாணவர்களை சேர்க்கும் முறை, கட்டண விதிகள், பள்ளிக்கு தேவையான நில அளவு,சான்றிதழ் பெற வேண்டிய அமைப்புகள் உள்ளிட்ட அனைத்தி லும், மாற்றம் செய்யப் பட்டு உள்ளது.இந்த விதிப்படியே, இனி அனைத்து பள்ளிகளுக்கும் புதிய இணைப்பும், அங்கீகார நீட்டிப்பும் வழங்கப்படும். மேலும், அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், மாநில அரசின் விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது

அரசுப்பள்ளியில் புதிய Pre.K.G வகுப்புகள் துவக்கம்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் பிரி கே.ஜி., எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு நவீனமயமாக்கப்பட்ட பிரி கே.ஜி.வகுப்புகள் வீதம் மாநில அளவில் 32 பள்ளிகளில் துவக்கப்படவுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நவீன பிரி கே.ஜி.வகுப்பு துவங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான வகுப்பறைகளை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. நவீன பிரி கே.ஜி.வகுப்பிற்கு 3 அறைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த அறைகளின் சுவர்களில் குழந்தைகள் விரும்பும் வகையிலான படங்கள் வரையப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் அரசு சார்பில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. ஒவ்வொரு நிலைகளிலும் படிக்கும் மாணவ, மாணவியர்கள் அடுத்த நிலைக்கு செல்லும்போது அதிகமாக தனியார் பள்ளிகளை நாடி செல்கின்றனர். அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இருந்தாலும் பிரி கே.ஜி., எல்.கே.ஜி, யூ.கே.ஜி., போன்ற வகுப்பிற்கு தனியார் பள்ளிகளுக்கு செல்ல வேண்டியநிலை உள்ளது. கே.ஜி.வகுப்பிற்காக தனியார் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் அங்கேயே உயர்கல்வி வரை படிக்கின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. இதை மேம்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் கே.ஜி.வகுப்புகள் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம் 32 பள்ளிகள் துவங்கப்படவுள்ளது. இதற்கான வகுப்பறைகள் நவீனமயமாக்கப்பட்டு குழந்தைகள் விரும்பும் வகையில் அறைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கான திறப்பு விழா விரைவில் நடைபெறவுள்ளது. இதில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் கூடுதலாக பிரி.கே.ஜி. பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

TRB - சிறப்பாசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் குளறுபடி!

