இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை 3 ஆயிரம் பள்ளிகளில் பட்டியல் வெளியீடு

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். அதன்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் படிக்க மாணவர்களின் பெற்றோர் விண்ணப்பித்து இருந்தனர். இடஒதுக்கீட்டை விட குறைவான விண்ணப்பங்கள் வந்திருந்த 3,000 பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதேபோல், இடஒதுக்கீட்டை விட அதிக விண்ணப்பங்கள் வந்திருந்த பள்ளிகளில் மாணவர்களின் பட்டியலை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு மாற்று ஏற்பாடாக வருகிற 6-ந்தேதி குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை இறுதி செய்யப்பட இருக்கிறது. டி.ஜி.இ. எனப்படும் சிறப்புப்பிரிவினருக்கான இறுதி பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட இருக்கிறது. www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் சிறப்பு பிரிவினருக்கான தேர்வுப்பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் வெளியிடுவார்கள்.ஆசிரியர் தகுதித்தேர்வு நிபந்தனைகளை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெறுவோரின் தகுதிச்சான்று 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என்பது உள்ளிட்ட பல நிபந்தனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், கிருஷ்ணகிரியை சேர்ந்த பரமானந்தம், சக்திவேல் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்களில் கூறியிருப்பதாவது:- கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக்கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் தகுதிச்சான்று ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில், குறிப்பாக 150 மதிப்பெண்களுக்கான தேர்வில் பிரதான பாடத்தில் இருந்து 30 சதவீத கேள்விகள் மட்டுமே கேட்கப்படுகிறது. எஞ்சிய கேள்விகள் பொது அறிவு, திறனறிவு தொடர்பாக உள்ளது. சட்டவிரோதம் இதனால் பிரதான பாடத்திற்கான கேள்விகளுக்கு சரிவர பதில் அளிக்க முடியாதவர்கள் கூட குறைந்தபட்ச மதிப்பெண்ணான 90-ஐ பெற்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் நிலை உள்ளது. இந்த தேர்வுகளும் சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்தநிலையில், வரும் ஜூன் 8 மற்றும் 9-ந் தேதிகளில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல தேசிய அளவில் நடத்தப்படும் ‘நெட்’ மற்றும் மாநில அளவில் நடத்தப்படும் ‘ஸ்லெட்’ போன்ற தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிரந்தரமாக சான்று வழங்கும்போது, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு மட்டும் 7 ஆண்டுகளை நிர்ணயம் செய்வது என்பது சட்டவிரோதமானது. எனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கும் நிரந்தர சான்றிதழ் அளிக்க தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘ஏற்கனவே 1,500 ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். லட்சக்கணக்கானவர்கள் தேர்வு எழுத காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த தேர்வுக்கான கேள்வித்தாள் எப்படி அமைய வேண்டும்? என்பதை அரசும், கேள்வித்தாளை வடிவமைத்த நிபுணர்கள் குழுவும்தான் நிர்ணயம் செய்ய முடியும். விண்ணப்பதாரர்கள் அதை தீர்மானிக்க முடியாது’ என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என்.சதீஷ்குமார், இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.விடைத்தாள் திருத்தியதில் குளறுபடி: 300 ஆசிரியர்களுக்கு நோட்டீசு சரியான விளக்கம் அளிக்காதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

விடைத்தாள் திருத்தியதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 300 ஆசிரியர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறது. சரியான விளக்கம் அளிக்காத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த மாதம் 19-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு கடந்த மாதம் 29-ந்தேதியும் வெளியானது. இந்த தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, தேர்வுகளுக்கான விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி, மாணவ-மாணவிகள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்தியதில் குளறுபடி இருந்ததை அரசு தேர்வுத்துறை கண்டுபிடித்து இருக்கிறது. சில மாணவர்களுக்கு பெரிய அளவில் விடைத்தாள் குளறுபடி ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.


இந்தநிலையில் அரசு தேர்வுத்துறை தவறு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளிக்கல்வி துறைக்கு கடிதம் எழுதியது. அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வி துறை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட 300 ஆசிரியர்களுக்கு நோட்டீசு அனுப்பி இருக்கிறது.

நோட்டீசு பெறப்பட்ட ஆசிரியர்கள் அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதனை முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு இருக்கின்றனர். ஆசிரியர்கள் திருத்தியதில் ஏற்பட்ட தவறுகளை பொறுத்து, ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் வெவ்வேறு விதமாக விளக்கத்தை அளிக்க பள்ளிக்கல்வி துறை அந்த நோட்டீசில் கேட்டு இருக்கிறது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டபோது, ‘ஆசிரியர்களுக்கு நோட்டீசு அனுப்புவதில் எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது. நாங்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக்கல்வி துறைக்கு தெரிவித்துவிட்டோம். அவர்கள் தான் நடவடிக்கை எடுப்பார்கள்’ என்றார்.

பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகனிடம் இதுதொடர்பாக கேட்டபோது, ‘அரசு தேர்வு துறை அளித்த பட்டியலின்படி 300 ஆசிரியர்களுக்கு நோட்டீசு அனுப்பி இருக்கிறோம். சரியான விளக்கத்தை ஆசிரியர்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்காதவர்கள் மீதும், சரியான விளக்கத்தை தெரிவிக்காத ஆசிரியர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை (17ஏ, 17பி) மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகளை அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்களே எடுக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. பணி இடைநீக்கம் என்ற அளவுக்கு நடவடிக்கை இருக்காது’ என்றார்.அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை அந்தந்த மாவட்டங்களில் பட்டியல்கள் தயாராகிறது

