Follow by Email

Thursday, 28 February 2019

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019 NOTIFICATION | ஆசிரியர் தேர்வு வாரியம் TNTET 2019 அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.04.2019

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019 NOTIFICATION |
1. Important Dates:

  1. Date of Notification:28.02.2019
  2. Commencement of submission of online Application:15.03.2019
  3. Last date for submission of online Application : 05.04.2019
  4. Date of Written Examination – Paper I : Will be announced later
  5. Date of Written Examination – Paper II : Will be announced later


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது  முதன்முறையாக 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது 

பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. முதன்முறையாக 100 மதிப் பெண்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வியின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 1) தொடங்கி மார்ச் 19-ம் தேதி முடிகிறது. முதல் நாளான நாளை மொழிப்பாடத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிவு ஏப்ரல் 19-ல் வெளி யிடப்படுகிறது. பொதுத்தேர்வுக்கு மொத்தம் 2,941 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7 ஆயிரத்து 68 பள்ளி களைச் சேர்ந்த 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதுகின் றனர். இதில் 4 லட்சத்து 60 ஆயி ரத்து 6 மாணவிகள், 4 லட்சத்து ஆயி ரத்து 101 மாணவர்கள், 2 திருநங் கையர்கள், 45 சிறை கைதிகள் மற் றும் 26 ஆயிரத்து 885 தனித்தேர் வா்கள் அடங்குவர். பிளஸ் 2 மாண வர்களுக்கு முதல் முறையாக தேர்வு முறை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இனி பொதுத்தேர்வை மாணவர்கள் மொத்தம் 600 மதிப்பெண்களுக்குத்தான் (ஒரு பாடத்துக்கு தலா 100 மதிப்பெண் வீதம்) எழுதுவார்கள். தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடியும். ஹால் டிக்கெட்டில் புகைப் படம் மாறியிருந்தால், மாணவர்கள் தங்களுடன் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை எடுத்துச் செல்ல வேண்டும். இதுகுறித்து தலைமையாசிரியரிடம் முன்னரே ஆலோசனை பெற வேண்டும். தேர்வுக்கான எல்லா முன் னேற்பாடுகளும் தேர்வுத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளன. தேர் வறை கண்காணிப்பாளர்கள் பணி யில் 43 ஆயிரம் ஆசிரியர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். முறைகேடு களைத் தடுக்க 4 ஆயிரம் பறக் கும் படைகள் அமைக்கப்பட்டுள் ளன. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதி காரிகள், தலைமையாசிரியர்கள் ஆகியோர் பறக்கும் படைகளில் இடம்பெற்றுள்ளனர். வருவாய்த் துறை அதிகாரிகள், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையில் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் வாழ்த்து பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர் களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டை யன் வாழ்த்து தெரிவித்துள்ளார். “பொதுத்தேர்வு எழுதும் மாண வர்கள் நாட்டுக்கே சிறந்த முன்னுதாரணமாக திகழும் வகை யில் மதிப்பெண் பெற வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள் கிறேன்’’என்று கூறியுள்ளார். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர்கள் விடுமுறைக்கு கட்டுப்பாடு

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளது. பிளஸ் 2 தேர்வு நாளை தொடங்குகிறது. இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள்: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரி யும் பட்டதாரி, முதுநிலை ஆசிரியர் களும் பொதுத்தேர்வு கண்காணிப்பு, ஏற்பாடு பணிகளில் ஈடுபட வேண்டும். தேர்வு முன்னேற்பாட்டுக் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும். மாவட் டக் கல்வி அதிகாரிகள் ஒதுக்கும் இடங் களில் தேர்வு பணிக்கு செல்ல வேண்டும். தேர்வுப் பணியை புறக்கணிக்கும் நோக் கத்தில் தலைமையாசிரியர்கள் தற்செயல் விடுப்பு, அவசர விடுப்பு எடுக்கக்கூடாது. மேலும், தேர்வுப் பணி முடியும் வரை ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கவும் அனுமதி தரக்கூடாது. மருத்துவ விடுப்புக்கு அதன் உண்மைத் தன்மை அறிந்து அனுமதிக்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 27 February 2019

சட்டக்கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர்களை நியமிக்க ஐகோர்ட்டு தடை

தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளுக்கு உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் நியமனத்துக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விரிவுரையாளர் பதவி சென்னை ஐகோர்ட்டில் கே.குணநிதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நான் பி.ஏ.பி.எல்.எம்.எல். பட்டம் பெற்றுள்ளேன். ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். எஸ்.டி., பிரிவை சேர்ந்த நான் திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் கவுரவ விரிவுரையாளராகவும் வேலை செய்து வருகிறேன். தமிழகத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் 50 விரிவுரையாளர் பதவிக்கு கடந்த 2014-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டபோது, எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த நீதிபதி, விரிவுரையாளர்கள் பணி நியமனம் என்பது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’ என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. பரிசீலிக்க வேண்டும் இதையடுத்து, மீண்டும் 2015-ம் ஆண்டு அரசு சட்டக்கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டபோதும் எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதனால், மற்றொரு வழக்கை தொடர்ந்தேன். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, என்னுடைய கோரிக்கையை பரிசீலிக்கும்படி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய பல்கலைக்கழக நிர்வாகம், என்னுடைய கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறியது. இடஒதுக்கீடு இல்லை இந்தநிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலையில் 186 உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் பதவிக்கு மீண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வழக்கம்போல இந்த அறிவிப்பிலும், எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறியிருந்தார். நியமனத்துக்கு தடை இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்குக்கு பல்கலைக்கழக மானியக்குழு, தமிழக சட்டத்துறை செயலாளர், சட்டப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்டோர் வருகிற 4-ந்தேதிக்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். அதுவரை உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் பதவிக்கு யாரையும் நியமிக்கக்கூடாது. பணி நியமன உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கிறேன்’ என்றும் உத்தரவிட்டார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியருக்கு பணிநீட்டிப்பு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 117 தொழிற் கல்வி ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு பள்ளிக்கல்வித் துறை பணிநீட்டிப்பு வழங்கி உத்தர விட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறப் பட்டுள்ளதாவது: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 117 தொழிற் கல்வி ஆசிரியர்கள் (கணினி அறிவியல்) பட்டதாரி ஆசிரியர் நிலையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இந்த பணியிடங் களுக்கான கால அவகாசம் முடிந்த சூழலில், 3 ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு வழங்க அரசுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பரிந்துரை செய்தார். அதை பரிசீலித்து தற்காலிகமாக நியமிக் கப்பட்ட 117 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கும் 2019 டிசம்பர் 31-ம் தேதி அல்லது தற்காலிக பணியிடங்களின் தேவை குறித்து நிதித் துறையின் மறுஆய்வில் முடிவெடுக்கும் வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்படு கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

15.80 லட்சம் மாணவர்களுக்கு இன்று முதல் இலவச மடிக்கணினி வழங்கப்படும்  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகம் முழுவதும் 15.80 லட்சம் மாணவர்களுக்கு இன்று முதல் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டன. இதை தொடங்கி வைத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பேசியதாவது: கல்வியில் தமிழகம் முன்னோடி யாகத் திகழ்கிறது. மாணவர்கள் தங்கள் கவலைகளை மறந்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். 80 ஆயிரம் பேருக்கு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் புதன்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளது. 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் என 15 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், இந்தியாவே வியக்கும் வகையில் ஏப்ரல் இறுதிக் குள் 9 முதல் 12 வரை வகுப்பறை கள் இணையதள வசதியுடன் முழுவதும் கணினிமயமாக்கப் படும். 1.70 லட்சம் பேர் மேலும், 3,000 அரசுப் பள்ளி களில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கும் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிந்து விடும். மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு பல்வேறு திட்டங்களை அரசு செய்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் பொறியியல் படித்து 80 லட்சம் பேர் வேலையின்றித் தவிக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் பொறியியல் முடித்து வேலை வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர். இதையெல்லாம் மனதில் கொண்டு தான் அடுத்தாண்டு அறிமுகம் செய்ய உள்ள பிளஸ் 2 பாடத் திட்டத்தில் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 12 வகையான தொழிற்கல்வி பாடங்கள் வடி வமைக்கப்பட்டுள்ளன. ஆயிரம் பேருக்கு இடம் இதேபோல், நீட் தேர்வை நமது மாணவர்கள் எளிதாக சந்திக்கவும் அரசு தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி வரும் ஆண்டில் தமிழகத்தில் இருந்து 1,000 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 26 February 2019

