எல்.கே.ஜி., பிளஸ் 2 படிக்க 3,133 பள்ளிகள் இணைப்பு

மாணவர்கள் குறைவாக உள்ள, 3,133 அரசு பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், 37 ஆயிரத்து, 358 பள்ளிகள் உள்ளன. அவற்றில், 2,947 மேல்நிலை; 3,118 உயர்நிலை; 31 ஆயிரத்து, 293 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது. மாநில அளவில், 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில், தலா, 10க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். பல பள்ளிகளில், மாணவர்களே இல்லாத நிலையும் உள்ளது. எனவே, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித் தரத்தை உயர்த்தவும், செலவுகளை குறைக்கவும், பள்ளிகளை இணைக்க, கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, 3,133 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் அடங்கும். மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள, தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளை ஒன்றாக இணைத்து, ஒரே வளாகத்தில் செயல்பட, ஏற்பாடு செய்யப்பட உள்ளது.இந்த இணைப்பின் வாயிலாக, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, ஒரே பள்ளியில் படிக்க முடியும். எனவே, எல்.கே.ஜி.,யில் மாணவர்கள் சேர்ந்தால், பிளஸ் 2 வரை, வேறு பள்ளிக்கு மாற வேண்டியதில்லை. இதற்கான முயற்சியாக, மாவட்ட அளவில், இதுபோன்ற மாதிரி பள்ளிகள் அமைக்கப்படுகின்றன. அவற்றின் செயல் திறன் அடிப்படையில், இணைப்பு நடவடிக்கை தொடரும் என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தொழிற்கல்வி பாடப்பிரிவு உள்ள மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் சமர்ப்பிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் மேல்நிலை கல்வி கொண்டுவரப்பட்ட போது, தொழிற்கல்வி பிரிவுக்கு, தொகுப்பூதிய முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 1990ல், இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டது. ஆனால், மேல்நிலை வகுப்புக்கு பாடம் நடத்தியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிப்பலன்களே, தற்போது வரை பெறுகின்றனர். பதவி உயர்வு இல்லாததோடு, ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. இதன் காரணமாக, துவக்கத்தில், 66 பாடங்கள் கையாளப்பட்ட நிலையில் தற்போது, 12, தொழிற்கல்வி பாடங்களே, பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. கோவையில், தொழிற்கல்வி பாடப்பிரிவு படிப்படியாக மூடப்பட்டு, தற்போது, 40 பள்ளிகளில் மட்டுமேஉள்ளது. நிரந்தர பணியிடம் உருவாக்கப் படாததால், காலியிடங்கள் கணக்கிட்டு, ஆசிரியர்கள் நிரப்பப்படுவதில்லை. தற்போது, தொழிற்கல்வி பாடப்பிரிவு உள்ள பள்ளிகள், அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்களின் பட்டியல் சமர்ப் பிக்குமாறு, இணை இயக்குனர் சுகன்யா உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக ரீதியாக பல மாற்றங்கள் ஓய்வுபெறும் ஆசிரியர்களின் பணி நீட்டிப்புக்கு அரசு தடை கல்வி பாதிப்பதால் போராட்டம் நடத்த ஆசிரியர்கள் திட்டம்

அரசு ஆசிரியர்களின் பணி நீட்டிப் புக்கு தடை விதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது மாணவர்களின் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் போராட்டம் நடத்த ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் 38,000-க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் உள்ளன. தமிழக அரசு கல்விக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.28,000 கோடி வரை செலவிடுகிறது. இதற்கிடையே பள்ளிக் கல்வித் துறையில் நிர்வாகரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இப்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பணிநீட்டிப்புக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வியாண்டு முடியும் முன்னர் ஓய்வு பெற்றால், அவர்களுக்கு அந்த வருடம் முழுவதும் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க பணி நீட்டிப்புக்கு சில வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி இனி கல்வியாண்டின் இடையில் ஒரு ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வுபெற்றால், உபரி ஆசிரியர்கள் இருந்தால் அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது. உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அவ்வப்போது துறை அதிகாரிகளால் அறிவிக்கப்படும். அதற்கேற்ப பணி யாளர் நிர்ணய அறிக்கையை தயார் செய்து, உபரியான ஆசிரியர்களை 2 மாதத்துக்குள் வேறு இடத்துக்கு பணிநிரவல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆண்டுதோறும் சராசரியாக 1,500 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் கூடுதல் செலவு ஏற்படுகிறது. மறுபுறம் 7,000-க்கும் அதிகமான ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். எனவே, இனி ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின், அந்தக் கல்வி ஆண்டு முழுவதும் பணி நீட்டிப்பு வழங்கும் முறை கைவிடப்படுகிறது. உபரி ஆசிரியர்களைக் கொண்டு அந்தக் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்” என்றனர். இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் தியாக ராஜன் கூறும்போது, “பணிநீட்டிப்பு என்பது ஆசிரியர்கள் நலனுக்கான தல்ல. அது மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து தரப்படுகிறது. ஒரு ஆசிரியர் டிசம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார் எனில், உடனே அந்த காலியிடத்தை நிரப்புவது சிரமம். அதனால் கல்வியாண்டு முழு வதும் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும். இப்போது பணி நீட்டிப்புக்கு மறைமுக தடை விதித்துள்ளதால் மாணவர்கள் கல்வியின் நிலை கேள்விக்குறியாகும். ஆசிரியர் ஓய்வு பெற்றதும் அந்தப் பணியிடத்துக்கு புதிய ஆசிரியரை அரசு உடனே நியமிக்காது. அங்குள்ள இதர ஆசிரியர்களே அவர்களை கவனிக்க வேண்டும். இதனால் அவர்களின் பணிச்சுமை அதிகரிக்கும். தேர்வுக் காலங்களில் மாணவர்களை சரியாக கவனிக்க முடியாது. ஆட்சியில் இருப்பவர்கள் கல்விக் காக ஒதுக்கும் நிதியை செலவாகப் பார்க்காமல் முதலீடாகப் பார்க்க வேண்டும். எல்லா மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை. எனவே, இந்த முடிவை அரசு கைவிட வேண்டும். இல்லையெனில் அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் ஒன்று திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.ஆட்சியில் இருப்பவர்கள் கல்விக்காக ஒதுக்கும் நிதியை செலவாகப் பார்க்காமல் முதலீடாகப் பார்க்க வேண்டும். எல்லா மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை.

கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 6 நாட்களாக நடைபெற்ற ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டனர்

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 31.5.2009-க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கும், 1.6.2009-க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் வித்தியாசம் இருப்பதாகவும், அந்த ஊதிய முரண்பாடுகளை களைந்து ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என்றும் கோரி, 1.6.2009-க்கு பிறகு பணியில் சேர்ந்த 21 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு முறை போராட்டம் நடத்தும் போதும், கோரிக்கை தொடர்பாக அரசு அளிக்கும் வாக்குறுதியை நம்பி, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு வந்தனர். இந்த நிலையில், அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், எனவே கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டத்தை கைவிடுவது இல்லை என்றும் கூறி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் கடந்த 24-ந் தேதி முதல் இரவு-பகலாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இந்த உண்ணாவிரத போராட்டம் நேற்று 6-வது நாளாக நீடித்தது. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், திரைப்பட இயக்குனர் கவுதமன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தொடக்கக் கல்வி துறை இயக்குனர் கருப்பசாமியுடன், இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. அரசு உத்தரவாதம் இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளி கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் ஒன்றை அளித்தனர். இதுதொடர்பாக, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:- இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தைச் சார்ந்த, ஜூன் 2009-ம் ஆண்டில் இருந்து பணியில் சேர்ந்து பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு ஊதிய முரண்பாடு இருப்பதாக தெரிவித்து 24-12-2018 முதல் இன்று (அதாவது நேற்று) வரை டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். பிற துறைகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய ஒரு நபர் ஊதியக் குழு அமைக்கப்பட்டு குழுவால் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அறிக்கை பெறப்பட்ட பின்புதான் இவர்களது கோரிக்கைக்கான தீர்வு குறித்த முடிவு தெரியவரும். அதன்பின்பு பள்ளி கல்வித்துறை இப்பொருளில் மேல் நடவடிக்கை எடுக்கும். எனவே, ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் வாக்குறுதியை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் வாபஸ் பெற்றனர். இது குறித்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த 6 நாட்களாக தமிழகமே, ஏன் இந்தியாவையே திரும்பிப்பார்க்கும் வகையில் போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் துணிந்து நடத்தினார்கள். அந்த அளவுக்கு வேதனையில் நாங்கள் இருந்தோம். ஜனவரி 7-ந் தேதி நீதிமன்றத்தில் அரசு அளிக்கும் அறிக்கையில் நல்ல முடிவு இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், 24-ந் தேதி எங்களை அழைத்து பேசிய அரசு அதிகாரிகள், கோரிக்கைக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால், போராட்டத்தை தொடர்ந்தோம். இதுவரை, 245 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 45 ஆசிரியர்களுக்கு இங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. போராட்டத்தின் ஒவ்வொரு நாள் இரவையும் மரண பயத்துடனே இங்கே கழித்தோம். இந்த நிலையில், முதல்- அமைச்சர், பள்ளி கல்வித்துறை அமைச்சர், அதன் முதன்மை செயலாளர், இயக்குனர் ஆகியோர் வரும் 7-ந் தேதிக்குள் பள்ளி கல்வித்துறை சார்பில், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்து உள்ளனர். அரசின் இந்த முடிவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் மீண்டும் சென்னைக்கு வரும்போது அது அரசுக்கு பாராட்டு விழா நடத்துவதாக இருக்க வேண்டும். எங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம். 7-ந் தேதிக்குள் அரசு எடுக்கும் முடிவை பார்த்துவிட்டு, மேற்கொண்டு போராட்டத்தை தொடருவது குறித்து முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