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அந்தந்த மாவட்டங்களில் பட்டியல்கள் தயாராகிறது. அங்கீகாரம் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம்-2009 பிரிவு 18(1)-ன் படி அனைத்து வகை பள்ளிகளும் பள்ளிக்கல்வி துறையின் தடையின்மை சான்றும், அங்கீகாரமும் பெற்று இருக்க வேண்டும். தடையின்மை சான்றும், அங்கீகாரமும் இன்றி எந்த பள்ளிகளும் செயல்படக்கூடாது. அதன்படி, நேற்று முன்தினம் வரை 2 ஆயிரத்து 915 பள்ளிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பித்து இருந்தன. மீதம் உள்ள பள்ளிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அறிவுறுத்தி இருந்தது. ஆனால் முறையாக தடையின்மை சான்றும், அங்கீகாரமும் பெற விண்ணப்பிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அறிவுறுத்தியது. அந்தவகையில் மாநிலம் முழுவதும் தடையின்மை சான்று, அங்கீகாரம் பெற விண்ணப்பிக்காத பள்ளிகளின் பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிக்கல்வி துறைக்கு அனுப்பி இருக்கிறது. உரிய நடவடிக்கை திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் தடையின்மை சான்று, அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளாக 25 பள்ளிகள் இருக்கின்றன என்று மாவட்ட நிர்வாகம் பட்டியலை தயார் செய்து அனுப்பி உள்ளது. இதுபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டியல்கள் தயாராகி வருகின்றன. மாநிலம் முழுவதும் எவ்வளவு பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுகின்றன? என்பது குறித்து இன்று (வியாழக்கிழமை) தெரியவரும். அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளின் நுழைவுவாயிலில் நோட்டீஸ் ஒட்டப்படும். இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கையினை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்று ஒட்டப்படும். மேலும் தொடர்ந்து அந்த பள்ளிகள் செயல்படும் பட்சத்தில் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த பள்ளிகளுக்கு எச்சரிக்கையும் விட இருக்கிறார்கள்.போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது தமிழக அரசு திட்டவட்டம்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என்று தமிழக அரசு கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கீழ் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர்கள் சங்கங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கோரிக்கைகள் தொடர்பாக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளில் மும்முரம் காட்டியது. முதல்-அமைச்சர் போராட்டத்தை கைவிட வலியுறுத்தியதன் விளைவாகவும், மாணவர்கள் நலன் கருதியும் போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தற்காலிக வாபஸ் பெற்றனர்.ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர்ந்து தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர்கள் 4 ஆயிரம் பேர் முதுகலை ஆசிரியர்களாக விரைவில் பதவி உயர்வு பெற இருக்கின்றனர். இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசு கல்வித்துறை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது.அதில், போராட்டத்தில் ஈடுபட்டு துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கும் ஆசிரியர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற கூடாது என்ற வார்த்தை முக்கியமாக இடம் பெற்று இருந்தது.அந்த வகையில் பார்க்கும் போது, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்று துறை ரீதியான நடவடிக்கைக்குள்ளான ஆசிரியர்களுக்கு இந்த பதவி உயர்வில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

இதேபோல், வேறு சில பதவி உயர்வுகளும் வர இருக்கின்றன. அதற்கும் இவர்களுக்கு பிரச்சினை ஏற்படும்.இதற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறுகையில், “துறை ரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் மாதம் இறுதிக்குள் நடைபெற இருக்கிறது. அதற்குள் துறைரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். இதற்காக வருகிற 10-ந்தேதி முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அனைத்து துறை செயலாளர்கள் ஆகியோரை சந்தித்து முறையிட இருக்கிறோம்” என குறிப்பிட்டார்.நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்படுவதால், நீட் விண்ணப்பத்தில் மே 31 வரை திருத்தம் செய்ய அவகாசம் 

நீட் தேர்வு விண்ணப்பத்தில் பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பாலினம், பிரிவு ஆகியவற்றில் ஏதாவது திருத்தம் இருந்தால் வரும் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் திருத்தம் செய்யலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் (பிவிஎஸ்சி - ஏஹெச்) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - ‘நீட்’) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 2019-20 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வுக்கு தமிழகத்தில் 1 லட்சத்து 40 பேர் உட்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரம் விண்ணப்பித்திருந்தனர். இதில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் மட்டும் 14 நகரங்களில் 188 மையங்கள் உட்பட நாடுமுழுவதும் 147 நகரங்களில் 2,492 மையங்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி என 11 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் மட்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தேர்வில் இயற்பியல், வேதி யியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் 4 பதில்களில் சரியானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வு விடைகள் பட்டியல் (கீ ஆன்சர்) மற்றும் விடைத்தாள் நகல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. வரும் ஜூன் 5-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு விண்ணப்பத்தில் தந்தை பெயர், தாய் பெயர், பிறந்த தேதி, பாலினம், பிரிவு ஆகியவற்றில் ஏதாவது திருத்தம் இருந்தால் https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx என்ற இணையதளத்தில் சென்று திருத்தம் செய்யலாம். வரும் 31-ம் தேதி மாலை 5 மணி வரை திருத்தம் செய்வதற்கான காலஅவகாசம் வழங்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களும் உரிய சலுகைகளை பெறுவதற்காக தங்களுடைய பிரிவை மாற்றி திருத்தம் செய்ய லாம். ஒரே ஒரு முறை மட்டுமே இந்த திருத்தம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்பதால் மாணவ, மாணவியர் மிகவும் கவனத்துடன் திருத்தம் செய்ய வேண்டும் என்று நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.50 சதவீத வட்டாரக்கல்வி அதிகாரி பதவிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தர விட்டுள்ளது.

50 சதவீத வட்டாரக்கல்வி அதிகாரி பதவிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்ப உத்தரவு சென்னை அரசுப் பள்ளிகளை கண்காணிக்கும் பொறுப்பிலுள்ள வட்டாரக்கல்வி அதிகாரிகளை 50 சதவீதம் வரை நேரடி நியமனம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை நிர்வாக ரீதியாக பல்வேறு சீர்த் திருத்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரியாக கடந்தாண்டு மாற்றப்பட்டது. இதையடுத்து வட்டாரக் கல்வி அதிகாரி பதவி பணியிடங்களில் 30 சதவீதம் நேரடி நியமனம் மூலமும், 70 சதவீதம் பதவி உயர்வு வகையிலும் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் வட்டாரக்கல்வி அதிகாரிகளை 50 சதவீதம் வரை நேரடி நியமனம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறி வித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: நிர்வாக நலன் கருதி ஆசிரியர் தேர்வு வாரியத் தால் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படும் வட்டாரக் கல்வி அதிகாரிகளுக்கான விகிதத்தை சற்று உயர்த்தினால் நிர்வாகம் சிறப்பாக அமையும். எனவே, நிர்வாக நலன்கருதி ஆண்டுதோறும் வட்டார கல்வி அதிகாரி பணியில் ஜூன் முதல் தேதியில் ஏற்படும் காலியிடங்களில் 50 சதவீதம் வரை நேரடி நிய மனம் மூலம் நிரப்ப அரசு ஒப்பு தல் வழங்க வேண்டும் என தொடக் கக் கல்வி இயக்குநர் கருத்துரு வழங்கியுள்ளார். 50 சதவீதம் பணிமாறுதல் இதை பரிசீலனை செய்து ஏற்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இனி வட்டார கல்வி அதிகாரி பணியிலுள்ள மொத்த காலியிடங்களில் 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நேரடி நியமனம் மூலமும், இதர 50 சதவீத இடங்களை தகுதி யான அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களை பணி மாறுதல் மூலமும் நிரப்பிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு ஸ்மார்ட் போன், பைக் கொண்டுவர தடை தலைமை ஆசிரியர்களுக்கு அரசு சுற்றறிக்கை

