Follow by Email

Sunday, 30 June 2019

BHARATHIDASAN UNIVERSITY RECRUITMENT 2019 | BHARATHIDASAN UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு . பதவி : DIRECTOR . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2 . விளம்பர அறிவிப்பு நாள் : 26.06.2019 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.07.2019 .

  • BHARATHIDASAN UNIVERSITY RECRUITMENT 2019 | BHARATHIDASAN UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு .
  • பதவி : DIRECTOR .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2 .
  • விளம்பர அறிவிப்பு நாள் : 26.06.2019 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.07.2019 .
  • இணைய முகவரி : www.bdu.ac.in .



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TASMAC RECRUITMENT 2019 | TASMAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : LAW OFFICER . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1 . சம்பளம் : Rs 70,000 விளம்பர அறிவிப்பு நாள் : 30.06.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019.

  • TASMAC RECRUITMENT 2019 | TASMAC  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : LAW OFFICER உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1 .
  • சம்பளம் : Rs 70,000
  • விளம்பர அறிவிப்பு நாள் : 30.06.2019.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019.
  • இணைய முகவரி : www.tasmac.co.in



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக் கல்வித்துறையின் புதிய திட்டங்கள் ஜூலை 2-ல் பேரவையில் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக் கல்வித்துறையின் புதிய திட்டங்கள் ஜூலை 2-ல் பேரவையில் அறிவிக்கப்படும். நிதி நெருக்கடியிலும் கொண்டுவரும் திட்டங்களுக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், 2017-18இல் முடித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த 3 மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என கூறினார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் - கிருஷ்ணகிரி மாவட்டம் | pg-vacancy-krishnagiri-dt

1-6-2019 அன்று உள்ளவாறு கிருஷ்ணகிரி மாவட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்:

தமிழ்:
1. மணவார்னப்பள்ளி
2. பாலதொட்டனப்பள்ளி
3. தேன்கனிக்கோட்டை(மகளிர்)
4. சூளகிரி (ஆண்கள்)
5. தளி
6. உரிகம்
7. காளிங்காவரம்
8. தேன்கனிக்கோட்டை (ஆண்கள்)
9. பர்கூர் (மகளிர்)
10. உனிசெட்டி
11. தொகரப்பள்ளி (மகளிர்)
12. சாமல்பட்டி
13. அஞ்செட்டி
14. ராமாபுரம்
15. முல்லை நகர் (ஓசூர்)
16. மல்லப்பாடி
17. ஓசூர் (மகளிர்)
18. காவேரிப்பட்டினம் (மகளிர்)
19. சென்னசந்திரம்
20. ஊத்தங்கரை (ஆண்கள்)

ஆங்கிலம்:
1. வரட்டனப்பள்ளி
2. கே.ஆர்.பி அணை
3. நாட்றம்பாளையம்
4. சூளகிரி (ஆண்கள்)

கணிதம்:
1. சூளகிரி (மாதிரி)
2. நாட்றம்பாளையம்
3. காளிங்காவரம்
4. உனிசெட்டி
5. பெரியதள்ளப்பாடி
6. மேகலசின்னம்பள்ளி
7. சிங்காரப்பேட்டை (ஆண்கள்)
8. ஜூஜூவாடி
9. உள்ளுக்குறுக்கை
10. மாடரஹள்ளி
11. கெலமங்கலம்
12. வேப்பனப்பள்ளி (ஆண்கள்)
13. காவேரிப்பட்டினம் (ஆண்கள்)
14. மல்லப்பாடி

இயற்பியல்:
1. அஞ்செட்டி
2. முல்லை நகர் (ஓசூர்)
3. மல்லப்பாடி

வேதியியல்:
1. மணவார்னப்பள்ளி
2. சிங்காரப்பேட்டை (மகளிர்)
3. கெலமங்கலம்
4. வரட்டனப்பள்ளி
5. உரிகம்
6. குன்னத்தூர்
7. காளிங்காவரம்
8. கல்லாவி
9. ஓரப்பம்
10. ராமாபுரம்
11. ஜூஜூவாடி
12. மல்லப்பாடி
13. மாசிநாயக்கனப்பள்ளி
14. ஓசூர் (மகளிர்)
15. கண்ணன்டஹள்ளி
16. இம்மிடிநாயக்கனப்பள்ளி
17. சென்னசந்திரம்