சிறப்பாசிரியர் தேர்வுப் பட்டியலில் ஓவியம், தையல் பாடப்பிரிவில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் அதிக மதிப்பெண் பெற்ற 300-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஹையர் கிரேடு தேர்வை தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் சமர்ப்பிக் கவில்லை என்று கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், குறைந்த மதிப்பெண் பெற்ற பலர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பட்டியலில் குளறுபடி அரசு பள்ளிகளில் காலியாக வுள்ள 1,325 சிறப்பாசிரியர் (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்தஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத்தேர்வை நடத்தியது. எழுத்துத்தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) 5 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. எழுத்துத்தேர் வைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, கடந்த12-ம் தேதி இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.அதில், ஓவியம், தையல் சிறப்பாசிரியர் தேர்வுப் பட்டியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் எழுத்துத் தேர்வு மற்றும் பதிவுமூப்பு சேர்த்து அதிக மதிப்பெண் பெற்றிருந்த பலரின் பெயர் விடுபட்டு,அதற்குப் பதில் அவர்களைக் காட்டிலும் குறைவான மதிப்பெண்பெற்றவர்களின் பெயர் இடம் பெற்றிருந்தது. ஓவிய ஆசிரியர் பதவிக்கு எஸ்எஸ்எல்சி முடித்து ஓவிய பாடத்தில் டிடிசி எனப்படும் தொழில் ஆசிரியர் சான்றிதழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது நுண்கலை பட்டதாரி யாக (பிஎப்ஏ) இருக்க வேண்டும். அதேபோல், தையல் ஆசிரியர் பதவிக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சியும் தையல் பாடத்தில் டிடிசிதேர்ச்சியும் அடிப்படை கல்வித் தகுதிகள் ஆகும். ஓவியம் வரைய தமிழ்வழி சான்று? இந்த நிலையில், அதிக மதிப்பெண் பெற்றும் தேர்வு பட்டியலில் பொதுப்பிரிவிலோ அல்லது தமிழ்வழி ஒதுக்கீட்டிலோ இடம்பெறாமல் பாதிக்கப்பட்ட தையல், ஓவியம் சிறப்பாசிரியர் தேர்வர்கள் சுமார் 300 பேர் கடந்த திங்கள்கிழமை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் விளக்கம் கேட்டனர்.தமிழ்வழி ஒதுக்கீட்டில் தங்க ளைக் காட்டிலும் குறைவான மதிப்பெண் பெற்றிருப்பர்கள் இடம்பெற்றிருப்பது குறித்து காரணம் கேட்டனர். அதற்குப் பதில் அளித்த ஆசிரியர் தேர்வுவாரிய அதிகாரிகள், ‘‘அடிப்படை கல்வித்தகுதி மற்றும் டிடிசி தகுதியை தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் வைத்திருக் கிறீர்கள். ஆனால், டிடிசிக்கு முந்தைய தேர்வான ஹையர் கிரேடு (ஓவியம் அல்லது தையல்) தேர்வுக்கு அதுபோன்று தமிழ்வழி சான்று வைக்காததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள்” என்று பதில் அளித்தனர். ஹையர் கிரேடு தேர்வை நடத்தும் அரசு தேர்வுத்துறை தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் வழங்குவது கிடையாது என்று அவர்கள் விளக்கிக் கூறியதை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கள் ஏற்கவில்லை. தேர்வர்களிட மிருந்து கோரிக்கைமனுக்களை மட்டும் பெற்றுக்கொண்டனர். இதற்கிடையே, தமிழ்வழிச் சான்று பிரச்சினை தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், அரசு தேர் வுத் துறையானது, தொழில்நுட் பத் தேர்வுகளுக்கு தமிழ்வழியில் சான்றிதழ் வழங்குவதில்லைஎன்று ஆசிரியர் தேர்வு வாரியத் துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை தகவல் அனுப்பியது. அதிக மதிப்பெண் தொழில்நுட்பத்தேர்வை நடத் திய அரசு தேர்வுத்துறையே தமிழ்வழியில் சான்றிதழ் வழங்க இயலாது என்று பலமுறை விளக்கம் அளித்துவிட்டதால், அதிகமதிப்பெண் பெற்றும் தேர்வுப் பட்டி யலில் இடம்பெறாத தையல், ஓவியம் சிறப்பாசிரியர் தேர்வர் கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். ஓவியம், தையல் ஹையர் கிரேடு தேர்வுக்கு தமிழ்வழியில் சான்றிதழ் வழங்கப்படாததால் எஸ்எஸ்எல்சி, டிடிசி கல்வித்தகுதி களுக்கானதமிழ்வழி சான்றிதழ்கள் அடிப்படையில் திருத்தப்பட்டபுதிய தேர்வுப் பட்டியல் வெளியிடப் பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழ்வழி சான்றிதழ் சர்ச்சையால் பாதிக்கப்பட்ட தேர் வர்கள் தற்போது நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட் டுள்ளது. தேர்வு வாரியம் விளக்கம் இந்தப் பிரச்சினை குறித்து ஆசிரியர் தேர்வுவாரியத்தின் உறுப்பினரும், சிறப்பாசிரியர் தேர்வுப் பட்டியல் தயாரிப்பு பொறுப்பு அலுவலருமான தங்க மாரியிடம் கேட்டபோது, “ஹையர் கிரேடு தேர்வுக்கு தமிழ்வழியில் சான்றிதழ் தர இயலாது என்று அத்தேர்வை நடத்திய அரசு தேர்வுத்துறை கூறியிருக்கலாம். ஆனால், தேர்வர்கள் தாங்கள் படித்த தனியார் பயிற்சி மையத் திலிருந்து தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் பெற்று சமர்ப் பித்திருக்கலாமே. அதுபோன்று பல தேர்வர்கள் தமிழ்வழி சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்” என்றார்

2ஆம் வகுப்புவரை வீட்டு பாடம் கிடையாது மீறினால் பள்ளியின் அங்கீகாரம் இரத்து - மத்திய அரசு சுற்றறிக்கை

அனைத்து மாநிலத்திலும் இனி 2ஆம் வகுப்புவரை வீட்டு பாடம் கிடையாது மீறினால் பள்ளியின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் மத்திய அரசு சுற்றறிக்கை… பள்ளி பருவத்தில் சேர்க்கப்படுகின்ற குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் என்ற பெயரில் குழந்தைகளின் மனதுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் செயல்பட்டுவந்தன. இந்த நிலையில் இன்று மத்திய அரசு அனைத்து மாநில பள்ளிக்கல்வித்துறை செயலகத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியது.அந்த சுற்றைக்கையில் பள்ளிகூடங்களில் இனிமேல் இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டு பாடம் கொடுக்க கூடாது. அதை மீறி குழந்தைகளுக்கு வீட்டுபாடம் கொடுத்தால் சம்மந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த உத்தரவை பின்பற்றும் வகையில் இனிமேல் பள்ளிக்கூடங்களில் இரண்டாம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது. இல்லையென்றால் அந்தந்த மாநில பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக வேண்டி இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சார்பில் அனுப்படட்டது குறிப்பிடத்தக்கது.

9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஸ்மார்ட் வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்.

