விரைவில் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு... தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பு வெளியாகிறது...

அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை தேர்தல் முடிந்தவுடன் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்குத் தேவைப் படும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஏறத்தாழ 3 ஆயிரம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு அந்த காலியிடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். கடைசியாக, முதுகலைப் பட்ட தாரி ஆசிரியர்கள் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு செய்யப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட் டனர். அந்த சமயத்தில் 3,375 காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப் பட்ட போதிலும், தகுதியான ஆசிரியர்கள் கிடைக்காததால் தமிழ், வேதியியல், வரலாறு உள் ளிட்ட பாடங்களில் 1,060 காலியிடங் களை நிரப்ப முடியவில்லை. இந் நிலையில், அதற்கடுத்த கல்வி ஆண்டில் ஏற்பட்ட காலியிடங் களையும் சேர்த்து காலியிடங்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பணி நியமனத்தில் அடுத்தடுத்து வழக்குகளைச் சந்திக்க நேர்ந்ததால் ஆசிரியர் தேர்வு வாரியத் தால் இதர நியமனங்களை மேற் கொள்ள முடியவில்லை. கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வும் நடத்தப்படவில்லை. அதேபோல், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட உதவி தொடக்கக் கல்வி அதிகாரி தேர்வு (தற்போது வட்டார கல்வி அதிகாரி தேர்வு), வேளாண் ஆசிரியர் தேர்வு போன்ற தேர்வுகளையும் தேர்வு வாரியத் தால் நடத்த இயலவில்லை. கடந்த மாதம்தான் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும், கணினி ஆசி ரியர் தேர்வுக்கும் அறிவிப்பு வெளி யிடப்பட்டு ஆன்லைனில் விண் ணப்பங்கள் பெறப்பட்டு வருகின் றன. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு தகுதித் தேர்வில் வெற்றிபெற்றா லும் 2-வது கட்டமாக இன்னொரு போட்டித் தேர்விலும் வெற்றிபெற வேண்டும். அப்போதுதான் வேலை வாய்ப்பு கிடைக்கும். அதுவும் தற் போது அரசு பள்ளிகளில் மாணவர் களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், பணியில் இருக் கின்ற இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் பணி நிரவல் செய்யப்பட்டனர். அதேநேரத்தில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவியில் காலியிடங்கள் இருப்பதாலும், இதற்கான பணிநியமனத்துக்கு ஒரேயொரு தேர்வு என்பதாலும் பிஎட். முடித்த முதுகலைப் பட்ட தாரிகள் அனைவரும் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின் றனர். முதுகலை ஆசிரியர் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "நேரடி முதுகலை ஆசிரியர் பதவிக்கான காலியிடங் கள் பள்ளிக்கல்வி இயக்ககத்திட மிருந்து வந்துள்ளன. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்வுக்கான அறி விப்பை வெளியிட முடியாது. எனவே, தேர்தல் முடிந்தவுடன் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்" என்றார்.

Comments

  1. previous year cut off mark for pg maths sc candidate

    ReplyDelete
  2. subject wise vacancy details ......

    ReplyDelete

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||