தமிழக பட்ஜெட் பிப்ரவரி 2-வது வாரத்தில் தாக்கல்  இறுதிக்கட்டத்தில் அறிக்கை தயாரிப்பு பணிகள் 

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் நாடாளுமன்றத் தேர்தலை முன் னிட்டு பிப்ரவரி 2-ம் வாரத்தில் தாக் கல் செய்யப்படலாம் என நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதை முன்னிட்டு, மத்திய அரசு தனது இடைக்கால நிதி நிலை அறிக்கையை நாளை (பிப்.1)தாக்கல் செய்கிறது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக் கப்பட வாய்ப்புள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டால், நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அதன்பின், புதிய திட்டங்கள், சலுகைகளை அறி விக்க முடியாது. எனவே, தமிழக அரசு வரும் 2019-20 நிதியாண்டுக் கான நிதிநிலை அறிக்கையை, பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, பிப்ரவரி 2-வது வாரத்தில், குறிப்பாக பிப். 7-ம் தேதி (வியாழன்), பிப். 8-ம் தேதி (வெள்ளி) அல்லது பிப்.11-ம் தேதி (திங்கள்) என 3 நாட்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள தாக சட்டப்பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் நாளில், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அப்போது ஆட்சியில் இருந்த இதே அதிமுக அரசு சார்பில் பிப்.13-ம் தேதி நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதேபோல், இந்த ஆண்டும் முன்னதாகவே நிதிநிலை அறிக்கையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். நிதித்துறையினர் நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்கான பணி களில் முழு மூச்சில் ஈடுபட்டுள் ளனர். நிதிநிலை அறிக்கை தயாரிக் கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தலைமைச் செய லக வட்டாரங்கள் தெரிவித்தன. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

அரசு ஊழியர், ஆசிரியர் கோரிக்கை உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும் அமைச்சர் டி.ஜெயக்குமார் உறுதி

உரிய நேரம் வரும்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்தி வந்த போராட் டத்தை நேற்று விலக்கிக் கொண்ட னர். இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று கூறியதாவது: தற்போது 90 சதவீத அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணிக்குத் திரும்பிவிட்டனர். இன்னும் ஓரிரு நாட்களில் 100 சதவீத பேரும் பணிக்குத் திரும்பி, அரசுக்கு ஒத்துழைப்பார்கள். அரசு சார்பில் யாருக்கும் நெருக்கடி கொடுப்பதில்லை. அரசு ஊழியர்கள் சமுதாயத் தால் மதிக்கப்படுபவர்கள், அரசுக்கு இதயம் போன்றவர்கள். வருங்கால சமுதாயத்தை உருவாக்கும் மகத்தான பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய நிதிநிலை குறித்து அரசு ஊழியர்களுக்கு உணர்த்தி இருக்கிறோம். இதைக் கருத்தில் கொண்டு, அதன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் பணிக்குத் திரும்புவதுதான் நல்லது. இப் போது அவர்களின் கோரிக்கையை ஏற்க இயலாத நிலையில் இருக்கி றோம் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறோம். செய்ய மனம் இருந் தாலும் கூட, செய்ய முடியாத நிலையில்தான் அரசு இருக்கிறது. உரிய நேரம் வரும்போது அவர்களின் கோரிக்கை பரிசீலிக் கப்படும். இந்த நேரம் உரிய தருணம் அல்ல என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறோம். எனவே, நீதிமன்றம் மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.அரசு ஊழியர்கள் சமுதாயத் தால் மதிக்கப்படுபவர்கள், அரசுக்கு இதயம் போன்றவர்கள். வருங்கால சமுதாயத்தை உருவாக்கும் மகத்தான பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டக்கல்லுாரி பேராசியர் தேர்வு முடிவுகள் 

அரசு சட்டக்கல்லுாரி உதவிப் பேராசியர் பதவியில் காலியாக உள்ள 186 பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப முடிவானது. இதற்கு கடந்த ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து எழுத்துத் தேர்வுகள் கடந்த அக்டோபர் 13 முதல் 16-ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டன. இந்நிலையில் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் நேற்று நேற்று முன் தினம் இரவு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து நேர்முக தேர்வுக்கான பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் விரைவில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் நாளை தொடங்குகிறது  12-ம் தேதி வரை நடைபெறும்

 பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக் கான செய்முறை தேர்வுகள் நாளை தொடங்கி வரும் 12-ம் தேதி முடிகிறது. பள்ளிக்கல்வியில் சமச்சீர் பாடத் திட்டத்தின்கீழ் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளன. இதற்கிடையே பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 1 முதல் 12-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், கடந்த 22-ம் தேதி முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எனினும், திட்ட மிட்டப்படி செய்முறை தேர்வுகள் நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்தது. அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் நாளை தொடங்குகிறது. தேர்வு தொடங்கும் முன்னரே அகமதிப்பீடுக்கான பட்டியலை தயாரிக்க மாணவர்களின் செய்முறை நோட்டுகளை யும் மதிப்பிட வேண்டும். செய் முறை தேர்வுக்கு வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை நியமித்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். எந்த முறைகேடுக்கும் இடம் தரக்கூடாது. ஆசிரியர்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்பு களை மாணவர்களின் அகமதிப் பீடில் காட்டக்கூடாது என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகள் மாதிரி செய்முறை தேர்வுகளை நடத்தி முழுவீச்சில் தயாராகிவிட்டன. மறுபுறம் போராட்டம் முடிந்து பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் அரசுப் பள்ளி மாணவர்களை தயார் செய்வதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 9 நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்ததால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 9-வது நாட்களாக நேற்றும் வேலைநிறுத்தம் நீடித்தது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு மட்டுமில்லாமல், ஆர்ப்பாட்டமும் நேற்று நடத்தினார்கள். கோரிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்று ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘அர்ப் பணிப்பு உணர்வோடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். இதேபோல், எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினும் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் வேண்டுகோளாக வைத்தார். இந்த சூழ்நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சுப்பிரமணியம், அன்பரசு, தியாகராஜன், ரெங்கராஜன், வின்சென்ட் பால்ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் வேலைநிறுத்தத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அதில் இருந்து எப்படி விடுவிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, வின்சென்ட் பால்ராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:- எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. தமிழக முதல்-அமைச்சர் கோரிக்கைகள் தொடர்பாக அழைத்து பேச வேண்டும் என்று சொன்னோம். ஆனால் அழைத்து பேசவில்லை. அதற்கு பதிலாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்து இருக்கிறது. வருகிற வாரத்தில் செய்முறை தேர்வு தொடங்க இருப்பதால் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும், பெற்றோர் மன உணர்வை கருத்தில் கொண்டும், நீதிபதி வழிகாட்டுதல், முதல்-அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்பட அனைத்து கட்சி தலைவர்களின் வேண்டுகோளையும் ஏற்று காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். எங்கள் கோரிக்கைகள் அப்படியே தான் இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே முதல்-அமைச்சரின் வேண்டுகோளுக்கு அர்த்தமாக இருக்கும். வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முந்தைய நாளான 21-ந் தேதியன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எந்த நிலையில் இருந்தார்களோ? அந்த நிலையில் அவர்கள் இருக்க வேண்டும். நாளை(இன்று) முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவார்கள். நாங்கள் கடந்த போராட்டங்களின் போது எத்தனையோ முதல்-அமைச்சர்களை சந்தித்து இருக்கிறோம். அவர்களெல்லாம் நேரடியாக நெஞ்சில் தான் குத்தினார்கள். ஆனால் இப்போது இருக்கும் அரசோ, எங்களை முதுகில் குத்தி இருக்கிறது. 15 ஆண்டுகாலமாக நாங்கள் கேட்ட 25 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே இருக்கிறது என்பதை அரசு சொல்லி இருக்கிறது. இது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. விரைவில் இந்த அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால், மீண்டும் போராட்டம் தொடரும். அதேபோல், பணிக்கு திரும்புபவர்கள் மீது பணி நீக்கம் உள்பட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் எங்களுடைய போராட்டம் மீண்டும் நடக்கும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது என்று பிரத்தியேகமாக அரசு ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மையச் சங்கம், தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் (சி மற்றும் டி பிரிவு), தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக ஊர்தி ஓட்டுனர் சங்கம் ஆகிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 6 சங்கங்கள் இணைந்து, 30-ந் தேதியன்று (நேற்று) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிப்பதாக தனியாக அறிவித்தன. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், அனைத்து அரசுத் துறைச் செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், அரசு ஊழியர் விதிகள் மீறலில் ஈடுபடும் ஊழியர் மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் வேலைக்கு வராத நாளை, அங்கீகரிக்கப்படாத விடுமுறையாக கருத வேண்டும். வேலை செய்யாவிட்டால் சம்பளம் இல்லை என்ற அடிப்படையில் அவர்களுக்கு சம்பளமோ, சலுகையோ வழங்கப்படக் கூடாது என்று கூறியிருந்தார். இந்த நெருக்கடியில், அரசு ஊழியர்களின் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் எப்படி நடக்கும் என்று நேற்று காலையில் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தலைமைச் செயலகத்தைப் பொறுத்தவரையில் காலையில் இருந்தே போராட்டம் பிசுபிசுத்துவிட்டது. இந்த போராட்டத்துக்கு அரசு ஊழியர்களின் ஆதரவு போதிய அளவில் கிடைக்கவில்லை. வழக்கமாக தலைமைச் செயலகத்துக்கு காலை 9.45 மணிக்கு வரும் ஊழியர்கள் நேற்று காலை 9 மணிக்கே வந்தனர். காலை 11 மணியளவில் 91 சதவீத ஊழியர்கள் தலைமைச் செயலகத்துக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டனர். தமிழகம் முழுவதுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 4 சதவீத ஊழியர்கள் (சுமார் 32 ஆயிரம் பேர்) மட்டுமே பணியாற்ற வரவில்லை என்றும் 95 சதவீதம் பேர் பணிக்கு வந்தனர் என்றும் அரசு அதிகாரி தெரிவித்தார். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் சண்முகராஜன், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுனர் சங்கத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் நேற்று மாலையில் கூட்டாக அளித்த பேட்டி வருமாறு:- முதல்-அமைச்சரின் கனிவான வேண்டுகோளை ஏற்றும், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தயாரிப்புப் பணிகளை கருதியும், அரசு அலுவலர்கள், மாணவர்களின் நலன் கருதியும் எவ்விதமான தொடர் போராட்டத்திலும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் ஈடுபடுவதில்லை என்று அறிவிக்கிறோம். நிதிநிலை சீரானவுடன் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து உதவி செய்வோம் என்று அமைச்சரே அறிவித்துவிட்டார். எனவேதான் போராட்டத்தை நிறுத்துகிறோம். இதில் யாருக்கும் வெற்றி தோல்வி என்பது கிடையாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அரசு ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 9 நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.