கல்வி அமைச்சராக செங்கோட்டையன் அவர்கள் பொறுப்பேற்றவுடன் பல்வேறு சீர்திருத்தங்கள் கல்வித்துறையில் செயல்படுத்தி வரும் நிலையில் வரும் டிசம்பர் முதல் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்பறைகள் இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தாமிரவருணி மஹா புஷ்கரம் விழாவின் 8-ஆவது நாளான வியாழக்கிழமை (அக். 18) பாபநாசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் டிசம்பர் மாத இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும். மேலும், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்பறைகள், இணைய வசதியுடன் கூடிய கணினி வகுப்பறைகளாக மாற்றப்படும். மாணவர்களிடையே சூரிய, மின்சக்தி மற்றும் ஆளில்லா விமானங்கள் குறித்த அறிவை வளர்க்கும் வகையில் உலகத் தரத்தில் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றார். பேட்டியின்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். முருகையாபாண்டியன், செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மனிதநேய மையமும், பெண் வக்கீல்கள் சங்கமும் இணைந்து அரசு உதவி குற்றவியல் வக்கீல் தேர்வுக்கு இலவச பயிற்சி நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

மனிதநேய மையமும், பெண் வக்கீல்கள் சங்கமும் இணைந்து அரசு உதவி குற்றவியல் வக்கீல் தேர்வுகளுக்கான இலவச பயிற்சியை நடத்துகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இயங்கும் மனிதநேய மையம் பல்வேறு மத்திய- மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சிவில் நீதிபதிகளுக்கு அளிக்கப்பட்ட இலவச பயிற்சி வகுப்புகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் தேர்ச்சி பெற்ற 100 பேர் சிவில், மாவட்ட நீதிபதிகளாக பதவிகளில் இருக்கின்றனர். அந்தவகையில் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) கடந்த 3-ந்தேதி 46 அரசு உதவி குற்றவியல் வக்கீல் (அசிஸ்டெண்ட் பப்ளிக் பிராசிக்கியூட்டர் கிரேடு-2) பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இலவச பயிற்சி இந்த பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு மனிதநேய மையமும், சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் சங்கமும் இணைந்து இலவச பயிற்சி நடத்துகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வருகிற 22-ந்தேதி (நாளை) முதல் 31-ந்தேதி(புதன்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எண்.28, முதல் பிரதானசாலை, சி.ஐ.டி.நகர், சென்னை-35 என்ற முகவரியில் அமைந்துள்ள மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகத்துக்கு நேரிலோ, 044-24358373, 24330952, 8428431107 என்ற தொலைபேசி மற்றும் செல்போன் எண் மூலமாகவோ அல்லது admission.mntfreeias@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். பாஸ்போர்ட் அளவு புகைப்படம் வைத்து இருக்க வேண்டும். மேற்கண்ட இந்த தகவலை பயிற்சி மைய இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான காலி பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. நலத்துறை கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஐகோர்ட்டில் கருப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘தமிழக அரசின் பல்வேறு துறைகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை கொண்டு நிரப்ப வேண்டிய சுமார் 2,500 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் ஒரு மாதங்களுக்குள் இந்த காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும். அதன்பின்னர், தேர்வு நடவடிக்கைகள் அனைத்தையும் 6 மாதங்களுக்குள் முடித்து, இந்த காலி பணியிடங்களை எல்லாம் நிரப்பவேண்டும். இந்த வழக்கை வருகிற நவம்பர் 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று கூறி உள்ளனர்.

தையல், ஓவியம் உள்ளிட்ட தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்குவதில்லை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு

தையல், ஓவியம் உள்ளிட்ட தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ் அரசு தேர்வுத்துறையால் வழங்கப்படுவதில்லை என அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி விளக்கம் அளித்துள்ளார். அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பதவிகளில் 1,325 காலியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி தேர்வுபட்டியலை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், தமிழ்வழி ஒதுக்கீட்டில் எழுத்துத்தேர்வு மற்றும் பதிவு மூப்பில் அதிக மதிப்பெண் பெற் றிருந்தும் ஓவியம், தையல் பாடத்தில் மேல்நிலை தேர்வில் (ஹையர் கிரேடு) தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் இல்லையெனக் கூறி 100-க்கும் மேற்பட்டோர் தகுதிநீக்கம் செயயப்பட்டு அவர்களின் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதைத்தொடர்ந்து, பாதிக்கப் பட்ட தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டு விளக்க மனுக்களை அளித்தனர். தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழை வழங்க முடியாது என்பதற்காகவாவது சான்று அளியுங்கள என்று கோரி கடந்த 2 நாட்களாக ஏராளமான தேர்வர்கள் அரசு தேர்வுத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து சான்றிதழை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு தேர்வுத்துறையால் தனித்தேர்வர்களுக்கு மட்டுமே தொழில்நுட்பத்தேர்வுகள் கீழ்நிலை, மேல்நிலை (Lower Grade, Higher Grade) என்ற நிலையில் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதனால், தேர்வர்கள் எந்த மொழியில் பயின்றார் என்ற விவரம் தெரியாததால் தேர்வர்களின் நலன் கருதி தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஒரே வினாத்தாளாக தயாரிக்கப்பட்டு தேர்வர்களுக்கு வழங்கப்படுகிறது. தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு (தையல், ஓவியம், இசை, நெசவு, அச்சுக்கலை) தேர்வுத்துறை சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. அரசு தொழில்நுட்பத் தேர்வுகளில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ் தேர்வுத்துறையால் வழங்கப்படுவதில்லை. எனவே, தமிழ்வழி சான்றிதழ் கோரி எந்தவொரு தேர்வரும் அரசு தேர்வுகள் இயக்ககத்தை அணுக வேண்டாம் என கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வேண்டுகோள் தேர்வுத்துறையின் அறிவிப்பு குறித்து சிறப்பாசிரியர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் தேர்வுபட்டியலில் இடம்பெறாமல் பாதிக்கப்பட்டுள்ள ஓவியம், தையல் படித்த தேர்வர்கள் கூறும்போது, "டிடிசி முடித்து தமிழ் வழி ஒதுக்கீட்டில் தேர்வுப் பட்டிய லில் இடம்பெற்ற தேர்வர்கள் யாரிடமிருந்து தமிழ்வழி சான்றிதழை பெற்றனர், ஒருவேளை தனியார் மையங்கள் அதுபோன்ற சான்றிதழை வழங்கியிருந்தால் அது எப்படி விதிமுறைப்படி செல்லும் என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும். சமர்ப்பிக்கவே முடியாத தமிழ்வழிச் சான்றிதழ் (ஓவியம், தையல் உயர்நிலை தொழில்நுட்ப தேர்வு) கேட்பதை விட்டுவிட்டு சான்றிதழ் சரிபார்ப்பின்போது கொடுத்திருந்த எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, டிடிசி தமிழ்வழி சான்றுகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட புதிய தேர்வுபட்டியலை வெளியிட வேண்டும்" என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்தனர்.தேர்வர்கள் எந்த மொழியில் பயின்றார் என்ற விவரம் தெரியாததால் தேர்வர்களின் நலன் கருதி தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஒரே வினாத்தாளாக தயாரிக்கப் பட்டு தேர்வர்களுக்கு வழங்கப்படுகிறது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாட தேர்வு முடிவு 20-ந் தேதி வெளியீடு

ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடத்தேர்வுகளான தட்டச்சு (ஆங்கிலம் மற்றும் தமிழ்), சுருக்கெழுத்து (ஆங்கிலம் மற்றும் தமிழ்) மற்றும் கணக்கியல் ஆகிய தேர்வுகளின் முடிவு வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் வெளியிடப்படும். பயிலகம் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் பயிற்சிக்கு அரசு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க தடை கோரி வழக்கு அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் சுரேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- 2018-19-ம் கல்வி ஆண்டில் நீட் தேர்வுக்காக அரசு பள்ளிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் பயிற்சி வகுப்புகள் தமிழக அரசு தரப்பில் நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தில் இருந்தும் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம் ஆகிய பாடங்களை கற்பிக்க 10 ஆசிரியர்களை தேர்வு செய்கின்றனர். அந்த ஆசிரியர்கள் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். பள்ளி வேலை நாட்களிலும் அதிக சிரத்தையுடன் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து கொடுக்கும் ஆசிரியர்களை சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் நீட் தேர்வுக்காக சிறப்பு பயிற்சி வழங்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதனால் அவர்களின் உடல்நிலையும், மனநிலையும் பாதிக்கப்படுகிறது. எனவே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் சிறப்பு பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்க அரசு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும், இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த மனு குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

தொலைதூரக் கல்வி தேர்வு மறுமதிப்பீடு முடிவு வெளியீடு

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் இரா.சீனுவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: கடந்த மே மாதம் நடத்தப்பட்ட தொலைதூரக்கல்வி நிறுவனத் தின் இளங்கலை, முதுகலை, தொழில்படிப்பு தேர்வுகளின் மறு மதிப்பீடு முடிவுகள் தொலை தூரக்கல்வி நிறுவன இணைய தளத்தில் (www.ideunom.ac.in) வெளியிடப்பட்டுள்ளன.

பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு ஆயத்தம்: மாணவர் விபரங்கள் பதிவிட உத்தரவு.

பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதும், மாணவர்களின் விபரங்களை, வரும் 27ம் தேதிக்குள், எமிஸ் இணைதயளத்தில் பதிவேற்றுமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம், மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எண், ஹால்டிக்கெட் வினியோகித்தல், மதிப்பெண் சான்றிதழ் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, விபரங்கள் சேகரிப்பது வழக்கம். இந்த விபரங்கள் கடந்தாண்டு முதல், இணையதளம் மூலம் பெறப்படுகிறது.பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை முகமை என்ற எமிஸ் இணையதளத்தில், பள்ளி விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதை, பொதுத்தேர்வு பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளும் வகையில், பள்ளிவாரியாக மாணவர்களின் விபரங்களை சரிபார்க்க த்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர், முதலெழுத்து, பிறந்த தேதி, புகைப்படம் ஆகியவற்றை சரிபார்ப்பதோடு, கடந்தாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, அளிக்கப்பட்ட பதிவெண்ணையும், வரும் 27க்குள் உள்ளீடு செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி; 1,088 ஆசிரியர்கள் வழிகாட்டுனராக தேர்வு!!

கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்குசிறப்பு பயிற்சி வழங்க, சென்னையில் மட்டும், 1,088 ஆசிரியர்களை வழிகாட்டுனராக, பள்ளி கல்வித்துறை நியமித்துள்ளது. அனைத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, பள்ளிகள் சார்பில், கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகின்றன. அதேநேரத்தில், அரசு பள்ளிகளில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.தனியார் பள்ளிகளில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்துவதற்கு பதிலாக, அவர்களை, ஏதாவது ஒரு காரணம் கூறி, மாற்று சான்றிதழ் கொடுத்து,வெளியேற்றும் நிலை உள்ளது. இதை கண்டறியாமல், மாணவர்களை வெளியேற்றுவதால், அவர்களின் பள்ளி கல்வியே பாதிக்கப்படுகிறது.இதை மாற்றும் வகையில், கற்றல் குறைபாடு மற்றும் மெல்ல கற்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, தமிழக பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், தமிழகம் முழுவதும், அனைத்து பள்ளிகளிலும், ஒரு ஆசிரியரை, கற்றல் குறைபாடுக்கான வழிகாட்டுனராக தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, சென்னையில், 1,088 ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு வழிகாட்டும் பயிற்சி தரப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள, வெஸ்லி பள்ளியில் ஒருவாரம் நடந்தது. இது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி கூறியதாவது: கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை கண்டறியாமல், பல மாணவர்களை, பள்ளி நிர்வாகத்தினர் வெளியேற்றுகின்றனர். இதனால், பள்ளி கல்வியில் இடைநிற்றல் ஏற்படுகிறது. பெற்றோரும், பெரும் கவலைக்கு ஆளாகின்றனர். இந்நிலையை மாற்ற, அரசின் சார்பில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், கற்றல் குறைபாடுகளை கண்டறிய பயிற்சி தரப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை, மதிப்பெண்ணை காரணம் காட்டி, கட்டாயமாக, டி.சி., கொடுத்து வெளியேற்றக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்

CBSE அங்கீகார அதிகாரம் : பள்ளி கல்வி துறைக்கு மாறுகிறது

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையில்,மாநில அரசுக்கு, கூடுதல் அதிகாரம் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, சி.பி.எஸ்.இ., கடிதம் அனுப்பியுள்ளது.செயல்வழி கற்றல் மற்றும் மாணவர்களின் நுண்ணறிவு திறனை சோதிக்கும் பாடங்கள் உள்ளதால், பெரும்பாலானதனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,க்கு மாறி வருகின்றன. ஆவணங்கள்நாடு முழுவதும், 20 ஆயிரம் பள்ளிகளும், தமிழகத்தில், 700க்கும் மேற்பட்ட பள்ளிகளும், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் செயல்படுகின்றன. சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற விரும்பும் பள்ளிகள், மாநில அரசின் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப, முதலில், மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்று பெற வேண்டும். பின், அங்கீகார சான்றுகள், அரசு துறையின் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் கல்வி நிறுவன விபரங்களை, சி.பி.எஸ்.இ.,க்கு, பள்ளிகள் தாக்கல் செய்ய வேண்டும்.அவற்றை சரிபார்த்து, சி.பி.எஸ்.இ., ஒப்புதல் அளிக்க, இரண்டு, மூன்று ஆண்டுகள் வரையாகும். இதனால், பல பள்ளிகள், மாநில அரசுக்கு தெரியாமல், சி.பி.எஸ்.இ.,க்கு சென்று, தவறான ஆவணங்களை சமர்பித்தும், செல்வாக்கை பயன்படுத்தியும், பாட திட்ட இணைப்பு பெற்றுள்ளன.இது குறித்து, சி.பி.எஸ்.இ., ஆய்வு நடத்தி, இந்த ஆண்டு மட்டும், நாடு முழுவதும், 99 பள்ளிகளின் இணைப்பு அந்தஸ்தை ரத்து செய்து உள்ளது. எனவே, முறைகேடுகள் மற்றும் கால தாமதத்தை தவிர்க்க, மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம்வழங்க, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. இதன்படி, வரும் காலங்களில், மாநில அரசின் தடையில்லா சான்று கேட்கும் பள்ளிகள், மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் சான்றிதழ்களை, மாநில பள்ளி கல்வி துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும். ஒப்புதல்பாடத்திட்ட இணைப்புக்கான விண்ணப்பத்தையும், பள்ளி கல்வி அதிகாரிகளிடமே வழங்க வேண்டும். அவற்றை, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், அசல் ஆவணங்களுடன் சரிபார்த்து, ஒப்புதல் வழங்குவர்.ஒப்புதல் ஆணை கிடைத்த பின், சி.பி.எஸ்.இ., சார்பில், இணைப்பு கடிதம் மட்டும்வழங்கப்படும். இந்த முறையை அமல்படுத்துவது குறித்து, மாநில அரசுகளுக்கு, சி.பி.எஸ்.இ., - கடிதம் அனுப்பியுள்ளது. அனைத்து மாநிலங்களின் கருத்துக்களும் கிடைத்த பின், இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என, தெரிகிறது

ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முற்றுகை

சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகியவற்றை உள்ளடக்கிய சிறப்பாசிரியர் பணிகளுக்கு 1,325 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு, கடந்த ஆகஸ்டு 13-ந்தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதைத்தொடர்ந்து தற்காலிக இறுதி தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் வெளியிட்டது. அதில், அதிக மதிப்பெண் பெற்ற சில தேர்வர்களுக்கு பதிலாக, குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் இடம் பெற்று இருந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வர்கள் நேற்று காலை 10 மணியளவில் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் தையல், ஓவியம், உடற்கல்வி மற்றும் இசை ஆகிய 4 பிரிவுகளில் அதிக மதிப்பெண் பெற்றும், தேர்வு பட்டியலில் இடம்பெறாத நூற்றுக்கணக்கான தேர்வர் கள் கலந்து கொண்டனர். அதிகாரிகள் விளக்கம் இந்த தேர்வு பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர்கள், தங்களுக்கு நியாயம் வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதற்கு தேர்வு வாரிய அதிகாரிகள், தையல் மற்றும் ஓவியத்தில் உயர்நிலை தொழில்நுட்ப சான்றிதழுக்கு தமிழ்வழி சான்று அளிக்காதவர்களின் பெயர்கள் தேர்வு பட்டியலில் இடம்பெறவில்லை என்று விளக்கம் அளித்தனர். மேலும் உடற்கல்வியில் சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ படிப்பு மற்றும் பி.பி.இ. என்ற பெயரில் பெறப்பட்ட உடற்கல்வி பட்டப்படிப்பு தகுதி போன்றவை தற்போதைய தேர்வுக்கு ஏற்கப்படாததால் அத்தகையோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த விளக்கத்தை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்தனர். தங்களின் கோரிக்கை மனுமீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்க தவறினால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், ‘ஓவியம் உள்ளிட்ட தொழில்நுட்ப தேர்வுக்கு தமிழ்வழி சான்றிதழை வழங்க இயலாது என அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது. அப்படியென்றால், டி.டி.சி. முடித்து தமிழ்வழி ஒதுக்கீட்டில் தேர்வுபட்டியலில் இடம் பெற்றவர்கள் யாரிடமிருந்து தமிழ்வழி சான்றிதழை பெற்றனர்? ஒருவேளை தனியார் மையங்கள் அதுபோன்ற சான்றிதழை வழங்கியிருந்தால் விதிமுறைப்படி அது எப்படி செல்லுபடியாகும்? எனவே எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, டி.டி.சி. ஆகிய தமிழ்வழி சான்றுகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட புதிய தேர்வுபட்டியலை வெளியிட வேண்டும்’ என தெரிவித்தனர். இந்த முற்றுகை போராட்டத்தால் டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பல்கலைக்கழக மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மூலம் பட்டம், முதுகலை பட்டம், தொழில் படிப்புக்கான தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மறு மதிப்பீடு கோரி பலர் விண்ணப்பித்து இருந்தனர். மறுமதிப்பீடு முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது. மறுமதிப்பீடு முடிவுகளை மாலை 5 மணிக்கு மேல் www.ideunom.ac.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