உயிரியல்:
1. மணவாரனப்பள்ளி
2. நாட்றம்பாளையம்
3. காளிங்காவரம்
4. சிகரலப்பள்ளி
5. மல்லப்பாடி
6. மாசிநாயக்கனப் பள்ளி
7. மத்திகிரி

தாவரவியல்:
1. மோரனஹள்ளி

விலங்கியல்:
1. அரசம்பட்டி

வரலாறு:
1. பாலதொட்டனப்பள்ளி
2. அத்திப்பாடி
3. ஓசூர் (மகளிர்)

வணிகவியல்:
1. பாலதொட்டனப்பள்ளி
2. பாகலூர் (ஆண்கள்)
3. கிருஷ்ணகிரி (மகளிர்)
4. ஓசூர் (ஆண்கள்)
5. ஓசூர் (மகளிர்)
6. கண்ணன்டஹள்ளி
7. வேப்பனப்பள்ளி (மகளிர்)

பொருளியல்:
1. தேன்கனிக்கோட்டை (மகளிர்)
2. உரிகம்
3. கிருஷ்ணகிரி (ஆண்கள்)
4. அஞ்செட்டி
5. ஆலப்பட்டி
6. பேரிகை

7. ஊத்தங்கரை (ஆண்கள்)


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 27 June 2019

கணினி பயிற்றுநர் கணினி வழித் தேர்வு | தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது .

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை -6 பத்திரிக்கைச் செய்தி
2018-2019 ஆண்டு கணினி பயிற்றுநர் (நிலை-1) (முதுகலை ஆசிரியர் நிலை) நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 01.03.2017 அன்று வெளியிடப்பட்டது. கணினி வழித் தேர்வு (Computer Based Examination) 23.06.2019 மற்றும் 27.06.2019 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளையும் (Your Question and Answers Paper) User ID மற்றும் Password பயன்படுத்தி www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் 27-06-2019 - இரவில் வெளியிடப்படவுள்ளது என தெரிவிக்கலாகிறது.
Steps To View and Download Your Question and Answer paper Step
1 - Enter User ID and Password Step
2 - Click - Your Question and Answer Paper


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 26 June 2019

TEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.

  • TEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 .
  • விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.
  • இணைய முகவரி : www.job.kalvisolai.com

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 25 June 2019

DSE REVISED FORM AND DSE PROCEEDINGS 2019-2020 | தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் இந்த ஆண்டிற்கான புதிய விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளன.

DSE REVISED FORM AND DSE PROCEEDINGS 2019-2020 | தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் இந்த ஆண்டிற்கான புதிய விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளன.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிகல்வித் துறையில் காலியாக உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

பள்ளிகல்வித் துறையில் காலியாக உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள மொத்தம் 2,144 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250-ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும். க்கிய பாடப்பிரிவுகளில் 110 மதிப்பெண்ணுக்கும், கல்வி முறை பிரிவில் 30 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு பிரிவில் 10 மதிப்பெண்ணுக்கும் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் விண்ணப்பிப்பது எப்படி? என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்? என்பது தொடர்பான விவரங்களை http://www.trb.tn.nic.in இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு வகுப்புக்கு கிராமப்புறத்தில் 15 பேரும், நகர்ப்புறத்தில் 30 பேரும் நிர்ணயம்