என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் ‘அரியர்’ தேர்வுகளை அடுத்த செமஸ்டரிலேயே எழுதலாம் புதிய விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் இனி ‘அரியர்’ தேர்வுகளை, அடுத்த செமஸ்டரிலேயே எழுதிக்கொள்ளலாம் என்று புதிய தேர்வு விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தேர்வில் புதிய நடைமுறை அண்ணா பல்கலைக்கழத்தில் பின்பற்றப்பட்டு வந்த பழைய நடைமுறையின்படி, முதல் பருவ தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்த பாடங்களை (‘அரியர்’) 2-வது பருவத்தில் அதனை மறுபடியும் எழுத முடியும். இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ‘மாணவர்கள் முதல் பருவத்தில் ‘அரியர்’ வைத்திருந்தால் அதனை 3-வது பருவத்தில் தான் எழுத முடியும். 2-வது செமஸ்டரில் ‘அரியர்’ வைத்திருந்தால் அதனை 4-வது அல்லது 6-வது செமஸ்டரில் தான் எழுத முடியும்’, என்று மாற்றம் செய்து புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இறுதி செமஸ்டர் மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில் தோல்வியடைந்தால் அந்தப்பாடங்களை எப்போது எழுதி தேர்ச்சி பெறுவது? என்பது உள்ளிட்ட எந்த விளக்கமும் அந்த நடைமுறைகளில் தெரிவிக்கப்படவில்லை. மாணவர்கள் போராட்டம் இந்த புதிய நடைமுறையால் ‘அரியர்’ தேர்வுகளை எழுத வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், என்ஜினீயரிங் படிப்புக்கான ஆண்டு முடித்த பின்னரும் ‘அரியர்’ இருந்தால் அதனை எழுதி தேர்ச்சி பெறுவதற்கு கூடுதல் காலம் செலவிடப்படுவதாகவும், இதனால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதாகவும் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் உள்பட நிர்வாகிகள், பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி கால அவகாசம் கோரியதின் விளைவாக, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். அடுத்த செமஸ்டரில் எழுதலாம் இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அகாடமிக் கவுன்சில், 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட விதிமுறைகளில் திருத்தம் செய்து, புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, தோல்வியடைந்த பாடத்துக்கான ‘அரியர்’ தேர்வுகளை, மறுதேர்வாக அடுத்து வரக்கூடிய செமஸ்டரிலேயே மாணவர்கள் எழுதிக்கொள்ளலாம். அதன் விவரம் வருமாறு:- முதல் செமஸ்டரில் ஏதேனும் பாடத்தில் தோல்வியடைந்தால், அதற்கான அரியரை அடுத்து வரக்கூடிய 2-வது செமஸ்டரிலேயே எழுதமுடியும். முதல் செமஸ்டரில் முழு தேர்ச்சி பெறாமல் 5-வது செமஸ்டருக்கு செல்லமுடியாது. அதேபோல 2-வது செமஸ்டர் முழுமையடையாமல் 6-வது செமஸ்டருக்கு செல்லமுடியாது. 7-வது செமஸ்டருக்கு செல்லும் மாணவர்கள் 3-வது செமஸ்டரில் அரியர் வைத்திருக்க கூடாது. 8-வது செமஸ்டருக்கு செல்லும் மாணவர்கள் 4-வது செமஸ்டரில் அரியர் வைத்திருக்க கூடாது. தொடர்ந்து 3 செமஸ்டர்கள் எழுத அனுமதி 8-வது செமஸ்டர் முடிவில், 5-வது செமஸ்டரில் குறிப்பிட்ட மாணவர் ஏதேனும் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்திருந்தால், அம்மாணவர், தன்னுடைய 5-வது செமஸ்டரை, அந்த குறிப்பிட்ட கல்வியாண்டில் 5-வது செமஸ்டரில் படிக்கும் மாணவர்களுடன் இணைந்து படித்து, அதன்பின்னர் தேர்வு எழுத வேண்டும். இந்த விதிமுறை 6, 7, 8-வது செமஸ்டருக்கும் பொருந்தும். ‘அரியர்’ வைத்திருக்கும் செமஸ்டருக்கு அடுத்து வரும் 3 செமஸ்டர்களை மாணவர் கள் தேர்வு எழுதி கொள்ளலாம். அதற்கு அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. வருகை பதிவு அதேபோல் ஆய்வக பாடங் கள், திட்ட பணி (ப்ராஜக்ட் ஒர்க்) உள்ளிட்டவற்றில் தோல்வியடைந்த மாணவர்கள், மீண்டும் மறுபதிவு மேற்கொள்ள வேண்டும் என்றும், இவற்றிற்கான சராசரி உள்ளட்டு மதிப்பெண்களாக 50 மதிப்பெண்களையும் பெற வேண்டும். இந்த புதிய விதி முறைகள் 2017-18 மற்றும் 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் தங்கள் படிப்பை தொடங்கியவர்களுக்கு மட்டுமே பொருந்தும். 2019-20-ம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் சேரக்கூடிய மாணவர்கள் முதல் செமஸ்டரில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அவர்கள் இறுதியாண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஒரு செமஸ்டர் தேர்வுக்கு 75 சதவீத வருகைப்பதிவை மாணவர்கள் வைத்திருக்க வேண்டும். விபத்து உள்ளிட்ட மருத்துவ காரணத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 65 சதவீத வருகை பதிவு போதுமானது. இந்த அனுமதியும் ஒருமுறை மட்டுமே மாணவருக்கு வழங்கப்படும். தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு அரியர் தேர்வு விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முறையிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்புதிய விதிமுறைகள், பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழுவின் ஒப்புதலுக்குப்பின், உடனடியாக செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 25 February 2019

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 896 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.03.2019. இணைய முகவரி : www.upsc.gov.in

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 896 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.03.2019. இணைய முகவரி : www.upsc.gov.in யூ.பி.எஸ்.சி. அமைப்பு மத்திய அரசின் குடிமையியல் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை அறிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.சி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கு 896 இடங்களும், வனத்துறை (ஐ.எப்.எஸ்.) பணிகளுக்கு 90 இடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. 21 முதல் 32 வயதுடைய பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 18-ந்தேதி கடைசி நாளாகும். இதற்கான முதல் நிலைத் தேர்வு 02-06-2019-ந் தேதி நடத்தப்படுகிறது. இது பற்றிய விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1601 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.02.2019. இணைய முகவரி : www.ssc.gov.in.

SSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1601 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.02.2019. இணைய முகவரி : www.ssc.gov.in. பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி. அமைப்பு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதற்கான காலியிடங்கள் எண்ணிக்கை தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 1601 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதிகமாக எல்லை சாலை கழகத்தில் 767 பணியிடங்கள் உள்ளன. டிப்ளமோ என்ஜினீயர்கள் மற்றும் பட்டதாரி என்ஜினீயர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இன்று (25-ந் தேதி) விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.ssc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

FCI RECRUITMENT 2019 | FCI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4103 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.03.2019. இணைய முகவரி : www.fci.gov.in.