சான்றிதழ் நகல்களில் அதிகாரிகள் கையெழுத்திடும் நடைமுறையில் மாற்றம் தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மை செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- நேர்முக தேர்வு மற்றும் உயர் படிப்புக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் நகல்களில் அரசில் பணியாற்றும் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு அதிகாரிகள் கையெழுத்திட்டு வழங்குவது நடைமுறையில் உள்ளது. தற்போது பொதுமக்களுக்கும், அரசு அதிகாரிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் இந்த முறையில் தற்போது மாற்றம் செய்யப்படுகிறது. நேர்முக தேர்வில் சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டியிருப்பதால், நகல் சான்றிதழ்களில் இனி அதிகாரிகள் கையொப்பம் இட தேவையில்லை. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் தேவையில்லாத சங்கடங்கள் குறைக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் கடைசி நேரத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு அலுவலகங்களில் தேவையில்லாத ஆவணங்களை குறைக்க முடியும். சான்றிதழ்களை உறுதி செய்யும் வகையில் வழங்கப்படும் நடைமுறை எளிதாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ ரூ.12¾ கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் பயிலும் 70½ லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க ரூ.12¾ கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘ஸ்மார்ட் கார்டு’ புதிய ‘ஸ்மார்ட் கார்டு’ நடப்பு கல்வி ஆண்டிலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவித்தார். அதனை செயல்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனர் கருத்துரு அனுப்பியுள்ளார். அதன்படி மாணவர்களுக்கான ‘ஸ்மார்ட் கார்டில்’ உள்ள ‘க்யூ ஆர் கோடு’ அல்லது ‘பார் கோடு’ வாயிலாக மாணவர் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் கல்வி தகவல் மேலாண்மை முகமையின் பொது தொகுப்பில் இருந்து இணையதளத்தின் வாயிலாக பெற முடியும். மேலும் ‘ஸ்மார்ட் கார்டு’ அடிப்படையில் மாணவர்கள் பள்ளி நேரங்களில் பள்ளி வளாகத்தை விட்டு வெளியில் இருக்கும் சூழலில் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்பதை கண்டறிய இயலும். மாணவர்களின் ரத்தப்பிரிவு சார்ந்த விவரம் அதில் இருப்பதால் மாணவர்களுக்கு எதிர்பாராத விபத்து ஏற்படும்போது அந்த மாணவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு பெரிதும் உதவும் 70½ லட்சம் மாணவர்கள் மாணவர்கள் ‘ஸ்மார்ட் கார்டை’ அணியும்போது தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக தங்களை உணர்கிற வாய்ப்பு ஏற்படும். மாணவர்களின் இடை நிற்றலை துல்லியமாக கண்டறிய முடியும். மேலும் பள்ளிக்கல்வி இயக்குனர் அரசு துறையின் கீழ் உள்ள 37 ஆயிரத்து 358 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 46 லட்சத்து 60 ஆயிரத்து 965 மாணவர்களுக்கும், 8 ஆயிரத்து 386 அரசு உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 23 லட்சத்து 99 ஆயிரத்து 17 மாணவர்களுக்கும் என மொத்தம் 70 லட்சத்து 59 ஆயிரத்து 982 மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தயார் நிலை மாணவர்களின் பெயர், மாணவர்களின் அடையாள அட்டை எண், பிறந்த தேதி, தந்தையின் பெயர், முழு முகவரி, பள்ளியின் பெயர், ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்பட்ட ஆண்டு, மாணவரின் புகைப்படம், ரத்தப்பிரிவு, கல்வித்தகவல் மேலாண்மையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விவரங்களுடன் ‘பார் கோடு’ அல்லது ‘க்யூ ஆர் கோடு’ ஆகியவை இடம்பெறும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சுய விவரங்கள் கல்வி தகவல் மேலாண்மை அமைப்பில் உள்ளடு செய்யப்பட்டு உள்ளது என்றும், மாணவர்களின் சுய விவரங்கள் அடங்கிய மென்பொருள் பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். ரூ.12¾ கோடி இதற்கான ஒப்பந்த புள்ளிகள் தயாரித்து அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனருக்கு அதிகாரம் வழங்கவும், இந்த திட்டத்தை செயல்படுத்தவும் ரூ.12 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரத்து 676 அனுமதித்து ஆணை வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் கருத்துரு அனுப்பியுள்ளார். அதனை கவனமுடன் பரிசீலித்து ஏற்க அரசு முடிவு செய்து ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க ரூ.12 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரத்து 676 வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் உரிய ஒப்பந்த விதிமுறைகளை கடைபிடித்து ‘ஸ்மார்ட் கார்டு’ தயாரிக்கும் பணியை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் குரூப்-2 எழுத அனுமதிக்கப்படுவார்களா? டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு 

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களையும் அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவுக்கு, டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த இளையபெருமாள் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வுகளுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுகளுக்கும் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் குரூப் 2 தேர்வுக்கு மட்டும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். எனவே கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களையும் குரூப் 2 தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதி பதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர் வில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக டிஎன்பி எஸ்சி செயலாளர் மற்றும் தமிழ் நாடு அரசுப் பணியாளர் மற்றும் நிர் வாகத்துறைச் செயலாளர் ஆகியோர் வரும் 23-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார்பில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும், தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா டேப்வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நலத்திட்டங்கள் மூலம் 11 லட்சத்து 76 ஆயிரம் மாணவ மாணவியர்கள் தங்கள் அறிவாற்றலையும் ஆங்கில கல்வி ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும் என தெரிவித்த அமைச்சர், அறிவியல் விஞ்ஞானி அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இந்த மாத இறுதிக்குள் 626 ஆய்வகங்களை அனைத்து அரசு பள்ளிகளிலும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்எனவும் தெரிவித்தார். பின் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

TET - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, தமிழக அரசின் புதிய பாடத்திட்டப்படி, கேள்விகளைத் தயாரிக்க முடிவு!

ஆசிரியர் தகுதித் தேர்வின் ("டெட்') பாடத்திட்டம் மாற்றப்பட்டு, நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வை நடத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு"டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு அமலாகி உள்ளது. தேசிய கல்வியியல் ஆராய்ச்சிக் கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில் இந்தத் தேர்வு கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.பள்ளி கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நிகழ் கல்வியாண்டில், அக்டோபர், 6, 7-ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகதேர்வு பணிகள் முடங்கின. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்தத் தேர்வை, தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த பழைய பாடத்திட்டப்படி நடத்தாமல், தற்போது அறிமுகமாகியுள்ள புதிய பாடத்திட்டப்படி நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், மாறிவரும் சூழலுக்கேற்ப தேர்வு முறையிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியமாகிறது. தற்போதைய சூழலில் பழைய பாடத்திட்டப்படி ஆசிரியர்களைத் தேர்வு செய்தால் பெற்றோர் கல்வி மீது கொண்டுள்ள எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது கடினம். புதிய பாடத்திட்டத்தின்படி ஆசிரியர்களைத் தேர்வு செய்தால்தான் பணிக்கு வருவோர் சிறப்பாக பாடம் நடத்தமுடியும் என்றனர்.இதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, தமிழக அரசின் புதிய பாடத்திட்டப்படி, கேள்விகளைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித் துறை இயக்குநர் தலைமையிலான குழுவினர்ஆலோசித்து வருகின்றனர்.