TNPSC துறைத் தேர்வு அப்ஜெக்டிவ் டைப் தேர்வுகளின் உத்ததேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2018 பிப்ரவரி 17ம் தேதி நடந்த மருந்தாய்வக இளநிலை பகுப்பாய்வாளர் பணிக்கும், ஆகஸ்ட் 18ம் தேதி நடந்த சட்டத்துறை மொழிபெயர்ப்பாளர், டிசம்பர் 23ம் தேதி நடந்த கால்நடை பராமரிப்பு புள்ளியியல் ஆய்வாளர், டிசம்பர் 26ம் தேதி நடைபெற்ற உதவி நூலகர் பணிகளுக்கு பிப்ரவரி 7ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. அதே போல், 147 துறைத் தேர்வுகளை கடந்த டிசம்பர் 22, 30ல் எழுத்துத் தேர்வு முடிந்துள்ளது. இதற்கான அப்ஜெக்டிவ் டைப் தேர்வுகளின் உத்ததேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபம் இருப்பின் பிப். 6ம் தேதி மாலை 5.45 மணிக்குள் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 மாத ஊதியம் வழங்க வேண்டும்: யுஜிசி திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வெளியீடு

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு வகுப்புக்கு ரூ. 1500 வீதம் வழங்க வேண்டும் எனவும், அதிகபட்சமாக ரூ.50,000 வரை வழங்க வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டுதலை யுஜிசிதிங்கள்கிழமை வெளியிட்டது. இதை அனைத்து மாநில உயர்கல்விச் செயலாளர்களுக்கும், அனைத்துப் பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ள யுஜிசி, இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, இந்த வழிகாட்டுதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் உயர்த்தப்பட்டிருக்கும் இந்த புதிய மதிப்பூதியத்துக்கு, தில்லியில் அண்மையில் நடைபெற்ற யுஜிசி-யின் 537 ஆவது குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு வகுப்புக்கான மதிப்பூதியம் ரூ. 1500 ஆக உயர்த்தப்படுவதாகவும், அதிகபட்சமாக ஒரு மாதத்துக்கு ரூ. 50 ஆயிரம் வரை மதிப்பூதியம் உயர்த்தப்படுகிறது. கல்லூரிகளில் ஒப்பளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவேண்டும் என்றபோதும், பல்கலைக்கழகங்களில் மட்டும் ஒப்பளிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் அதிபட்சம் 20 சதவீத இடங்களில் கௌரவ விரிவுரையாளர்களை நியமித்துக்கொள்ளலாம்.யுஜிசி-யின் உதவிப் பேராசிரியர் நியமன வழிகாட்டுதலின்படியே கௌரவ விரிவுரையாளரும் நியமிக்கப்பட வேண்டும் என்பதோடு, உதவிப் பேராசிரியருக்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்களையே தேர்வு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் இடம்பெற்றுள்ளன.

அரசு கலை கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் காலி பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும்என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கார்த்திக், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் 91 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 50 கல்லூரிகள் கிராமப்புற பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.தற்போது இக் கல்லூரிகளில் 2,500 விரிவுரையாளர் பணியிடங்கள்நிரப்பப்படாமல் உள்ளன.காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த 2015-இல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை. மேலும், கௌரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்ட 3,544 பேரில் பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயம் செய்த கல்வித் தகுதிகளை 1,330 விரிவுரையாளர்கள் மட்டுமே பெற்றுள்ளனர். முறையான கல்வித்தகுதி இல்லாதவர்களால், மாணவர்களுக்கு சரியான கல்வியை கற்றுக்கொடுக்க முடியாது. கடந்த ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரிகளில் 264 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இதனால் விரிவுரையாளர்கள் பணி இடங்களும் அதிகரித்துள்ளன. எனவே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களை, யுஜிசி விதிமுறைகளை பின்பற்றி நிரப்ப அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்தநீதிபதிகள், தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களைநிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான 'நீட்' தேர்வு முடிவு இன்று வெளியீடு

மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்பட உள்ளன. நாடு முழுவதும், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்புக்கு, 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும், 2,500 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில், தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும், நீட் தேர்வில் தகுதி பெற்ற, எம்.பி.பி.எஸ்., டாக்டர்கள் சேர்க்கப்படுகின்றனர். 2019 - 20 கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும், சென்னை, கோவை உள்ளிட்ட, 148 நகரங்களில், ஜன., 6ல் நடந்தது. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் எழுதினர். தமிழகத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகள், www.natboard.edu.in என்ற, தேசிய தேர்வுகள் வாரிய இணையதளத்தில், இன்று வெளியிடப்பட உள்ளன.

சென்னை எஸ்.சி.இ.ஆர்.டி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீர் சோதனை

எஸ்.சி.இ.ஆர்.டி எனப்படும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இயக்குநர் அறிவொளி பல்வேறு மோசடியில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. குறிப்பாக அரசின் திட்டங்களில் இவர் பல பண மோசடி செய்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து பாடதிட்டம் மற்றம் பாடப்புத்தகம் தயார் செய்வதற்கான ஆலோசனை கூட்டம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆசிரியர் குழுவினர் தகுதித்தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதன் பொறுப்பு இயக்குநர் அறிவொளியிடம் உள்ள நிலையில், கூட்டம் நடத்தியதாக போலி பில் தயாரித்து மோசடி செய்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது. மேலும் சிறார்களுக்கான தேன் சிட்டு என்ற மாத இதழும் இந்த குழுவினாரால் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்கென மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு தமிழக அரசு சுமார் 4 கோடி ஒதுக்கியுள்ளது. இதிலும் இயக்குநர் அறிவொளி முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அறிவொளி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராகவும் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் இயக்குநராகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்து வருகின்றனர். மேலும் அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

அதிருப்தியை சம்பாதிக்கும் எடப்பாடி பழனிச்சாமி: தேர்தலை பாதிக்குமா?

ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில், ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் தொடர்ப்பட்ட வழக்கின் விசாரணையின் போது காரசார விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக முதல்வர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டும்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று திட்டவட்டமாக கூறி வந்தனர். இதற்கு தமிழக அரசு, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது. 10,000 பணிக்கு 3 லட்சம் பணியாளர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதனால் போராடும் ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது. யாருடனும் முதல்வர் பேச்சு நடத்த மாட்டார் என்று அரசு கூறியுள்ளது. ஏற்கனவே அதிமுக பாஜகவின் பிடியில் உள்ளது என்பது போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால் தமிழக முதல்வர் இந்த போராட்டத்திற்கு பேச்சு வார்த்தை நடத்தி முடிவுக்கு வரமால் இது போன்ற முடிவுகளை எடுப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

மாணவர்களுக்காக தான் ஆசிரியர்கள் ...போராட்டம் என்பது கூடாது - தம்பிதுரை பேட்டி

மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக தான் தற்காலிக ஆசிரியர்கள் பணியிடம். அது நிரந்தரம் கிடையாது.மேலும்., ஆசிரியர்களுக்காக தான் மாணவர்கள் கிடையாது. மாணவர்களுக்காக தான் ஆசிரியர்கள் எனவே போராட்டம் என்பது கூடாது என்று கரூர் அருகே மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை பேட்டியளித்தார். கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில், பூமி பூஜை மற்றும் அம்மா பார்க் திறப்பு விழா நிகழ்ச்சிகள் என்று 13 திட்டங்களுக்காக பூமி பூஜை, ரூ ஒரு கோடியே 78 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் மக்களவை உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பித்துரை கலந்து கொண்டு, துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் ஆங்காங்கே ஆசிரியர்கள் போராட்டக்களத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கேள்வி கேட்டதற்கு, அந்த போராட்டம் குறித்து தற்போது உயர்நீதிமன்றமே விசாரணை நடத்தி வருகின்றது. மேலும், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நான் மாநில அரசின் போராட்டம் குறித்து பேசுவது சரியாக இருக்காது. அது குறித்து அந்தந்த அமைச்சர்கள் கூறினால் தான் நல்லது என்றும்., மேலும் ஒரு சில இடங்களில் கைதும், கைதிற்கு பின்னர் விடுதலை என்றும் இருக்கின்றது. இந்நிலையில், அதற்காக தான் தற்காலிக ஆசிரியர்கள் மாணவர்களின் நலனுக்காக அரசு அறிவித்துள்ளது. இது போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தினை போல சரியாகி விடும் என்றதோடு, மாணவர்களுக்காக தான் ஆசிரியர்களே தவிர, ஆசிரியர்களுக்காக மாணவர்கள் கிடையாது, ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தினை பார்க்க வேண்டுமென்றார். பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண வேண்டுமென்றும் உயர்நீதிமன்றமே கூறியுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறினார். அது ஒரு தற்காலிக ஏற்பாடு தானே தவிர, நிரந்தர ஏற்பாடு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், பா.ஜ.க உடன், அ.தி.மு.க கூட்டணியில் இருக்குமா? என்ற கேள்விக்கு, நாங்கள் (அ.தி.மு.க) கூட்டணியில் இருக்கோமா? இன்று வரை இல்லை, இனிமேலும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எந்த கட்சி தமிழகத்திற்கு நல்லது செய்கின்றதோ, அந்த கட்சியுடன் தான், கூட்டணியே தவிர, பா.ஜ.க வின் மத்திய அரசு, தமிழக மக்களுக்கும், சரி, தமிழர்களுக்கும் எந்த வித நல்லதும் செய்ய வில்லை. ஒருவேலை கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படுமேயானால், தேர்தல் அறிவித்த பிறகே தவிர இதுவரை கூட்டணி கிடையாது என்றார். தமிழக அரசின் கோரிக்கைகள் நிறையவற்றை நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு, ஜி.எஸ்.டி ஆகியவற்றைகளை எதிர்த்தோம் ஆனால், அதை செவி சாய்க்க வில்லை, ஜி.எஸ்.டி யில் ரூ 5 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது என்றதோடு, பா.ஜ.க வின் மத்திய அரசு செய்யட்டும் கூட்டணி குறித்து மேலிடம் ஆலோசிக்கும், பா.ஜ.க கூட்டணி குறித்து பேசினாலே பிரச்சினை வரும், ஆகவே தமிழர்களையும், தமிழ்நாட்டினையும் காக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க இயக்கம் தான் என்றார். தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்ந்து வருகின்றதா ? என்றதற்கு கட்சி என்பது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டுமே தவிர, திட்டங்கள் தீட்டுவதில் மட்டுமே பா.ஜ.க முயற்சிப்பதே தவிர, அந்த திட்டங்களை நிறைவேற்றுவதில் அக்கறை கொள்ள வேண்டுமென்றார். திராவிட கட்சிகளின் செயல்பாடு இடஒதுக்கீட்டு கொள்கை என்று அனைத்து விதத்திலும் பா.ஜ.க வுடன் ஒத்துவராது, காங்கிரஸ் கட்சியே காணாமல் போய் விட்டது என்று உதாரணத்திற்காக கூறினார். யாரையோ திருப்தி படுத்துவதற்காக, பல திட்டங்களை கொண்டு வந்தால் ஏழை, எளிய மக்களுக்கு திட்டங்கள் நல்ல முறையில் தீட்ட வேண்டுமென்றார். பா.ஜ.க கட்சி தென் மாவட்டத்தில் (தென் தமிழகத்தில்) 10 இடங்களில் பிடிக்கும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை கூறியுள்ளதை தெரிவித்ததற்கு,. அது அவர்களுடைய விருப்பம், ஆனால், அது குமரிக்கண்டம் என்றதோடு, எங்கள் கட்சியின் விருப்பம் நாளையும் நமதே 40 ம் நமதே என்றார். ஆகவே பொருளாதாரத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு எந்த வித நன்மையும் பா.ஜ.க அரசு செய்யவில்லை என்றார். பேட்டியின் போது கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் உடனிருந்தார்.

போராட்டத்தை திரும்பப் பெற்றது ஏன்? ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் விளக்கம்

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் சார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் இன்று மாலை நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனை ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்தார். இது குறித்து ஜாக்டோ - ஜியோ நிர்வாகி வின்சென்ட் பால்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை ஏன் திரும்பப் பெறுகிறோம் என்றால், விரைவில் பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ளன. எனவே, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களது பெற்றோரின் மன உணர்வைக் கருத்தில் கொண்டும் எங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. முதல்வர் மற்றும் நீதிமன்றம் வலியுறுத்தலை ஏற்றும், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. எங்களது கோரிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் எங்களை அழைத்துப் பேசவில்லை. கோரிக்கைகளுக்காக போராடிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும், காவல்துறையினர் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், முதல்வர் எங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகள் குறித்துக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் அவர் பேசுகையில், ஏன் எங்களை அழைத்துப் பேச முதல்வர் மறுக்கிறார்? எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த என்ன முட்டுக்கட்டை இருக்கிறது என்று நீதிபதிகள் கூட கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்துப் பேசாமல் அவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது அரசு. ஆனால் பொதுமக்கள் நலன் கருதி, முதல்வர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் வலியுறுத்தலை ஏற்று ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் இன்று போராட்டத்தைத் திரும்ப பெறுகிறோம். நாளை முதல் அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என்று அறிவித்தார்.

9 நாட்கள் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிக வாபஸ்: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவிப்பு!

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 9 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. கடந்த 22 ஆம் தேதி துவங்கிய இந்த காலவரையற்ற போராட்டத்தை தற்போது தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். அதாவது சற்றுமுன் சென்னையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் முடிவில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தனர். மக்கள், மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக பொதுத்தேர்வுகள் வர உள்ளதால் இந்த போராட்டத்தை தற்காலிகமக கைவிடுகிறோம் என தெரிவித்துள்ளனர்.