கடும்பனி, வெயிலையும் பொருட்படுத்தாமல் 5-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் நேற்று 5-வது நாளாக தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் இரவு நேரத்தில் கடும் குளிருக்கு மத்தியில் மரங்களுக்கு கீழே அவர்கள் படுத்திருந்த காட்சி. துப்புரவு பணிகளை மேற்கொண்டு ஆசிரியர்கள் நூதன போராட்டம் நடத்திய காட்சி. சென்னை, டிச.29- கடும்பனி, வெயிலையும் பொருட்படுத்தாமல் நேற்று 5-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். 5-வது நாளாக போராட்டம் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 24-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அரசு கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்ற உறுதியுடன் கடும்பனி, வெயிலையும் பொருட்படுத்தாமல் நேற்று 5-வது நாளாக தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். ஆசிரியர்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. நேற்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நேரில் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். துப்புரவு பணிகள் அதேபோல், சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் துரைபாண்டியன் ஆகியோரும் ஆதரவு தெரிவித்தனர். ‘துப்புரவு பணியாளர்களுக்கான அடிப்படை சம்பளம் தான் தங்களுக்கு வழங்கப்படுகிறது’ என்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் போராட்டம் நடைபெற்ற இடத்தில் நேற்று ஆசிரியர்கள் துப்புரவு பணிகளை மேற்கொண்டு நூதன போராட்டத்தையும் நடத்தினார்கள். அமைச்சர் மீது குற்றச்சாட்டு அரசு தரப்பில் 2 நாட்களுக்கு முன்பு ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்படாமலும் போனது. அதன்பின்னர், தங்களுடைய கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜே.ராபர்ட் கூறியதாவது:- அமைச்சர் சென்னையில் இருப்பதாக கூறுகிறார் கள். ஆனால் இதுவரை எங்களை அழைத்து பேசவில்லை. எங்களுடைய கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை நாங்கள் இங்கிருந்து புறப்படமாட்டோம். அரசுதான் முழுபொறுப்பு உண்ணாவிரதம் இருந்ததில் 201 ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு இடம் இல்லாததால் இங்கு 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். எங்களுக்கு ஏதாவது நேரிட்டால் அதற்கு அரசு தான் முழு பொறுப்பு. மனிதாபிமான அரசு என்றால் உடனடியாக அழைத்து பேசி அவர்கள் நிறைவேற்றுவதாக கூறிய எங்களுடைய கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்த 28 ஆயிரம் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியது ஏன்? பிளஸ்-2 தேர்வு எழுத அனுமதி வழங்கி இயக்குனர் சுற்றறிக்கை

பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்த 28,167 மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியது ஏன்? என்றும், அந்த மாணவர்களை பிளஸ்-2 தேர்வு எழுத அனுமதி வழங்கியும், அரசு தேர்வுத்துறை இயக்குனர், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அரசாணை பள்ளிக்கல்வித்துறை கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஒரு அரசாணை வெளியிட்டது. அதில் பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள், தொடர்ந்து பிளஸ்-2 வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என்றும், தோல்வி அடைந்த மாணவர்கள் ஜூன் மாதம் நடைபெறும் உடனடி சிறப்பு தேர்விலோ அல்லது பிளஸ்-2 இறுதி தேர்வின் போதோ எழுதிக்கொள்ளலாம் என்றும் அறிவித்து இருந்தது. அதன்படி, 2018-ம் ஆண்டு பிளஸ்-1 பொதுத்தேர்வும் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் அதில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி நிர்வாகங்கள் மாற்று சான்றிதழை வழங்கி பிளஸ்-2 வகுப்பை அந்த மாணவர்கள் தொடராமல் செய்து இருப்பது தேர்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 28,167 மாணவர்கள் மார்ச் 2018 பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கு தயாரிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, 2019-ம் ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து அதில் திருத்தங்கள் இருந்தால் அதன் விவரத்தை முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில் பிளஸ்-1 பொதுத் தேர்வுக்கு பின்பு, மாற்று சான்றிதழ் (டி.சி.) பெற்று பிளஸ்-2 வகுப்பை பள்ளியில் படிக்காதவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 167 என்பது தெரியவந்து இருக்கிறது. அனுமதி அரசாணையின்படி பிளஸ்-1 தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்களை பிளஸ்-2 வகுப்பில் சேர்க்காமல் மாற்று சான்றிதழ் வழங்கி பள்ளியை விட்டு நீக்கி இருப்பது மாணவர்களின் எண்ணிக்கை மூலம் அறிய முடிகிறது. மேற்குறிப்பிட்ட மாணவர்களின் நலன் கருதி கடந்த மார்ச் 2018-ல் பிளஸ்-1 பொதுத்தேர்வினை பள்ளி மாணவராக எழுதியபின், பள்ளியில் தொடர்ந்து பிளஸ்-2 பயிலாமல் மாற்று சான்றிதழ் பெற்று பள்ளி இடைநின்ற மாணவராக இருப்பினும், அவர்கள் ஏற்கனவே பிளஸ்-1 பயின்ற பள்ளியின் மாணவராகவே கருதப்படுவார்கள். அந்த பள்ளியின் மாணவர்கள் பெயர் பட்டியலில் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின் பெயர் சேர்க்கப்பட்டு, முதன் முறையாக மார்ச் 2019 பிளஸ்-2 தேர்வை எழுதுவதற்கும், பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களை மார்ச் 2019-ல் எழுதுவதற்கும், செய்முறை தேர்வுகளையும் அதே பள்ளியில் எழுதுவதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது. 5-ந் தேதிக்குள்... இந்த தகவலை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வருகிற 5-ந் தேதிக்குள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே தெரிவிக்க வேண்டும். தனித்தேர்வர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட தேர்வு கட்டணத்தினையே இந்த மாணவர்களிடம் இருந்து பள்ளி தலைமை ஆசிரியர் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் ஆரம்பப் பள்ளிகளை இணைக்க முடிவு

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் ஆரம்பப் பள்ளிகளை இணைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதனையடுத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு அருகில் உள்ள ஆரம்பப் பள்ளிகளின் விவரங்களை தெரிவிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ்

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ்
* நடப்பு கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலும், பனிரெண்டாம் வகுப்பை தொடரலாம் எனவும்
* பதினோராம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை மீண்டும் எழுதிக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
* இந்நிலையில் கடந்தாண்டு நடந்த11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுக்கு பிறகு தேர்வுத் துறை நடத்திய ஆய்வில் 29,000 மாணவர்களுக்கு டி.சி., வழங்கப்பட்டது தெரியவந்தது.
* இதனையடுத்து 29 ஆயிரம் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியதற்கான காரணத்தை கேட்டு
* சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது
* அந்த மாணவர்கள் அனைவரும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இனி ஆண்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுப்பு

பெண்களை போன்று மத்திய அரசின் ஆண் ஊழியர்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பிற்காக 730 நாட்கள் விடுப்பு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது பெண் ஊழியர்கள், 2 குழந்தைகள் வரை வைத்திருந்தால் அவர்களை பராமரிப்பதற்காக வருடத்திற்கு 3 முறை குழந்தை பராமரிப்பு விடுப்பாக (CCL - child care leave) எடுத்துக் கொள்ளலாம் என்ற வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதே போன்று திருமணம் ஆகாத அல்லது விவாகரத்து பெற்ற அல்லது மனைவியை இழந்த ஆண் மட்டும் தனியாக குழந்தையை பராமரிக்கும் ஊழியராக இருந்தால் அவரின் ஒட்டுமொத்த பணி காலத்தில் 730 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பாக (CCL - child care leave) எடுத்துக் கொள்ளலாம் என முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, 730 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்தால் மட்டுமே சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட உள்ளது. 730 நாட்கள் விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அளிக்கப்பட உள்ளது. முதல் 365 நாட்களுக்கு 100 சதவீதம் சம்பளமும், அடுத்த 365 நாட்களுக்கு 80 சதவீதமும் சம்பளம் வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இத தவிர பெண்கள் மகப்பேறு விடுப்பாக 180 நாட்கள் வழங்கப்படுவது போல் ஆணும் 15 நாட்கள் வரை விடுப்பு கேட்க முடியும்.

RAILWAY (RRB) RECRUITMENT 2019 | இரயில்வே அறிவித்துள்ள 14033 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : JUNIOR ENGINEER உள்ளிட்ட பல பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2019 | பொறியியல் பட்டதாரிகளும், கணினி அறிவியல் முடித்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

RAILWAY (RRB) RECRUITMENT 2019 | இரயில்வே அறிவித்துள்ள 14033 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : JUNIOR ENGINEER உள்ளிட்ட பல பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2019 | பொறியியல் பட்டதாரிகளும், கணினி அறிவியல் முடித்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

SOUTHERN RAILWAY RECRUITMENT 2018 | தெற்கு இரயில்வே அறிவித்துள்ள மருத்துவம் சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு மருத்துவ நிபுணர் உள்ளிட்ட பல பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2018

SOUTHERN RAILWAY RECRUITMENT 2018 | தெற்கு இரயில்வே அறிவித்துள்ள மருத்துவம் சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு மருத்துவ நிபுணர் உள்ளிட்ட பல பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2018

பள்ளிகளில் ஆதார் எண் கட்டாயமில்லை உத்தரவை திருத்த கல்வி துறை முடிவு

பள்ளி மாணவர்களிடம், ஆதார் எண் பெறுவது கட்டாயம் என்ற உத்தரவு, மாற்றப்பட உள்ளது. ஆதார் ஆணைய உத்தரவின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நாடு முழுவதும், பல்வேறு துறைகளில், பொதுமக்கள் மற்றும் நுகர்வோரிடம், ஆதார் எண்கள் கேட்கப்படுகின்றன.மத்திய - மாநில அரசின் திட்டங்களில் முறைகேட்டை தடுக்க, ஆதார் எண்களை பெற்று, அதன்படி பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.மேலும், வங்கிகள், உயர்கல்விநிறுவனங்கள் மற்றும் பள்ளிகளும், ஆதார் எண்களை சேகரித்து வருகின்றன.இதனால், ஆதார் எண்கள் பல இடங்களில் கசிந்து, தனிநபர் பாதுகாப்புக்கு சிக்கல்ஏற்படுகிறது. இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்தியஅரசின் திட்டங்களுக்கு மட்டும், ஆதார் எண்ணை சேகரிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.அதனால், மத்திய அரசின், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுகளுக்கு, மாணவர்களின் ஆதார் எண் கட்டாயமில்லை என, அறிவிக்கப்பட்டது.ஆனால், பள்ளி களில் மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வு பணிகள் நடக்கும் நிலையில், ஆதார் எண் கட்டாயம் வேண்டும் என, பெற்றோர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.இதுதொடர்பாக, ஆதார் ஆணையத்துக்கு, பெற்றோர் புகார் அனுப்பினர்.புகாரை விசாரித்த ஆதார் ஆணையம், பள்ளிகள், கல்லுாரிகள், மாணவர்களிடம் ஆதார் எண்ணை கேட்டு, கட்டாயப்படுத்த கூடாது என, உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழக பள்ளி களிலும், ஆதார் எண் கட்டாயம் என்ற உத்தரவு மாற்றப்பட உள்ளது. தமிழக பள்ளி கல்வியில், 'எமிஸ்' என்ற, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் சார்பில், ஆதார் எண் பெறப்படுகிறது.'அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச நல திட்டங்கள் அமல்படுத்துவதால், அதற்கு மட்டும் ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கலாம்.'மற்ற தனியார் பள்ளி மாணவர்களுக்கு, விருப்பப்பட்டால் மட்டுமே, ஆதார் எண்ணை வழங்கலாம்' என, திருத்தம் செய்யப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

வேலை வாய்ப்பு பதிவுகள் மாயம் புதுப்பிக்க பட்டதாரிகள் திணறல்

வேலைவாய்ப்புக்கு பதிவு செய்தோரின் விபரங்களை, ஆன்லைனில் பதிவேற்றுவதில் நடந்துள்ள குளறுபடியால், பதிவை புதுப்பிக்க முடியாமல், பட்டதாரிகள் திணறி வருகின்றனர்.தமிழக அரசின் பல்வேறு துறைகளில், காலி பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு துறையின் வழியாக, புதிய ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். பெரும்பாலான துறைகளின் காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., போன்றவை வழியே, போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும், மதிப்பெண், இட ஒதுக்கீடு மட்டுமின்றி, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலும், இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதேபோல, தமிழக அரசின் வழியாக, தனியார் வேலை வாய்ப்புக்கும், இந்த பதிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, வேலை வாய்ப்புகளுக்கு, பதிவு மூப்பு முக்கிய தேவையாக உள்ளது. தற்போது, வேலை வாய்ப்பு பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் கணினி மயமாகியுள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் போன்றவற்றில், நேரடியாக புதுப்பித்தல் மற்றும் பதிவு பணிகள் நடப்பதில்லை. பட்டதாரிகள், தங்களின் பதிவு மற்றும் புதுப்பித்தலை, ஆன்லைனில் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.தற்போது, 2011 முதல் புதுப்பிக்க விடுபட்டோருக்கு, ஜன., 24க்குள், பழைய பதிவு மூப்பின்படி புதுப்பிக்க சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கான பட்டதாரிகளால், ஆன்லைனில் புதுப்பிக்க முடியவில்லை. பலரது பதிவு விபரங்கள், ஆன்லைனில் இருந்து மாயமாகியுள்ளதே இதற்கு காரணம்.மாயமான பதிவு விபரங்களின் நிலை என்னவென, வேலை வாய்ப்பு துறைக்கு தெரியவில்லை. பல மாவட்ட அலுவலகங்களில், பதிவு எண் விபரங்களை, டிஜிட்டலில் சேர்த்த போது, பலரது விபரங்கள் விடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே, விடுபட்டோரின் விபரங்களை, மீண்டும் பதிவேற்றாவிட்டால், அவர்களின் பதிவு மூப்பு, பாதிக்கப்படும் அபாயம் உள்ளது