மாணவர் சேர்க்கை ரத்தானால் கல்வி கட்டணத்தைதிரும்ப வழங்க வேண்டும் - வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது!

மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அம்மாணவர்செலுத்திய முழு கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின்போது கட்டணம் செலுத்துகின்ற மாணவர்கள் வேறு கல்வி நிறுவனங்களில், படிப்புகளில் சேர சென்றால் அவர்கள் ஏற்கனவே செலுத்திய கல்வி கட்டணத்தையும், சான்றிதழ்களையும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் உடன் திரும்ப வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய நிபந்தனைகளை விதித்து யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. யுஜிசி நிபந்தனைகளை பின்பற்றி செயல்படுகின்ற கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும்.பலமுறை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவுகள் பிறப்பித்தபோதிலும் உயர்கல்வி நிறுவனங்கள் அதனை உரிய முறையில் பின்பற்றாததால் தற்போது யுஜிசி இது தொடர்பான உத்தரவுகளை வழங்கியுள்ளது. அதன்படி கல்வி நிறுவனங்கள் தங்களது கல்வி நிறுவனம் சார்ந்த படிப்புகள், கல்வி கட்டணம், சேர்க்கை விபரங்கள், நிர்வாக குழு, அங்கீகார விபரங்கள் அடங்கிய விபர புத்தகத்தை (prospectus) மாணவர்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பான முழு விபரங்களை கல்வி நிறுவனம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். அதில் புகார்கள் பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு வருகின்ற புகார்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும். வரும் 2019-20ம் கல்வி ஆண்டு முதல் இது அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக யுஜிசியின் அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: * மாணவ மாணவியர் உயர் கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கும்போது அசல் சான்றிதழ்களுக்கு பதிலாக சுய சான்றொப்பமிட்ட நகல் சான்றிதழ்களை வழங்கினால் போதும். சேர்க்கை நடைபெறும்போது அசல் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் நிர்வாகம் அசல் சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும். * ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற்ற பின்னர் சிறந்த படிப்புகளுக்காக வேறு உயர் கல்வி நிறுவனங்களுக்கு மாற முயற்சி செய்கின்ற பட்ட, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அவர்களின் சான்றிதழ்களை வைத்திருக்க கூடாது. * செமஸ்டர் கட்டணம் அல்லது ஓராண்டுக்கான கல்வி கட்டணம் மட்டுமே முன்கூட்டியே பெற வேண்டும். ஒட்டுமொத்த படிப்புக்கான கட்டணத்தையும் முன்கூட்டியே கல்வி நிறுவனங்கள் பெறக்கூடாது. * மாணவர் சேர்க்கை நிறைவு பெறுவதற்கு கடைசி தேதிக்கு 15 நாட்கள் இருப்பின், அப்போது மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படும் தருவாயில் அந்த மாணவர்செலுத்திய முழு கட்டண தொகையையும் நிர்வாகம் திரும்பவழங்க வேண்டும். செலுத்திய கட்டணத்தில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சம் ₹5 ஆயிரம் செயல்பாட்டு கட்டணமாக பெற்றுக்கொள்ளலாம். * மாணவர் சேர்க்கை நிறைவு பெற 15 நாட்கள் இல்லையெனில் 90 சதவீதமும், கடைசி தேதி முடிந்து 15 நாட்கள் கடந்துவிட்டால் 80 சதவீதமும், 16 முதல் 30 நாட்கள் கடந்துவிட்டது எனில் 50 சதவீதமும் கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும். * மாணவர் சேர்க்கை முடிந்து ஒரு மாதம் கடந்துவிட்டால் செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டியது இல்லை. அதே வேளையில் பாதுகாப்பு சார்ந்த டெபாசிட் தொகை செலுத்தியிருந்தால் அதனை திரும்ப வழங்க வேண்டும். எழுத்து பூர்வமாக விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ெதாகை திரும்ப வழங்கப்பட்டிருக்க வேண்டும். * விதிமுறைகளை பின்பற்றாத கல்வி நிறுவனங்களின் மானியம், உயர் கல்வி மானியம் ரத்து செய்யப்படும். சிறப்பு திட்டங்களுக்கு யுஜிசி உதவி செய்வது நிறுத்தப்படும். மேலும் இது தொடர்பான அறிவிப்பும் விளம்பரங்களாக வெளியிடப்படும். கல்வி நிறுவன அங்கீகாரத்தை ரத்து செய்ய பல்கலைக்கழங்களுக்கு பரிந்துரை செய்யப்படும். * தனியார் பல்கலைக்கழகங்கள் யுஜிசி விதிகளை பின்பற்றாமல் போனால் அதற்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கு கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் எனில் மாநில அரசுக்கும் யுஜிசியால் பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது