போட்டி தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பொது அறிவு புத்தகங்கள் சென்னை மாநகராட்சியின் 70 பள்ளிக்கூடங்களுக்கு சைதை துரைசாமி நன்கொடை

மாணவர்கள் போட்டி தேர்வை எதிர்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சியின் 70 பள்ளிக்கூடங்களுக்கு சைதை துரைசாமி பொது அறிவு புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார். பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய மையம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வு, மத்திய, மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இருந்தே போட்டி தேர்வுகளில் கலந்துகொள்ள மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கு மிக முக்கிய தேவை பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற வகையில் சைதை துரைசாமி பெருநகர சென்னை மாநகராட்சியின் 70 பள்ளிக்கூடங்களில், ஒரு பள்ளிக்கூடத்துக்கு ரூ.10 ஆயிரம் பொது அறிவு நூல்கள் என்ற விகிதத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார். அந்த வகையில் ஒரு பள்ளிக்கூடத்துக்கு 42 பொது அறிவு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை பள்ளிக்கூடங்களில் உள்ள நூலகங்களில் வைத்து, மாணவர்களை படிக்க செய்ய வேண்டும் என்று கூறி சைதை துரைசாமி ஆசிரியர்களிடம் வழங்கினார். இதற்கான விழா சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சைதை துரைசாமி பேசியதாவது:- நூலகங்களுக்கு வழங்கப்படும் புத்தகங்களை முதலில் ஆசிரியர்கள் நன்றாக படித்து, அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாணவர்களையும் படிக்க வைத்து திறனாய்வு செய்வது ஆசிரியர்களின் மிக முக்கிய பணியாக இருக்க வேண்டும். போட்டி தேர்வில் கலந்துகொள்ளும் எல்லா வெற்றியாளர்களும், நல்ல நூல்களையும், குறிப்பாக பொது அறிவு நூல்களை படித்து தான் தேறி இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த நூல்களை மாணவர்கள் படித்து பயன் பெற செய்வது ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அதிகாரி கோவிந்தசாமி, கூடுதல் கல்வி அதிகாரி பாரதிதாசன், உதவி கல்வி அதிகாரி சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் அருள்செல்வி மற்றும் பிற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு தளர்வு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு.விண்ணப்பிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம்.

நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பை தளர்த்தி இருக்கும் சுப்ரீம் கோர்ட்டு, அந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு மேலும் ஒரு வார காலம் அவகாசம் வழங்கி இருக்கிறது. மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுதேர்வை எழுதுவதற்கான வயது உச்சவரம்பை இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயம் செய்ததன் அடிப்படையில், சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) சில மாதங்களுக்கு முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் நீட் தேர்வை எழுதுவதற்கு பொதுப் பிரிவு மாணவர்களுக்கான வயது உச்சவரம்பு 25 என்றும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 30 என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன், சுரேஷ் என்ற இரு மாணவர்கள் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, சி.பி.எஸ்.இ.யின் அறிவிப்பை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், இந்த வயது உச்சவரம்பை ரத்து செய்யக்கோரி அந்த மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாட்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், நீட் தேர்வை எழுதுவதற்கான வயது உச்சவரம்பை தளர்த்தி உத்தரவு பிறப்பித்தனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:- 2019-ம் ஆண்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் மனுதாரர்கள் உள்ளிட்ட 25 முதல் 30 வயது வரையிலான மாணவர்கள் விண்ணப்பிக்கவும், தேர்வை எழுதவும் அனுமதிக்கப்படுகிறார்கள். தேசிய தேர்வு முகமையின் இணையதளம், இதுபோன்ற மாணவர்கள் 2019-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் மேலும் ஒரு வாரத்துக்கு திறந்து இருக்கும். அதாவது இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுகிறது. (நீட் தேர்வுக்கு நவம்பர் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.) இந்த வயது வரம்பை தளர்த்தி பிறப்பித்துள்ள உத்தரவு இடைக்கால உத்தரவுதான். பொதுப்பிரிவுக்கான வயது வரம்பை தளர்த்துவது என்பது இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தது ஆகும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர். இட ஒதுக்கீடு பிரிவினர் 30 வயது வரை நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் நிலையில், 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப்பிரிவு மாணவர்களுக்கு தற்போது இந்த இடைக்கால சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது என்றும், எனவே அவர்கள் விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நீட் தேர்வு பிரச்சினை தொடர்பான கேரள மாணவர்களின் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக காலக்கெடுவை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து உத்தரவிட்டு இருக்கிறது.

D.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.

  NEW
 1. DEO HALL TICKET 2019 | Memorandum of Admission (Hall Ticket) for the Preliminary Written Examination (Objective Type) to the post of District Educational Officer (Post Code No.2062) in Tamil Nadu School Educational Service. 
 2. DEO EXAM 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல் ...
 3. மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 விரிவான அறிவிப்பு.
 4. DEO EXAM 2018 Tentative Timeline for the Recruitment Process

 5. TNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...
 6. மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க  அறிவிப்பு.
 7. DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்
 8. DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION SYLLABUS) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்
 9. DEO EXAM GROUP I SERVICES (MAIN EXAMINATION SYLLABUS) ‐ DEGREE STANDARD
 10. TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 கடந்த காலங்களில் மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வு அறிவிப்பு எப்படி இருந்தது
 11. D.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 | விண்ணப்பிக்க வேண்டிய தேதி -10.12.2018 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்.

