ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று ( 05.04.2019) கடைசி நாள்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் ( 05.04.2019)  முடிவடைகிறது. போட்டித் தேர்வு நடைபெறும் நாள், பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை உடனே வெளியிட பட்டதாரிகள் வலியுறுத்தி யுள்ளனர். மத்திய அரசின் இலவச கட் டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28-ம் தேதி டிஆர்பி வெளியிட்டது. தொடர்ந்து இணையதள விண் ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15-ம் தேதி தொடங்கி இன்றுடன் (ஏப்ரல் 5) முடிவடைகிறது. தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in வழியாக பட்டதாரிகள் விண்ணப் பித்து வருகின்றனர். விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.500, எஸ்சி/எஸ்டி பிரிவுக்கு ரூ.250-ம் செலுத்த வேண்டும். இதற்கிடையே கடந்த ஆண்டுகளைவிட அதிக அளவில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட் டுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இந்நிலையில் தேர்வு நடைபெறும் தேதி, காலி பணி யிடங்கள் மற்றும் பாடத்திட்டம் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து தகவல் மையங்களை தொடர்பு கொண்ட போதும் உரிய பதில் இல்லாததால் தேர்வுக்கு தயாராக முடியாமல் பட்டதாரிகள் தவித்து வருகின்றனர். எனவே, பாடத்திட்டம் மற்றும் தேர்வு தேதிகளை உடனே வெளியிட கோரிக்கை விடுத்துள்ளனர். | CLICK


1 comment:

  1. ஆசிரியர் தகுதித்தோர்வு விண்ணப்ப இணையதளம் முடக்கம்.இன்று கடைசி நாள் .பட்டதாரிகள் அவதி.தயவு செய்து share செய்யவும்.

    ReplyDelete

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||