ஆசிரியர் காலி பணி இடங்கள் நிரப்பப்படும்

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, தி.மு.க. உறுப்பினர் பி.என்.பி. இன்பசேகரன் (பென்னாகரம் தொகுதி) தனது தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படுமா? என்று கேட்டார். அதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பதில் வருமாறு:- தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க மதுரை ஐகோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை நீங்கியதும் எந்த இடங்களிலும் காலி ஆசிரியர் பணி இடங்கள் இல்லாத நிலைப்பாட்டை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||