2018 செப்டம்பரில் நடைபெற்ற +2 துணைத் தேர்வு மறுக்கூட்டல் முடிவுகள் இன்று (29.11.2018) வெளியீடு

2018 செப்டம்பரில் நடைபெற்ற +2 துணைத் தேர்வு மறுக்கூட்டல் முடிவுகள் இன்று (29.11.2018) வெளியீடு 2018 செப்டம்பரில் நடைபெற்ற பிளஸ்2 துணைத் தேர்வு மறுக்கூட்டல் முடிவுகள் இன்று (29.11.2018) வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மறுமதிப்பீடு கோரியவர்களில் மதிப்பெண்கள் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண் scan.tndge.in இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

TNPSC - Group IV கலந்தாய்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC - Group IV - Certificate Verification cum Counselling. தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-IV (தொகுதி IV-ல் அடங்கிய) 2015-16, 2016-17 மற்றும் 2017-2018- [Combined Civil Services Examination-IV (Group-IV Services)]- இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 14.11.2017 ஆம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 11.02.2018 அன்று நடைபெற்று எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் இணையதளத்தில் 30.07.2018 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவு தொடர்பான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 03.12.2018 அன்று முதல் நடைபெற உள்ளது. மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய “அழைப்புக்கடிதத்தினை” தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவரவர் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை / இடஒதுக்கீட்டு விதிகள் / விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் வழங்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. | The Tamil Nadu Public Service Commission in its Notification dated 14.11.2017 had invited applications for selection of candidates for appointment by direct recruitment to posts included in Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2015-16, 2016-17 and 2017 – 2018. The Written Examination was held on 11.02.2018 and results published on 30.07.2018. In order to verify the genuineness of claim of the candidates made in their on-line application regarding age, qualification, community etc., and to fill up the vacancies, Original Certificate Verification cum Counselling is scheduled to be held at the O/o. Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, VOC Nagar, Chennai – 600 003 from 03.12.2018 onwards. 2) The list of candidates who have been provisionally admitted for the original Certificate Verification cum Counselling have been shortlisted based on merit, overall rank, Rule of Reservation of appointments and Number of vacancies and the same have been hosted in the Commission’s Website. Candidates are hereby informed to download the Memorandum of Admission to Certificate Verification cum Counselling through the Commission’s Web-site viz www.tnpsc.org.in and also directed to attend the Certificate Verification cum Counselling on the scheduled date / time without fail. 3) The allotment to the posts is strictly subject to availability of vacancies in their respective reservation categories when they reach their turn as per their rank, rule of reservation and subject to their eligibility. 4) Candidates who do not appear for Original Certificate Verification cum Counselling on the scheduled date and time allotted to them will lose their opportunity in the combined merit list; and, they will not be given any further chance to appear for the same. Secretary Tamil Nadu Public Service Commission

கஜா புயல் நிவாரணத்துக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளம் பிடித்தம் தமிழக அரசு அறிவிப்பு

கஜா புயல் தமிழகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விளை நிலங்களும், தென்னை மரங்களும் நாசமாகி உள்ளன. குறிப்பாக நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். இந்த நிலையில் கஜா புயல் நிவாரணத்துக்காக தங்களின் ஒருநாள் சம்பளத்தை தர முன்வருவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டன. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இந்த போக்கை அரசு ஏற்கிறது. அதன்படி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்ய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த தொகை தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்டு, அதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணமாக சென்று சேரும். இந்த உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்தார்.

TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் பணி - நேர்காணல் தேர்வு அறிவிப்பு.

TNPSC - Combined Engineering Services Exam - ORAL TEST | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு 24.02.2018 மு.ப & பி.ப அன்று நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 29488 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 332 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் தேர்வு 4.12.2018 முதல் 6.12.2018 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.| The Written Examination for the posts included in Combined Engineering Services was held on 24.02.2018 FN & AN. Totally 29488 candidates have appeared for the said Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of 332 register numbers of candidates those who have been provisionally admitted to Oral Test to the said post is available at the Commission’s Website “www.tnpsc.gov.in”. The Oral Test will be held from 4.12.2018 to 6.12.2018 at the Commission’s office. K. NANTHAKUMAR, I.A.S., Secretary & Controller of Examinations (i/c)

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் அரசாணை நகல்களை எரிக்க முயன்றதால் பரபரப்பு

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி சென்னையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மத்திய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொது செயலாளர் ச.மயில் தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளர் பெ.அலோசியஸ் துரைராஜ் மற்றும் மாநிலச் செயலாளர் சி.ஜி.பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கம் வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தின்போது ச.மயில் கூறியதாவது:- தமிழகத்தில் ஒரே கல்வி த்தகுதி, ஒரே பணிநிலை கொண்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று வகையான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 7-வது மற்றும் 8-வது ஊதிய உயர்வை அமல்படுத்தியும் போதிய ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் இந்த பாதிப்புகளை எதிர்த்து கடந்த 9 ஆண்டுகளில் 58 போராட்டங்கள் நடத்தியுள்ளோம். ஆனாலும் இதுவரை இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய இழப்பு சரி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதைதொடர்ந்து போராட்டக்காரர்கள் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி 7-வது ஊதிய குழுவை அமல்படுத்தி வெளியிட்ட 234 மற்றும் 8-வது ஊதியக் குழுவை அமல்படுத்தி வெளியிட்ட 303 ஆகிய 2 அரசாணைகளின் நகல்களை தீயில் போட்டு எரிக்க முயன்றனர். இதையடுத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தல்லுமுல்லு ஏற்பட்டது. சேப்பாக்கம் பகுதியில் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

4 கல்வி அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு

தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எம்.கே.சி.சுபாஷிணி, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கல்வி மாவட்ட அதிகாரியாக பணியாற்றும் டி.முருகேசன் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாகவும், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் கல்வி மாவட்ட அதிகாரியாக பணியாற்றும் ஜி.ஜெயராஜ் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக துணை இயக்குனராகவும் (சென்னை), ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கல்வி மாவட்ட அதிகாரியாக பணியாற்றும் பி.சாந்தா தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேற்கண்ட உத்தரவை தமிழக அரசின் முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் அந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தவர்களுக்கும், அவர்களது வேண்டுகோளை ஏற்று வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த 11-ந் தேதி நடைபெற்ற முதல்நிலை தேர்வில் தெரிய வந்துள்ள கட்-ஆப் மதிப்பெண்களில் 140 மற்றும் அதற்கு மேல் எடுத்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகளும் 150 மற்றும் அதற்கு மேல் எடுத்துள்ள பொதுப்பிரிவினரும் இப்பயிற்சிக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ள இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் www.mnt-f-r-e-e-ias.com என்ற இணையதள முகவரியிலோ அல்லது தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்நிலைத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் நேரில் வந்தோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 24358373, 24330095 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மாதிரி தேர்வுகள், வகுப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் புத்தகப்பை எடை எவ்வளவு? மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை

1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் புத்தகப்பை எவ்வளவு எடையில் இருக்க வேண்டும்? என்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

மாணவர்களின் புத்தகப்பை

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஒரு முக்கிய அடையாளமாக புத்தகப்பை இருக்கிறது. புத்தகப்பை சுமந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளை பார்த்து பெற்றோர் வருத்தப்படுவதும் உண்டு. ஏனென்றால் அந்த அளவுக்கு புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றை அதிக எடையில் பையில் வைத்து சுமந்து செல்கின்றனர்.