FCI RECRUITMENT 2019 | FCI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4103 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.03.2019. இணைய முகவரி : www.fci.gov.in. இந்திய உணவு கழகத்தில் 4103 வேலைவாய்ப்புகள் இந்திய உணவுக் கழக நிறுவனத்தில் 4 ஆயிரத்து 103 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய உணவு கழக நிறுவனம் சுருக்கமாக எப்.சி.ஐ. (FCI) எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் பல்வேறு மண்டல கிளைகளிலும் ஜூனியர் என்ஜினீயர், டைப்பிஸ்ட், அசிஸ்டன்ட் (கிரேடு2, கிரேடு-3) மற்றும் ஸ்டெனோ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 4 ஆயிரத்து 103 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மண்டலம் வாரியாக தெற்கு மண்டலத்தில் 540 பணியிடங்களும், வடக்கு மண்டலத்தில் 1999 பணியிடங்களும், கிழக்கு மண்டலத்தில் 538 பணியிடங்களும், மேற்கு மண்டலத்தில் 735 பணியிடங்களும், வடகிழக்கு மண்டலத்தில் 291 பணியிடங்களும் உள்ளன. ஒவ்வொரு பணிப்பிரிவிலும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு ஸ்டெனோ பணிக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்களும், ஜூனியர் என்ஜினீயர் மற்றும் அசிஸ்டன்ட் கிரேடு-2 பணிக்கு 28 வயதுக்கு உட்பட்டவர்களும், அசிஸ்டன்ட் கிரேடு 3 பணிக்கு 27 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 1-1-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். கல்வித்தகுதி ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் என்ஜினீயாிங் பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன், குறிப்பிட்ட அளவில் சுருக்கெழுத்து தட்டச்சுத்திறன் பெற்றவர்கள் ஸ்டெனோ (கிரேடு 2) பணிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் இந்தி தட்டச்சுத் திறன் பெற்றவர்கள் டைப்பிஸ்ட் பணிக்கும், இதர பட்டப்படிப்புகள் மற்றும் பி.இ., பி.டெக் படிப்புடன் கணினி அறிவு பெற்றவர்களுக்கு அசிஸ்டன்ட் கிரேடு 3 பணியில் வாய்ப்புகள் உள்ளன. கட்டணம் விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 25-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான தேர்வு வருகிற ஏப்ரல்- மே மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை www.fci.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NYKS RECRUITMENT 2019 | NYKS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அக்கவுண்ட்ஸ் கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 12000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.03.2019. இணைய முகவரி : www.nyks.nic.in

NYKS RECRUITMENT 2019 | NYKS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அக்கவுண்ட்ஸ் கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 12000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.03.2019. இணைய முகவரி : www.nyks.nic.in இளைஞர் மேம்பாட்டு அமைப்பில் 12 ஆயிரம் பணியிடங்கள் 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் நேரு யுவகேந்திரா இளைஞர் மேம்பாட்டு அமைப்பில் 12 ஆயிரம் தன்னார்வலர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- நேரு யுவகேந்திரா அமைப்பு 1972-ல் தொடங்கப்பட்டது. 1987-ல் நேரு யுவகேந்திரா சங்கேதன் என்ற பெயர் மாற்றத்துடன், தன்னாட்சி அமைப்பாக செயல்பட ஆரம்பித்தது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இந்த அமைப்பு செயல்படுகிறது. இளைஞர் மேம்பாட்டிற்காக செயல்படும் உலகின் மிகப் பெரிய நிறுவனமாக இது விளங்குகிறது. தன்னார்வத்துடன் கூடிய பல்வேறு சமூக பணிகளில் இந்த அமைப்பு பங்களிப்பு செய்கிறது. தற்போது இந்த அமைப்பில் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், அக்கவுண்ட்ஸ் கிளார்க், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தன்னாா்வலா்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு உள்ளன. மொத்தம் 12 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி அறிவோம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-4-2018-ந் தேதியில் 18 வயது நிரம்பியவராகவும், 29 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 3-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். மார்ச் 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 15-ந் தேதி தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்படும். அவர்கள் மார்ச் 18-ந் தேதிக்குள் தன்னார் வலர் பயிற்சிக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஏப்ரல் 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இவர்கள் அடுத்த 2 ஆண்டுகளில் தேசத்தின் பல்வேறு அரசு திட்டப்பணிகளின்போது தன்னார்வலர்களாக பணி செய்யலாம். பணிக்கான மதிப்பூதியமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இது பற்றிய விவரங்களை www.nyks.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பதவி உயர்வு, பணி மாறுதல்  அரசு டாக்டர்களுக்கு 26, 28-ல் கலந்தாய்வு

அரசு டாக்டர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் 26, 28-ம் தேதிகளில் நடக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை களில் பல்வேறு துறைகளில் டாக்டர்கள் (பேராசிரி யர்கள், இணை பேராசிரியர்கள்) பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 7 மாதமாக இந்த கலந்தாய்வு நடைபெறவில்லை. கலந்தாய்வு நடத்தும்படி மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20, 21-ம் தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மறுநாள் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு அரசு டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வரும் 26 மற்றும் 28-ம் தேதிகளில் கலந்தாய்வு நடக்க வுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) தெரிவித்துள்ளது. கலந்தாய்வு தொடர்பான விவரங்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு வாரியம் தீவிர நடவடிக்கை விரைவில் தேர்வு குறித்த அறிவிப்பாணை வெளியாகும்

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் முடுக்கிவிட்டுள்ளது. தமிழகத்தில் 40,000-க்கும் அதிகமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே மேல் நிலைப் பள்ளி பாடத்திட்டத்தில் 1998-ம் ஆண்டு முதல் ‘கணினி அறிவியல்’ பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தப் பாடங் களை நடத்த முதலில் கணினி அறிவியல் பிரிவில் பட்டயப் படிப்பை முடித்தவர்கள் ஆசிரியர் களாக நியமிக்கப்பட்டனர். அதன் பின்னர் இளநிலை மற்றும் பிஎட் படித்த பட்டதாரிகள் ஆசிரியர் களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கணினி ஆசிரியர் பணியிடத்தை முதுநிலை ஆசிரிய ருக்கு இணையாக தரம் உயர்த்தி தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. மேலும், முதுநிலை பட்டத்துடன் பிஎட் முடித்தவர்கள் மட்டுமே கணினி ஆசிரியராக பணியில் சேர முடியும் எனவும் அறிவித்தது. தமிழகம் முழுவதும் தற்போது மொத்தம் 2,594 கணினி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தற்போது உள்ள 814 காலி யிடங்களுக்கு புதிய ஆசிரியர் களை விரைந்து நியமிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும், பள்ளிக் கல்வித் துறை சார்பில் சமீபத்தில் பரிந்துரை கடிதம் ஆவணங்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து கணினி அறிவியல் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளில் ஆசிரி யர் தேர்வு வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. புதிய அரசாணை யின்படி பணி நியமனங்களை நடத்தி முடிப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் தேர்வு குறித்த அறிவிப்பாணை வெளியாகும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 24 February 2019