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அரசு பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் கட்டாய இடமாறுதல் செய்வது தொடர்பான அரசாணை கடந்த வெள்ளிக் கிழமை பிறப்பிக்கப்பட்டது. அரசாணையில், பல்வேறு தகவல்களை அரசின் பள்ளிக்கல்வி துறை பதிவு செய்து இருந்தது. அதில் ஒன்றுதான், குறைந்த எண்ணிக்கை கொண்ட மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்பது ஆகும். நகர்ப்புறத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் 30 மாணவர்கள், கிராமப்புறத்தில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கக்கூடாது. அந்த பள்ளியில் மாணவர்கள் குறைவாக இருந்த பாடப்பிரிவுகளை நீக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது 50 சதவீதத்துக்கும் மேலான பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று கல்வியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அரசின் இந்த திட்டத்தால் கிராமப்புற மாணவர்களின் படிப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். கிராமப்புறத்தில் ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளிகளுக்கும் இடைபட்ட தூரம் என்பது 10 முதல் 20 கிலோ மீட்டர் அளவில் இருக்கும் என்பதால், அந்த மாணவர்கள் படிப்பை தொடரமுடியாமல் கூட போக வாய்ப்பு இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் கூறியதாவது:- அரசின் இந்த செயல் திட்டம் அரசு பள்ளிகளை ஊக்கப்படுத்துவதாக தெரியவில்லை என்றும், மாறாக தனியார் பள்ளிகளை வளர்த்துவிடுவதற்கும், கிராமப்புற மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் நோக்கிலும் இருக்கிறது. கிராமப்புறத்தில் இப்படி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள் அனைவரும் கல்வி அறிவை பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் அப்போதெல்லாம் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. நகர்ப்புறத்தில் இந்த பாதிப்பு குறைவாக தான் இருக்கும். குழந்தைகள் இலவச கல்வி உரிமை சட்டம் (ஆர்.டி.இ.) மூலம் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ரூ.100 கோடி மானியத்தில் மாணவர்களை சேர்க்க துடிக்கும் அரசு, நம்முடைய அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டாதது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக்கல்வி துறை அலுவலகங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இடமாற்றம் வருகிற 3-ந் தேதி விருப்ப கலந்தாய்வு நடக்கிறது

கல்வித்துறை நிர்வாகம் திறம்பட செயல்படும் பொருட்டு, ஊழியர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் பட்சத்தில் அவர்களை மாறுதல் செய்திடவும் ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே அனைத்து அலுவலகங்களும் எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையில் வருகிற 30-ந் தேதியுடன் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களுக்கு (இளநிலை உதவியாளர் முதல் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வரை) அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதி மாவட்ட அளவில் விருப்ப கலந்தாய்வு நடத்தி மாறுதல் வழங்கிட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் கண்டிப்பாக மாற்றம் செய்யப்பட வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேல் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், உதவியாளர்களுக்கு இது பொருந்தாது. ஒரே அலுவலகத்தில் ஒரு பிரிவில் இருந்து வேறு பிரிவுக்கு மாற்றுவது, மாறுதலாக கருத இயலாது. 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீவிர உடல் நலிவுற்றவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் விருப்புரிமை அதிகாரத்தினை பயன்படுத்தி, அதன் அடிப்படையில் கலந்தாய்வில் முன்னுரிமை அளித்து, இதனால் பிற பணியாளர்கள் பாதிக்காதபடி தக்க ஆணை வழங்கலாம். மேற்கண்ட தகவல் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) நாகராஜமுருகன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொழில்நுட்ப கோளாறு: 27-ந் தேதி முதுகலை கணினி ஆசிரியர் மறுதேர்வு 1,221 பேர் எழுதுகிறார்கள்

தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட 3 மையங்களில் முதுகலை கணினி ஆசிரியர் மறுதேர்வு 27-ந் தேதி நடக்கிறது. இதில் 1,221 பேர் எழுத இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு நேற்று முன்தினம் 119 மையங்களில் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. மொத்தம் 814 காலி பணியிடங்களுக்கு 30,833 பேர் விண்ணப்பித்து இருந்தனர். சில தேர்வு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், சில மையங்களில் தேர்வில் முறைகேடு நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட மையங்களில் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர்கள் தேர்வு வாரியம் கூறியிருந்தது. இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெங்கடேஷ் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- தேர்வு நடைபெற்ற பல மையங்களில் எந்த பிரச்சினையும் இல்லாமல் அமைதியான முறையில் தேர்வு நடந்து முடிந்தது. சில இடங்களில் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக சர்வரில் கோளாறு ஏற்பட்டது. ஆன்லைன் தேர்வுகளில் இதுபோல் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கம் தான். அதை தொழில்நுட்ப குழுவினர் சரிசெய்துவிடுவார்கள். அப்படி சரிசெய்ய முடியவில்லை என்றால் மறுதேர்வு நடத்தப்படும். கே.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி (944 தேர்வர்கள்), கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரி (118 தேர்வர்கள்), அன்னை என்ஜினீயரிங் கல்லூரி (159 தேர்வர்கள்) ஆகிய 3 கல்லூரிகளில் மட்டுமே தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு பாதிக்கப்பட்டது. அந்த இடங்களில் மட்டும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மறுதேர்வு நடத்தப்படும். இதில் 1,221 பேர் தேர்வை எழுத இருக்கிறார்கள். இதற்கான ‘ஹால்டிக்கெட்’ விரைவில் அனுப்பப்படும். வழக்கமாக இரண்டுவித வினாத்தாள்கள் தயாரிப்போம். அதில் ஒன்றை ஏற்கனவே பயன்படுத்திவிட்டதால், மற்றொன்றை மறுதேர்வுக்கு உபயோகப்படுத்துவோம். இந்த 3 மையங்களை தவிர மற்ற இடங்களில் மறுதேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரியில் இருந்த மையங்களில் நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடந்ததுபோல செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ மூலம் பரப்பப்பட்டு வருகிறது. தேர்வு ரத்து என்று அறிவிக்கப்பட்ட மையங்களில் தேர்வர்கள் போராட்டம் நடத்திவிட்டு, மீண்டும் உள்ளே வந்து செல்போனில் படம் எடுத்து இருக்கிறார்கள். இதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. செல்போனை உள்ளே எப்படி எடுத்துவந்தார்கள்? வீடியோ எப்படி எடுத்தார்கள்? என்பது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி, துணை போலீஸ் சூப்பிரண்டு, முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தருவார்கள். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 24 June 2019

முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு. தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நடந்தது. தேர்வு வினாக்கள் சற்று எளிதாகவே இருந்தது.

முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நேற்று நடந்தது. 814 இடங்களுக்கு 30 ஆயிரத்து 833 பேர் போட்டியிடுகிறார்கள். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், காலியாக உள்ள 814 முதுகலை கணினி ஆசிரியர்(கிரேடு-1) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி அறிவித்தது. இதுவரையில் நேர்முக தேர்வு மூலம் கணினி ஆசிரியர்கள் பணி இடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல் முறையாக முதுகலை கணினி ஆசிரியர் பணி இடங்களுக்கு ‘ஆன்-லைன்’ முறையில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஜூன் 23-ந்தேதி (நேற்று) தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு 7 ஆயிரத்து 546 ஆண்கள், 23 ஆயிரத்து 287 பெண்கள் என 30 ஆயிரத்து 833 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு எழுதுவதற்கான ‘ஹால்-டிக்கெட்’ கடந்த 17-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் 119 மையங்களில் முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு நேற்று நடந்தது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. ‘ஹால்-டிக்கெட்’, அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதிய சங்கீதா, சாந்தி ஆகியோர் கூறியதாவது:- தேர்வு சற்று எளிதாகவே இருந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தில் இருந்தே வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. 10 கேள்விகளுக்கு அளிக்கப்பட்டிருந்த 2 விடைகளும் சரியானது போலவே இருந்தது. மிகவும் புத்திக்கூர்மையுடன் அந்த கேள்வியை அணுக வேண்டியது இருந்தது. நன்கு படித்தவர்களுக்கு தேர்வு முடிவு நிச்சயம் சாதகமாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர். முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு முதல் முறையாக ‘ஆன்-லைன்’ மூலம் நடைபெற்றாலும், கணினி ஆசிரியர் பதவி உயர்வு தேர்வு ஏற்கனவே ‘ஆன்-லைன்’ முறையில் தான் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கணினி ஆசிரியர் தேர்வில் இணையதள கோளாறால் குளறுபடி  மீண்டும் தேர்வு நடத்தப்படும் என தேர்வு வாரியம் அறிவிப்பு