பணிக்கு வராத 2710 ஆசிரியர்கள் மீது 17 பி நடவடிக்கை

பணிக்கு வராத2710 ஆசிரியரகள்மீது 17 பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஏற்கனவே 535 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று பள்ளிக்கு வராத 2710 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு17 பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். விளக்கம் கடிதம் கொடுக்கும் ஆசிரியர்கள் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளியில் பணியாற்ற முடியாது. அதே நேரத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் சுட்டிக்காட்டும் பள்ளியில் தங்கள்பணியை தொடர முடியும். இவ்வாறு தொடக்ககல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் போராட்டத்தை தூண்டியதாக வட்டாரக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

ஆசிரியர் போராட்டத்தை தூண்டியதாக வட்டாரக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட். இந்நிலையில், போராட்டத்துக்கு ஆசிரியர்களைத் தூண்டியதாக திருவெறும்பூர் வட்டாரக் கல்வி அலுவலர் ரெஜி பெஞ்சமின் என்ற பெண் அலுவலரை நேற்று பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார். ரெஜி பெஞ்சமின், போராட்டத்தைத் தூண்டும்விதமான பதிவுகளை சமூக வலைதளத்தில் பரப்பியதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி  ரூ.21,820 கோடி பொதுக்கணக்கில் முறையாக பராமரிக்கப்படுகிறது தமிழக அரசு விளக்கம்

 பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதியான ரூ.21,820 கோடியே 90 லட்சம் பொதுக்கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசின் நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிதி எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசிடம் கேட்டுள்ளனர். இதற்கு விளக்கம் அளித்து, தமிழக அரசின் நிதித்துறை செயலர் கே.சண்முகம் நேற்று வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003-ம் ஆண்டு நடை முறைக்கு கொண்டுவரப்பட்டது. அத்திட்டத்தின்படி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதற்கு ஈடாக 10 சதவீத தொகையை அரசு வழங்கி வருகிறது. இந்தத் தொகையை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை நிறுவனத்துக்கு (pension fund regulatory development authority) மாற்றம் செய்ய முடிவெடுக்கப் படவில்லை. எனவே, இந்த நிதி தனி பொதுக் கணக்கில் (public accounts) இருப்பு வைத்து பராமரிக்கப்படுகிறது. கரூவூல பத்திரங்களின் முதலீடு அவ்வப்போது மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் கருவூல பத்திரங்களில் இந்த நிதி முதலீடு செய்யப்படுகிறது. சேமநல வைப்பு நிதி வட்டிவீதத்தின்படி வட்டி கணக்கிடப்படுகிறது, அத் தொகைக்கும் கருவூல பத்தி ரங்களில் கிடைக்கும் வட்டிக்கும் உள்ள வித்தியாசத் தொகைக்கு மாநில அரசே பொறுப்பேற்கிறது. இந்த வகையில், கடந்த 2017-18-ம் ஆண்டு வரை, ரூ.2,115 கோடியே 47 லட்சம் கூடுதல் வட்டியை அரசு வழங்கியுள்ளது. இந்த நிதியில் ஆண்டுதோறும் பிடித்தம் செய்யப்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் களின் பங்களிப்புத் தெகை, அதற்கு ஈடான அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் அதற்கான வட்டித் தொகை முறையாக சேர்க்கப்படுகிறதா என மத்திய கணக்கு ஆய்வாளரால் சரிபார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச்.31-ம் தேதி வரை இந்த நிதியில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ரூ.8, 283 கோடியே 97 லட்சமாகும். அரசின் பங்களிப்பு ரூ.8,283 கோடியே 97 லட்சம் மற்றும், பெறப்பட்ட வட்டி ரூ.5,252 கோடியே 90 லட்சம் என, மொத்தம் ரூ. 21, 820 கோடியே 90 லட்சம் பொதுக் கணக்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிலும் பிடித்தம் செய்யப்படும் பங்களிப்புத் தொகை முறையாக வரவு வைக்கப்படுவதுடன், ஆண்டு இறுதியில் அதற்கான வட்டியும் கணக்கிடப்பட்டு அதுவும் இந்த நிதியில் சேர்க்கப்படும். ஒவ்வொருவர் கணக்கிலும் அவர்களின் பங்களிப்புத் தொகை, அரசு அதற்கு ஈடாகச் செலுத்திய தொகை, சேர்ந்துள்ள வட்டித் தொகை எவ்வளவு என்பது முறையாக அரசு தகவல் தொகுப்பு விபர மையம் மூலம் கணக்கிட்டு கணக்கு பராமரிக்கப்படுகிறது. இதை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ‘http://cps.tn.gov.in/public/’ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த நிதி தனி பொதுக்கணக்கில் வட்டியுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே, பிடித்தம் செய்யப்பட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுவதுடன், அதற் கான வட்டி, சேமநலநிதிக்கு தற்போது கிடைக்கும் வட்டியான 8 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இவ்வாறு நிதித்துறை விளக் கியுள்ளது.ஒவ்வொருவர் கணக்கிலும் அவர்களின் பங்களிப்புத் தொகை, அரசு அதற்கு ஈடாகச் செலுத்திய தொகை, சேர்ந்துள்ள வட்டித் தொகை எவ்வளவு என்பது முறையாக அரசு தகவல் தொகுப்பு விபர மையம் மூலம் கணக்கிட்டு கணக்கு பராமரிக்கப்படுகிறது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

வேலைநிறுத்த நாட்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்வதால் அரசு ஊழியர், ஆசிரியர்களின் சம்பளம் தள்ளிப்போகிறது

வேலைநிறுத்த நாட்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்ற அரசு உத்தர வால், அரசு ஊழியர்களுக்கான சம்பளம் தள்ளிப்போகிறது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் காலவரை யற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வேலை நிறுத்தத்தை ஜன.22-ம் தேதி தொடங்கினர். வேலை நிறுத்தத்தை அறிவித்தபோதே, தமிழக தலைமைச் செயலர், அதனத்து துறை செயலர்களுக் கும் அறிக்கை ஒன்றை அனுப்பி னார். அதில், ‘நோ ஒர்க் நோ பே’ என்ற அடிப்படையில், பணிக்கு வராத நாட்களுக்கு ஊதியம் வழங்கக் கூடாது என்றும் ஒரு வேளை மருத்துவ விடுப்பு எடுத்திருந்தால், ‘மருத்துவர்கள் குழு’வுக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே பணியில் சேர அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார். மேலும், மாத ஊதியத்துக்கான சம்பள கணக்கு பட்டியல் கருவூலத்துறைக்கு அனுப்பப் பட்டால், பணிக்கு வராத நாட்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் கருவூலத்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தி யிருந்தார். இதன்படி, ஜன.22-ம் தேதி முதல் பணிக்கு வராதவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டு, அந்தந்த துறைத்தலைவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இருப்பினும், பல துறைகளில் சம்பள கணக்கு பட்டியல் பணிக்கு வராத நாட்களை கணக்கிடாமலேயே கருவூலத்துக்கு அனுப்பப்பட் டுள்ளது. இது தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கவனத் துக்கு வந்தது. இதையடுத்து, அரசு ஊழியர்களின் சம்பள கணக்கு பட்டியலை திரும்ப பெறும்படி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அவர் அறிவுறுத் தியுள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு வராத நாட்களை கணக்கிட்டு, அவற்றை குறைத்து பட்டி யலை அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வழக்கமாக ஜன.31-ம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரவேண்டிய சம்பளம் இந்த மாதம் சற்று தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