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு ஸ்மார்ட்போன், செல்போன், இருசக்கர வாகனங்கள் கொண்டுவரக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக உயர்நிலைப் பள்ளி கள், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: மாணவர்கள் காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும். மேலும், இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது. செல்போன், ஸ்மார்ட்போன்களை பள்ளிக்கு கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது, மீறினால் அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். பொருட்கள் திரும்ப வழங்கப்பட மாட்டாது. ஆடை வரம்பு லோஹிப், டைட் பேண்ட் அணிந்து வரக் கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வர வேண்டும். அதுவும் இறுக்கமாக, குட்டையாக இருக்கக் கூடாது. தலை முடியை சீரான முறையில் வெட்டி இருக்க வேண்டும், போலீஸ் கட்டிங் மட்டுமே அனுமதி. கறுப்பு கலர் சிறிய பக்கிள் கொண்ட பெல்ட் மட்டுமே அனுமதி. டக்-இன் செய்யும்போது சட்டை வெளியே வரக்கூடாது மற்றும் சீரற்ற முறையில் டக்-இன் செய்யக் கூடாது. மேல் உதட்டை தாண்டி முறுக்கு மீசை, தாடி வைக்கக் கூடாது. கைகளில் வளையம், கயிறு, செயின் அணியக் கூடாது. பிறந்தநாள் என்றாலும் சீருடையில் மட்டுமே வரவேண்டும். 11 கட்டளைகள் விடுமுறை எடுக்கும்போது பெற்றோர், ஆசிரியர் அனுமதிக் கையெழுத்து பெற்ற பிறகு மட்டுமே எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 கட்டளைகள் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.AYUSH ADMISSION 2019 | மத்திய அரசு விலக்கு அளிக்காவிட்டால் நீட் தேர்வு அடிப்படையில் ஆயுஷ் படிப்புக்கு சேர்க்கை தமிழக சுகாதாரத் துறை தகவல் 

மத்திய அரசு விலக்கு அளிக்காவிட்டால், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆயுஷ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய மருத்துவ முறை படிப்புகளான ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு கட்டாயமாக்கியது. ஆனால், நீட் தேர்வு தொடர்பான திருத்தங்களை இந்திய மருத்துவ முறை குழுமம் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி கடந்த ஆண்டு தமிழகத்தில் ஆயுஷ் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நாடுமுழுவதும் ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. நீட் தேர்வு தொடர்பான தேவையான திருத்தங்களை இந்திய மருத்துவ முறை குழுமம் செய்துவிட்டது. மாணவர்கள் குழப்பம் நாடுமுழுவதும் கடந்த 5-ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஆனால், இதுவரை தமிழகத்தில் இந்த ஆண்டு ஆயுஷ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் மூலம் நடைபெறுமா அல்லது பிளஸ்2 மதிப்பெண்ணின் அடிப்படையில் நடைபெறுமா என்பதை தமிழக அரசு அறிவிக்கவில்லை. இதனால் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி யுள்ளது. விலக்கு கிடைக்கவில்லை என்றால், மத்திய அரசின் முடி வான நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆயுஷ் படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்” என்றனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்ட அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து பள்ளி கள் ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித் துள்ளார். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதத் திலும், இதர வகுப்புகளுக்கு ஏப்ரல் மாதத்திலும் முடிவடைந்தன. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 13 முதல் அனைத்துப் பள்ளி களுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், கோடை விடு முறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கும் பள்ளிக் கல்வி இயக் ககத்திலிருந்து தகவல் அனுப்பப் பட்டிருப்பதாக ஊடகங்களில் கடந்த 22-ம் தேதி செய்திகள் வெளியாயின. ஆனால், இதுதொடர்பாக விளக்கம் அளித்த பள்ளிக் கல்வி இயக்ககம், பள்ளிகள் திறக்கப்படும் நாள் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அறி வித்தது. கோடை வெயில் மிகவும் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் நாள் தள்ளிப்போகும் என்று எதிர்பார்த்துக் கொண்டி ருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆவலை இந்த அறிவிப்பு மேலும் அதிகப் படுத்தியது. வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளிப்போகலாம் என்பது போன்ற தகவல்கள் மாணவ-மாணவியர் மற்றும் பெற்றோர் மத்தியில் தொடர்ந்து பரவிய வண்ணம் இருந்தன. இந்நிலையில், பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டை யன் நேற்று தனியார் தொலைக் காட்சியில் கூறும்போது, ‘‘திட்ட மிட்டபடி ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். வெயிலால் பள்ளி கள் திறக்கப்படும் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்ற செய் திகள் உண்மை அல்ல. பள்ளி கள் திறக்கப்படும் தேதியை தள்ளிவைக்க வாய்ப்பே இல்லை. ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றார். மாணவர்களின் நலன் கருதி.. இதற்கிடையே, பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கும் நேற்று அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை பள்ளி களிலும் 2019-2020-ம் கல்வி ஆண் டில் மாணவர்களுக்கான பாடத் திட்டங்களை முழுமையான அளவில் முடிக்க வேண்டியுள்ள தால் மாணவர்களின் நலன் கருதி அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 3-ம் தேதி (திங்கள்கிழமை) திறக்கப்பட வேண்டும். இந்த விவரத்தை தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தெரி விக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் சுற்றறிக்கையில் கூறப்பட் டுள்ளது.DEO EXAM மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு மே 31 முதல் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

