தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு தனி தரவு தளம் | https://tnpensioner.tn.gov.in

ஓய்வூதிய விவரங்களை கருவூலங்களுக்கு சென்று அறிவதை தவிர்க்கும் வகையில் தமிழக அரசின் ஓய்வூதியர்களுக்கான தனி தரவு தளத்தை (பென்சனர்ஸ் போர்டல்) துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார். ஓய்வூதியம் பற்றிய தகவல்கள் ஓய்வூதியர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை நிதித்துறையின் கருவூலம் மற்றும் கணக்கு ஆணையரகம் மூலமாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு அங்கமாக, ஓய்வூதியர் கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர் தாங்கள் ஓய்வூதியம் பெற்ற விவரங்கள்; காலம் முடிவுற்ற ஓய்வூதியத்தை தொகுத்துப் பெறுதல்; உயர்த்தி வழங்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம்; ஓய்வூதிய நிலுவைகள்; மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் பணப் பயன்களை வங்கியில் வரவு வைத்தல் என்பது போன்ற விவரங்களை கருவூலங்களை அணுகாமலே ஓய்வூதியர்களும் குடும்ப ஓய்வூதியர்களும் கணினி வாயிலாக அறிந்து பயன் பெறலாம். தமிழ்நாடு அரசின் கருவூல கணக்கு ஆணையரகமும், சென்னை தேசிய தகவல் மையமும் (என்.ஐ.சி.) இணைந்து ஒரு தனி தரவு தளத்தை உருவாக்கியுள்ளன. 7¼ லட்சம் ஓய்வூதியர்கள் இந்த தரவு தளத்தின் வாயிலாக ஓய்வூதியர்களும் குடும்ப ஓய்வூதியர்களும் இந்த தகவல்களைப் பெறுவது மட்டுமல்லாமல், ஓய்வூதியர் வாழ்நாள் சான்று அளித்த விவரம், 80 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம், வருமானவரி தாக்கல் செய்ய தேவைப்படும் வருடாந்திர ஓய்வூதிய விவரங்கள், ஓய்வூதியர் வாரிசுதாரர் நியமனம், பண்டிகை முன்பணம், புதிய மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் குடும்பநல நிதி பிடித்தங்கள் போன்ற விவரங்களையும் தங்களது ஓய்வூதிய கொடுவை எண் மூலம் உள்ளடு செய்து பதிவிறக்கம் செய்ய இயலும். இதுதவிர இத்தரவு தளத்தில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் குறித்த தெளிவுரைகள், அரசாணைகள், சுற்றறிக்கைகள், ஓய்வூதியர்களுக்கு தேவையான முக்கிய படிவங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியர்கள் கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்களை இத்தரவு தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கருவூலங்களிலும், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னையிலும் சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் தமிழக அரசின் சுமார் 7.30 லட்சம் ஓய்வூதியர்கள் பயனடைவார்கள். ஓய்வூதியர் தரவுதளத்தை https://tnpensioner.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் பெறலாம். இந்த தரவு தளத்தை தலைமைச் செயலகத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||