கேந்திரிய வித்யாலயாவில் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது

கேந்திரிய வித்யாலயா பள்ளிக ளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு வரும் மார்ச்1-ம் தேதி தொடங்குகிறது. நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 1,199 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன. அதன்படி தமிழகத்தில் 48 பள்ளிகள் உள்ளன. அதில் சென்னையில் மட்டும் 14 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவுக்கு மார்ச் 1-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மார்ச் 19-ம் தேதி மாலை 4 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் பரிசீலனையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் விவரம் மார்ச் 26-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். 2-வது பட்டியல் ஏப்ரல் 9-ம் தேதியும், 3-வது பட்டியல் ஏப்ரல் 23-ம் தேதியும் வெளியாகும். மாணவர் சேர்க்கையில் ராணுவம், மத்திய பாதுகாப்பு படை, மத்திய, மாநில அரசு பணியில் உள்ளவர்கள், மத்திய அரசு விருது பெற்றவர்களின் பிள்ளைகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா ஊழியர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுதவிர மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் தலா 10 பேரை பரிந்துரை செய்யலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ரயில்வேயில் 1.30 லட்சம் காலி பணியிடங்கள் 28-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 

ரயில்வே துறையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான பணிவாய்ப்பு அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள் ளன. தொழில்நுட்ப துறையில் பல்வேறு பிரிவுகளில் 1 லட்சம் பணியிடங்களும், மற்ற பிரிவுகளான பாரா மெடிக்கல் ஊழியர், இளநிலை உதவியாளர், தட்டச்சு, கணக்கர், ரயில் பணியாளர், பயணச்சீட்டு பரிசோதகர் உள்ளிட்ட பிரிவுகளில் 30 ஆயிரம் பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுப் பிரிவினர் ரூ.500, இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு ரூ.250 என இதற்கான விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கவுள்ளது. வரும் 28-ம் தேதி, பாரா மெடிக்கல் உள்ளிட்ட பணிக்கு மார்ச் 4, தொழில் நுட்பம் பிரிவு வெவல் 1 பிரிவு பணியிடங்களுக்கு மார்ச் 12-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல்களை http://www.rrbchennai.gov.in/ மற்றும் இதர ஆர்ஆர்பி இணையதளங்களிலும் பெறலாம் | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 23 February 2019

TNPSC GROUP 1 EXAM HALL TICKET 2019 | TNPSC தொகுதி 1 தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC GROUP 1 EXAM HALL TICKET 2019 | TNPSC தொகுதி 1 தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.Memorandum of Admission (Hall Ticket) for the Preliminary Written Examination (Objective Type) to the posts included in CCS-I Examination (Group-I Services). 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

DEO HALL TICKET 2019 | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

DEO HALL TICKET 2019 | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. Memorandum of Admission (Hall Ticket) for the Preliminary Written Examination (Objective Type) to the post of District Educational Officer (Post Code No.2062) in Tamil Nadu School Educational Service.02.03.2019 F.N. (Saturday) General Studies (Degree Standard) and Aptitude & Mental Ability Test (SSLC Standard) Schedule of Exam Fore Noon (10.00 AM to 01.00 PM)

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எஸ்.எஸ்.எல்.சி. மொழிப்பாட தேர்வு நாட்களில் மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு பணிகள் தொடர்பான கையேட்டை அரசு தேர்வுகள் இயக்ககம், தேர்வு அலுவலர்களுக்கு வழங்கி உள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் அன்றைய பாடத்தை போதிக்கும் ஆசிரியர்களாக இல்லாததை உறுதி செய்ய வேண்டும். அடையாள அட்டை இல்லாமல் யாரும் தேர்வு மையத்தில் பணிபுரிய கூடாது. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்க வேண்டும். பொதுவாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் காலையில் மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை விடப்படும். இந்தநிலையில் எஸ்.எஸ்.எல்.சி. மொழி பாடங்களுக்கான(தமிழ் மற்றும் ஆங்கிலம்) தேர்வு பிற்பகலில் நடைபெறுவதால் அந்த 4 தினங்களுக்கும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு முழு நாளும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். தேர்வுகள் நடைபெறும்போது தேர்வு மைய பள்ளிகளில் கட்டிட பணியோ, பராமரிப்பு பணியோ நடைபெற கூடாது. இதுபோன்ற அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு கணினி சான்றிதழ் தேர்வு முடிவு வெளியீடு

 தமிழக அரசின் பல்வேறு துறை களில் தட்டச்சர் மற்றும் சுருக் கெழுத்து தட்டச்சர் பணிகளில் சேருவதற்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக நடத்தப் படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற போதி லும், பணிக்கு தேர்வுசெய்யப் பட்டால் அவர்கள் தகுதிகாண் பருவம் முடிவதற்குள் தேர்ச்சி பெற வேண்டும். கணினி சான்றி தழ் தேர்வை மாநில தொழில் நுட்பக்கல்வி இயக்ககம் ஆண் டுக்கு இருமுறை நடத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப் பட்ட கணினி சான்றிதழ் தேர்வு முடிவுகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தற்போது வெளியிட் டுள்ளது. தேர்வு முடிவுகள் சம் பந்தப்பட்ட பயிற்சி மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், தேர்வு முடிவுகளை இணைய தளத்திலும் (www.tndte.gov.in) தெரிந்துகொள்ளலாம். இந்தத் தகவலை தொழில்நுட்பக்கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவரு மான கே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பகுதிநேர ஆசிரியர்களின் மாற்று விடுப்புக்கு அனுமதி

ஜாக்டோ-ஜியோ போராட்டத் தின்போது பகுதிநேர ஆசிரியர்கள் கூடுதலாக பணிபுரிந்த வேலை நாட்களை மாற்று விடுப்பாக எடுத் துக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஜாக்டோ- ஜியோ சார்பில் கடந்த 22 முதல் 30-ம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் 2 லட்சம் ஆசிரியர் கள் வரை பங்கேற்றதால் மாணவர் கள் கல்வி பாதிக்கப்பட்டது. இதையடுத்து பகுதிநேர ஆசிரியர்களை கொண்டு பள்ளி களை இயக்கி நிலைமையை தமிழக அரசு சமாளித்தது. இதற் கிடையே பகுதிநேர ஆசிரியர் களுக்கு மாதத்துக்கு 6 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாகும். ஆனால், போராட்டத்தின் போது தங்கள் வேலை நேரத்தை தாண்டி பெரும்பாலான பகுதிநேர ஆசிரியர்கள் கூடுதலாக பணிபுரிந் தனர். அவ்வாறு வேலை செய்த நாட்களுக்கு மாற்று விடுப்பு வழங்க கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது பகுதிநேர ஆசிரியர்கள் கூடுதலாக பணி புரிந்த வேலை நாட்களை 6 மாத காலத்துக்குள் மாற்று விடுப்பாக எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 22 February 2019

மார்ச் 1-ல் பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது மையங்களுக்கு விடைத்தாள் அனுப்பும் பணி தீவிரம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்க இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் தேர்வுக்கான விடைத்தாள் அனுப்பும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக பள்ளிக் கல்வியின் சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதன்படி பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1-ல் தொடங்கி மார்ச் 19-ம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 6 முதல் 22-ம் தேதி வரையும் மற்றும் 10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 14-ல் தொடங்கி மார்ச் 29-ல் முடிகின்றன. இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் தேர்வுப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து 61 லட்சம் மாணவர்களும் மற்றும் 24 ஆயிரம் தனித்தேர்வர்களும் எழுது கின்றனர். இதற்காக 2,941 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. பிளஸ் 1 தேர்வில் 8 லட்சத்து 16 ஆயிரம் மாணவர் களும், 5,423 தனித்தேர்வர்களும் பங்கேற்கின்றனர். இவர்களுக்காக 2,912 தேர்வு மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. இதேபோல், 10-ம் வகுப்புத் தேர்வில் 10.10 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்காக 3,741 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தத் தேர்வை சிறைக் கைதிகள் 387 பேரும் எழுதுகின்றனர். தேர்வு மைய கண்காணிப் பாளர்கள், பறக்கும் படை அதிகாரி கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, தேர்வு மையங் களுக்கு விடைத்தாள்களும் அனுப்பப்பட்டுவிட்டன. இதைத்தொடர்ந்து வினாத்தாள் கள் பாதுகாப்பாக மையங்க ளுக்கு இப்போது அனுப்பப் பட்டு வருகின்றன. இதுதவிர பொதுத்தேர்வு எழுதும் மாணவர் கள் மற்றும் கண்காணிப்பாள ருக்கான வழிகாட்டுதல் கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். அதற்கு மாறாக முறை கேடு நடைபெறுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நாளை குரூப்-2 முதன்மைத்தேர்வு