JEE மெயின் தேர்வு 2019 - முழு விவரம்

தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் JEE முக்கியத் தேர்வு -2019 குறித்த அடிப்படை முறைமையை அறிவித்துள்ளனர். அதில், தேர்வு நடத்தப்படும் முறை, தேர்வு முறை, கேள்விகளைக் குறிப்பிடுவது, குறிக்கோள் திட்டம் ஆகியவை பற்றி விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஜே.இ.இ. முதன்மை தேர்வு என்பது தேசிய அளவிலான தேர்வு ஆகும். இது என்ஐடி, ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படுகிறது. அதன்படி,தாள் 1 மற்றும் தாள் 2 என இரண்டு தேர்வுகள் நடத்தப்படும். JEE Main exam pattern தாள் 1 முற்றிலும் கணினி அடிப்படையிலான முறையில் நடைபெறும். தாள் 2 கம்ப்யூட்டர் அடிப்படையிலும்,(கணிதம் மற்றும் திறனாய்வு சோதனை) மற்றும் பேனா மற்றும் காகித அடிப்படையில் (வரைதல் தேர்வு) நடத்தப்படும். ஜே.இ.இ.மெயின் - 2019 தேர்வு முறை - தாள் 1 (B.Tech/ B.E.)ஜெ.இ.இ. பிரதான 2019 தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும். ஜனவரி 9 ஆம் தேதி முதல் 12ம் தேதி வரையிலும், பிறகு ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும் இந்த தேர்வு நடைபெறும். இதுகம் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் என மூன்று பாகங்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் 30 கேள்விகள் இருக்கும். கேள்விகள் அப்ஜெக்டிவ் வகைகளாக இருக்கும். தேர்வுக்கு 3 மணி நேரம் ஒதுக்கப்படும். அனைத்து தேர்வு மையங்களிலும் கேள்வி தாள்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். ஒவ்வொரு கேள்வியும் 4 மதிப்பெண்கள் கொண்டவை. தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். பதிவு செய்யப்படாத கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கப்படாது. மொத்தக் கேள்விகள் 90. இயற்பியல், வேதியியல், கணிதப் பாடத்தில் இருந்து தலா 30 கேள்விகள் கேட்கப்படும். இவற்றுக்கு ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 360 மதிப்பெண்கள். JEE முதன்மை 2019 தேர்வு முறை - தாள் II (B.Arch. / B.Plan) ஜேஇஇ தேர்வின் இரண்டாம் தாள் கணினி மற்றும் பேனா - காகித முறையில் நடத்தப்படும். தாள் II க்கான தேர்வு முறை (ஆன்லைன்) மற்றும் வரைதல் கேள்விகள் (ஆஃப்லைன்) அடங்கும். இந்த தாள் UG கட்டமைப்பு பாடநெறிகளுக்கான நுழைவாயில் ஆகும். பகுதி I கணித வகை கேள்விகள்), பகுதி II (ஜெனரல் ஆப்டியூட்) மற்றும் பகுதி III (வரைபடத்தை அடிப்படையாகக் கொண்ட கேள்விகள்) ஆகியவற்றில் இருந்து 82 கேள்விகள் கேட்கப்படும். தேர்வுக்கு 3 மணி நேரம்வழங்கப்படும். இந்த கேள்வித் தாள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். கணிதம் மற்றும்பொருந்திய பிரிவுகளின் அனைத்து கேள்விகள் ஒவ்வொன்றும் 4 மதிப்பெண்கள் கொண்டவை. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண் கழிக்கப்படும். ஜேஇஇ பிரதான வரைபட சோதனைக்கு, மாணவர்களின் திறமையின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். கணிதம் பாடத்தில் 30 கேள்விகளும்,ஆப்டிடியூட்டில் 50 கேள்விகளும், வரைபடம் தொடர்பாக 2 கேள்விகள் என மொத்தம் 82 கேள்விகள் கேட்கப்படும். கணிதம் பாடத்துக்கு 120 மதிப்பெண்களும், ஆப்டிடியூட் தேர்வுக்கு 200 மதிப்பெண்களும், வரைபடத்தக்கு 70 மதிப்பெண்களும் என மொத்தம் 82 கேள்விகளுக்கு 390 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஜே.இ.இ பிரதானத்தேர்வு NTA எனப்படும் தேசிய தேர்வு முகமையால் ஒரு வருடத்தில் இருமுறை நடத்தப்படுகிறது. ஜே.இ.இ பிரதான தேர்வில், முதல் தாள் தேர்வு ஜனவரி 9, 10, 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெறும். ஜனவரி 8ம் தேதி இரண்டு நேரங்களில் தாள் -2க்கான தேர்வு நடைபெறும், அதே சமயம் ஏப்ரல் 6 முதல் 20 வரை இரண்டாவது முறையாக ஜேஇஇ தேர்வு நடைபெறும்.

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’ இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டம்

கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 24-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு இருக்கின்றனர். நேற்று 4-வது நாளாக போராட்டம் நீடித்தது. உண்ணாவிரத போராட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் ஏற்கனவே ஆதரவு தெரிவித்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் நேற்று நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். இதுமட்டுமில்லாமல் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோரும் ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை அனுப்பி இருக்கின்றனர். தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களில் பலர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடும்பத்துடன் வந்திருந்த ஆசிரியர்களின் பிள்ளைகளும் நேற்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியது அவர்களுக்கு மேலும் வலுவூட்டும் விதமாக அமைந்தது. இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் குறித்து இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜே.ராபர்ட் கூறியதாவது:- நாங்கள் புதிதாக எந்த கோரிக்கையையும் முன்வைத்து கேட்கவில்லை. ஏற்கனவே முன்வைத்த கோரிக்கையின்படி செய்து கொடுப்பதாக எழுதி கொடுத்ததை நிறைவேற்றுங்கள் என்று தான் கேட்கிறோம். நாங்கள் இந்த போராட்டத்தில் இருந்து வெறுங்கையோடு வீடு திரும்ப முடியாது. முதல்-அமைச்சர் இதில் நேரடியாக தலையிட வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். அதில் திட்டவட்டமாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நான்காவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த திங்கள்கிழமை முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்நாள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களை போலீஸார் வேனில் ஏற்றி எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் தங்க வைத்தனர். இதையடுத்து விடிய விடிய அங்கு சாப்பிடாமல் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீண்டும் டி.பி.ஐ. வளாகத்துக்குச் சென்று உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட வரும் ஆசிரியர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமுமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து வியாழக்கிழமை 4-ஆவது நாளாக ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை இரவு வரை 169 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் பெரும்பாலனோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று போராட்டக் களத்துக்குத் திரும்பியுள்ளனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிபிஐ வளாகத்தில் உள்ள குடிநீர் வசதி, கழிவறைகள், உறங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆசிரியர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் டிபிஐ வளாகத்திலிருந்து வெளியேறுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி வருகின்றனர் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

TNPSC புள்ளியியல் ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள்: உத்தேச விடைகள் இன்று வெளியீடு

புள்ளியியல் ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளன இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த வாரத்தில் கட்டட வடிவமைப்பு உதவியாளர், திட்டப் பிரிவு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களுக்கு தேர்வு நடத்தியது இந்தத் தேர்வுக்கான உத்தேச விடைகள் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெள்ளிக்கிழமை (டிச. 28) வெளியிடப்படவுள்ளது உத்தேச விடைகளில் மறுப்பு ஏதேனும் இருந்தால், விண்ணப்பதாரர்கள் அதனை தேர்வாணையத்துக்குத் தெரிவித்து சரியான விடைகளைக் கோர முடியும். வினாத்தாள் குறித்த கோரிக்கைகள் இணைய வழியில் மட்டுமே பெறப்படும் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வுக்குரிய உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளைக் கோர முடியும் தேர்வர்கள் எந்த வரிசை கேள்வித்தாளை பயன்படுத்தி விடையளித்தாலும், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி மட்டுமே தேர்வர்கள் உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளைக் கோர முடியும் விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். பதிவு எண், விண்ணப்ப எண், ஆகிய இரண்டும் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலேயே இருக்கும் தேர்வர்கள் தேர்வு எழுதிய பாடத்தினை தேர்வு செய்து, பின்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி வினா எண்ணை தெரிவு செய்தால் அதற்கான கேள்வி மற்றும் சரியான விடைக்குறிப்பு திரையில் தோன்றும்.விடைக்குறிப்பின் விடைகளில் மாறுபட்ட கருத்து இருப்பின் அதன் கீழே தோன்றும் சரியான விடை அல்லது விடைகளை தேர்வு செய்ய வேண்டும் பின்னர் அதன் கீழே இருக்கும் குறிப்புப் பிரிவில் தேர்வர்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம் அதனைத் தொடர்ந்து தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்தப் புத்தகத்தில் உள்ளது, அதன் ஆசிரியர், பதிப்பு வருடம், பதிப்பாளர், பக்க எண் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்.பின்னர், தேர்வர்கள் தெரிவித்த விடைக்கு வலுச்சேர்க்கும் உரிய ஆவணங்களைக் கோப்புக்களாகப் பதிவேற்றம் செய்யவேண்டும் தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்தப் புத்தகத்தில் உள்ளன என்பதற்கான தகவல்களும் விடைக்கு வலுச்சேர்க்கும் உரிய ஆவணங்களும் இல்லாத கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது பதிவேற்றம் செய்தபின் அதற்கான ஒப்புகையினை அச்சிட்டுக்கொள்ளலாம். ஒருவர் எத்தனை விடைகளுக்கு வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கலாம் கையால் எழுதப்பட்ட குறிப்புகள் விடைக்கான ஆதாரமாக கருதப்பட மாட்டாது தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் எந்தக் காரணத்தை ஒட்டியும் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது என அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது

பிளஸ் 2 பொதுத்தேர்வு: முக்கிய பாடங்களுக்கு நேரம் குறைப்பு

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொழிப்பாடங்கள் தவிர்த்து முக்கிய பாடங்களுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கு கடந்த ஆண்டு முதல் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டது மேலும் பொதுத் தேர்வு மொத்த மதிப்பெண் 1,200-லிருந்து 600 ஆகக் குறைக்கப்பட்டது. இதுதவிர மேல்நிலை வகுப்புகளில் மொழிப்பாடங்கள் முதல்தாள், இரண்டாம்தாள் என்ற முறைக்கு பதிலாக ஒரே தாளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது இந்நிலையில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுக்கு மொழிப்பாடங்கள் தவிர்த்து முக்கிய பாடங்களுக்கான தேர்வுகளுக்கு தேர்வெழுதும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும் இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வின் போது மொழிப்பாடங்களைத் தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு நேரம் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது அதாவது, மொழிப்பாடங்களைத் தவிர மற்ற பாடங்களுக்கு தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.45 மணியளவில் முடிவடையும் புதிய அறிவிப்பின்படி இந்த பொதுத்தேர்வில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், உயிரியல், வரலாறு, இயற்பியல். வணிகக் கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்

வீட்டுப் பாடம் எழுதாத 5-ம் வகுப்பு மாணவர்களை ஆடையின்றி நிற்க வைத்து தண்டனை  தனியார் பள்ளியின் அங்கீகாரம் ரத்து

ஆந்திராவில் வீட்டுப்பாடம் எழுதாத 5-ம் வகுப்பு மாணவர்கள் 6 பேரை 1 மணி நேரம் ஆடையின்றி நிற்க வைத்த தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளது. ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் சைதன்ய பாரதி என்ற தனியார் பள்ளி உள்ளது. ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கும் இந்தப் பள்ளியில் சுமார் 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 5-ம் வகுப்பு மாணவர்கள் 6 பேர், வகுப்புக்கு வெளியே வெயிலில் ஆடையின்றி சுமார் 1 மணி நேரம் நிற்க வைக்கப்பட்டனர். வீட்டுப் பாடம் எழுதாததாலும் பள்ளிக்கு தாமதமாக வந்ததாலும் மாணவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டதாக தெரிகிறது. சக மாணவர்களின் கேலிக்கு ஆளானதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். பிறகு புங்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், பள்ளி நிர்வாகி நாகராஜு நாயுடுவை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் 3 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்தப் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரி நேற்று அறிவித்தார்.

இடைநிலை ஆசிரியர் போராட்டம் தொடர்கிறது 170 பேர் மருத்துவமனையில் அனுமதி

இடைநிலை ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் 88 பெண்கள் உட்பட 170 பேர் உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். சம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு கடந்த 4 நாட்களாக தொடர் உண் ணாவிரத போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். ஒரு நபர் குழு அறிக்கை தரும்வரை போராட் டத்தை ஒத்திவைக்க தமிழகஅரசு சார்பில் அவர்களிடம் வலியுறுத்தப் பட்டது. அதை ஆசிரியர்கள் ஏற்க மறுத்தனர். அரசுடனான இருகட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததை அடுத்து இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த தொடர் போராட்டத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் உடல் சோர் வடைந்து காணப்பட்டனர். உடல் நலக்குறைவால் 88 பெண்கள் உட் பட 170 பேர் பாதிக்கப்பட்டு ராயப் பேட்டை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், டிபிஐ வளாகத்தில் அலுவலக பணிகளும் பாதிக்கப் பட்டுள்ளன. அரையாண்டு விடு முறை முடிந்து பள்ளிகள் வரும் ஜனவரி 2-ம் தேதி திறக்கப்பட உள்ளன. அன்றே மாணவர்களுக்கு 3-ம் பருவத்துக்கான சீருடைகள், புத்தகங்கள் உட்பட இலவசப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். அதற்குரிய பொருட்கள் எல்லாப் பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், இடைநிலை ஆசிரியர் கள் போராட்டத்தால் கணிச மான தொடக்கப் பள்ளிகளி்ல் முன்னேற்பாடு பணிகள் தடைப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச் செயலாளர் ராபர்ட் கூறும்போது, ‘‘ஆட்சியாளர்களின் மனதில் சிறிதளவேனும் கருணை இருக்கும் என நம்புகிறோம். குழந்தைகள், பெண்கள் என பலரும் தங்களை வருத்தி அறவழியில் போராடு வதை அரசு அலட்சியம் செய்யா மல் எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்’’என்றார். அலட்சியம் கூடாது இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக வீதியில் இறங்கி போராடுவதை அரசு கண்டு கொள்ளாமல் இருக்கக்கூடாது. ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்’’என்றார்.

ரெயில்வேயில் பணிபுரிய 14 ஆயிரம் என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு

இந்தியன் ரெயில்வேயில் பணிபுரிவதற்கு டிப்ளமோ மற்றும் டிகிரி படித்த 14 ஆயிரத்து 33 என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ரெயில்வேயில் 13 ஆயிரத்து 34 இளநிலை பொறியாளர்கள், 49 இளநிலை பொறியாளர்கள்(தகவல் தொழில்நுட்பம்), 456 டெப்போ பொருட்கள் கண்காணிப்பாளர்கள், 494 ரசாயனம் மற்றும் உலோகவியல் உதவியாளர்கள் ஆக மொத்தம் 14 ஆயிரத்து 33 பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இந்த பணி இடங்கள் பல்வேறு மண்டல ரெயில்வே மற்றும் உற்பத்தி பிரிவில் காலியாக இருக்கின்றன. இதற்கான விண்ணப்பங்களை ‘ஆன்-லைன்’ மூலம் வருகிற 31.1.2019 அன்று நள்ளிரவு 11.59 மணிக்குள் அனுப்ப வேண்டும். இந்த பதவிகளுக்கான வயது வரம்பு 1.1.2019 அன்றைய நிலவரப்படி 18 வயது முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். இவர்களுக்கு சம்பளம் ரூ.35 ஆயிரத்து 400 மற்றும் அலவன்சுகள் கிடைக்கும். இளநிலை பொறியாளர்களுக்கு ரெயில்வே தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பதவிகள் அடிப்படையில் பொறியியலில் டிப்ளமோ மற்றும் டிகிரி பட்டப் பிரிவுகளில் பாடங்கள் படித்திருக்க வேண்டும். டெப்போ பொருட்கள் கண்காணிப்பாளர் பதவிக்கு பொறியியலில் எந்த பாடத்திலும் டிப்ளமோ, டிகிரி படித்திருக்க வேண்டும். இளநிலை பொறியாளர் பதவிக்கு (தகவல் தொழில்நுட்பம்) கம்ப்யூட்டர் அறிவியல் முதுகலை டிப்ளமோ, பி.எஸ்.சி. பட்டப்படிப்பு, கம்ப்யூட்டர் படிப்பில் பட்டப்படிப்பு, பி.டெக். தகவல் தொழில்நுட்பம், பி.டெக். கம்ப்யூட்டர் அறிவியல் போன்ற படிப்புகளை படித்திருக்க வேண்டும். ரசாயனம் மற்றும் உலோகவியல் உதவியாளர் பணிக்கு பவுதீகம் மற்றும் ரசாயனத்துடன் கூடிய அறிவியல் பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும். குறைந்தது 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த பதவிக்கு எல்லாம் 2 கட்ட கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வுகள் மற்றும் அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெறும். இந்த தேர்வு குறித்து முழுமையான விவரங்கள் மற்றும் ‘ஆன்-லைன்’ விண்ணப்பத்திற்கான வழிமுறைகளை ரெயில்வே தேர்வு வாரியத்தின் இணையதளத்துக்கு சென்று பார்க்கலாம். அதன்படி சென்னைக்கு www.rrbchennai.gov.in , பெங்களூருவுக்கு www.rrbbnc.gov.in, திருவனந்தபுரத்துக்கு www.rrbthiruvananthapuram.gov.in ஆகிய இணையதள முகவரிகளை பார்வையிடலாம். மேற்கண்ட தகவல் மத்திய ரெயில்வே தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக ஒரு நபர் கமிஷன் அறிக்கை வரும்வரை எந்த உத்தரவாதமும் தர இயலாது பள்ளிக்கல்வி துறை செயலாளர் உறுதி

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக ஒரு நபர் கமிஷன் அறிக்கை வரும்வரை எந்த உத்தரவாதமும் தர இயலாது என்று பள்ளிக்கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்தார். இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுமா? என்பது குறித்து பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:- ஒரு நபர் கமிஷன் அறிக்கை வரும் வரை இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து எதுவும் சொல்ல முடியாது. அந்த அறிக்கை தாக்கல் செய்த பிறகு தான் முடிவு எடுக்க முடியும். கமிஷன் அறிக்கை வரும் வரை காத்திருந்து தான் ஆக வேண்டும். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருக்கிறோம். ஆனால் ஒரு நபர் கமிஷன் அறிக்கை வரும் வரை எந்த உத்தரவாதமும் எங்களால் தர இயலாது. கமிஷன் அறிக்கை வருவதற்கு முன்பு எப்படி உத்தரவாதம் கொடுக்க முடியும். ஆசிரியர்கள் இதை புரிந்து கொள்ளவில்லை. இந்த துறை மட்டுமல்ல 2009-ம் ஆண்டில் இருந்து பல்வேறு துறைகளில் இந்த பிரச்சினை இருந்து வருகிறது. 6-வது ஊதியக்குழுவில் ஒரு குரூப்-க்கு இவ்வளவு தான் சம்பளம் என்று சொன்ன பிறகு, அதை ஏற்று அந்த துறைக்கு வருகிறார்கள். பிறகு எங்களுக்கு அதிகமாக சம்பளம் கொடுங்கள் என்று ஏன் கேட்கிறார்கள்? இது நியாயமா? அரசின் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைத்தார்கள். அரசின் கவனத்துக்கு வந்துவிட்டது. அதன் பிறகு உத்தரவாதம் கொடுங்கள் என்று சொல்கிறார்கள். எனக்கு அதற்கான அதிகாரம் கிடையாது. ஒரு நபர் கமிஷன் அறிக்கையை மதிப்பாய்வு எப்படி செய்ய முடியும்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

TNPSC - Tentative Answer Key for the post of Architectural Asst. and Mass Interviewer

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த சனிக்கிழமை (22.12.2018) அன்று Architechtural Assistant / Planning Assistant மற்றும் Mass Interviewer பதவிகளுக்கான தேர்வுகளையும், மேலும் ஞாயிற்றுகிழமை (23.12.2018) அன்று புள்ளியியல் ஆய்வாளர் (Statistical Inspector) பதவிகளுக்கான தேர்வினையும் நடத்தியது. மேற்படி தேர்வுகளுக்கான உத்தேச விடைகள் நாளை (28.12.2018) அன்று தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்படவுள்ளது. இவ்வாறு வெளியிடப்படும் உத்தேச விடைகளில் மறுப்பு ஏதேனும் இருப்பின் விண்ணப்பதாரர்கள் அதனை தேர்வாணையத்திற்கு தெரிவித்து சரியான விடைகளைக் கோர முடியும். அதற்கான கோரிக்கைகள் விண்ணப்பதாரர்களிடமிருந்து கடந்த தொகுதி-II முதல் நிலை தேர்வு (Group-II Preliminary Examination) முன்பு வரை எழுத்துப்பூர்வமாக கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டு வந்தன. அவ்வாறு பெறப்படும் கோரிக்கைகளை அட்டவணைப்படுத்தி, சீர்படுத்தி வினா எண் வாரியாக பிரித்து எடுத்து அதற்கான வலுச்சேர்க்கும் ஆவணங்களை நகலெடுத்து உரிய வல்லுநர் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப சுமார் ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே அத்தேர்விற்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இந்த கால தாமதத்தை குறைக்க தேர்வாணையம் புதிய முறை ஒன்றை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வினாத்தாள் குறித்த கோரிக்கைகள் இணைய வழியில் மட்டுமே பெறப்படும். தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே அத்தேர்வுக்குரிய உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளைக் கோர முடியும். தேர்வர்கள் எந்த வரிசை கேள்வித்தாளை பயன்படுத்தி விடையளித்திருந்தாலும், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி மட்டுமே தேர்வர்கள் உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளைக் கோர முடியும். விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். பதிவு எண், விண்ணப்ப எண், ஆகிய இரண்டும் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலேயே இருக்கும். தேர்வர்கள் தேர்வு எழுதிய பாடத்தினை தேர்வு செய்து, பின்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி வினா எண்ணை தெரிவு செய்தால் அதற்கான கேள்வி மற்றும் சரியான விடைக்குறிப்பு திரையில் தோன்றும். விடைக்குறிப்பில் விடைகளில் மாறுபட்டக் கருத்து இருப்பின் அதன் கீழே தோன்றும் சரியான விடை / விடைகளை தெரிவு செய்ய வேண்டும். பின்னர் அதன் கீழே இருக்கும் குறிப்பு கலத்தில் தேர்வர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம். அதனைத் தொடர்ந்து தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது, அதன் ஆசிரியர், பதிப்பு வருடம், பதிப்பாளர், பக்க எண் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர், தேர்வர்கள் தெரிவித்த விடைக்கு வலுச்சேர்க்கும் உரிய ஆவணங்களை PDF கோப்புக்களாக பதிவேற்றம் செய்யவேண்டும். தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளன என்பதற்கான தகவல்களும் விடைக்கு வலுச்சேர்க்கும் உரிய ஆவணங்களும் இல்லாத கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது. பதிவேற்றம் செய்தபின் அதற்கான ஒப்புகையினை அச்சிட்டுக்கொள்ளலாம். · ஒருவர் எத்தனை விடைகளுக்கு வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கலாம். • கையால் எழுதப்பட்ட குறிப்புகள் விடைக்கான ஆதாரமாக கருதப்பட மாட்டாது. • அஞ்சல் / மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது 22.12.2018 மற்றும் 23.12.2018 அன்று நடந்த Architechtural Assistant / Planning Assistant, Mass Interviewer மற்றும் புள்ளியியல் ஆய்வாளர் (Statistical Inspector) தேர்வுகளுக்கான தோராயமான விடைக்குறிப்புகள் நாளை (28.12.2018) அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். விடைக்குறிப்புகளில் மறுப்பு இருப்பின் அதற்கான கோரிக்கைகளை தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டும் வருகிற 04.01.2019 5.45 மணிவரை இதற்கென உருவாக்கப்பட்டுள்ள இணைய பக்கத்தின் மூலம் மட்டும் அனுப்பலாம். அதற்கு பின்னர் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது. தேர்வாணைய இணைய பக்கத்தின் மூலம், உத்தேச விடைக்குறிப்புகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் முறை மட்டுமே இனி அனைத்து தேர்வுகளுக்கும் பின்பற்றப்படும். எனவே, இனி தேர்வாணையம் நடத்தும் எந்த ஒரு தேர்விற்கும் பிற வழிகளில் (அஞ்சல் / மின்னஞ்சல்) அனுப்பப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது. இரா. சுதன், இ.ஆ.ப., தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்

பத்தாம் வகுப்பு தேர்வு நேரம் மாற்றம்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஏப்ரலில் தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணையை முன்னதாகவே பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவதில் சில மாற்றங்களை தேர்வுத்துறை செய்துள்ளது. பொதுவாக பத்தாம் வகுப்பு தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 முடியும். இந்நிலையில், 2019 ஏப்ரல் மாதம் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு தேர்வில் இடம் பெறும் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் மற்றும் விருப்ப மொழிப்பாடத் தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடியும். தமிழ் முதல்தாள், இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல்தாள், இரண்டாம் தாள் ஆகிய 4 தாள்கள் மட்டும் மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணி வரை நடக்கும். இந்த நேர மாற்றம் குறித்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