பிப்.13 முதல் 22-ம் தேதிக்குள் பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்த ராதேவி அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறப்பட்டிருப்பதாவது: பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கு முன்பாக செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும். பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு மதிப்பெண் களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளித் தலைமை ஆசிரியர்களும், முதன்மைக் கண்காணிப்பாளர் களும் பிப்ரவரி 1 முதல் 9-ம் தேதி வரை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில், தங்களுக்கு வழங்கப்பட்ட யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி ஆன் லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். புதிய பாடத் திட்டத்தின்படி, பிளஸ் 2 செய் முறைத் தேர்வுக்கான வழிமுறை களையே பின்பற்றி செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 13 முதல் 22-ம் தேதி வரையிலான நாட்களில் கண் டிப்பாக நடத்த வேண்டும். உரிய ஆவணங்களுடன் செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டி யலை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் பிப்ரவரி 23-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் பிப்ரவரி 18 முதல் 23-ம் தேதி வரை செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதோடு மதிப்பெண் பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் பிப்ரவரி 26-ம் தேதி ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் 1,300 பேர் இடைநீக்கம்

தமிழகம் முழுவதும் 1,300 பேர் இடைநீக்கம் எதிரொலி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு திரும்புகின்றனர் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு திரும்ப முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் சென்னை எழிலக வளாகத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர். படம்: ம.பிரபு சென்னை தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 1,300-க்கும் அதிகமான ஆசிரியர்கள் பணி இடைநீக் கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆசிரியர் கள் பரவலாக பணிக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். போராட்டம் தொடர் வதாக ஜாக்டோ - ஜியோ தெரிவித்துள்ள நிலையில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, ஊதிய முரண்பாடுகளை சரிசெய்வது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கியுள்ளன. தேர்வு நெருங்கும் நேரத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆசிரியர்கள் நேற்று காலை 9 மணிக் குள் பணிக்கு திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கையுடன், வேறு இடத்துக்கு மாற்றப்படுவார்கள். அந்த இடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படு வார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்தது. பின்னர், இந்த கெடு நேற்று இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, பல ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு நேற்று பள்ளிகளுக்கு சென்றனர். 90 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று கூறும் போது, ‘‘மாணவர் நலன் கருதி, அரசின் கோரிக்கையை ஏற்று பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர். மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 13 ஆயிரத்து 758 ஆசிரியர்கள் உள்ளனர். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களில் 97 சதவீதம் பேர் பள்ளிக்கு சென்று தங்கள் பணிகளை தொடங்கியுள்ளனர்’’ என்றார். இடைநிலை ஆசிரியர்களில் 85 சதவீதம் பேர் பணிக்கு திரும்பிவிட்டதாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஏ.கருப்பசாமி தெரிவித்தார். இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள், பள்ளிக்கு வராதவர்கள் என தமிழகம் முழுவதும் 1,300-க்கும் அதிகமான ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டு, அதே மாவட்டத்துக்குள் பணிமாறுதல் பெற விரும்பும் ஆசிரியர் களைக் கொண்டு அந்த இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. தற்காலிக ஆசிரியர் பணிக்கு மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.அதில் தகுதியானவர்களை தேர்வு செய்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர் வானவர்களின் விவரங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட் டுள்ளன. ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கிய பிறகு, தற்காலிக ஆசிரியர் களை நியமிக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. எழுத்துப்பூர்வமாக கடிதம் ஆசிரியர்கள் பணிக்கு வராத நாட் களுக்கு மட்டும் சம்பளம் பிடித்தம் செய்யப் படும். மற்றபடி, அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. ஒருவேளை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளிக்குச் சென்ற ஆசிரியர்களிடம் ‘இனி போராட்டத்தில் ஈடுபட மாட்டோம்’ என எழுத்துப்பூர்வமாக கடிதம் பெறப் பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னையில் செய்தி யாளர்களிடம் ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மு.சுப்ரமணியன் நேற்று மாலை கூறும்போது, ‘‘போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. பெரும்பாலான ஆசிரியர்கள் இன்னும் பணிக்கு திரும்பவில்லை. அரசு தவறான தகவலை வெளியிடுகிறது’’ என்றார். இதற்கிடையில், 8-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. தமிழகத் தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை எழிலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப் பாளர்கள் தியாகராஜன், மாயவன் உட்பட 500-க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். ஜாக்டோ - ஜியோவுக்கு ஆதரவாக தமிழ்நாடு நீதித் துறை பணியாளர் சங்கம், தமிழ்நாடு தேர்வுத் துறை பணி யாளர் சங்கம் ஆகியவை நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கின. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களான தமிழ்நாடு தலைமை செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் (என்ஜிஓ சங்கம்), தமிழ்நாடு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மையச் சங்கம், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர் சங்கம் ஆகிய 5 சங்கங்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ஜாக்டோ - ஜியோவின் கோரிக்கையோடு, கைதான அரசு ஊழியர்களை நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்வது, அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வது ஆகிய கோரிக்கைகளையும் இவர்கள் வலியுறுத்துகின்றனர். ‘வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவசர நிகழ்வுகளுக்கு மட்டுமே தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படும்’ என்று தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். முதல்வர் ஆலோசனை ஜாக்டோ - ஜியோவின் வேலைநிறுத் தப் போராட்டம் ஒரு வாரத்துக்கு மேல் நீடித்துவருவதால், அரசு அலுவலகங் களில் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட் டுள்ளன. இந்நிலையில், முதல்வர் பழனி சாமி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, முதல்வர் பழனி சாமி வெளியிட்ட அறிக்கை: அரசு ஊழியர் கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு என்றும் புறந்தள் ளியது இல்லை. மத்திய அரசு ஊழியர் களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டவுடன் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கி அரசு ஆணையிட்டது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,400 கோடி கூடு தல் செலவு ஏற்பட்டாலும் கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் நிலுவைத் தொகையுடன் வழங்கப்பட்டது. நம் சுயநலத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் தியாக உணர்வோடு, நம் உரிமைகளை விட்டுக்கொடுத்து மக்கள் பணியாற்றுவது நம் கடமை. தமிழகம் வறட்சியின் பிடியில் உள்ளது. கஜா புயல் பாதிப்புகளில் இருந்து டெல்டா மீண்டு வரவில்லை. விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும். தொழில் முதலீடுகளை பெற்றால்தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். இத்தகைய பொறுப்புகள் இருக்கும் போது, உரிமைகளை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பது பொருத்தமாக அமையாது. எனவே, அரசு ஊழியர், ஆசிரியர்கள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு உடனடியாக மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். மக்கள் நலத் திட்டங்களை யும், வளர்ச்சித் திட்டங்களையும் அர்ப் பணிப்போடு செயல்படுத்த வேண்டும். இதை எனது அன்பான வேண்டுகோளாக கருதி நாளையே (இன்று) பணிக்குத் திரும்ப கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

‘கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் தொடரும்’ ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பேட்டி

நாங்கள் அநியாயமாக எதையும் கேட்கவில்லையே? என்றும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்றும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர். சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், அன்பரசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன், சுப்பிரமணியன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:- மாணவர்களை பணயம் வைத்து எங்களுடைய போராட்டத்தை நசுக்க பார்க் கிறார்கள். மாணவர்களின் படிப்பை வீணடிப்பது அரசாங்கமும், ஆளுங்கட்சியும் தான். எங்களை அழைத்து பேசினால் எங்களுடைய போராட்டம் குறித்து மறுபரிசீலனை செய்வோம். 9 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒரு கோரிக்கையும் நிறைவேற்ற முடியாது. வெறுங்கையோடு திரும்பி போங்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அடக்குமுறையை ஏவி விடுகிறார்கள். வேறு ஆட்களை நியமனம் செய்வோம் என்று சொல்வதால் பலர் பணிக்கு திரும்புகிறார்கள். பயமுறுத்தி பணிய வைக்கலாம் என்று பார்க்கிறார்கள். நாங்கள் அநியாயமாக எதையும் கேட்கவில்லையே?. முதல்-அமைச்சர், நிதி அமைச்சர் எங்களை அழைத்து பேச வேண்டும். முதல் நாளே அழைத்து பேசி இருந்தால் இந்த வேலைநிறுத்தம் இவ்வளவு தூரம் வந்து இருக்காது. அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால், தேர்தல் பணிகள், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவதாக கல்வித்துறை தவறான தகவல்களை தெரிவிக்கிறது. எங்களுக்கு ஆதரவாக சங்கங்களும் கரம் கோர்க்கின்றனர். எங்களுடையை கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் வேலைநிறுத்தம் முடிவடையும். அதுவரை வேலைநிறுத்தம் தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு..

அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு. ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை. கல்வியை காப்பது கல்வியாளர்களின் கடமை. அரசு கடமை தவறினாலும், ஆசிரியர் கடமை தவறலாகாது. தேர்வு நெருங்கும் வேளையில் நாளைய நம்பிக்கையாம் மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமை. பேச்சுவார்த்தைகள் உரிமைக்காக தொடரட்டும். கல்விச்சாலைகள் கடமைக்காக திறக்கட்டும். எட்டு கோடி தமிழர்களின் உணர்வுகளின் சார்பாக இதுவே என் குரல். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆசிரியர்கள் போராட்டத்தை தூண்டிய பெண் அதிகாரி பணியிடை நீக்கம்

ஆசிரியர்களின் போராட்டத்தை தூண்டியதாக பெண் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வேலைநிறுத்தம் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆசிரியர்களை உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வி துறை எச்சரித்தது. இதைதொடர்ந்து நேற்று காலை ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பணிக்கு திரும்பினர். திருச்சி மாவட்டத்திலும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றிருந்த ஆசிரியர்கள் பலர் பள்ளிக்கு சென்றனர். ஒரு சில இடங்களில் மட்டும் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் இருந்தனர். பணியிடை நீக்கம் இந்தநிலையில் திருவெறும்பூர் வட்டார கல்வி அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர் பணிக்கு திரும்பாமல் இருந்ததாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருட்டிணனுக்கு தகவல் வந்தது. மேலும் அந்த வட்டார கல்வி அதிகாரியான ரெஜி பெஞ்சமின், ஆசிரியர்களின் போராட்டத்தை தூண்டிவிடுவதாகவும் புகார் வந்தது. இதைதொடர்ந்து திருவெறும்பூர் வட்டார கல்வி அதிகாரி ரெஜி பெஞ்சமினை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருட்டிணன் பணியிடை நீக்கம் செய்து நேற்று மதியம் உத்தரவிட்டார். இதுகுறித்து ராமகிருட்டிணனிடம் கேட்டபோது, “திருவெறும்பூர் வட்டார கல்வி அதிகாரி ரெஜி பெஞ்சமின், ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார். மேலும் போராட்டத்தை தூண்டி விட்டதாக தகவல் வந்தது. இதனால் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்” என்றார்.

தமிழக காவல்துறையில் 202 கைரேகை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான நேர்முகத்தேர்வு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் கட்டணமில்லா பயிற்சி

தமிழக காவல்துறையில் 202 கைரேகை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான நேர்முகத்தேர்வுக்கு, சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படுகிறது. கைரேகை சப்-இன்ஸ்பெக்டர் தமிழக காவல்துறையில் 202 கைரேகை சப்-இன்ஸ்பெக்டர்கள் பதவிக்கான அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. இதற்காக ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த 202 பதவிகளில் 40 பதவிகள் காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்தன. விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி நடந்தது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த 20-ந் தேதி உயரம் சரிபார்க்கப்பட்டது. இந்த நிலையில் பிப்ரவரி 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெற இருக்கிறது. கட்டணமில்லா பயிற்சி இந்த நேர்முகத்தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் கட்டணமில்லா பயிற்சியை அளிக்கிறது. இந்த பயிற்சியை, காவல்துறையில் பணியாற்றிய அனுபவமிக்கவர்கள் அளிக்கிறார்கள். இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சென்னை-35, சி.ஐ.டி. நகர், முதல் பிரதான சாலையில் உள்ள மனிதநேய மைய அலுவலகத்துக்கு நேரில் பதிவு செய்துகொள்ளலாம். நேர்முகத்தேர்வில் எவ்வாறு கலந்துகொள்ள வேண்டும்? என்னென்ன கேள்விகள் கேட்கப்படும்? அதற்கு எந்தெந்த வகையில் பதில் அளிக்க வேண்டும்? என்பது உள்பட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட இருக்கின்றன. இந்த தகவலை மனிதநேய மையத்தின் பயிற்சி இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

‘ஐகோர்ட்டு தீர்ப்பு ஏமாற்றமும், அதிருப்தியும் அளிக்கிறது’ ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கருத்து

‘ஐகோர்ட்டு தீர்ப்பு ஏமாற்றமும், அதிருப்தியும் அளிக்கிறது’ ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கருத்து. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் வேலைநிறுத்தம் தொடர்பாக ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறியதாவது:- போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும் என்று அரசாங்கத்துக்கு ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்து இருக்கலாம். ஐகோர்ட்டுக்கு அதற்கு உரிமை இருக்கிறது. நாங்கள் அந்த வார்த்தையை நீதிபதி கூறுவார் என்று பெரிதும் எதிர்பார்த்தோம். இந்த தீர்ப்பு ஏமாற்றமும், அதிருப்தி அளிப்பதாகவும் இருக்கிறது. வழக்கு நடந்து கொண்டிருந்த போது, அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், முதல்-அமைச்சர் பேசமாட்டார் என்று ஆணித்தரமாக கூறினார். இது சர்வாதிகார போக்கு போல் தான் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் பணியிடம் காலியிடமாக அறிவிப்பு பள்ளிக்கல்வி இயக்குனர் அதிரடி நடவடிக்கை.

பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் பணியிடம் காலியிடமாக அறிவிப்பு பள்ளிக்கல்வி இயக்குனர் அதிரடி நடவடிக்கை. பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கீழ் கடந்த 22-ந்தேதி முதல் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் 29-ந் தேதி(நேற்று) காலை 9 மணிக்கு பணியில் சேர அறிவுறுத்தப்பட்டது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் அதிக அளவிலான ஆசிரியர்கள் அரசின் கோரிக்கையை ஏற்று பணியில் சேர்ந்துள்ளார்கள். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு பணியில் சேராத ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(ஆ)-ன் கீழ் குற்ற குறிப்பாணை வழங்கப்பட வேண்டும். மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நியமன அலுவலரால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தை பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு தெரிவிக்க வேண்டும். 29-ந்தேதி (நேற்று) இரவு 7 மணிக்குள் பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக கணக்கிடப்பட்டு பள்ளிக்கல்வி இயக்குனருக்கு பட்டியல் அனுப்பப்பட வேண்டும். 30-ந்தேதி(இன்று) முதல் பணியில் சேர வரும் ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர்களின் முன் அனுமதி பெற்ற பின்னரே பணியில் சேர அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கும்போது அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியில் சேர அனுமதி கோரினால் பொதுமக்களின் எதிர்ப்புகளை தவிர்க்கும் பொருட்டும், ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதியும் முதன்மை கல்வி அலுவலரால் பணியாணை வழங்கப்படும் இடத்தில் பணியில் சேர அறிவுறுத்தி, அதன் விவரத்தை பள்ளிக்கல்வி இயக்குனருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுகிறது தமிழக அரசு விளக்கம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி பராமரிப்பு பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் அது பற்றிய உண்மை நிலையை விளக்க வேண்டியது அவசியமாகிறது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை 2003-ல் நடைமுறைக்கு கொண்டுவந்த பின்பு, அத்திட்டப்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு ஈடாக 10 சதவீதம் தொகையை அரசு வழங்கி வருகிறது. இத்திட்டப்படி இந்தத் தொகைகளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை நிறுவனத்துக்கு மாற்றம் செய்ய முடிவெடுக்காத நிலையில் இந்த நிதி தனி பொதுக்கணக்கில் இருப்பு வைத்து பராமரிக்கப்படுகிறது. முறையாக சரிபார்ப்பு இந்த நிதி அவ்வப்போது மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் கருவூல பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. சேமநல வைப்பு நிதி வட்டி வீதத்தின்படி வட்டியைக் கணக்கிட்டு, அத்தொகைக்கும் கருவூல பத்திரங்களில் கிடைக்கும் வட்டிக்கும் உள்ள வித்தியாசத் தொகையை மாநில அரசே பொறுப்பேற்று அதை கருவூல பத்திர முதலீட்டில் கிடைக்கும் வட்டியுடன் இந்த பொதுக் கணக்கு நிதியில் சேர்க்கப்படுகிறது. அந்தவகையில் அரசு 2017-18-ம் ஆண்டு வரை ரூ.2,115.47 கோடி கூடுதல் வட்டியை வழங்கியுள்ளது. இந்த நிதியில் உரியவாறு ஆண்டுதோறும் பிடித்தம் செய்யப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புத் தொகை, அதற்கு ஈடான அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் அதற்கான வட்டித் தொகை முறையாக சேர்க்கப்படுகிறதா? என மத்திய கணக்கு ஆய்வாளரால் சரிபார்க்கப்படுகிறது. இணையதளம் மூலம்... கடந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை இந்த நிதியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ரூ.8,283.97 கோடியுடன் அரசின் பங்களிப்பாகப் பெறப்பட்ட ரூ.8,283.97 கோடியும், பெறப்பட்ட வட்டியாக ரூ.5,252.90 கோடியும் பொதுக்கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டிலும் பெறப்படும் பங்களிப்புத் தொகை முறையாக வரவு வைக்கப்படுவதுடன் ஆண்டின் இறுதியில் அதற்கான வட்டியும் கணக்கிடப்பட்டு அதுவும் இந்த பொதுக் கணக்கு நிதியில் சேர்க்கப்படும். ஒவ்வொரு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியரின் கணக்கிலும் அவர்களின் பங்களிப்புத் தொகை எவ்வளவு?, அரசு அதற்கு ஈடாகச் செலுத்திய தொகை எவ்வளவு?, சேர்ந்துள்ள வட்டித் தொகை எவ்வளவு? என்பதை முறையாக அரசு தகவல் தொகுப்பு விவர மையம் மூலம் கணக்கிட்டு கணக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் விவரத்தை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் http://cps.tn.gov.in/pub-l-ic இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 8 சதவீதம் வட்டியுடன்... இந்த நிதி தனி பொதுக்கணக்கு வட்டியுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே பிடித்தம் செய்யப்பட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுவதுடன் அதற்கான வட்டி, சேமநல நிதிக்கு தற்போது கிடைக்கும் வட்டி அளவான 8 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர் ‘வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளம் கிடையாது