நாளை குரூப்-2 முதன்மைத்தேர்வு டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குரூப்-2 முதல்நிலைத் தேர்வு கடந்த 11.11.2018 அன்று நடத்தப் பட்டு முடிவுகள் 17.12.2018 அன்று வெளியிடப்பட்டன. முதன்மை எழுத்துத்தேர்வு சனிக்கிழமை (நாளை) 15 மாவட்ட தலை நகரங்களில் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணை யதளத்தில் (www.tnpscexams.net) வெளியிடப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் முதன்மை எழுத்துத்தேர்வுக்கு கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவை தனித் தனியே வழங்கப்பட்டு வந்தன. தற்போது கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் இரண்டும் ஒருங்கிணைந்த ஒரே விடை புத்தகமாக வழங்கப்படும். அதில் ஒவ்வொரு கேள்வியும் தனித்தனியே அச்சிடப்பட்டு அக்கேள்வியின் கீழே விடையளிப்பதற்கான போதிய இடமும் வழங்கப்பட்டிருக்கும். தேர்வர்கள் அந்தந்த கேள்விக்கு கீழே கொடுக் கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விடையளிக்க வேண்டும். விடையளிப்பதற்கென ஒதுக்கப் பட்டுள்ள இடத்தைத் தவிர ஏனைய இடங்களில் எழுதப்படும் விடைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. எனவே தேர்வர்கள் அனுமதிக் கப்பட்ட இடத்தில் மட்டுமே விடை யளிக்க வேண்டும் என்பதால் அவர்கள் விடையளிக்கும்போது மிகுந்த கவனத்துடன் அடித்தல் திருத்தல் இல்லாமல் விடைய ளிக்க வேண்டும் என அறிவுறுத் தப்படுகிறார்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு துறை ரீதியாக தயார் ஆகி வருகின்றனர். ஆனால், பொதுத்தேர்வு தொடர்பாக அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிகளில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதனடிப்படையில் நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாயின. இந்த முடிவை அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கல்வியாளர்களுடன் ஆலோசிக்காமல் அவசர கோலத்தில் எடுக்கும் முடிவு பல தலைமுறைகளை பாதித்துவிடும். எனவே, 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரும் அரசின் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் என்.மேட்டுப்பாளையத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் மிக விரைவில் விளை யாட்டு ஆசிரியர்கள் நியமிக்க நட வடிக்கை எடுக்கப்படும். பள்ளி மைதா னங்களின் அடிப்படையில் அங்கு என்ன விளையாட்டுகளை விளையாட முடியும் என்பது குறித்து ஆய்வு செய்து, அதற்கு ஏற்றார்போல் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு துறை ரீதியாக தயார் ஆகி வருகின்றனர். ஆனால், இது குறித்து அரசுதான் ஆணை பிறப்பிக்க வேண்டும். இதுவரை பொதுதேர்வு தொடர்பாக எந்த ஆணையையும் அரசு பிறப்பிக்கவில்லை. அரசுப் பள்ளி களில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வியில் முன்னுரிமை கொடுப்பது குறித்த பொதுநலவழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில், முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து ஈரோட்டில் செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ‘‘மத்திய அரசு அறி வித்து உள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு களுக்கான பொதுத்தேர்வு தொடர்பாக அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத் துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத் தில் இந்த ஆண்டு 5 மற்றும் 8-ம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு கிடையாது. மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள பொதுத்தேர்வு திட்டத்தில், மாநில அரசுதான் முடிவு செய்ய வேண் டும் என ஆணைப் பிறப்பிக்கப்பட் டுள்ளது. மாநில அரசைப் பொறுத்த வரை, அமைச்சரவைக் கூட்டத்தில்தான் எந்த முடிவும் எடுக்கப்படும். பள்ளிக் கல்வித்துறையில் எடுக்கப்படுகிற எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அமைச்சரவைதான் எடுக்கும். எனவே, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு குறித்து மாணவர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. மாநில அர சின் அனுமதி இல்லாமல் தமிழகத்தில் தேர்வு நடைபெறாது” என்றார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 21 February 2019

TNPSC Group-II Mains on 23.02.2019 - Question Cum Answer Booklet instead of separate Question Paper and Answer Paper

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்திக்குறிப்பு : தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண் 15/2018 ல் தொகுதி – II ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்காக விண்ணப்பங்களைப் பெற்று அதற்கான முதனிலைத்தேர்வினை (PRELIMINARY EXAMINATION) கடந்த 11.11.2018 அன்று முற்பகல் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி, அதற்கான முடிவுகளை 17.12.2018 அன்று வெளியிட்டது. அதற்கான முதன்மை எழுத்துத்தேர்வினை (MAIN WRITTEN EXAMINATION) வரும் சனிக்கிழமை (23.02.2019) அன்று முற்பகல் 15 மாவட்ட தலைநகரங்களில் நடத்தவுள்ளது. இதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpscexams.net) வெளியிடப்பட்டுள்ளது. விவரித்து விடை எழுதும் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு (MAIN WRITTEN EXAMINATION) விடைத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுநாள் வரையில் முதன்மை எழுத்துத்தேர்வுக்கு (MAIN WRITTEN EXAMINATION) கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவை தனித்தனியே வழங்கப்பட்டு வந்தது. 23.02.2019 அன்று முற்பகல் நடைபெறவுள்ள தொகுதி- II முதன்மை எழுத்துத்தேர்வுக்கு (MAIN WRITTEN EXAMINATION) கேள்வி மற்றும் விடைத்தாள் இரண்டும் ஒருங்கிணைந்த ஒரே விடைப் புத்தகமாக வழங்கப்படவுள்ளது. இவ்விடை புத்தகத்தில் ஒவ்வொரு கேள்வியும் தனித்தனியே அச்சிடப்பட்டு அக்கேள்வியின் கீழே விடையளிப்பதற்கான போதிய இடமும் வழங்கப்பட்டிருக்கும். தேர்வர்கள் அந்தந்த கேள்விக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விடையளிக்க வேண்டும். விடையளிப்பதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தைத் தவிர ஏனைய இடங்களில் எழுதப்படும் விடைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. எனவே தேர்வர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விடையளிக்க வேண்டும் என்பதால் அவர்கள் விடையளிக்கும் போது மிகுந்த கவனத்துடன் அடித்தல் திருத்தல் ஏதுமின்றி விடையளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு முடிந்த ஓரிரு நாட்களில் மேற்படி தேர்வின் வினா விடைப்புத்தகத்தின் மாதிரி நகல் (SPECIMEN QUESTION CUM ANSWER BOOKLET) தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்படும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10ம் வகுப்பு தனி தேர்வர் 25 முதல் ஹால் டிக்கெட்

'பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு, வரும், 25ம் தேதி முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படும்' என, தேர்வு துறை அறிவித்துள்ளது.இது குறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, தனி தேர்வர்களாக விண்ணப்பித்தவர்கள், தத்கல் திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் என, அனைவருக்கும், வரும், 25ம் தேதி முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படும். தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், 25ம் தேதி, பிற்பகல் முதல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்ட தேர்வு மையத்திற்கு சென்று, தேர்வு மைய கண்காணிப்பாளர் அல்லது தலைமை ஆசிரியரை அணுகி, செய்முறை தேர்வு தேதியை, தெரிந்து கொள்ள வேண்டும். செய்முறை பயிற்சி வகுப்புகள், எந்த பள்ளியில் நடந்ததோ, அதேபள்ளியிலேயே, செய்முறை தேர்வும் நடத்தப்படும்.வரும், 26 முதல், 28 வரையிலும், செய்முறை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் இல்லாத தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை தேர்வில் பங்கேற்க அனுமதியில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குரூப் - 2 தேர்வில் விடை தாள் மாற்றம்

'குரூப் - 2' தேர்வில், விடைத்தாளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 2ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கு, முதல்நிலை தேர்வு, 2018, நவ., 11ல் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பிரதான எழுத்து தேர்வு, நாளை மறுநாள், 15 மாவட்டங்களில் நடக்கிறது. முதன்மை எழுத்து தேர்வில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாளை மறுநாள் நடக்க உள்ள முதன்மை எழுத்து தேர்வில், வினா மற்றும் விடை எழுதும் தாள், ஒருங்கிணைந்த புத்தகமாக வழங்கப்படும்.அதில், ஒவ்வொரு கேள்விக்கும் கீழே, வழங்கப்பட்டிருக்கும் இடங்களில் மட்டுமே தேர்வர்கள் விடை அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில்கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 2 தேர்வு (தனித்தேர்வர்கள்) நாளை முதல் ஹால் டிக்கெட் வினியோகம்

பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட்டுகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார். பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் பலர் இந்த தேர்வில் தனித் தேர்வர்களாக பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் நாளை (22ம் தேதி) பிற்பகல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழைய பாடத்திட்டத்தின்படி (1200 மதிப்பெண்கள்) தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் மட்டும் மொழிப்பாடங்களில் உள்ள ெசய்முறைத் தேர்வுகளுக்கான தேதி குறித்த விவரங்களை தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். 10ம் வகுப்பு ஹால்டிக்கெட்: பத்தாம் வகுப்பு தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் 25ம் தேதி முதல் மேற்கண்ட இணைய தளத்தில் இருந்து தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. இது செய்முறை பயிற்சி வகுப்புகள் நடந்த பள்ளிகளில் நடக்கிறது. செய்முறை தேர்வுக்கான தேதி குறித்து தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் தெரிந்து கொள்ளலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர் விரைவில் நியமனம்.

அரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும் பணியை துவங்கும்படி, ஆசிரியரின் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, தமிழக பள்ளி கல்வி துறை கடிதம் அனுப்பியுள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு மேல்நிலை பள்ளிகளில், 1998ல், 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாட பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பாடங்களை நடத்த, முதலில், 'டிப்ளமோ - கம்ப்யூட்டர் சயின்ஸ்' படிப்பை முடித்தவர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பி.எட்., முடித்த பட்டதாரிகள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.தற்போது, 2,500 பேர் பணியாற்றும் நிலையில், காலியாக உள்ள, 814 இடங்களுக்கு, புதிய ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்து உள்ளது.இதற்கு, எம்.எஸ்சி., முதுநிலை படிப்புடன், பி.எட்., படிப்பு முடித்தவர்களை மட்டுமே நியமிக்க, முடிவு செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழக பள்ளி கல்வி துறை சார்பில், டி.ஆர்.பி.,க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அதில், 'கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடத்தில், 814 காலி இடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்வி துறையின், புதிய அரசாணையின் படி, தேர்வு நடத்தி, நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்திய ரெயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது

இந்திய ரெயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்திய ரெயில்வே துறையில் தென்னக ரெயில்வே, மேற்கு ரெயில்வே உள்பட 16 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் காலியாக உள்ள இளநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், டிக்கெட் வழங்குபவர், நிலைய அதிகாரி, சரக்கு ரெயில் பணியாளர், இளநிலை கணக்கு உதவியாளர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், மருந்தாளுனர், ஈ.சி.ஜி. டெக்னீசியன், ஆய்வக கண்காணிப்பாளர், உதவியாளர், சுருக்கெழுத்தர், தலைமை சட்ட உதவியாளர், இளநிலை மொழி பெயர்ப்பாளர் (இந்தி), தண்டவாள பராமரிப்பாளர் கிரேடு-4, எலக்ட்ரிக்கல், எந்திரவியல், பொறியியல் பிரிவுகளில் உதவியாளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்தந்த மண்டலங்களின் ரெயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்.ஆர்.பி.) மற்றும் ரெயில்வே பணியாளர் தேர்வு பிரிவு (ஆர்.ஆர்.சி.) ஆகிய இணையதளங்களில் ஓரிரு நாளில் வெளியாகும் என்று ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதேபோன்று, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற 24 மத்திய ஆட்சி பணிகளில் 896 பேரை தேர்வு செய்ய மத்திய நிர்வாக பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் 39 பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த பணியிடங்களில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு மட்டுமல்லாமல் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு முதன் முறையாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான தேர்வுக்கு upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 18-ந் தேதி கடைசி நாள் ஆகும். முதற்கட்ட தேர்வு ஜூன் மாதம் 2-ந் தேதி நடக்க உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘டாஸ்மாக்’ நிறுவனத்தில் 500 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு

டாஸ்மாக் நிறுவனத்தில் 500 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ‘டாஸ்மாக் நிறுவனத்தில், 500 இளநிலை உதவியாளர் பணி நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. அதில், கல்வித்தகுதியாக பி.காம் அல்லது ஏதாவது ஒரு பட்டப்படிப்பை பெற்றிருக்கவேண்டும்’ என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் செல்வம் என்பவர், வழக்கு தொடர்ந்தார். அதில், ‘அரசு துறையில் உள்ள இளநிலை உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு மட்டுமே கல்வித்தகுதியாக நிர்ணயித்திருக்கும்போது, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மட்டும் பட்டப்படிப்பை கல்வித்தகுதியாக வைத்திருப்பது பாரபட்சமானது. எனவே, இந்த அறிவிப்புக்கு தடை வேண்டும்’ என்று கூறியிருந்தார். 500 பணியிடங்கள் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி உத்தரவிட்டார். இந்த தடையை நீக்க கோரி டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, ‘500 இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு 10 ஆயிரத்து 404 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால், ஐகோர்ட்டின் தடை உத்தரவினால், இப்பணியிடத்தை நிரப்ப முடியவில்லை’ என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார். தடை நீக்கம் அந்த உத்தரவில், ‘மின்சார வாரியம், போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இளநிலை உதவியாளர் பதவிக்கான கல்வித்தகுதியை பட்டப்படிப்பை நிர்ணயித்துள்ளது. எனவே, டாஸ்மாக் நிறுவனம் கல்வித்தகுதி நிர்ணயம் செய்ததில் தவறு இல்லை. மனுதாரர் அந்த கல்வித்தகுதி இல்லாததால், இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இவரது கோரிக்கையை ஏற்க முடியாது. அதனால், 500 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குகிறேன்’ என்று நீதிபதி கூறியுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசுப் பணியில் 3 சதவீத இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு

பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசுப் பணியில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று ஆற்றிய உரையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் முதல் நிலைப் போட்டிகள், மாநில அளவிலான போட்டிகள், சர்வதேச அளவிலான போட்டிகள் ஆகியவற்றில் வெண்கலம், வெள்ளி, தங்கப் பதக்கங்களை வென்றால், தமிழக அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் 2 சதவீதம் வரை உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கான விதிமுறைகளை வகுப்பதற்கு உயர்நிலைக் குழுவை அமைத்து கடந்த ஆண்டு அக்டோபர் 11-ந்தேதி அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் விளையாட்டுப் போட்டிகளில் விருது வென்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி 16.10.2018 அன்று நடந்தது. அப்போது 2 சதவீத இடஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயர்த்தி முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து ஜனவரி 3-ந்தேதி கூடிய உயர்மட்டக் குழு, அரசுப் பணிகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் 3 சதவீத இடஒதுக்கீட்டை மேற்கொள்வதற்கான வழிகாட்டி நெறிகளை வகுத்தளித்தது. இந்த ஒதுக்கீட்டை பெறுவதற்கான கட் ஆப் தேதியாக 1.1.2018 தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 5 ஆண்டுகள், அதாவது 31.12.2022 வரை செய்த சாதனைகள் பரிசீலிக்கப்படும். அதிகபட்சமாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பணியில் சேர்வதற்கான அனைத்து குறைந்தபட்ச கல்வித் தகுதியை வீரர்கள் பூர்த்தி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள், அரசுப் பணிகளில் 3 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறுவது, 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கு அரசு பொதுத்துறைகளில் பணியிடம் அளிக்கப்படும். இதன் தர ஊதியம் ரூ.5,400 மற்றும் அதற்கு அதிகமாக இருக்கும். இரண்டாவதாக, காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கும், பங்கேற்கும் வீரர்களுக்கும் தர ஊதியம் ரூ.4,400 மற்றும் அதற்கு மேல் (ரூ.5,400-க்குள்ளாக) இருக்கும்படி பொதுத்துறைகளில் பணியிடம் அளிக்கப்படும். மூன்றாவதாக, ஆசிய, காமன்வெல்த், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போருக்கும், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கும் தர ஊதியம் ரூ.2,400 மற்றும் அதற்கு மிகுந்த அளவிலும், (ரூ.4,400-க்கு மிகாமல்) இருக்கும்படி பொதுத் துறை நிறுவனங்கள், அரசுத் துறைகளில் பணியிடம் அளிக்கப்படும். நான்காவதாக, மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு பணியிடங்கள் அளிக்கப்படும். இந்த பணியிடம், ரூ.2,400 என்ற தர ஊதியத்துக்குக் குறைவானதாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி பிரிட்டிஷ் கவுன்சில்- தமிழக அரசு ஒப்பந்தம் 

அரசுப்பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்புத்திறனை மேம்படுத்த பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: உயர்கல்வித் துறை சார்பில், மதுரை, உசிலம் பட்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.10 கோடியே 69 லட்சம் செலவில் வகுப்பறைகள், கருத்தரங்க கூடம் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. மேலும், தேனி, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திண்டுக்கல், வேலூர், தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சை, சிவகங்கை மற்றும் சென்னை மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ரூ.67 கோடியே 25 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். முதல்வர் முன்னிலையில் கையெழுத்து தமிழகத்தில் அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் மென்திறன் மேம்பாடு, ஆங்கில மொழி பேச்சுத்திறன் வளர்த்தல், வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்துதல் உள்ளிட் டவை தொடர்பாக தமிழக அரசுக்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே முதல்வர் கே.பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், தமிழக அரசு சார்பில் உயர்கல்வித் துறை செய லர் மங்கத்ராம் சர்மா, பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் ஜனகா புஷ்பநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, கே.பி அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு  நடப்பாண்டு முதலே அமல்படுத்த தமிழக அரசு முடிவு 

5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதலே பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது. தேர்வு மையம், வினாத்தாள் தயாரிப்பு உட்பட முன் னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட் டுள்ளன. இந்தியா முழுவதும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாண வர்களை கட்டாய தேர்ச்சி செய்யும் முறை இப்போது அமலில் உள்ளது. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படு வதாக கூறி, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத்திருத்தத்தை கடந்த நாடாளு மன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி 5, 8-ம் வகுப்புக்கு கல்வி யாண்டு இறுதியில் கட்டாய தேர்வு நடத்தப்பட வேண்டும். அதில் தோல்வியடையும் மாணவர் களுக்கு 2 மாதங்களில் உடனடி தேர்வு நடத்த வேண்டும். அந்த தேர் விலும் மாணவர்கள் தோல்வி யடைந்தால் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த சட்டத்திருத்தத்தை அமல் படுத்த தமிழக அரசு முடிவெடுத் துள்ளது. தமிழகத்தில் கட்டாயத் தேர்ச் சியை ரத்து செய்தால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப் படும். இடை நிற்றல் உயரும் என ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனி னும். தமிழகத்தில் 5, 8-ம் வகுப்பு களுக்கு நடப்பாண்டு முதலே பொதுத்தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை தீவிரம் காட்டி வரு கிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல் விவரம்: நடப்பாண்டு முதல் எல்லா வகை பள்ளிகளிலும் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. 20 மாண வருக்கு ஒரு தேர்வு மையம் அமைக்க வேண்டும். அதற்கு குறை வான மாணவர்கள் அருகே உள்ள பள்ளிகளில் தேர்வு எழுத வேண் டும். அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் 5, 8-ம் வகுப்பு மாண வர் எண்ணிக்கையை வட்டார அளவில் பெற்று அதற்கேற்ப தேர்வு மையங்களை மாவட்ட கல்வி அதி காரிகள் தேர்ந்தெடுக்க வேண்டும். மொத்தம் 60 மதிப்பெண்களுக்கும், 2 மணி நேரமும் தேர்வு நடைபெறும். வினாத்தாளில் 3-ம் பருவத்தில் இருந்து பெரும்பாலான கேள்வி களும், முதல் மற்றும் 2-ம் பருவத் தில் இருந்து பொதுவான கேள்விகளும் கேட்கப்படும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தனி யார் பள்ளியில் 5-ம் வகுப்பு மாண வர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரூ 50-ம், எட்டாம் வகுப்பு மாணவர் களுக்கு ரூ.100 செலுத்த வேண்டும். விடைத்தாள்கள் குறுவள மைய அளவில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மாணவர் எண்ணிக்கை மற்றும் தேர்வு மைய விவரத்தை உடனே அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை அதி காரிகள் கூறும்போது, ‘‘மாணவர் நலன் கருதி தேர்வு மையங்களை 3 கி.மீ தூரத்துக்குள், போக்குவரத்து வசதிகள் எளிதாக இருக்கும்படி அமைக்க முடிவாகியுள்ளது. கல்வியாண்டு இறுதியில் முடி வானதால் பொதுத்தேர்வு குறித்த பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க போதுமான அவகாசம் இல்லை. எனவே, எளிமையான வினாத்தாள், நெருக்கடி இல்லாத மதிப்பீடு முறையில் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதன்படி 5-ம் வகுப்புக்கு மொழிப்பாடங்களின் வினாத்தாளில் வார்த்தை விளை யாட்டு, கோடிட்ட இடங்களை நிரப்புதல், பொருத்துக போன்ற வகையில் மாணவர்களின் மொழி சார்ந்த அடிப்படை விஷயங்களை பரிசோதிக்கும் வகையில் கேள்வி களும், கணிதப் பாடத்தில் பெருக்கல், வகுத்தல் சார்ந்த எளிய கணிதங்கள் சார்ந்த கேள்விகளும் கேட்கப்படும். 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு புரிதல் திறன், எழுதும் திறனையும் சோதிக்கும் வகையில் கட்டுரை வடிவிலான கேள்வித்தாள் அமைக்கப்படும். தேர்வு பணியில் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பள்ளி ஆசி ரியர்கள் மட்டுமே ஈடுபடுத்தப் படுவார்கள்’’ என்றனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 20 February 2019

அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என விதிமுறை கொண்டு வரலாமே? மதுரை ஐகோர்ட்டு கேள்வி