மாவட்ட கல்வி அலுவலர் தேர்வுக்கு மே 31 முதல் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பணியில் அடங்கிய மாவட்ட கல்வி அலுவலர் (டிஇஓ) பதவியில் 20 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு முதல்நிலைத் தேர்வு மார்ச் 2-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 20,433 பேர் எழுதினர். இதிலிருந்து அடுத்த கட்ட தேர்வான முதன்மை எழுத்துத் தேர்வுக்கு 1,052 பேர் தகுதிபெற்றுள்ள னர். அவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத் தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருக்கிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்விச் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையத்தில் மே 31 முதல் ஜூன் 14 வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம். முதன்மைத் தேர்வு ஜூலை 27 முதல் 29-ம் தேதி 3 நாட்கள் நடைபெறும்.TRB சிறப்பாசிரியர் பதவிகளுக்கான இறுதி தேர்வுபட்டியல் தயாரிக்கும் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இறுதி தேர்வுபட்டியல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய சிறப்பாசிரியர் பதவி களுக்கான இறுதி தேர்வுபட்டியல் தயாரிக்கும் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இறுதி தேர்வுபட்டியல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப் பாசிரியர் பதவிகளில் 1,325 காலி யிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித் தேர்வை நடத்தியது. இத்தேர்வை 35,781 பேர் எழுதினர். தேர்வுக்கான கீ ஆன்சர் (உத்தேச விடைகள்) அக்டோபரில் வெளி யானாலும் தேர்வு முடிவுகள் 2018-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தம் 95 மதிப்பெண் ணுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் களுக்கு 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ம் தேதி அந்தந்த மாவட்டங் களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத் தப்பட்டது. அப்போது தேர்வர் களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப் பட்டு அவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு அதிக பட்சம் 5 மதிப்பெண் அளிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து, எழுத்துத் தேர்வு மதிப்பெண், பதிவுமூப்பு மதிப்பெண் இடஒதுக்கீடு ஆகிய வற்றின் அடிப்படையில் தற்காலிக தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் 2018-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி வெளி யிட்டது. அதில், ஓவியம், தையல் பாடப்பிரிவுகளில் தமிழ்வழி ஒதுக் கீட்டில் அதிக மதிப்பெண் பெற் றிருந்த பலரின் பெயர் இடம் பெறவில்லை. அதேநேரத்தில் அவர்களைக் காட்டிலும் குறை வான மதிப்பெண் பெற்றோரின் பெயர் பட்டியலில் இடம்பெற் றிருந்தது. இதைத்தொடர்ந்து, பாதிக்கப் பட்ட தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை அணுகி விளக்கம் கேட்டபோது, அவர்கள் தையல் மற்றும் ஓவியத்தில் ஹையர் கிரேடு தேர்வுக்கு தமிழ்வழி சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஹையர் கிரேடு தேர்வை நடத்திய அரசு தேர்வுத்துறை ஹையர் கிரேடு தேர்வுக்கு தமிழ் வழி சான்றிதழ் வழங்க இயலாது என்று எழுத்துப்பூர்வமாக அளித்த விளக்கத்தை தேர்வர்கள் காண்பித்தும் அவ்விளக்கத்தை ஏற்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து, பாதிக்கப் பட்ட தேர்வர்கள் (ஓவியம், தையல்) 30 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த னர். இவ்வழக்கில் கடந்த மார்ச் மாதம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் ஹையர் கிரேடு தேர்வுக்கு தமிழ்வழி சான்றிதழ் வழங்க முடியாது என்று அத்தேர்வை நடத்திய அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. எனவே, அது தொடர்பான சான்றிதழைக் கேட்காமல், தேர்வர்கள் ஆன் லைன் விண்ணப்பத்தில் தமிழ் வழியில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு மற்றும் தொழிலாசிரியர் சான்றிதழ் (டிடிசி) பயிற்சி ஆகிய வற்றை தமிழ்வழியில் படித்திருந் ததைக் குறிப்பிடலாம். சான்றிதழ் சரிபார்ப்பு படிவத்திலும் அந்த விவரங்களைக் குறிப்பிட்டு உரிய சான்றிதழ்களை சமர்ப்பித் திருந்தால் அத்தகைய விண்ணப்ப தாரர்களின் பெயர்களை தேர்வு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு உத்தரவு பிறப் பித்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தர வைத் தொடர்ந்து, தையல் மற்றும் ஓவிய பாடப்பிரிவில் தமிழ்வழி ஒதுக்கீடு தற்காலிக தேர்வுபட்டிய லில் இடம்பெற்றுள்ளவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண் பெற்று சான்றிதழ் விவகாரத்தால் நிராகரிக்கப்பட்ட தேர்வர்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆய்வு செய்தது. சிறப் பாசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப் பட்ட கல்வித்தகுதியை தமிழ் வழியில் படித்திருப்பதை ஆன் லைனிலும் சான்றிதழ் சரிபார்ப்பு படிவத்திலும் எத்தனை பேர் குறிப்பிட்டுள்ளனர் என்பதையும் சரிபார்த்தது. ஆனால், நீதி மன்றம் தீர்ப்பு வெளியாகி 3 மாதங்கள் ஆகியும் இன்னும் இறுதி தேர்வுபட்டியல் வெளி யிடப்படவில்லை. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, "தமிழ்வழி சான்றிதழ் பிரச்சினையில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, இறுதி தேர்வுபட்டியல் தயாரிக்கப்பட்டு அப்பணி முடிவடையும் தருவா யில் உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில், இறுதி தேர்வுபட்டியல் விரை வில் வெளியாகும்" என்று தெரிவித்தனர்.காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்புத்துறை - ஜூலை 14ம் தேதி எழுத்துத்தேர்வு.

காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்புத்துறையில் காலியாக உள்ள 8826 காவலர் பணிக்கு ஜூலை 14ம் தேதி எழுத்துத்தேர்வு. காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 8,826 இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு ஜூலை 14ல் நடக்கிறது. காவல்துறையில் 2ம் நிலை காவலர் (பெண்கள், திருநங்கைள்) 2,465, இரண்டாம் நிலை காவலர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை (ஆண்கள்) 5,962, சிறைத்துறை இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண்) 186, (பெண்கள்) 22, தீயணைப்பாளர் ஆண்கள் 191 என மொத்தம் 8,826 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு மாத ஊதியம் 18,200-52,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் இணைய வழியில் ஏப்ரல் 8ம் தேதிக்குள் விண்ணப்பிங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஏராளாமானோர் சம்மந்தப்பட்ட பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கான தேர்வு வரும் ஜூலை 14 ம் தேதி தமிழகம் முழுவதும் நடக்கிறது.தமிழகத்தில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை.

பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம் இல்லைஎன செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என வெளியான செய்திக்கு அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 641 விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.06.2019.

 • SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
 • பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 641
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.06.2019.
 • இணைய முகவரி : www.sbi.co.inLIC RECRUITMENT 2019 | LIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டெவலப்மென்ட் ஆபீசர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,581 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.06.2019.

 • LIC RECRUITMENT 2019 | LIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
 • பதவி : டெவலப்மென்ட் ஆபீசர் உள்ளிட்ட பணி
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,581
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.06.2019
 • இணைய முகவரி : www.licindia.in
ஐசிஎப்-ல் தொழில் பழகுநர் பயிற்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோருக்கு அழைப்பு ரயில்வே வாரியம் உத்தரவு

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்தோருக்கு மட்டுமே ஐசிஎப்-ல் தொழில் பழகுநர் பயிற்சி அளிக்க வேண்டுமென ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், பொதுத் துறை நிறுவனங்களில் வட இந்தியர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது என சிலர் குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும், தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென ரயில்வே தொழிற்சங்கங்களும் வலியுறுத்தின. இதற்கிடையே, சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு கார்பென்டர், எலக்ட்ரிஷியன், பிட்டர், பெயிண்டர் உட்பட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 990 பயணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி பெற 10-ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாகும். பயிற்சிக்கு ஏற்றவாறு ஒரு ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரையில் இருக்கும் இந்த பயிற்சி களைப் பெற வரும் ஜூன் 24-ம் தேதிக் குள் www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். உதவித் தொகை இந்த பயிற்சிகளை பெற தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோருக்கு மட்டுமே பெற முடியும் என ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், பயிற்சி பெறும் மாணவர்கள் மாதந்தோறும் ரூ.5,700 முதல் ரூ.7,350 வரையில் உதவித் தொகை பெற முடியும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால், தமிழக மாணவர்கள் பயன்பெற முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.ஆகஸ்ட் 10-ம் தேதி உதவி பொறியாளர் தேர்வு

ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக் கான தேர்வு (உதவி பொறியாளர் தேர்வு) ஆகஸ்ட் 10-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பான முழு விவரங்கள் அடங்கிய அறிவிக்கை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வருகிற 29-ம் தேதி (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. அன்றைய நாள் முதல் ஜூன் 28-ம் தேதி வரை இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் அறிவித்துள்ளார். ஒருங்கிணைந்த பொறியாளர் பணி தேர் வுக்கு பிஇ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தமிழ்வழியில் பொறியியல் படித்தவர் களுக்கு 20 சதவீத காலியிடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி

மதுரை அரசு மருத்துவக் கல்லூ ரிக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 22 அரசு மருத் துவக் கல்லூரிகள் உள்ளன. பெருந் துறையில் சாலைப் போக்கு வரத்து தொழிலாளர்களின் வாரிசு களுக்காக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியும் இந்த ஆண்டு முதல் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட உள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 3,000 எம்பிபிஎஸ் இடங்கள் இருந்தன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டன. மீதமுள்ள இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்துகிறது. இந்நிலையில் கரூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும். இந்த புதிய கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்திருந்தது. இதேபோல், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி கிடைத் தது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மட்டும் கூடுதலாக கேட்கப்பட்டிருந்த 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், தற்போது மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்களை இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கிடைத்துள்ளது.தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்கள் வேறு பள்ளியில் சேரும்போது சலுகை பெறமுடியாமல் அவதி

தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்கள், வேறு பள்ளிகளில் சேரும்போது அச் சட்டத்தின் கீழ் கிடைக்கும் சலுகையைத் தொடர முடியாமல் அவதிக்கு உள்ளாகின்றனர். மத்திய அரசால் கல்வி உரிமைச் சட்டம் 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதை தமிழகத்தில் செயல் படுத்த 2011-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இச்சட் டத்தின் கீழ் 2013-14ம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் உள்ள நுழைவு வகுப்பு களில் 25% இடங்களை நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்டோர் குழந்தை களைக் கொண்டு நிரப்ப வேண்டும். இத்திட்டத்தின் கீழ் நலிவடைந்த பிரிவினர், வாய்ப்பு மறுக்கப்பட்டோர் பிரிவினர் (சிறப்புப் பிரிவு), வாய்ப்பு மறுக்கப்பட்டோர் பிரிவினர் என 3 இனங்களில் சேர்க்கை நடத்தப் படுகிறது. அனைத்து பிரிவினரும் பிறப்பு மற்றும் முகவரிச் சான்றை சமர்ப் பிக்க வேண்டும். நலிவடைந்த பிரிவினர், வருமானச் சான்றை கூடுதலாக சமர்ப் பிக்க வேண்டும். வாய்ப்பு மறுக்கப் பட்டோர் (சிறப்பு பிரிவு) பிரிவின் கீழ், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளி, 3-ம் பாலினத்தினர், எச்ஐவியால் பாதிக்கப்பட்டோர், துப்புரவு தொழி லாளியின் குழந்தை ஆகியோர் அதற் கான முன்னுரிமைச் சான்றை அளிக்க வேண்டும். பொதுப் பிரிவினர் அல்லாத பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்டோர் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் வருகின்றனர். இவர்களுக்கு வருமான வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. அவர்கள் சாதிச் சான்றை மட்டும் கூடுதலாக சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தில் மொத்தம் 4,291 தனியார் பள்ளிகள் உள்ளன. அதில் 39 லட்சத்து 18 ஆயிரம் மாணவ, மாணவி யர் பயில்கின்றனர். நுழைவு வகுப்பு களில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற் பட்ட குழந்தைகள் பயில்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களை கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நிரப்ப வேண்டும். ஆனால் மொத்த இடங் களில் ஆண்டுதோறும் சுமார் 60,000 இடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன. அம்மாணவர்களிடம் தனியார் பள்ளி கள் எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. அவர்களுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு செலுத்துகிறது. இந்தச் சலுகையை 8-ம் வகுப்பு வரை மட்டுமே பெற முடியும். இச்சட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பிப்பது, பள்ளிகளில் உள்ள கல்வி உரிமைச் சட்ட இடங்கள் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருந்தது. இந்நிலையில் 2017-ம் ஆண்டு, கல்வித் துறைச் செயலராக த.உதய சந்திரன் இருந்தபோது, விண்ணப்பிக் கும் முறையை ஆன்லைனில் கொண்டு வந்தார். எந்தெந்த பள்ளியில் கல்வி உரிமைச் சட்ட இடங்கள் எத்தனை இருக்கின்றன என்பது குறித்த விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட்டார். இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் பெற்றோர் பலர் வேலைவாய்ப்புக்காக வெளியூருக்கு குடிபெயர்கின்றனர். சிலர் பள்ளிச் சூழல் சரியில்லை என்பதற்காக வேறு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கின்றனர். சில பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப் பட்டதாலேயே, அவர்களை மோசமாக நடத்துவதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவும் வேறு பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டியுள்ளது. இதுபோன்ற மாணவர்கள், வேறு தனியார் பள்ளிகளில் சேரும்போது, கல்வி உரிமைச் சட்ட சலுகைகளைப் பெற தகுதியற்றவர்களாகின்றனர். வேறு பள்ளிகளில் சேர்ந்தாலும், சலுகை கள் தொடரும் வகையில் சட்டத்திலும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை களிலும் எந்த அம்சங்களும் இடம் பெறவில்லை. இதனால் ஏழை மாண வர்கள் தனியார் பள்ளிகளில் இலவச கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் சட்டத்திலோ அல்லது தமிழக அரசின் விதிகளிலோ திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பது ஏழை பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, “இப்பிரச்சினை இப்போதுதான் துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலருடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.பொறியியல் படிப்புக்கு 1.20 லட்சம் பேர் விண்ணப்பம் | விண்ணப்பிக்க கடைசி நாள் மே 31 | ஜூன் 20-ம் தேதி கலந்தாய்வு .

தமிழகத்தில் உள்ள 539 பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் பதிவு மே 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர மாணவ-மாணவியர் மிகுந்த ஆர்வத்தோடு ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறார்கள். நேற்று மாலை 6 மணி நிலவரப் படி, 1.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு பொறியி யல் மாணவர் சேர்க்கை செயலா ளர் புருசோத்தமன் தெரிவித்தார். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 31-ம் தேதி ஆகும். ஏற்கெனவே தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஜூன் 3-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும். இதைத்தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் ஜூன் 6 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும். அதன்பிறகு ஜூன் 17-ல் தரவரிசை வெளியிடப்பட்டு ஜூன் 20-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும்TNTET- 2019 - HALL TICKET | ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியீடு.

TNTET- 2019 - HALL TICKET | ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியீடு. ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கைச் செய்தி 2019 ஆம் ஆண்டிற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 08.06.2019 மற்றும் தாள்-2 09.06.2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இத்தகுதித் தேர்விற்கு உரிய நுழைவுச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in-ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச்சொல் (Password) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யும் வகையில் தற்பொழுது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் நுழைவுச்சீட்டினை Printout எடுத்து தேர்வறைக்கு கொண்டு வரவேண்டும் என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. TRB தலைவர் | DOWNLOADடி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு விவரங்கள்.