கடந்த 7 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் நேற்று பணிக்கு திரும்பி இருப்பதாகவும், வேலைநிறுத்த நாட்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கீழ் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்ற ஆசிரியர்களில் 1,273 பேரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை நடவடிக்கை எடுத்து இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஐகோர்ட்டு மதுரை கிளை கோரிக்கைகளுக்காக தெருவில் இறங்கி போராடுவதா? என்று கண்டனம் தெரிவித்து, வழக்கை ஒத்திவைத்தது. ஐகோர்ட்டு வழக்கை ஒத்திவைத்த நிலையிலும், ஆசிரியர்கள் மீது அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும் கடந்த 7 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களில் பெரும்பாலானோர் நேற்று பணிக்கு திரும்பியதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன் கூறும்போது, ‘பள்ளிக்கல்வியை பொறுத்தவரையில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 758 பேரில், 6 ஆயிரத்து 767 பேர் மட்டுமே பணிக்கு வரவில்லை. இது 97 சதவீதம் வருகையை காட்டுகிறது’ என்றார். இதேபோல், தொடக்கக்கல்வியை பொறுத்தவரையில் 80 முதல் 85 சதவீதம் வரை ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதாக அதன் இயக்குனர் கருப்பசாமி தெரிவித்தார். ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பி இருப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு மீண்டும் பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எதுவும் இருக்காது. ஆனால் அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான சம்பளம் கிடையாது. இந்த சம்பளம் பிடித்தம் இம்மாத கணக்கிலேயே எடுத்துக்கொள்ளப்படும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு பணிக்கு திரும்பிய ஆசிரியர்களிடம் எழுத்துப்பூர்வமாக போராட்டத்தில் இனி ஈடுபடமாட்டோம் என எழுதி வாங்கப்பட்டு இருக்கிறது. மீண்டும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவதால் தற்காலிக ஆசிரியர் நியமனம் தாமதம்

ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவதால், தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கல்வித்துறை தாமதப்படுத்தி வருகிறது. நேற்று மாலை வரை பணிக்கு வராத ஆசிரியர்களின் பட்டியலை கொண்டு தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் செய்ய இருக்கின்றனர். சென்னையில் 99.9 சதவீதம் ஆசிரியர்கள் நேற்று பணிக்கு திரும்பியதாகவும், 3 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்றும், ஒரு ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி தெரிவித்தார். மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் ஏற்கனவே அதே மாவட்டத்தில் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் மாறுதல் பெற்றுக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருந்தது. அதன்படி, ஆசிரியர்கள் மாறுதல் பெற்று அந்தந்த பணியிடங்களில் பணி அமர்த்தப்பட்டு வருகின்றனர். பணி மாறுதல் பெற்று வரும் ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாகவும், அதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