இந்தியாவில் பள்ளி மாணவர்கள் குறைந்த பட்சமாக 6.2 கிலோ முதல் அதிகபட்சமாக 15 கிலோ எடை வரை புத்தகப்பையை சுமந்து செல்வதாகவும், அவர்களின் உடல் எடையில் 30 முதல் 35 சதவீதத்தை புத்தகப்பையாக சுமப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படியாக புத்தகப்பையை சுமந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் முப்பருவ பாடமுறை திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் புத்தகப்பை சுமந்து செல்வதில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதனால் குறைந்த எடையில் தான் இவர்கள் புத்தகப்பையை சுமக்கின்றனர் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுற்றறிக்கை

ஆனால் பல தனியார் பள்ளிகளில் இந்த முறை எதுவும் நடைமுறையில் இல்லை. இன்றளவும் பல பள்ளிகளில் கூனி குனிந்தபடி புத்தகப்பையை மாணவ-மாணவிகள் சுமந்து சென்ற வண்ணம் இருக்கின்றனர்.

இந்தநிலையில் கூடுதல் பாடப்பிரிவு மற்றும் புத்தகப்பை எடை தொடர்பான அறிவுறுத்தலை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வீட்டு பாடம்

மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, மாணவ-மாணவிகளின் புத்தகப்பை எவ்வளவு எடையில் இருக்க வேண்டும்? பாடங்கள் பயிற்றுவித்தலை ஒழுங்குபடுத்துவது ஆகியவை தொடர்பான வழிமுறைகளை உருவாக்கி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. அதில் உள்ள சிறப்பம்சங்கள் வருமாறு:-

* 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது.

* 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதம் பாடங்களை தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது. 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம், சுற்றுச்சூழல் மற்றும் கணிதம் தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது. (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் அறிவுரைப்படி)

புத்தகப்பை எடை எவ்வளவு?

* மாணவர்களை கூடுதல் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை எடுத்து வர சொல்லக்கூடாது.

* 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 1½ கிலோ, 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் புத்தகப்பை எடை 2 முதல் 3 கிலோ, 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 4 கிலோ, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை எடை 4½ கிலோ, 10-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 5 கிலோவுக்கு அதிகம் இருக்கக்கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு 6 வாரத்துக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

30 ஆண்டுகளுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கல்வித்துறை அதிகாரியை ஓய்வுபெற அனுமதித்து, அவருக்கு வழங்கவேண்டிய ஓய்வூதிய பலன்களை 6 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அரசுக்கு இழப்பு ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.கே.சுந்தரராஜன் (வயது 88). இவர் கடந்த 1984-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையில் பள்ளித் துணை ஆய்வாளராக பணியாற்றினார். அப்போது, ஆனத்தூர் அரசு உயர் நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளருக்கு சத்துணவு மையத்தில் உள்ள உணவுப்பொருள் தேவைப்பட்டியலை சரிபார்க்காமல் உணவுப் பொருட்களை வழங்கியதாக அரசுக்கு ரூ.16 ஆயிரம் இழப்பு ஏற்படுத்தியதாக சுந்தரராஜன் மீது குற்றம் சாட்டப்பட்டது. பணியிடை நீக்கம் இந்தநிலையில், 1988-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி சுந்தரராஜன் ஓய்வுபெற இருந்தார். இதையடுத்து, அதே ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந்தேதி அவரை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். மேலும், சுந்தரராஜனை ஓய்வு பெறவும் அனுமதிக்கவில்லை. மேலும், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக சுந்தரராஜன் மீது பதிவான குற்றவியல் வழக்கு, திருவாடனை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. சுந்தரராஜன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையில் இறுதி முடிவும் எடுக்கவில்லை. சுமார் 30 ஆண்டுகளாக காத்திருந்த அவர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். காத்திருப்பு அதில், தன்னை ஓய்வு பெற அனுமதிக்கவும், ஓய்வூதிய பண பலன்களை வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கை ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- இந்த வழக்கை போல, உணர்வுபூர்வமான வழக்குகள் பல உள்ளன. அரசு ஊழியர்கள் பலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அவற்றின் முடிவு தெரியாமல் அவர்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் நடவடிக்கையை முடிக்காமல் இழுத்தடிப்பதால் தான் பலருக்கு பணிப்பலன்களை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அரசு அதிகாரிகள் செய்யும் தவறால், மனுதாரரை போன்ற பல அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஓய்வூதியம் மனுதாரர் ஓய்வுபெறும் நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக, தன் மீதான ஒழுங்கு நடவடிக்கை முடிவுக்காக காத்திருக்கிறார். அவர் மீது தொடரப்பட்ட குற்ற வழக்கில் ஆவணங்கள் எதுவும் இல்லை என மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அறிவித்துள்ளது. இதனால் குற்ற வழக்கிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே, மனுதாரருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ரத்து செய்கிறேன். மனுதாரர் ஓய்வு பெற 6 வாரத்துக்குள் தொடக்கக் கல்வித்துறை அனுமதி வழங்க வேண்டும். அவருக்கு 1988-ம் ஆண்டு முதல் ஓய்வூதியத்தை கணக்கிட்டு, 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் பணி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிப்பு தீவிரம்

லோக்சபா தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விபரம் சேகரித்து புதிய சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்காக மாவட்டம் வாரியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 1, 2, 3 மற்றும் 4 என அலுவலர்கள் பெறும் சம்பளத்தை அடிப்படையாக கொண்டு பணி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. ஒரு தொகுதிக்கு ஆயிரத்து 500 அலுவலர்கள் வீதம் ,மாவட்டத்திற்கு 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் அலுவலர்கள் தயார் செய்ய வேண்டும். ஆசிரியர், அரசு ஊழியர்கள் போட்டோ இதர விபரங்களை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் தொகுதி வாரியாக தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள், ஆசிரியர்கள் பட்டியல் தயாரித்து வருகின்றனர்.