“அரசு ஊழியர்களின் பிள்ளைகள், அரசு பள்ளிகளில்தான் படிக்க வேண்டும், இதுதொடர்பான விதிமுறை கொண்டு வரலாமே?” என மதுரை ஐகோர்ட்டு அதிரடி கேள்வி எழுப்பியது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் (ஜாக்டோ-ஜியோ) வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் அவர்கள் வேலைநிறுத்தம் அறிவித்த போது, அதற்கு தடை கேட்டு லோகநாதன் என்பவர் ஏற்கனவே தொடர்ந்திருந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இடமாற்ற கோரிக்கை அந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்புகளை சேர்ந்தவர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களை மீண்டும் பழைய பணியிடத்தில் அமர்த்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று ஜாக்டோ-ஜியோ தரப்பினர் சார்பில் நீதிபதிகள் முன்பு முறையிடப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கை குறித்து தனியாக மனு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும் பின்னர் “சம்பளம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் கடமையையும் அரசு ஊழியர்கள் முக்கியமாக கருத வேண்டும். சம்பள விஷயத்தில் பொதுமக்களின் அடிப்படை வருமானத்துக்கும், அரசு ஊழியர்களின் வருமானத்துக்கும் உள்ள வித்தியாசம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது” என நீதிபதிகள் தெரிவித்தனர். இருந்தபோதும், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வேலை நாட்களை அரசு ஊழியர்களின் விடுப்பு நாளாக கணக்கில் கொள்ளலாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், “அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என விதிமுறையை கொண்டு வரலாமே? அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம்” எனவும் நீதிபதிகள் அதிரடி கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மந்திரிசபை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கும், மத்திய அரசில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கும் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால், அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயருகிறது. கடந்த ஜனவரி 1 முதல், முன்தேதியிட்டு, இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வருகிறது. 1.1 கோடி பேர் பலன்அடைவர் அகவிலைப்படி உயர்வு காரணமாக, நாடு முழுவதும் உள்ள சுமார் 48 லட்சத்து 41 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 62 லட்சத்து 3 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் தெரிவித்தார். 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகள் அடிப்படையில் வகுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, இந்த அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அவசர கால சேவைகளுக்கு எண் ‘112’ தமிழகம் உட்பட 11 மாநிலத்தில் அறிமுகம்

அனைத்து அவசர சேவைகளுக் கும் ‘112’ என்ற ஒரே உதவி எண்ணை அழைக்கும் திட்டம் தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. காவல்துறையை தொலைபேசி யில் அழைக்க எண் 100, தீ விபத் துக்கு 101, ஆம்புலன்சுக்கு 108, பெண்கள் பாதுகாப்புக்கு 1090 என்று பல சேவைகளுக்கு பல் வேறு உதவி எண்கள் உள்ளன. இதற்கு பதிலாக அனைத்து அவசர சேவைகளுக்கும் ஒரே உதவி எண்ணாக ‘112’ என்ற எண்ணை அழைக்கும் திட்டம் ஏற்கெனவே இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்தில் செயல்பாட்டில் உள் ளது. இந்நிலையில், இத்திட்டம் தமிழகம், ஆந்திரா, உத்தரா கண்ட், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், தெலங்கானா, குஜராத், ஜம்மு காஷ்மீர் ஆகிய 11 மாநிலங் களிலும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய 5 யூனியன் பிரதேசங்களிலும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். ஸ்மார்ட் போன்களில் பவர் பட் டனை மூன்று முறை அழுத்தி னாலோ அல்லது சாதாரண போன் களில் 5 அல்லது 9 என்ற எண்ணை நீண்ட நேரத்துக்கு அழுத்தினாலோ அவசர கால அழைப்பு மையத்துக்கு தகவல் சென்றுவிடும். அங்கு உள்ள பயிற்சி பெற்ற ஊழியர்கள் தேவைப்படும் அவசர உதவிகளை கிடைக்க வழிவகை செய்வார்கள். அடுத்த ஆண்டுக்குள் ‘112’ என்ற எண்ணை அழைக்கும் சேவை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தபடும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு புதிய மாதிரி வினாத்தாள் வடிவமைப்பின்படியே நடக்கும் தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி அறிவிப்பு

மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு, புதிய மாதிரி வினாத்தாள் வடிவமைப்பின்படியே நடைபெறும். அதற்கேற்ப மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற உள்ளன. மேல்நிலை வகுப்புக்கான மொத்த மதிப்பெண் 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. செய் முறை தேர்வில்லாத பாடத்துக்கு 90 மதிப் பெண்களுக்கும், செய்முறை தேர்வுள்ள பாடத்துக்கு 70 மதிப்பெண்களுக்கும் எழுத்துத் தேர்வு நடைபெறும். இதற்கான மாதிரி வினாத்தாளை கடந்த ஜனவரியில் தேர்வுத் துறை வெளியிட்டது. அதில் ஒரு மதிப்பெண் பிரிவில் கொள்குறி வகை வினாக்களுக்கு பதில், கோடிட்ட இடங்களை நிரப்புக என்பது போன்ற நுழைவுத்தேர்வு வடி விலான வினாக்கள் இடம்பெறும் என தேர் வுத் துறை அறிவித்தது. இதை எதிர்த்து பழைய முறையிலேயே வினாத்தாள் தயாரிக்க ஆசிரியர்கள், மாணவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் வினாத்தாள் மாற்றம் குறித்து தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை யில், ‘‘மேல்நிலை வகுப்புகளின் அனைத்து பாடங்களுக்கும் மாதிரி வினாத்தாள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. சந்தேகத்துக்கான விளக்கங்கள் இதுகுறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் சில சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அதற்கான விளக்கங்கள்: ஒரு மதிப்பெண் பிரிவில் குறிக்கோள் வினாக்களுக்கும் 4 மாற்று விடைகள் தரப்படும். அதில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து எழுத வேண்டும். இதேபோல், கோடிட்ட இடத்தை நிரப் புக, சரியானவற்றை பொருத்துக வகை யான கேள்விகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள 4 மாற்று விடைகளில் இருந்து சரியானதைத் தேர்வு செய்து எழுத வேண்டும். மேலும், புதிய மாதிரி வினாத்தாள் அடிப்படை யில்தான் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, மாணவர்கள் அந்தந்த பாடத் துக்குரிய மாதிரி வினாத்தாளின்படி பொதுதேர்வுக்கு தயாராக வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே அதிருப்தி அதிகரித்துள்ளது. இதுகுறித்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சந்திரன் கூறும்போது, ‘‘கல்வி யாண்டு தொடக்கத்தில் வழங்கப்பட்ட பழைய முறையில் தான் பாடம் நடத்தப் பட்டது. அதன்படியே காலாண்டு, அரை யாண்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இப்போது நடைபெறும் திருப்புதல் தேர் வுக்கும் அரசு வழங்கும் வினாத்தாள்கள் பழைய வடிவத்தில்தான் உள்ளன. ஆனால், பொதுத்தேர்வில் மட்டும் புதிய வடிவத்தில் வினாத்தாள் இருந்தால் மாணவர்கள் பெரிதும் சிரமமடைவார்கள். அடுத்த ஆண்டில் அமல்படுத்தலாம் மேலும், ஒரு மதிப்பெண் வினாக்களில் தான் சற்று எளிதாக மதிப்பெண் பெற முடியும். எனவே, மாணவர் நலன் கருதி ஏற்கெனவே பயிற்றுவித்த வினாத்தாள் முறையிலேயே பொதுத்தேர்வை நடத்த வேண்டும். அடுத்த ஆண்டில்கூட புதிய நடைமுறையை அமல்படுத்தலாம்’’ என் றார். இதற்கிடையே தேர்வுத் துறையின் அறிவிப்பை எதிர்த்து மாணவர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts