5 ஆண்டுகளாக மாணவ-மாணவிகள் தேர்ச்சி சதவீதம் உயர்வு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியாகி இருக்கிறது. அதில் 95.2 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்து இருக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக மாணவ-மாணவிகள் தேர்ச்சி சதவீதம் உயர்ந்து இருக்கிறது. அதே சமயம், கடந்த 5 ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் பள்ளி மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு 10 லட்சத்து 60 ஆயிரத்து 866 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். அதனைதொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து, இந்த ஆண்டு 9 லட்சத்து 37 ஆயிரத்து 859 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி இருந்தனர்.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||