பி.எஸ்சி., நர்சிங் படிப்பு விண்ணப்பிக்க வாய்ப்பு

'தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ள, பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு, 11 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கான கவுன்சிலிங் முடிந்து விட்டது. இதில், அரசு ஒதுக்கீட்டில், 900 இடங்கள் காலியாக உள்ளன. இதனால், பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்காதோர், புதியதாக விண்ணப்பிக்கலாம் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர், செல்வராஜன் வெளியிட்ட செய்தி குறிப்பு: பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு இதுவரை விண்ணப்பிக்காத, தகுதி வாய்ந்தோர், www.tnhealth.org, www.tnmedicalselection.net என்ற இணையளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களுடன், 29ம் தேதி, சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் கவுன்சிலிங்கில், நேரடியாக பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான விடைத்தாள்களை(OMR ) வெளியிட கோரிய மனு

சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான விடைத்தாளை (ஓஎம்ஆர் ஷீட்) வெளியிட கோரிய மனுக்கள் தள்ளுபடியானது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் லட்சுமிநாராயணபுரத்தை சேர்ந்த முத்துராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எம்ஏ, எம்பில் முடித்துள்ளேன். தமிழகத்தில் காலியாக உள்ள உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் உள்ளிட்ட 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 26.7.2017ல் வெளியானது. நான் விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்றேன். தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். வெப்ைசட்டில் முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டன. விடைத்தாளோ (ஓஎம்ஆர்), மதிப்பெண் பட்டியலோ வெளியிடப்படவில்லை. முன்னதாக நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் விடைத்தாள் வெளியிடப்பட்டது. இந்தத்தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதனால் பலரும் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, சிறப்பு ஆசிரியர் தேர்வில் பங்கேற்றவர்களின் ஓஎம்ஆர் சீட்டை வெப்சைட்டில் வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல், பனையூரை சேர்ந்த கருப்பசாமியும் மனு செய்திருந்தார். இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இதுபோன்ற விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார்.

அரசு உதவி பெறும் பள்ளிகளின் வேலைநாள்களில் குளறுபடி - ஆசிரியர்கள் வேதனை

அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலை நாட்களை கணக்கீடு செய்வதில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது அதைப் பள்ளி கல்வித்துறை மாற்ற அமைக்க வேண்டும் என்று ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது தமிழ்நாடு அரசில் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் 31,393 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், 6,597 அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளும் என 37,990 பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசுப் பள்ளிகளின் வேலை நாள் என்பது கல்வி ஆண்டின் அடிப்படையில் பள்ளி தொடங்கும் ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரை கணக்கிடப்படுகிறது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையில் ஆண்டு தொடங்கும் ஜனவரி முதல் டிசம்பர் வரை கணக்கிடப்படுகிறது. இதனால் பள்ளி வேலை நாட்களை நிறைவு செய்வதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது. இதனை ஒரே நடைமுறைக்கு மாற்ற வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கல்வித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது. "அரசுப் பள்ளிகள் ஜூன் முதல் ஏப்ரல் வரை 210 நாட்கள் பணி நாட்களாகக் கருதப்படுகிறது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில ஆண்டைக் கணக்கில் கொண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 210 நாட்கள் பணி நாட்களாகக் கருதப்படுகிறது. ஆனால் இயற்கை சீற்றம் போன்ற அசாதாரண சூழ்நிலையில் 210 நாட்கள் ஈடுசெய்ய முடிவதில்லை .அவ்வாறு வேலை நாட்களில் முழுமையடையாத பள்ளிகளுக்கு கற்பித்தல் மானியம் அனுமதிப்பதில் கல்வி அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இது தேவையற்ற சட்ட சிக்கல்களை ஏற்படுத்துகிறது. ஜனவரி முதல் டிசம்பர் வரை வேலை நாள் என்பது பல்வேறு நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மாணவர்களுக்குக் கல்வி ஆண்டு என்பது ஜூன் முதல் ஏப்ரல் வரை இருக்கும்பொழுது கற்பித்தல் நாட்கள் மட்டும் ஜனவரி முதல் டிசம்பர் வரை என்பது முரண்பட்ட நடைமுறையாகும். இவ்வாறு நடைமுறைப்படுத்தியதற்கு முறையான விதிகளும் கல்வி துறையில் இல்லை. எனவே அரசுப் பள்ளிகளை போல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஆண்டு வேலை நாட்களை மாற்றி அமைக்க வேண்டும். கற்றல் உபகரணங்கள், கற்பித்தல் முறை எல்லாம் ஒரே மாதிரியாக உள்ள நிலையில் வேலை நாளில் மட்டும் மாறுபட்ட இருப்பது ஏற்புடையதில்லை. எனவே உரியத் திருத்தம் செய்து ஆணை வெளியிட வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று(24/11/18) நடைபெறவிருந்த அண்ணா& பாரதிதாசன் பல்கலை. தேர்வுகள்: 3 மாவட்ட கல்லூரிகளின் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு

கஜா புயல் பாதிப்பால் நாளை நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் ஒத்திவைப்பு கஜா புயல் பாதிப்பு காரணமாக நாளை நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாரதிதாசன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 26ம் தேதி முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி தேர்வு நடைபெறும் என பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது நாகை, திருவாரூர், புதுகையில் குறிப்பிட்ட கல்லூரிகளில் இன்று செமஸ்டர் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு கஜா புயல் பாதிப்பு காரணமாக, சென்னை அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கல்லூரிகளை தவிர்த்து மற்ற கல்லூரிகளில் தேர்வுகள் வழக்கம்போல் இன்று நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.விடுபட்ட கல்லூரிகளில் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கஜா புயல் பாதிப்புகளைத் தொடர்ந்து நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட கல்லூரிகளுக்கான நாளைய (சனிக்கிழமை) தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. கஜா புயல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த 15-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற இருந்த பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. வியாழக்கிழமை முதல் திட்டமிட்டபடி அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் பருவத் தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தது இதையடுத்து, புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நிறைவடையாததைத் தொடர்ந்து அந்த மாவட்டங்களில் இயங்கி வரும் கல்லூரிகளுக்கு மட்டும் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களில் நடைபெற இருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது. இந்நிலையில், இந்த 3 மாவட்டங்களில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுகளுக்கான மறு தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது

சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் அரசின் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்'

சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் அரசின் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த அரசின் நிதியுதவியைப் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு சிறுபான்மையினர் குழந்தைகளுக்கு முறையான கல்விக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் அரசு உதவி பெறும், உதவி பெறா தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது சிறுபான்மையின நல அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு வகுப்பறை, அறிவியல் கூடம், கழிப்பறை, குடிநீர், மகளிர் விடுதி ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நிதியுதவி அளிக்கப்படுகிறது இத் திட்டத்தின் கீழ் பள்ளிகள் கோரும் மதிப்பீட்டுத் தொகையில் (75 சதவீதம் வரையில்) ரூ. 50 லட்சத்திற்கு மிகாமல் மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்படுகிறது. மீதமுள்ள 25 சதவீதம் கல்வி நிறுவனத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். இத் திட்டம் தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள், தகுதிகள், விண்ணப்பங்களை ‌w‌w‌w.‌m‌h‌r‌d.‌g‌o‌v.‌i‌n/‌i‌d‌m‌i என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் இத் திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட அளவிலான குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும். ஒரு கல்வி நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் மாநில அரசின் மூலம் 2 தவணைகளில் நிதி வெளியிடப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் மேலும், இத் திட்டத்தின் கீழ் தகுதியான சிறுபான்மையினர் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

சிபிஎஸ்இ(CBSE) பள்ளிகளில் எந்த புத்தகம்? குழப்பம் நீடிக்கிறது

சிபிஎஸ்இ பள்ளிகளில் என்சிஇஆர்டி (தேசிய ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம்) பாடப்புத்தகங்களை பயன்படுத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. கணினிக்கல்வி. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் சுமார் 18 ஆயிரம் பள்ளிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்த பள்ளிகளில் தனியார் பதிப்பகங்கள் அச்சிட்டு விற்கும் புத்தகங்களே பாடப்புத்தகங்களாக வைக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்த புத்தகங்களுக்காக சிபிஎஸ்இ இணைப்பு பெற்ற பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதன்பேரில், சென்னையை சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை மட்டுமே சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் கடந்த மே மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில், என்சிஇஆர்டி புத்தகங்களை சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடமாக நடத்த சிபிஎஸ்இ இணைப்பு பெற்ற பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கண்ட பள்ளிகள் பின்பற்றவில்லை என்ற புகார் இப்போது எழுந்துள்ளது. அதனால், நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த பள்ளிகள் முன்வர வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிபிஎஸ்இ நிர்வாகத்தின் தரப்பில் எடுத்த நடவடிக்கை குறித்து தெரியவில்லை மேலும், நீதிமன்றத்தில் இருந்து சிபிஎஸ்இக்கு இதுவரை எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்று சிபிஎஸ்இ மறுத்துள்ளது. இதனால், கல்வியாளர்கள் பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர். இதற்கிடையே மொத்தம் உள்ள 18 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன என்று தெரிவித்துள்ளன. உண்மையில் தனியார் பதிப்பகத்தார் அச்சிட்டு விற்கும் புத்தகங்களை அந்த பள்ளிகள் வாங்குவதாகவும் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது மத்திய அரசின் உத்தரவின்படி சிபிஎஸ்இ பள்ளிகளுக்காக என்சிஇஆர்டி அதிக அளவில் பாடப்புத்தகங்களை அச்சிட்டு குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றை எத்தனை பள்ளிகள் வாங்கின என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இதனால் எந்த புத்தகத்தை பின்பற்றுவது என்ற குழப்பம் நீடிக்கிறது

26ம் தேதி முதல் வழக்கம் போல் இன்ஜினியரிங் தேர்வுகள்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

நவம்பர் 26ம் தேதி முதல் வழக்கம் போல் இன்ஜினியரிங் தேர்வுகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நவம்பர்-டிசம்பரில் இரண்டாவது பருவ செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். கஜா புயல் பாதிப்பால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இணைவு பெற்று இயங்கும் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு புதிய தேர்வுத் தேதிகள் 22ம் தேதி அறிவிக்கப்பட்டது இந்நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 23 கல்லூரிகள் நீங்கலாக மீதமுள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது (குறிப்பிட்ட 23* *கல்லூரிகளின் தேர்வு கோடு எண்: 8201, 8202, 8203, 8204, 8208, 8211, 8215, 8216, 8217, 8222, 8226, 8123, 828, 8144, 8302, 9103, 9109, 9112, 9114, 9116, 9117, 9124, 9126) இந்நிலையில் வரும் 26ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்று இயங்கும் எல்லா இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் திட்டமிட்டபடி செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

‘நீட்’ தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து விட்டார்களா? மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி செய்ய சுற்றறிக்கை

30-ந்தேதி கடைசி நாள்: ‘நீட்’ தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து விட்டார்களா? மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி செய்ய சுற்றறிக்கை நீட் தேர்வுக்கு வருகிற 30-ந்தேதிக்குள் மாணவர்களை விண்ணப்பிக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வருகிறார்கள். மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தங்கள் மாவட்டத்தில் இணையதள வசதி இல்லாமல் இருந்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புகின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தக்க ஏற்பாடுகளை செய்யவேண்டும்.மேலும் தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் எவரும் பாதிக்காத வண்ணம் சிறப்பு கவனம் செலுத்தி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனைத்து வசதிகளை செய்யவேண்டும். அதுமட்டுமில்லாமல் பிற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்களா? என்பதை தலைமை ஆசிரியர்கள் மூலம் உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவல் பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ESLC EXAM NOTIFICATION 2019 | 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் 5-ந் தேதி கடைசி நாள்

தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு(2019) ஜனவரியில் நடைபெறுகிறது. 1.1.2019 அன்று 12½ வயது பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணி வரை(ஞாயிற்றுக்கிழமை தவிர) www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175 கட்டணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இத்தேர்வுக்கான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

TET தேர்ச்சி பெற்றவர்களை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் நிரப்ப கோரிக்கை!