6 சங்கங்கள் இன்று அடையாள வேலை நிறுத்த அறிவிப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தலைமை செயலக ஊழியர்கள் இடைநீக்கம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளர் உத்தரவு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தலைமை செயலக ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 6 சங்கங்கள் அறிவிப்பு பழைய ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பகுதியினர் ஆசிரியர்கள் ஆவர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மையச் சங்கம், தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் (சி மற்றும் டி பிரிவு), தமிழ்நாடு அரசு தலைமை செயலக ஊர்தி ஓட்டுனர் சங்கம் ஆகிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 6 சங்கங்கள் இணைந்து, 30-ந் தேதியன்று (இன்று) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் குதிப்பதாக கூறியுள்ளன. இடைநீக்கமும், பரபரப்பும் இதனால் தலைமை செயலகம் உள்பட தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களும் ஸ்தம்பிக்கும் அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் தலைமை செயலக ஊழியர்கள் பலரை இடைக்கால பணி நீக்கம் செய்து சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது தலைமை செயலகத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. வேளாண்மைத்துறையின் பிரிவு அலுவலர் எம்.ராஜேஸ்வரிக்கு வேளாண்மை உற்பத்தி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்த உத்தரவில், 22-ந் தேதியில் இருந்து காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், தமிழ்நாடு சிவில் சர்வீஸ் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17 (இ) பிரிவின்படி உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. அதுபோல சட்டமன்ற செயலகத்தை சேர்ந்த ஹரிசங்கர் உள்பட 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இடைநீக்க உத்தரவு அளிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30-ஐ தாண்டும் என்று கூறப்படுகிறது. விளக்கம் இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் அறிவித்திருந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் குறித்த சில தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தின் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி நிருபர்களிடம் நேற்று மாலை விளக்கம் அளித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து அங்கீகரிக்கப்பட்ட 6 சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்திருந்தோம். இதை முதல்-அமைச்சர் மற்றும் தலைமை செயலாளரிடம் கூறியிருந்தோம். அழைத்து பேசவில்லை ஆனால், எங்களை அரசு அழைத்து பேசவில்லை. எனவே ஏற்கனவே அறிவித்தபடி 30-ந் தேதி (இன்று) அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நிச்சயமாக நடத்துகிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. அனைத்து பிரிவினரும் இதில் பங்கேற்க வேண்டும். எங்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். எங்களை அழைத்து பேசவேண்டும். கைது நடவடிக்கைகளையும், இடைநீக்க உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும். விடுப்பு எடுத்தால் நோட்டீஸ் பிறப்பிப்பது உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் உள்ளன. 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை முதல்-அமைச்சர் அழைத்து பேசுவார் என்று நம்புகிறோம். இல்லாவிட்டால், 31-ந் தேதி (நாளை) மீண்டும் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி பேசுவோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணம், நிதித்துறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அது எங்கும் போகவில்லை. இவ்வாறு அவர் கூறினார். எச்சரிக்கை சுற்றறிக்கை பீட்டர் அந்தோணிசாமியின் பேட்டி வெளியான சில நிமிடங்களில், அனைத்து அரசு துறைச் செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனுப்பிய சுற்றறிக்கை வெளியானது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 30-ந் தேதியன்று சில சங்கங்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, ஏற்கனவே பிறப்பித்த அறிவுரைகளை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். சம்பளம், சலுகை இல்லை தமிழக அரசு ஊழியர்கள் யாரும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்தவிதமான நடவடிக்கையில் ஈடுபடுவது, போராட்டத்தில் பங்கேற்பது அல்லது போராட்டம் நடத்த இருப்பதாக அச்சுறுத்துவது, அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டை பாதிப்பது போன்ற நடவடிக்கை ஈடுபடுவது, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள் 1973-ன் 20, 22, 22ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் விதிமீறலாக கருதப்படும். அந்த விதிமீறலில் ஈடுபடும் ஊழியர் மீது அதற்கான விதியின் கீழ் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் வேலைக்கு வராத நாளை, அங்கீகரிக்கப்படாத விடுமுறையாக கருத வேண்டும். வேலை செய்யாவிட்டால் சம்பளம் இல்லை என்ற அடிப்படையில் அவர்களுக்கு சம்பளமோ, சலுகையோ வழங்கப்படக்கூடாது. கடுமையான நடவடிக்கை போராட்டத்தில் ஈடுபடும், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பகுதிநேர ஊழியர்கள் தொகுப்பூதியம் பெறும் ஊழியர்கள் போன்றவர்கள், உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கான விதிகளை யாரும் மீறாதபடி கவனிக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத விடுப்பில் இருந்து கடமை தவறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 30-ந் தேதியன்று அவசர நிலையில் உள்ளவர்கள் தவிர, மற்ற யாருக்கும் தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படக் கூடாது. விடுப்பின் உண்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டியது ஊழியர்களின் கடமை. எனவே அடையாள வேலை நிறுத்த போராட்டம் மற்றும் வேறு நாட்களில் நடக்க இருக்கக்கூடிய போராட்டம் ஆகியவற்றை கவனித்து, விதிமீறலை பற்றிய அறிக்கையை அனுப்ப வேண்டும். வேலைக்கு வந்திருக்கும் ஊழியர்கள் பற்றிய விவரங்களையும் அனுப்ப வேண்டும். அத்துடன், வந்த ஊழியர்கள் அந்த நாள் முழுவதும் பணியில் இருக்கிறார்களா என்பதையும் உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், தலைமை செயலக ஊழியர்கள் பலருக்கும் தனித்தனி சுற்றறிக்கை அந்தந்த துறைச் செயலாளர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதில், அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க கூடாது, கூட்டமாக கூடக்கூடாது, அரசுக்கு எதிராக கோஷமிடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. விலகல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்த அங்கீகரிக்கப்பட்ட 6 சங்கங்களில், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் (சி மற்றும் டி பிரிவு), அதிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது. கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் விலகுவதாக அந்த சங்கம் கூறியுள்ளது. இதுதவிர, மேலும் 2 சங்கங்கள் அதிலிருந்து விலகி விட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, இன்று நடத்தப்படும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கம் முழு ஆதரவு வழங்கும் என்று அதன் தலைவர் அருள் அறிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன், முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த மாட்டார் ஐகோர்ட்டில் அரசு திட்டவட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் தமிழக முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த மாட்டார் என்று சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் கூறினார். மாணவர்களின் நலன் பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர், கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் ஈடுபட்டதால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ஆசிரியர்களின் போராட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், ‘பொதுத்தேர்வு நெருங்குவதால், மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்ப முடியுமா?’ என்று கேள்வி கேட்டு, அதற்கு பதில் அளிக்கும்படி ஆசிரியர்கள் சங்கங்களின் வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். போராட்டத்தை கைவிட தயார் இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன், ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆசிரியர்கள் சார்பில் வக்கீல் ஜி.சங்கரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத், ‘அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பல்வேறு கோரிக்கைகளை பல ஆண்டுகளுக்கு முன்பே அரசுக்கு தெரிவித்து விட்டனர். கடந்த ஆண்டு போராட்டம் நடத்த முற்பட்டபோது, ஐகோர்ட்டு மதுரை கிளை தடை விதித்தது. அப்போது எங்களது கோரிக்கையை பரிசீலிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எங்களது கோரிக்கையை அரசு பரிசீலிக்கவில்லை. எங்களை பொறுத்தவரை தமிழக முதல்-அமைச்சர் எங்கள் சங்க பிரதிநிதிகளை சந்தித்து குறைகளை கேட்கவேண்டும். அவர் பேச்சுவார்த்தை நடத்தினால், போராட்டத்தை கைவிட தயார்’ என்றார். பங்களிப்பு ஓய்வூதியம் வக்கீல் ஜி.சங்கரன் தன் வாதத்தில், ‘ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போராட்டம் நீண்டகால போராட்டம் ஆகும். அவர்கள் நியாயமான கோரிக்கையுடன் தான் இந்த போராட்டத்தை நடத்துகின்றனர். பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தில், ரூ.25 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு செலுத்தாமல் தமிழக அரசு உள்ளது. இந்த திட்டத்துக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்து அரசு வைத்துக் கொண்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத்தில் அரசின் பங்கை இதுவரை செலுத்தவில்லை. 7-வது ஊதிய உயர்வுக்குழு பரிந்துரையின் அடிப்படையில், ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு மாணவர்களின் எதிர்காலம் மீது அக்கறை உள்ளது. அதேநேரம் அவர்களது கோரிக்கையை முதல்-அமைச்சர் கேட்டு, பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்’ என்றார். பேச்சுவார்த்தை கிடையாது மேலும், ‘ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு தொடர்ந்து பரிசீலிக்கவில்லை என்பதால்தான் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். ஆனால், ஆசிரியர்களை இடைநீக்கம் செய்தும், பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு விருப்பத்துக்கேற்ப இடமாற்றமும் வழங்கியும் போராட்டத்தை நீர்த்துப்போக முயற்சிக்கிறது. பெரும்பாலான ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்போது தவறான புள்ளி விவரங்களை தெரிவித்து, போராட்டக்காரர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது’ என்று அவர் கூறினார். இதையடுத்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், ‘பல மாதங்களாக இவர்களுடன் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவிட்டனர். புதிதாக பேசுவதற்கு எதுவும் இல்லை. அதனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் தமிழக முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த மாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார். திரும்பிவிட்டனர் மேலும் அவர், ‘அரசுப்பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை பிடித்தம் போக இரண்டாம் நிலை ஆசிரியர்கள் பணிக்கு சேரும்போது ரூ.18 ஆயிரமும், ஓய்வு பெறும் நேரத்தில் ரூ.56 ஆயிரமும் பெறுகின்றனர். அதுவே உயர்நிலை, மேல்நிலை ஆசிரியர்கள் ஓய்வு பெறும் நேரத்தில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் சம்பளம் பெறுகின்றனர். தலைமை ஆசிரியர்களில் என்றால் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் சம்பளம் பெறுகின்றனர். தற்போதைய நிலவரப்படி 85 முதல் 90 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர். எஞ்சியவர்களும் உடனடியாக பணிக்கு திரும்பிவிடுவர். இதுவரை 3 லட்சம் பேர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கின்றனர். இதில் இருந்து வேலை கிடைக்காத ஆசிரியர்களின் நிலைமையை புரிந்துகொள்ள வேண்டும். தற்போதுள்ள கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு ஏற்கனவே ஐகோர்ட்டு மதுரை கிளையில் நிலுவையில் உள்ளதால், தற்சமயம் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது இயலாத காரியம்’ என்று கூறினார். அரசுக்கு மிரட்டல் அதையடுத்து நீதிபதி என்.கிருபாகரன், ‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு சமூக தீர்வு காணவேண்டும் என்பதுதான் இந்த ஐகோர்ட்டின் எண்ணம். தற்போது, மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்புகின்றனர் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இது மிகவும் மகிழ்ச்சியான விசயம். இருதரப்பும் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். அதேநேரம் ஆசிரியர்கள் போராடத் தொடங்கியதும், நீதித்துறை ஊழியர்கள் உள்ளிட்ட மற்ற அரசு ஊழியர்களும் சேர்ந்து போராட்டம் நடத்துவது என்பது அரசை மிரட்டி பணியவைப்பது போல் உள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் நலன்தான் முக்கியம். அதனால் தான் இந்த விசயத்தில் நீதிமன்றமும் தலையிடுகிறது’ என்று கருத்து கூறினார். பின்னர் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.