வேலை வாய்ப்பு பதிவு விபரங்கள் மாயம்: பதிவை புதுப்பிக்க பட்டதாரிகள் திணறல்

வேலைவாய்ப்புக்கு பதிவு செய்தோரின் விபரங்களை, ஆன்லைனில் பதிவேற்றுவதில் நடந்துள்ள குளறுபடியால், பதிவை புதுப்பிக்க முடியாமல் பட்டதாரிகள் திணறி வருகின்றனர். தமிழக அரசின் பல்வேறு துறைகளில், காலி பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு துறையின் வழியாக, புதிய ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். பெரும்பாலான துறைகளின் காலியிடங்ளுக்கு, டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., போன்றவை வழியே, போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும், மதிப்பெண், இட ஒதுக்கீடு மட்டுமின்றி, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலும், இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதேபோல, தமிழக அரசின் வழியாக, தனியார் வேலை வாய்ப்புக்கும், இந்த பதிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, வேலை வாய்ப்புகளுக்கு, பதிவு மூப்பு முக்கிய தேவையாக உள்ளது. தற்போது, வேலை வாய்ப்பு பதிவு மற்றும் புதுப் பித்தல் பணிகள் கணினிமயமாகியுள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மண்டல அலுவல கங்கள் போன்றவற்றில், நேரடியாக புதுப்பித்தல் மற்றும் பதிவு பணிகள் நடப்பதில்லை. பட்டதாரி கள், தங்களின் பதிவு மற்றும் புதுப்பித்தலை, ஆன் லைனில் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளனர். தற்போது, 2011 முதல்புதுப்பிக்க விடுபட்டோருக்கு, ஜன., 24க்குள், பழைய பதிவு மூப்பின்படி புதுப்பிக்க சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆயிரக் கணக்கான பட்டதாரிகளால், ஆன் லைனில் புதுப் பிக்க முடியவில்லை. பலரது பதிவு விபரங்கள், ஆன்லைனில் இருந்து மாயமாகி உள்ளதே இதற்கு காரணம். மாயமான பதிவு விபரங்களின் நிலை என்னவென வேலை வாய்ப்ப்பு துறைக்கு தெரியவில்லை. பல மாவட்ட அலுவலகங்களில், பதிவு எண் விபரங்களை டிஜிட்டலில் சேர்த்த போது, பலரது விபரங்கள் விடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே, விடுபட்டோரின் விபரங் களை, மீண்டும் பதிவேற்றாவிட்டால், அவர் களின் பதிவு மூப்பு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

சத்துணவு மையங்கள் மூடப்படாது : சமூக நலத்துறை திட்டவட்டம்.

தமிழகத்தில், 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்கள், மூடப்பட உள்ளதாக பரவிய தகவலை, சமூக நலத்துறை மறுத்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், 97 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 70 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள், மாணவ - மாணவியர் பயன் பெற்று வருகின்றனர். பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவதால், சத்துணவு மையங்களில் பயன்பெறுவோரின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. எனவே, 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில், சத்துணவு மையங்களை மூடிவிட்டு, அருகில் உள்ள பள்ளிகளில் இருந்து, உணவு வழங்கப்பட உள்ளதாக தகவல் பரவியது. இதன்படி, 8,000 சத்துணவு மையங்கள் மூடப்படும் என்றும், இதனால், பயனடையும் மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் சிக்கல் ஏற்படும் என்பதால், இந்த முயற்சிக்கு எதிர்ப்பு அதிக மானது. இது குறித்து, சமூக நலத்துறை கமிஷனர், அமுதவல்லி கூறியதாவது தமிழக சத்துணவு திட்டத்தில், ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. 25க்கும் குறைவான, மாணவர்கள் உள்ள மையங்களில், சத்துணவு அமைப்பாளர்கள் உள்ளனர்; மாணவர்கள் அதிகம் உள்ள மையங்களில், அமைப்பாளர்கள் இல்லாத நிலை உள்ளது. எனவே, 25 மாணவர்களுக்கு குறைவான மையங்களில் உள்ள, 4,000 அமைப்பாளர்களை, மாணவர்கள் அதிகம் உள்ள மையங்களுக்கு மாற்ற திட்டமிட்டுஉள்ளோம். அதிலும், அருகில் உள்ள மையங்களுக்கு, அவர்களின் விருப்பப்படி தான் மாற்ற உள்ளோம். அடுத்தாண்டில், ஓய்வு பெறுவோரை மாற்றும் எண்ணம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

நிதியுதவி பெறுவதில் கட்டுப்பாடு: கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., புது உத்தரவு'

கல்லுாரிகளின் செயல்திறன் மற்றும் நிதித்தேவை அறிக்கைகளை, இணையதளத்தில் வெளியிட்டால் மட்டுமே, நிதி உதவி கிடைக்கும்' என பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பல்கலைகள் மற்றும் கல்லுரிகளுக்கு, உள்கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சி பணிகள், மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை, ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்டவற்றுக்கு, யு.ஜி.சி.,சார்பில், நிதியுதவி அளிக்கப்படுகிறது . இந்த நிதியுதவியை பெறும் போது, எந்தெந்த தேவைகளுக்கு, அவற்றை பயன்படுத்தலாம் என, யு.ஜி.சி., தரப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், பல கல்லூரிகளும், பல்கலைகளும், யு.ஜி.சி., நிதியை தவறாக பயன்படுத்துவதாக, புகார்கள் எழுந்து உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், சென்னை பல்கலையில், 200 கோடி ரூபாய்க்கு மேலான பணத்தை, யு.ஜி.சி.,யின் அனுமதியில்லாத, கட்டட பணிக்கு செலவிட்டதாக, நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் தரப்பில், போலியான தகவல்களை தெரிவிக்காமல் இருக்கவும், புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு கல்லுாரி மற்றும் பல்கலையும், தங்களின் செயல் திறன், உள் கட்டமைப்பு, திட்டங்கள் மற்றும் நிதி தேவை குறித்து, யு.ஜி.சி.,க்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இந்த அறிக்கை, இதுவரை, யாருக்கும் தெரியாமல், யு.ஜி.சி.,க்கு மட்டுமேஅனுப்பப்பட்டது. அவற்றில், போலி தகவல்கள் இருப்பதை, யு.ஜி.சி.,யால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த அறிக்கை விபரம்,சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்துடன் தொடர்புடைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவதில்லை. அதனால், கல்வி நிறுவனம் அளிக்கும் போலி தகவல்களை அறிய முடியவில்லை. எனவே, 'கல்வி நிறுவன அறிக்கையை, அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், கல்லுாரி இணையதளத்தில், கட்டாயம் வெளியிட வேண்டும். யு.ஜி.சி.,க்கு அனுப்ப தேவையில்லை' என, யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது. இந்த அறிக்கை, எந்த நேரத்திலும், யு.ஜி.சி., சார்பில் ஆய்வு செய்யப்படும்; ஆய்வுக்காக, இணையதளத்தை பார்க்கும்போது, அறிக்கை இல்லாவிட்டால், நிதியுதவி கிடைக்காது என, யு.ஜி.சி., எச்சரித்துள்ளது. அதனால், கல்லூரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வர் நியமனம் : பல்கலை ஒப்புதல் கட்டாயம்.

முதல்வர்களின் நியமனங்களுக்கு, கல்வி தகுதி ஒப்புதல் சான்று கட்டாயம் பெற வேண்டும்' என, பி.எட்., கல்லுாரிகளுக்கு, ஆசிரியர்கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது ஆசிரியர் கல்வியியலில், பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு, மத்திய அரசின், தேசிய கல்வியியல் கவுன்சில் அங்கீகாரம் வழங்குகிறது 700 கல்லுாரிகள்இதனுடன், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், பாடத் திட்ட இணைப்பு அந்தஸ்தையும், தமிழக, பி.எட்., கல்லுாரிகள் பெற வேண்டும்.தமிழகத்தில், 700 கல்லுாரிகள், பி.எட்., -எம்.எட்., படிப்பைநடத்துகின்றன இந்த கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையில் விதிமீறல், தகுதியான ஆசிரியர்களை நியமிக்காதது, தகுதியான முதல்வர்களை நியமிக்காதது என, பல பிரச்னைகள் உள்ளன அவற்றை படிப்படியாக சீரமைக்கும் நடவடிக்கையில், ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணை வேந்தர் தங்கசாமி ஈடுபட்டுள்ளார் இதன் ஒரு பகுதியாக, அனைத்து, பி.எட்., கல்லுாரிகளும், தங்கள் கல்லுாரி முதல்வர்களின், கல்வி தகுதி மற்றும் பணி நியமனத்துக்கான ஒப்புதலை பெற வேண்டும் என, துணைவேந்தர் தங்கசாமி உத்தரவிட்டுள்ளார் இதுதொடர்பாக, கல்லுாரிகளின் முதல்வர் பட்டியலை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்டுள்ளது கல்வி தகுதிபட்டியலில் இடம்பெற்றுள்ள முதல்வர்களின் நியமனத்துக்கு, பல்கலையிடம் இருந்து, கல்வி தகுதி ஒப்புதல் சான்று பெற வேண்டும்.முதல்வர்கள் இல்லாத கல்லுாரிகள், முதல்வர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இதுகுறித்த விபரங்களை, 31ம் தேதிக்குள் பல்கலைக்கு தாக்கல் செய்ய வேண்டும் என, கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளார்