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில், 'டெட்' தகுதி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்), கடந்தாண்டு ஏப்ரல் , இறுதியில் நடந்தது. 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியாகியும், பணிவாய்ப்பு குறித்த அறிவிப்பு இல்லை. இதனால் அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.புது உற்சாகம்!டெட் தேர்வுக்குப் பின், பிரத்யேக போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கே, அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி கிடைக்கும் என, சமீபத்தில் அமைச்சர் தெரிவித்தார். இது, டெட் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், வேறு வழியின்றி போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.இந்நிலையில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடம் திரட்ட, இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். சோர்ந்திருந்த டெட் தேர்வர்கள் மத்தியில், இந்த அறிவிப்பு புது உற்சாகத்தை அளித்துள்ளது. டெட் தேர்வர்கள் சிலர் கூறுகையில்,'தமிழகத்தில் 2013க்குப் பின், கடந்தாண்டு தான் டெட் தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணிவாய்ப்பு குறித்து அரசு மவுனம் சாதிக்கிறது. 'காலிப்பணியிட விபரத்தையும் வெளியிட மறுக்கின்றனர். முதுகலை ஆசிரியர் காலியிடங்களுக்கும், தேர்வு அறிவிப்பு இல்லை. அப்புறம் ஏன் தகுதித்தேர்வு நடத்த வேண்டும்? தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில், தகுதியுள்ளோரை நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

வட மாவட்ட பள்ளிகளில், 60 சதவீத முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலி!

கவுன்சிலிங் போது நிரப்பப்படாத காலிப்பணியிடங்களுக்கு, முறைகேடாக டிரான்ஸ்பர் வழங்கியதால், வட மாவட்ட பள்ளிகளில், 60 சதவீத முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, ஜூன் மாதம் நடந்தது. இதில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட, 20 மாவட்டங்களுக்கு காண்பிக்கப்படவில்லை. இங்குள்ள காலியிடங்களுக்கு, முறைகேடாக பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வருவதாக, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. வட மாவட்ட பள்ளிகளில் இருந்து பெரும்பாலானோர், தென்மாவட்ட பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர். இதனால், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலுார் உள்ளிட்ட, வட மாவட்ட பள்ளிகளில், பெரும்பாலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பாட திட்டம் மாற்றப்பட்டதால், தற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்த, திணறுகின்றனர். பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் பின்தங்கும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் சுரேஷ் கூறுகையில்,''கவுன்சிலிங்கின் போது மறைக்கப்பட்ட இடங்களில், தற்போது ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். முறையற்ற பணியிடமாறுதல் கண்டித்து, இருமுறை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காலியிடங்கள் நிரப்ப, தற்போது அறிவிப்பு வெளியிட்டால் தான், பிப். மாதத்திற்குள், புதிய ஆசிரியர்கள் நியமிக்க முடியும். எனவே, மாணவர்களின் நலன்கருதி, விரைவில் டி.ஆர்.பி., மூலம், காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்,'' என்றார்

குரூப்-2 தேர்வில் தவறான கேள்விகள்: டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நிபுணர் குழு அமைப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட 1,200 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு கடந்த 11-ந் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர். இந்த தேர்வுக்கான 200 கேள்விகளுக்கும் சரியான விடையை தேர்வாணையம் கடந்த 13-ந் தேதி வெளியிட்டு இருந்தது. கேள்வி-பதிலில் தவறு இருந்தால் ஆன்-லைனில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த தேர்வுக்கான கேள்விகளில் 6 கேள்வி-பதில்கள் தவறாக இருப்பதாக 900-க்கும் மேற்பட்டோர் டி.என்.பி.எஸ்.சி.யிடம் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கிய தீர்ப்பு ரத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கிய சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடியால் மதிப்பெண்கள் குறைந்தன. இதுதொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. டி.கே.ரங்கராஜன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று கடந்த ஜூலை 10-ந்தேதி தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ., சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழகத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு, 196 கருணை மதிப்பெண்கள் அளிக்குமாறு மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து ஜூலை 20-ந்தேதி உத்தரவிட்டது. இதே அமர்வில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த அக்டோபர் 23-ந்தேதியன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்தது. தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- நீட் தேர்வு நடத்திய நிறுவனம் கேள்வித்தாளை மூலமொழியான ஆங்கிலத்தில் இருந்து பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் போது அதன் மொழிபெயர்ப்பு தரத்தை நிச்சயம் உறுதிப்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு ஆங்கிலத்தில் இருந்து ஒரு கேள்வித்தாளை தமிழில் மொழிபெயர்த்த பிறகு மீண்டும் அதனை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அது சரியான பொருளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேர்வு எழுதிய மாணவர்களால் கண்டறிந்து விடை அளிக்காமல் ஒதுக்கி இருக்கக்கூடிய மொழிபெயர்ப்புக் குளறுபடிகளை காரணமாக வைத்து 196 கருணை மதிப்பெண்கள் ஐகோர்ட்டால் வழங்கப்பட்டுள்ளது. கேள்வித்தாளின் மொழிபெயர்ப்பில் ஏதேனும் குழப்பம் இருக்கும்பட்சத்தில் ஆங்கில மூலத்தில் உள்ள கேள்வித்தாளில் உள்ள கேள்விகளையே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. பிளஸ்-2 மாணவர்கள் முழுக்க தமிழில் படித்து இருந்தாலும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்பு முற்றிலும் ஆங்கிலத்திலேயே பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே அடிப்படை ஆங்கில அறிவு மாணவர்களுக்கு தேவைப்படுகிறது. இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆங்கில மூலத்தையும் சரிபார்த்து விடைகளை எழுதி இருக்க வேண்டும். சரியான விடையை எழுதியும் தேர்வாகவில்லை என்று மாணவர்கள் கூறமுடியாது. ஆங்கிலத்தில் இருந்து தவறாக மொழிபெயர்த்ததால் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது. மூல மொழியான ஆங்கில கேள்வித்தாளில் குளறுபடி எதுவும் கிடையாது. எனவே, இந்த வழக்கில் ஜூலை 10-ந்தேதியன்று சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. எதிர்வரும் கல்வியாண்டு 2019-2020-ல் மருத்துவ மேல்படிப்புக்கான நீட் தேர்வை ஏற்கனவே பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்தவண்ணம் தேசிய தேர்வு முகமை (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி) நடத்த வேண்டும். மொழிபெயர்ப்பில் குளறுபடிகள் எதுவும் நேராத வகையில் இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விஷயங்களை பரிசீலித்து கவனத்துடன் இந்த தேர்வை நடத்த வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள்