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய போட்டித்தேர்வுகளுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சான்றிதழ் சரிபார்ப்பு 158 காலி பணியிடங்களுக்கான வனச்சரக அலுவலர் பதவிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தேர்வு நடந்தது. இந்த தேர்வு எழுதியவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக 50 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் 28-ந் தேதி முதல் ஜூன் 7-ந் தேதி வரையிலான நாட்களில் தங்களது சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். அதேபோல முதுநிலை ரசாயனர் பதவிக்கான தேர்வு எழுதியோரில் (3.11.2018) 5 பேரும், கட்டிடக்கலை உதவியாளர் மற்றும் திட்ட உதவியாளர் தேர்வு எழுதியோரில் (22.12.2018) 37 பேரும் ஜூன் 6-ந் தேதி நடக்கும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். தொழிற்பயிற்சி நிலைய முதல்வர், சார்நிலை பணிக்கான உதவி பொறியாளர் தேர்வு எழுதியோரில் (2.3.2019) 199 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 31-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரையிலான நாட்களில் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். முதன்மை தேர்வுக்கு அழைப்பு மாவட்ட கல்வி அதிகாரிக்கான தேர்வு எழுதியோரில் (2.3.2019) 1,052 பேர் ஜூலை 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறும் முதன்மை தேர்வுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். தொழில்-வணிகத்துறை ஆய்வாளர் மற்றும் பண்டக காப்பாளர் தேர்வு எழுதியோரில் (24.3.2019) முதற்கட்டமாக தேர்வான 20 பேர், 28-ந் தேதி முதல் ஜூன் 7-ந் தேதி வரையிலான நாட்களில் இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும். பல்வேறு பணிகளில் நூலகர் பதவிக்கு நடந்த தேர்வில் (30.3.2019) முதற்கட்டமாக தேர்வான 60 பேர் 31-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரையிலான நாட்களில் இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும். தொல்லியல் துறையில் அடங்கிய நூலகர் பதவிக்கு நடந்த தேர்வில் (31.3.2019) தேர்வான 3 பேருக்கு, 28-ந் தேதி முதல் ஜூன் 7-ந் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. வேளாண்மை உதவி அதிகாரி தேர்வுக்கு மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.AGRI ADMISSION | இளநிலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க 6-ந் தேதி கடைசி நாள்

வேளாண்மை பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க வருகிற 6-ந் தேதி கடைசிநாள் என துணைவேந்தர் குமார் கூறினார். துணைவேந்தர் பேட்டி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க வருகிற 6-ந் தேதி கடைசி நாளாகும். இந்த படிப்புக்கு இதுவரை 32 ஆயிரம் விண்ணப்பங்கள் ஆன்-லைன் மூலம் பெறப்பட்டு உள்ளன. இதற்கான தரவரிசை பட்டியல் ஜூன் மாதம் இறுதியில் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும். பிளஸ்-2 கணினி பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்களும், வேளாண்மை பட்டப்படிப்புகளில் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்பதால், ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு 60 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம். புதிய பட்டப்படிப்பு பல்கலைக்கழக வளாகத்தில் 40 இருக்கைகளுடன் புதிதாக வேளாண்மை பொறியியல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு தொடங்கப்பட உள்ளது. மேலும் இப்பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 4 ஆயிரம் இடங்கள் உள்ளன. வேளாண்மை படிப்புகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. இதுதவிர 14 வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கி வருவதோடு, 1 லட்சம் விவசாயிகள் பயன் பெற்று உள்ளனர். வேளாண்மை அறிவியல் நிலையம் கடந்த ஆண்டு திருப்பூரில் பல்கலைக்கழகம் சார்பில், வேளாண்மை அறிவியல் நிலையம் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. அதேபோல் இந்த ஆண்டு நீலகிரியில் வேளாண்மை அறிவியல் நிலையம் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் வகுப்பு கள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக் கான பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டில் ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாம்பரம், தர்மபுரி, தஞ்சாவூர், காஞ்சிபுரம், ஊட்டி, சேலம், ஈரோடு, விருதுநகர், கடலூர் ஆகிய 9 இடங்களில் அரசு செவிதிறன் குறைபாடு உடையோருக்கான நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு அறிவிப்பு இப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ஸ்மார்ட் வகுப்புக்கு தேவையான கணினி, தளவாட சாதனங்கள், இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ஒரு பள்ளிக்கு ரூ.5 லட்சம் என 9 பள்ளிகளுக்கு ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. உள்கட்டமைப்பு பணிகள் இதைத்தொடர்ந்து, ஸ்மார்ட் வகுப்பு அமைப்பதற்கான உள்கட்ட மைப்பு பணிகள் பொதுப்பணித் துறையின் மூலம் மேற்கொள்ளப் பட்டன. ஸ்மார்ட் வகுப்புக்கு கணினி, புரொஜக்டர் உள்ளிட்ட தேவையான உபகரணங்களை கொள்முதல் செய்யும் பணி அரசு நிறுவனமான எல்காட்டிடம் ஒப்ப டைக்கப்பட்டது. இப்பணிகள் அனைத் தும் முடியும் தருவாயில் உள்ளன. இப்பணிகளை விரைந்து முடித்து வரும் கல்வியாண்டு முதல் ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்க மாற்றத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர்.‘டான்செட்’ தேர்வுக்கு விண்ணப் பிக்கும் கால அவகாசம் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலை., அதன் உறுப்பு கல்லூரிகள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் போன்ற முதுநிலை படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) எழுத வேண்டும். அதன்படி நடப்பு ஆண்டு ‘டான்செட்’ நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலை. நடத்து கிறது. இந்தத் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 8-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பப் பதிவு நேற்றுடன் முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மொத் தம் 80,000-க்கும் அதிகமான இடங்கள் உள்ள நிலையில் இதுவரை 35,000 மாணவர் கள் மட்டுமே விண்ணப்பித் துள்ளனர். இதனால் விண்ணப் பிக்கும் கால அவகாசம் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.annauniv.edu என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.RTE ADMISSION | மே 29, 30-ல் இணையதளம் வழியாக 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கை

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடுக்கான இலவச மாணவர் சேர்க்கை மே 29, 30-ம் தேதிகளில் இணையதளம் வழியாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர். இதில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.21 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கான இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி மே 18-ல் முடிந்தது. மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே இலவச மாணவர் சேர்க்கையில் பல தனியார் பள்ளிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், மாணவர்களை சேர்க்கைக் கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய புகார்களை தவிர்க்க தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாண வர் சேர்க்கையை இந்த ஆண்டு முதல் இணையதளம் வழியாக அரசே ஏற்று நடத்த முடிவானது. அதன்படி, நடப்பு ஆண்டு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடுக்கான மாணவர் சேர்க்கை மே 29, 30-ம் தேதிகளில் இணையதளம் வழியாக நடைபெறும். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் சார்பில் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அதற்கு ஏதுவாக விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி மே 28-ம் தேதியுடன் முடிந்துவிடும். பள்ளிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கைக்கு குறைவாக விண் ணப்பங்கள் வந்திருந்தால் அனை வருக்கும் சேர்க்கை வழங்கப்படும். கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால் குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.பள்ளிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கைக்கு கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால் குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கப்படும்எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு மருத்துவ இயக்குநரகம் முடிவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்த மருத்துவக் கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பொறியியல் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. இதேபோல் மருத்துவப் படிப்புகளுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை கொண்டு வர மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) திட்டமிட்டது. அதன்படி, முதல்கட்டமாக இந்த ஆண்டு எம்டி, எம்எஸ் மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அமல் படுத்தப்பட உள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாடுமுழுவதும் கடந்த 5-ம் தேதி நடந்த நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியாக உள்ளது. ஜூன் 6-ம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் மாணவ, மாணவிகள் விண்ணப் பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித் துள்ளது. இதையடுத்து கலந்தாய் வையும் ஆன்லைனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த ஆண்டு முதல் முறையாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லை னில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதேபோல், கலந்தாய்வையும் ஆன்லைனில் நடத்த திட்டமிட்டி ருக்கிறோம். எல்லாம் சரியாக இருந்தால், ஆன்லைனில் கலந் தாய்வு நடத்தப்படும். அப்படி இல்லையென்றால் வழக்கம்போல் ஒற்றைச்சாளர முறையில் கலந் தாய்வு நடைபெறும்” என்றார். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu10-ம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் மே 27-ல் வெளியாகும்