முறைகேட்டை தடுக்க சீர்திருத்தம் தேவை : அண்ணா பல்கலைக்கு கல்வியாளர்கள் அறிவுரை

அண்ணா பல்கலையில் தேர்வு முறைகேடுகளை தடுக்க, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவியில், உடனே தகுதியான நபரை நியமிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது சென்னை அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில், 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் மற்றும், பி.ஆர்க்., கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளுக்கான தேர்வுகள் நடத்தும் பணிகளை, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை மேற்கொள்கிறது இந்நிலையில், அண்ணா பல்கலையின் நிர்வாகம் மற்றும் தேர்வு துறையில் நடக்கும் முறைகேடுகளும், விதிமீறல்களும், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில், அண்ணா பல்கலை மீதான மதிப்பை குறைத்துள்ளன முறைகேடுகளின் உச்சமாக, டிச., 3ல் நடந்த கணித தேர்வில், வினாத்தாள் முன்கூட்டியே, 'லீக்' ஆனது. இது குறித்து, டிச., 4ல் நமது நாளிதழில் செய்தி வெளியானது உடன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பொறுப்பை கூடுதலாக வகிக்கும், பேராசிரியர் வெங்கடேசன், சி.பி.சி.ஐ.டி.,யில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து, தனியார், இன்ஜி., கல்லுாரியின், முன்னாள் மாணவர்கள் இருவரை கைது செய்துள்ளனர் அவர்களுக்கு, வினாத்தாளை திருடி கொடுத்த, அண்ணா பல்கலையின் தேர்வு துறை ஊழியர் காஞ்சனாவும் கைது செய்யப்பட்டுள்ளார் கல்வியாளர்கள், கல்லுாரி நிர்வாகத்தினர் கூறியதாவது நாடு முழுவதும், இன்ஜி., கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கை, ஆண்டுதோறும் சரிந்து வருகிறது; வேலை வாய்ப்புகளும் குறைந்துள்ளன பெரும்பாலான நிறுவனங்கள், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., மற்றும் சுயநிதி பல்கலைகளின் மாணவர்களை, அதிக அளவில் தேர்வு செய்கின்றனர் இந்த போட்டிகளை சமாளித்து, இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது சவாலான பணியாக உள்ளது அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, கல்லுாரி தேர்வுகளில் முறைகேடு நடப்பதால், அண்ணா பல்கலை சார்ந்த மாணவர்களை வேலைக்கு எடுக்கவும், தனியார் நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன எனவே, முறைகேடுகளை தடுக்கும் விதமாக, அண்ணா பல்கலையின் தேர்வு துறையை சீரமைக்க வேண்டும். 10 மாதங்களுக்கு மேலாக காலியாக உள்ள, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவிக்கு, முறையான அறிவிப்பு செய்து, ஊழலில் ஈடுபடாதவர்களை தேர்வு செய்து, நிரந்தரமாக நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

6,333 முதியவர்கள் அரசு பணிக்கு காத்திருப்பு

வேலைவாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காக பதிவு செய்தோர் எண்ணிக்கை, நான்கு மாதங்களில், 3.28 லட்சம் குறைந்துள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஜூலை, 31ம் தேதி கணக்கின்படி, 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள், 15.78 லட்சம்; 18 - 23 வயது கல்லுாரி மாணவர்கள், 21.23 லட்சம் பேர் உட்பட, மொத்தம், 77.55 லட்சம் பேர், தங்கள் பெயர்களை, வேலைக்காக பதிவு செய்திருந்தனர். நவ., 30ம் தேதி நிலவரப்படி, இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போது, 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள், 19.80 லட்சம் பேர்; 18 - 23 வயது கல்லுாரி மாணவர்கள், 14.49 லட்சம் பேர், அரசு வேலைக்காக பதிவு செய்திருந்தனர். மேலும், 24 - 25 வயது வரை உள்ள, அரசு பணி வேண்டி காத்திருப்போர், 26.84 லட்சம் பேர்; 36 - 56 வயது வரை உள்ள, முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள், 11.05 லட்சம் பேர்; 57 வயதிற்கும் மேற்பட்டோர், 6,333 பேர் என, மொத்தம், 72.24 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்: இன்று (27.12.2018) முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்: இன்று (27.12.2018) முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது இது தொடர்பாக அரசுத் தேர்வு இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிட்ட செய்தி தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று டிச.27-ஆம் தேதி முதல் ஜன.5-ஆம் தேதி வரையிலான நாள்களில் (டிச.30, ஜன.1 தவிர) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் இணையதளம் மூலமாக தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர் தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசுத் தேர்வுத்துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால், ஒப்புகைச் சீட்டை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணத்தை சேவை மையத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் தனித்தேர்வர்கள் அவரவர் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்திலேயே தேர்வெழுத வேண்டும் முறையான ஆவணங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும், தபால் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்களும் எந்தவித முன்னறிவிப்புமின்றி தானாகவே நிராகரிக்கப்படும் மேலும் இந்தத் தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களை www.dge.tn.gov என்ற இணையதளத்தில் காணலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

கோவை வேளாண் பல்கலை. தேர்வில் 100க்கு 103 மதிப்பெண்: மாணவர்கள் அதிர்ச்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்களின் பருவ தேர்வு முடிவுகளில் ெபரும் குளறுபடி நடந்துள்ளது. பல மாணவர்களுக்கு 100க்கு 103 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 40 கல்லூரிகளின் மூலம் 12 இளங்கலை பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. இந்த மாணவர்களுக்கான பருவ தேர்வுகள் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில், பிராக்டிக்கல் 40 மதிப்பெண் மற்றும் எழுத்து தேர்வு 60 மதிப்பெண் என தேர்வு நடத்தப்படுகிறது. இதில், எழுத்து தேர்வில் 20 மதிப்பெண் மாணவர்களின் இடைப்பருவ தேர்வு முறை அடிப்படையிலும், 40 மதிப்பெண் தேர்வு அடிப்படையிலும் அளிக்கப்படுகிறது. அதுதவிர வேளாண் பல்கலைக்கழகத்தில் பிரேக்கிங் சிஸ்டம் என்ற முறை செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, மாணவர் பருவத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டு வகுப்புக்கு செல்ல முடியும். இந்நிலையில், சமீபத்தில் வேளாண் பல்கலைக்கழகம் இளங்கலை பாடப்பிரிவில் சுற்றுசூழல் மேலாண்மை துறை உள்ளிட்ட சில துறைகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் மாணவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதில், மாணவர்கள் பலருக்கு பிராக்டிக்கல் மதிப்பெண் 40க்கு 50, 51, 52, 53 என வழங்கப்பட்டுள்ளது. இதனால், இவர்களின் மொத்த மதிப்பெண் 100க்கு 101, 102 என உள்ளது. அதிகபட்சமாக ஒரு மாணவிக்கு 103 மதிப்பெண் வரை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், “ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ரிசல்ட் அதிர்ச்சி அளிக்கிறது” என்றனர். பல்கலைக்கழக தேர்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில், “தேர்வு முடிவுகளில் எந்த பிரச்னையும் இல்லை சுமுகமாக இருக்கிறது” என்றனர்.

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்து வரும் நிடி ஆயோக் அமைப்பு, புதிய இந்தியாவுக்கான கொள்கைகள் 75 என்ற தலைப்பில் அரசுக்கு பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தது அதில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பொதுப்பிரிவினரின் வயது உச்ச வரம்பை, 27 ஆக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றிருந்தன இந்நிலையில், சிவில் தேர்வுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் எதுவும், பரிசீலனையில் இல்லை என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது இதுகுறித்து பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், சிவில் சர்வீஸ் தேர்வில் வயது உச்ச வரம்பை குறைப்பது தொடர்பான பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பதவிகளுக்காக சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தப்படுகின்றன

வனத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள 16 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு வனத்துறை இடைநிலை ஆசிரியர்கள் தேவை. திருவண்ணாமலை வனக்கோட்ட கட்டுப்பாட்டில் இயங்கி வரும் வனத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு 1 ல் தேர்ச்சி பெற்ற தேர்வாளர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலி பணியிடங்கள்16 விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டியகடைசி நாள் 10.01.2019 விரிவான விவரங்கள் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடத்துக்கு, ஜன., 10க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி வெளியிட்ட அறிக்கை திருவண்ணாமலை வனக்கோட்ட கட்டுப்பாட்டில் இயங்கி வரும், வனத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள, 16 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, ஆசிரியர் பயிற்சி பட்டய தேர்வு முடித்து, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தங்களின் நகல் சான்றிதழ்களை, திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட வன அலுவலருக்கு, வரும், 10க்குள் கிடைக்கும்படி, நேரிலோ, தபால் மூலமாகவே அனுப்பலாம். விண்ணப்ப படிவங்களை அலுவலக நேரங்களில், பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.