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார் தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு, பள்ளி பாடப்புத்தகங்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். கஜா புயலால் பாதிக்கப்பட்டு பாடப்புத்தகங்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் வழங்கும் பணியை ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:- தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புயலால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வரு கிறது. தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதி்க்கப்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 692 பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளில் சுமார் 500 மாணவ- மாணவிகளின் பாடப்புத்தகங்கள் இப்புயலில் சேதம் அடைந்ததாக கண்டறியப்பட்டு, தற்போது புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. மேலும், புதிய பாடப்புத்தகங்கள் தேவைப்படும் மாணவ-மாணவிகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாடப்புத்தகங்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் கூடுதல் பாடப்புத்தகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்திற்கு 1 முதல் 12-ம் வகுப்பு வரை 40,850 பாடப்புத்தகங்களும், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ள இரு மாவட்டங்களுக்கு 78,800 பாடப்புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் தொய்வின்றி கல்வி பயில பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பகுப்பாய்வாளர் தேர்வு: தற்காலிகமாக தேர்வானோர் பட்டியல் வெளியீடு

பகுப்பாய்வாளர் உள்ளிட்ட காலியிடங்களுக்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டோரின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பல்வேறு பணிகளில் அடங்கிய இளநிலை பகுப்பாய்வாளர், இளநிலை ரசாயனர், ரசாயனர் மற்றும் தொல்லியல் ரசாயனர் பதவிகளுக்கு கடந்த பிப்ரவரியில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி அடிப்படையில், இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிக அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 26-ஆம் தேதி சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

சி.டி.இ.டி.,: நுழைவுச் சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சி.டி.இ.டி.) விண்ணப்பித்தவர்கள் வியாழக்கிழமை (நவ.22) முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சி.டி.இ.டி. வெளியிட்ட அறிவிப்பு: கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, சி.டி.இ.டி. என்ற தகுதித் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படுகிறது. 2018-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு வரும் டிசம்பர் 9 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. 92 நகரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் 2,296 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டு www.ctet.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நுழைவுச் சீட்டை விண்ணப்பதாரர்கள் வியாழக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நுழைவுச் சீட்டு கிடைக்காதோர் இணையதளத்தில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள், விண்ணப்பத்தை சமர்ப்பித்ததற்கான அத்தாட்சி நகல், கட்டணம் செலுத்தியதற்கான அத்தாட்சி ஆகியவற்றுடன் சி.டி.இ.டி. மையத்தை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவேண்டும். இந்த காலக் கெடுவுக்குள் தொடர்பு கொள்ளாதவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிப்பு

தமிழகத்தில் உள்ள நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு வழங்க முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் நர்சரி பள்ளிகள், பள்ளிக் கல்வித் துறை அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில், ப்ரீகே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., ஆகிய வகுப்புகளுடன், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையும், ஆங்கில வழியில் நடத்தப்படுகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், ஆண்டுக்கு ஒரு முறை அங்கீகாரம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இந்த அங்கீகாரம் புதுப்பிக்கப்படும். நிகழ் கல்வியாண்டில் பள்ளி கல்வி நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்டதால், முதன்மைக் கல்வி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில், தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதனால், நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடக்கக் கல்வி அலுவலர்களால், பல மாவட்டங்களில் விதிகளை மீறி, அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால் அவற்றை ஆய்வு செய்த பின் அங்கீகாரம் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் நர்சரி பள்ளிகளுக்கு விதிகளைப் பின்பற்றி அங்கீகார நீட்டிப்பை வழங்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

அண்ணா பல்கலை. தேர்வுகள்: 3 மாவட்ட கல்லூரிகளுக்கு மட்டும் ஒத்திவைப்பு

கஜா புயல் பாதிப்புகளைத் தொடர்ந்து நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட கல்லூரிகளுக்கான இரண்டு நாள் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (நவ.22) முதல் வழக்கம்போல் பருவத் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கஜா புயல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த 15-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற இருந்த பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. வியாழக்கிழமை முதல் திட்டமிட்டபடி அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் பருவத் தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தது. இரண்டு நாள் தேர்வுகள் ஒத்திவைப்பு புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் இன்னும் நிறைவடையாததைத் தொடர்ந்து அந்த மாவட்டங்களில் இயங்கி வரும் கல்லூரிகளுக்கு மட்டும் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களில் நடைபெற இருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. இம்மாவட்டங்களில் இயங்கி வரும் 8201, 8202, 8203, 8204, 8208, 8211, 8215, 8216, 8217, 8222, 8226, 8123, 8128, 8144, 8302, 9103, 9109, 9112, 9114, 9116, 9117, 9124, 9126 ஆகிய குறியீடுகளைக் கொண்ட கல்லூரிகளுக்கு மட்டும் இந்த இரண்டு நாள் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இந்தத் தேர்வுகளுக்கான மறு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த மூன்று மாவட்டங்களைத் தவிர்த்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (நவ.22) முதல் வழக்கம்போல் தேர்வுகள் நடைபெறும் என பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) குமார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைநிலை படிப்பு வழிகாட்டுதலை மீறினால் ஒட்டுமொத்த அங்கீகாரமும் ரத்து: யுஜிசி எச்சரிக்கை