10-ம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் மே 27-ல் வெளியாகும் தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட அறிவிப்பு: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப் பித்தவர்களில் மதிப்பெண் மாற்ற முள்ள தேர்வர்களின் பதிவெண் கள் பட்டியல் மே 27-ம் தேதி வெளியிடப்படும். தேர்வர்கள் scan.tndge.in என்ற இணைய தளத்தில் சென்று ‘SSLC MARCH 2019 RETOTAL RESULTS’ இணைப்பினை க்ளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் மறுகூட்டல் முடிவுகளை தெரிந்துக் கொள்ள லாம். மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற் காலிக சான்றிதழ்கள் தேர்வுத் துறையின் www.dge.tn.nic.in இணையதளத்தில் மே 27-ம் தேதி மதியம் முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அதேநேரம் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இந்த பட்டியலில் பதிவெண்கள் இடம்பெறாத மாணவர்களின் விடைத்தாளில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடிகளுக்கு மாற்றம் தொடக்கக் கல்வித் துறை உத்தரவு 

தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் ஏ.கருப்பசாமி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் இயங்கிவரும் 2,381 அங்கன்வாடி மையங் களில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதுதவிர ஒன்றியங்களில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் களை மழலையர் வகுப்பு களுக்கு பாடம் நடத்த ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு ஆசிரியர் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இதை எதிர்த்து சில ஆசிரியர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடுத்தனர். இந்நிலையில் விசாரணை யின் முடிவில் அந்த வழக்கு களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. எனவே, மழலை யர் வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்குவதுடன், தங்களால் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை பள்ளி திறக்கும் நாளில் பணியில் சேர உத்தரவிட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.TNPSC குரூப்-2 மற்றும் 2-ஏ தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஇஓ தேர்வு உட்பட ஒரேநாளில் 9 போட்டித்தேர்வுகளின் முடிவு களை வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி சாதனை படைத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய வனச் சரக அலுவலர் தேர்வு, தொழில் துறை முதுநிலை வேதியியலாளர் தேர்வு, ஊரமைப்பு கட்டிடக்கலை உவியாளர், திட்ட உதவியாளர் தேர்வு, அரசு ஐடிஐ முதல்வர் மற்றும் உதவி பொறியாளர் தேர்வு, மாவட்ட கல்வி அலுவலர் (டிஇஓ) தேர்வு, வணிகத்துறை உப்பு ஆய் வாளர் தேர்வு, தடயஅறிவியல் துறை பண்டக காப்பாளர் தேர்வு, பல்வேறு துறைகளில் நூலகர் தேர்வு, உதவி வேளாண் அலு வலர் தேர்வு ஆகிய 9 போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வியாழக் கிழமை ஒரேநாளில் வெளியிடப் பட்டன. தேர்வு முடிவுகளின்படி, அடுத்த கட்ட நிலைகளுக்கு தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்ப தாரர்களின் பதிவெண்கள் அடங் கிய பட்டியலை இணையதளத் தில் (www.tnpsc.gov.in) தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் வரையில் நடத்தப் பட்ட போட்டித்தேர்வுகளின் முடிவு களையும் டிஎன்பிஎஸ்சி வெளி யிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, ஏப்ரல், மே மாதங்களில் வெளி யிடப்பட்டிருக்க வேண்டிய தலைமைச்செயலக உதவியாளர் (மொழிபெயர்ப்பு) தேர்வு, அரசு அருங்காட்சியக காப்பாளர் தேர்வு, உதவி சுற்றுலா அலுவலர் தேர்வு, குரூப்-2 மற்றும் 2-ஏ தேர்வு, தடயஅறிவியல்துறை இள நிலை அறிவியல் அலுவலர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி விரைவில் அடுத்தடுத்து வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.TNPSC RESULT CV II | TNPSC FOREST APPRENTICE தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 • TNPSC RESULT CV II - FOREST APPRENTICE IN THE TAMIL NADU FOREST SUBORDINATE SERVICE | DOWNLOAD
 • TNPSC RESULT CV II | TNPSC FOREST APPRENTICE தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 • The list of Register numbers of candidates provisionally admitted to 1st phase of Certificate Verification for the post of FOREST APPRENTICE IN THE TAMIL NADU FOREST SUBORDINATE SERVICE was published in the Commission’s website on 12.04.2019 based on the results of the written examination conducted by the Commission on 09.10.2018 to 15.10.2018 FN & AN. Based on the outcome of 1st phase of Certificate Verification, the Online Applications of 10 candidates were rejected for wrong claim/ not uploading documents. It has therefore been decided to admit the candidates to the next phase of Certificate Verification in the ratio of 1:5 against the resultant vacancies. Hence, apart from the candidates who had already completed the certificate verification, the candidates with the following register numbers are hereby admitted provisionally to the certificate verification-II for the said post. They should upload the scanned copy of documents in support of the claims made in their online application from 28.05.2019 to 07.06.2019 in the e-seva centres run by TACTV. A List of designated e-seva centres is available in the Commission’s website. The details regarding the documents to be uploaded will be made available in the Commission’s website and candidates will be informed of the above fact only through SMS and e-mail. Individual communication in this regard will NOT be sent to the candidates by post. Candidates with Qualification(s) other than Forestry: 010001100 010001260 010001384 010002018 010003192 010003292 010005186 010008114 010009046 010009192 010009228 010009284 010010050 010011334 010012058 010012228 010013232 010018243 010019022 010021157 010021268 100001002 100001022 100002032 100004163 100005278 100009244 100013074 100014387 100015281 100016203 170001058 170008274 170009008 170009190 170011180 2 170013111 190001344 190002130 190002280 190003264 250001208 250001398 250004222 250009080 260002089 270001293 270003243 280001240 AND 280003187 The admission of the candidate with register number 010001260 to Certificate Verification is PROVISIONAL subject to the outcome of the PHYSICAL TEST which is to be conducted on later date.