உயர் கல்வி நிறுவனங்கள் தொலைநிலைப் படிப்புகளுக்கான வழிகாட்டுதல்களை மீறினால், அந்தக் கல்வி நிறுவனத்தின் ஒட்டுமொத்த படிப்புகளுக்கான அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக யுஜிசி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு ஆய்வு செய்து பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க நீதிபதி ரெட்டி தலைமையில் குழு ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு, நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் தொலைநிலை மற்றும் திறந்தநிலை உயர் கல்வியின் தரத்தை உயர்த்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பித்தது. இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, நீதிபதி ரெட்டி குழுவின் பரிந்துரைகளை நாடு முழுவதும் தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் உயர் கல்வி நிறுவனங்கள் பின்பற்றுவது கட்டாயமாகும். அதன்படி, நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் தொலைநிலைப் படிப்புகளின் பட்டியல், கல்வி நிறுவனம் வாரியாக யுஜிசி-யின்www.ugc.ac.in/deb என்ற இணையதளத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும். இந்தப் பட்டியலில் இல்லாத படிப்புகள் வழங்கப்பட்டால், அந்தப் படிப்பு அங்கீகாரம் இல்லாத படிப்பாகக் கருதப்படும். அவ்வாறு அங்கீகாரம் இல்லாத படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், எந்தவொரு பயன்களையோ அல்லது சலுகைகளையோ பெற முடியாது. எந்தவொரு சூழ்நிலையிலும், ஏற்கெனவே தொடங்கி நடத்தப்பட்டு வரும் படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம் வழங்காது. மேலும், தொலைநிலை மற்றும் திறந்த நிலைப் படிப்புகளை வழங்கி வரும் உயர் கல்வி நிறுவனங்கள் யுஜிசி-யின் தொலைநிலைப் படிப்புகளுக்கான 2017 வழிகாட்டுதலையும், அவ்வப்போது வெளியிடப்படும் சட்டத் திருத்தங்களையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்றாத கல்வி நிறுவனத்தின் தொலைநிலைப் படிப்புகளுக்கான அங்கீகாரம் மட்டுமின்றி, அந்தக் கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் மற்ற முறையான படிப்புகளுக்கான அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என யுஜிசி தெரிவித்துள்ளது.

சிறப்பாசிரியர் தேர்வு: தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் சான்றிதழ் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்படுமா?

சிறப்பாசிரியர் தேர்வில் விதவைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு சான்றிதழ் சமர்ப்பிக்க நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அத்தகைய காலஅவகாசம் தராமல் ஆசிரியர் தேர்வு வாரியம் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பதவிகளுக்கான தற்காலிக இறுதி தேர்வுப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி வெளியிட்டது. அதில், பொதுப்பிரிவு மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) ஆதரவற்ற விதவைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கான இடங்கள் நிரப்பப்படாமல் ஒதுக்கீடு (Reserved) என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி சென்னையில் நடந்த குழந்தைகள் தினவிழாவின்போது செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், வேறு மாநிலங்களில் படித்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் அல்லது சார்-ஆட்சியரிடம் உரிய சான்றிதழைப் பெற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சமர்ப்பிக்க 4 வாரங்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு தனித்தனியே தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர்கள் சான்றிதழைச் சமர்ப்பிக்கவில்லை எனில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டு நிரப்பப்படும் என்று தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு தையல், ஓவிய பாடப்பிரிவில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் பயின்ற தேர்வர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது முற்றிலும் பாரபட்சமான நடவடிக்கை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது:- டிடிசி-க்கு முந்தைய தேர்வான உயர்நிலை (ஹையர் கிரேடு) தேர்வுக்கு தமிழ்வழி சான்றிதழ் வழங்க இயலாது என்று அந்தத் தேர்வை நடத்திய அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு குறிப்பிட்டு எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக சான்று அளிக்கப்பட்டுள்ளது. விதவைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் மட்டும் ஒதுக்கீடு என்ற பெயரில் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அதன்கீழ் தேர்வானோர் சான்றிதழை சமர்ப்பிக்க 4 வாரங்கள் காலஅவகாசம் அளித்துள்ளனர். இதே நடைமுறை ஓவியம், தையல் பாடத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் ஏன் பின்பற்றப்படவில்லை? உரிய கட் -ஆப் மதிப்பெண் எடுத்தவர்களை இதுபோன்று ஒதுக்கீட்டுப் பட்டியலில் வைத்துவிட்டு அவர்களிடம் உரிய சான்றிதழை தற்போது கேட்டுப் பெற்றிருக்கலாமே, இதை ஏன் ஆசிரியர் தேர்வு வாரியம் செய்யவில்லை? சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிய இன்னும் 2 வாரங்கள் இருக்கின்றன. எங்களுக்கும் இதுபோன்று கால அவகாசம் அளித்திருந்தால், தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் வழங்க இயலாது என்று சொல்லி அரசு தேர்வுத்துறை அளித்த சான்றிதழையோ அல்லது ஏதேனும் தனியார் பயிற்சி மையத்துக்குச் சென்று படித்தவர்கள் அங்கிருந்து பெறப்பட்ட சான்றிதழையோ அல்லது சுயமாக படித்தவர்கள் அதற்கு சுயஉறுதிமொழி சான்றிதழையோ சமர்ப்பித்திருப்போம். எனவே, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவைகளுக்கு அளிக்கப்பட்ட காலஅவகாசம் போல் எங்களுக்கும் உரிய சான்றிதழை சமர்ப்பிக்க காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்றனர்.

அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பா?

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், அரையாண்டு தேர்வை தள்ளி வைக்கும்படி, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதால், பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கஜா புயலால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு, கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர். பல இடங்களில், பள்ளிகளின் மேற்கூரைகள் சரிந்துள்ளன; வகுப்பறை கட்டடங்கள் இடிந்துள்ளன. சில பகுதிகளில், அரசின் நிவாரண முகாம்கள், அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் செயல்படுகின்றன. அதனால், இந்த மாவட்டங்களில், நவ., 15 முதல் 5 நாட்களாக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பல ஊர்களில் மாணவ - மாணவியர் தங்களின் நோட்டு புத்தகம், புத்தக பை உள்ளிட்டவற்றை இழந்து விட்டதால்,பள்ளிக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது; பள்ளிகளை திறப்பதும் தாமதமாகிறது. இந்நிலையில், டிசம்பர், 10ல், அரையாண்டு தேர்வு துவங்கும் என, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்குள், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த, மாணவ - மாணவியர் புத்தகம், நோட்டுக்கள் பெற்று, தேர்வுக்கு தயாராக முடியுமா என்ற, சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் கூறியதாவது: ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வர வேண்டும். பள்ளிகளை திறந்து, குறுகிய காலத்தில், அரையாண்டு தேர்வுக்கான பாடங்களை நடத்த முடியாது. எனவே, அரையாண்டு தேர்வை,இந்தாண்டுக்கு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். இதுகுறித்து, பள்ளி கல்வி உயர் அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் அறிக்கை பெற உள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட மாவட் டங்களுக்கு, அரையாண்டு தேர்வை,ஒரு மாதம் கழித்து நடத்தலாமா அல்லது தேர்வை ரத்து செய்யலாமா என, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, முடிவு செய் வர் என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.