  TNPSC RESULT OT | TNPSC SENIOR CHEMIST IN TN INDUSTRIES தேர்வுக்கான Oral Test அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


  • TNPSC RESULT OT - POST OF SENIOR CHEMIST IN TN INDUSTRIES | DOWNLOAD
  • TNPSC RESULT OT | TNPSC SENIOR CHEMIST IN TN INDUSTRIES தேர்வுக்கான Oral Test அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  The list of candidates provisionally admitted to Certificate Verification for the post of SENIOR .
  CHEMIST IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE, 2014-2015 was published in the Commission’s website on 17.12.2018 based on the results of the written examination conducted by the Commission on 03.11.2018 FN & AN. The candidates were asked to attend Certificate Verification on 27.12.2019 with all original documents in support of the claims made in their online applications. Based on the outcome of the Certificate Verification, the candidates whose Register Numbers mentioned below have been provisionally admitted to Oral Test in the ratio of 1:3. The Oral Test will be held on 06.06.2019, at the office of the Tamil Nadu Public Service Commission, TNPSC Road, Chennai - 600 003. The candidates should attend the Oral Test with all original certificates in support of the claims made in their online applications. Individual Communication regarding the date and time of Oral Test will not be sent to the candidates by post. The above details will be made available in the Commission’s website and the candidates will be informed of the above fact only through SMS and e-mail accordingly. 010001036 010001040 010001044 010001052 AND 010001063 The admission of the candidate with the following register number to Oral Test is PROVISIONAL and the result is WITHHELD subject to verification and acceptance of Experience Certificate. 010001044


  TNPSC RESULT CV | TNPSC ARCHITECTURAL ASSISTANT தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


  • TNPSC RESULT OT - ARCHITECTURAL ASSISTANT - PLANNING ASSISTANT IN THE TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE | DOWNLOAD
  • TNPSC RESULT CV | TNPSC ARCHITECTURAL ASSISTANT தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  The lists of candidates provisionally admitted to 1st and 2nd Phases of Certificate Verification for the post of ARCHITECTURAL ASSISTANT / PLANNING ASSISTANT IN THE TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE (2007 - 2015) was published in the Commission’s website on 13.02.2019 and 12.04.2019 respectively, based on the results of the written examination conducted by the Commission on 22.12.2018 FN & AN. Based on the outcome of the 1st and 2nd phases of Certificate Verification, the candidates whose Register Numbers mentioned below have been provisionally admitted to Oral Test in the ratio of 1:3. The Oral Test will be held on 06.06.2019, at the office of the Tamil Nadu Public Service Commission, TNPSC Road, Chennai - 600 003. The candidates should attend the Oral Test with all original certificates in support of the claims made in their online applications. Individual Communication regarding the date and time of Oral Test will not be sent to the candidates by post. The above details will be made available in the Commission’s website and the candidates will be informed of the above fact only through SMS and e-mail accordingly. 010004027 010005028 010005144 010006078 010007086 010007117 010007125 010009070 010010058 010010156 010011016 010011300 010015059 010015208 020002016 020002067 100004224 100005146 170001224 170003060 170003108 170004003 170004045 170004067 170004149 170004200 190001079 190001106 190002107 250002077 250002140 250003033 250003051 250004124 250004214 260001054 AND 260002186


  TNPSC RESULT CV - TNPSC PRINCIPAL, INDUSTRIAL TRAINING INSTITUTE / ASSISTANT DIRECTOR OF TRAINING தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • TNPSC RESULT - PRINCIPAL, INDUSTRIAL TRAINING INSTITUTE / ASSISTANT DIRECTOR OF TRAINING IN THE TAMIL NADU EMPLOYMENT AND TRAINING SERVICE, 2010-2012 & 2016-2017 AND ASSISTANT ENGINEER (INDUSTRIES) IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE, 2013-2014 & 2018-2019 | DOWNLOAD.
  • TNPSC RESULT CV - TNPSC PRINCIPAL, INDUSTRIAL TRAINING INSTITUTE / ASSISTANT DIRECTOR OF TRAINING தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  The candidates whose Register Numbers are mentioned below have been provisionally admitted to the Certificate Verification for appointment by direct recruitment to the post of PRINCIPAL, INDUSTRIAL TRAINING INSTITUTE / ASSISTANT DIRECTOR OF TRAINING IN THE TAMIL NADU EMPLOYMENT AND TRAINING SERVICE 2010-2012 & 2016-2017 AND ASSISTANT ENGINEER (INDUSTRIES) IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE 2013-2014 & 2018 – 2019, based on the results of the Written Examination conducted by the Commission on 02.03.2019 FN & AN. The candidates who have been admitted provisionally to the Certificate Verification should upload the scanned copy of documents in support of the claims made in their online application from 31.05.2019 to 14.06.2019 in the e-seva centres run by TACTV. List of designated e-seva centres is available in the website. The details regarding the documents to be uploaded will be made available in the Commission’s website and candidates will be informed of the above fact only through SMS and e-mail. Individual communication in this regard will NOT be sent to the candidates by post. 010001036 010001072 010001082 010001126 010001130 010001139 010001140 010001144 010001147 010001196 010001248 010001267 010002035 010002055 010002075 010002097 010002098 010002108 010002109 010002110 010002162 010002177 010002178 010002193 010002272 010003044 010003133 010003146 010003183 010003199 010003200 010003238 010003256 010003274 010003276 010003291 2 010003299 010004023 010004054 010004088 010004103 010004123 010005092 010005165 010005176 010005220 010005242 010005248 010005355 010005367 010005388 010006005 010006043 010006062 010006118 010006219 010006242 010007148 010007168 010007183 010008015 010008049 010008050 010008121 010008125 010008143 010008162 010008177 010008179 010008184 010008271 010008277 010009023 010009096 010010043 010010046 010010057 010010077 010010084 010010093 010010133 010010168 010010244 010010255 020001016 020001052 020001088 020001153 020001188 020001192 020001228 020001248 020001345 020001381 020002191 020002232 020003063 020003087 020003113 020003183 020004078 020004081 020004120 020004135 030201009 030201036 030201070 030201074 030201134 030201260 030201278 070001041 070001143 070001157 070001204 080001109 080001116 100001029 100001046 100001244 100001247 100001260 100002083 100002107 100002122 100002151 100002163 100002238 100002246 100003016 100003186 130001012 160001006 160001038 160001095 170001028 170001070 170001074 170001081 170001122 170001126 170001135 170001143 170002015 170002018 170002205 170002241 170002283 170003021 170003067 170003121 170003133 170003145 170003197 170003213 170003275 170004070 170004193 180401004 180401061 180401071 190001009 190001010 190001050 190001080 190001112 190001165 190001269 190001276 250001018 250001024 250001052 250001053 250001059 250001064 250001068 250001088 250001111 250001116 250001169 250001194 250001202 250001214 250001222 250001244 250001304 250002113 250002254 260001058 260001120 260001144 260001153 260001245 260002032 270001012 270001171 270002019 270002044 AND 270002067 After completion of Certificate Verification, the list for provisional admission to Oral Test in the ratio of 1:2/1:3 will be published.