கணினி ஆசிரியர் தேர்வின்போது ஏற்பட்ட இணையதள கோளாறு உட்பட பல்வேறு குளறுபடிகளால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள் ளனர். பாதிப்புள்ள பகுதிகளில் மீண் டும் தேர்வு நடத்தப்படும் என ஆசிரி யர் தேர்வு வரியம் அறிவித்துள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டது. அதன்படி முதுநிலை ஆசிரியருக்கு இணை யான கணினி பயிற்றுநர் தேர்வுக்கு மொத்தம் 30,833 பேர் விண்ணப் பித்தனர். அதில் 23, 287 பெண்களும், 322 மாற்றுத்திறனாளிகளும் அடங் குவர். தொடர்ந்து அறிவித்தபடி மாநிலம் முழுவதும் கணினி வழித் தேர்வு நேற்று நடைபெற்றது. ஆனால், மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், நாமக்கல், திரு நெல்வேலி உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் இணையதள தொழில்நுட்பக் கோளாறு மற்றும் தேர்வு மையம் ஒதுக்கீடு குளறுபடி காரணமாக தேர்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தேர்வை புறக்கணித்து பல்வேறு பகுதிகளில் பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வர்களை சமாதனம் செய்து, தேர்வை மதியத் துக்கு மாற்றி வைத்தனர். மேலும், சில மாவட்ட மையங்களில் தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்திவைக்கப் பட்டது. முதல்முறையாக ஒரு போட்டித்தேர்வை டிஆர்பி கணினி வழியில் நடத்தியதால் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. அதற்கு மாறாக அரசு சார்பில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால் தேர்வர்கள் பெரிதும் அதிருப்தி அடைந்தனர். மறுபுறம் சென்னை, காஞ்சிபுரம் உட்பட தேர்வு நடைபெற்ற பிற மையங்களிலும் இணையதள வேகம் குறைவாக இருந்தது. இதனால் தேர்வை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிப்பதில் சிரமம் இருந்தது. மொத்தம் 150 மதிப் பெண்களுக்கான வினாத்தாள் கடினமாக இருந்ததாக தேர்வர் கள் தரப்பில் கூறப்பட்டது. இந் நிலையில் பாதிப்புள்ள பகுதிகளில் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று டிஆர்பி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “ஒரு சில மையங்களில் கணினி தொழில்நுட்ப கோளாறு காரண மாக சில தேர்வர்கள் தேர்வு எழுத இயலாத நிலை ஏற்பட்டது. எனவே, தேர்வு மையத்துக்கு வருகைபுரிந்து தொழில்நுட்ப கோளாறால் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு வேறு ஒரு நாளில் தேர்வு நடத்தப்படும். தேர்வு நாள் மற்றும் மையங்கள் குறித் விவரங்கள் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வழியாக விரைவில் அனுப்பப்படும். மேலும், தேர்வு மைய விவரங்கள் www.trb.tn.nic.in இணையதளத்திலும் வெளியிடப் படும்” என்று கூறப்பட்டு உள்ளது.மொத்தம் 150 மதிப் பெண்களுக்கான வினாத்தாள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் பாதிப்புள்ள பகுதிகளில் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று டிஆர்பி தெரிவித்துள்ளது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர்கள் சிறப்புநிலை பெற கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை தேவையில்லை தொடக்கக்கல்வித் துறை அறிவிப்பு 

ஆசிரியர்கள் தேர்வு நிலை, சிறப்பு நிலை பெறுவதற்கு கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை பெற தேவையில்லை என்று தொடக்கக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 10 மற்றும் 20 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் கல்வித்தகுதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பெறவில்லை என்பதால் தேர்வுநிலை, சிறப்பு நிலை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்கள் கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மை பெறவில்லை என்றாலும் சம்பந் தபட்ட வட்டாரக்கல்வி அதிகாி களிடம் இருந்து தேர்வு நிலை, சிறப்பு நிலை கருத்துருக்களை பெற்று முகாம் நடத்தி முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முகாம் நடைபெறும் நாளிலேயே சம்பந்தப்பட்ட ஆசிரி யர்களுக்கு ஆணை வழங்க வேண்டும். இதுதவிர முகாம்கள் மூலம் தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் இன்னும் சிறப்பு நிலை பெறாமல் இருப் பவர்களின் விவரங்களை அறிக் கையாக ஜூலை 1-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் இனி தேர்வு நிலை, சிறப்பு நிலை அடைய 10, 12-ம் வகுப்புக்கான கல்வித்தகுதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சமர்ப்பிக்க தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.முகாம்கள் மூலம் தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்கப்பட்ட ஆசிரியர் களின் எண்ணிக்கை மற்றும் இன்னும் சிறப்பு நிலை பெறாமல் இருப்பவர்களின் விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 23 June 2019

tnpsc குரூப்-4 தேர்வு எழுதுபவர்களுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் இலவச பயிற்சி நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

குரூப்-4 தேர்வு எழுதுபவர்களுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சி அளிக்கிறது. இதில் சேருவதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சைதை துரைசாமி மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இந்த பயிற்சி மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுகள், பல்வேறு மத்திய-மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கிறது. இதில் பங்கு பெற்று இதுவரை 3 ஆயிரத்து 366 பேர் வெற்றி அடைந்து, மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். குரூப்-4 தேர்வு அதன் தொடர்ச்சியாக, டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள குரூப்-4 காலி பணியிடங்களுக்கான தேர்வுக்கும் சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சி அளிக்க உள்ளது. மொத்தம் 6 ஆயிரத்து 491 காலி பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுக்கு, அடுத்த மாதம் (ஜூலை) 14-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தி இருக்கிறது. இந்த பணிகளுக்கான தேர்வு செப்டம்பர் 1-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுதுபவர்கள் மனிதநேய இலவச பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்கலாம். இந்த பயிற்சி பெற www.mnt-f-r-e-e-ias.com என்ற மனிதநேய இணையதளத்தில் Re-g-ist-er for TN-P-SC Gr.IV Ex-am 2019 என்ற இணைப்பில் நாளை (திங்கட்கிழமை) முதல் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்பவர்களுக்கு தேர்வுகள், வகுப்புகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இத்தகவலை மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்தார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் அனைவருக்கும் கட்டாய இடமாறுதல் பள்ளிக்கல்வி துறை பட்டியல் வெளியீடு

அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் அனைவரும் பணிநிரவல் மூலம் கட்டாய இடமாறுதல் செய்யப்பட உள்ளனர். இதற்கான பட்டியலை பள்ளிக்கல்வி துறை அரசுக்கு தெரிவித்து இருக்கிறது.

தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி துறையின் கீழ் அரசு, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது இட மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கல்வித்துறை அறிவித்து இருந்தது.

அதன்படி, கடந்த 21-ந் தேதி முதல் பொது இட மாறுதல், பணி நிரவல், பதவி உயர்வு ஆகியவற்றுக்காக ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். வருகிற 28-ந்தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு அடுத்த மாதம் (ஜூலை) 8-ந் தேதி தொடங்குகிறது.

இந்தநிலையில் பணி இடமாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டு தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்யப்படுவது வழக்கம். அந்த ஆசிரியர்கள் ஏற்கனவே பணிபுரியும் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பணிநிரவல் மூலம் கட்டாய இடமாறுதல் செய்யப்படுவார்கள்.

அந்தவகையில் நடப்பாண்டில் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பட்டியலை கல்வித்துறை தயார் செய்து இருக்கிறது. அதன்படி, தொடக்கக் கல்வியின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரத்து 279 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குனர், அரசுக்கு தெரிவித்து இருக்கிறார்.

அதேபோல், பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் 17 ஆயிரத்து 147 ஆசிரியர்கள் உபரியாக இருக்கின்றனர் என்ற அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்து இருக்கிறார்.

தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வி இரண்டையும் சேர்த்து மொத்தம் 19 ஆயிரத்து 426 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பட்டியல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பட்டியலுக்குள் வரும் ஆசிரியர்கள், அந்தந்த கல்வி மாவட்டத்தில் காலியாக உள்ள பிற இடங்களில் பணிநிரவல் மூலம் கட்டாய இடமாறுதலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஒவ்வொரு ஆண்டும் இது நடைமுறையில் இருப்பது தான். அது ஆசிரியர்களுக்கே நன்றாக தெரியும்’ என்றார்.

மேலும், பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களில் பணியாளர் நிர்ணயத்தில் கீழ்க்கண்ட நடைமுறையில் பின்பற்றப்படுவதாக பள்ளிக்கல்வி இயக்குனர் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு பிரிவுக்கு 60 மாணவர்கள் வரை ஒரு ஆசிரியரும், 61 முதல் 90 வரை எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 வரை எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு 4 ஆசிரியர்களும், 121 முதல் 200 வரை எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு 5 ஆசிரியர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

6, 7, 8-ம் வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 3 பணியிடங்கள் அனுமதிக்கப்படுகிறது. 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், 50 மாணவர்கள் இருந்தால் கூடுதல் பிரிவு ஒதுக்கப்பட்டு 2 ஆசிரியர்களும், நிர்ணயம் செய்யப்படுகின்றனர். 6 முதல் 10 வரை வகுப்புகளுக்கு 5 ஆசிரியர் பணியிடங்கள் தலா ஒரு பாடத்துக்கு ஒரு பணியிடம் வீதம் அனுமதிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், 9, 10 வகுப்புகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதமும், 60 மாணவர்கள் இருப்பின் கூடுதல் ஒரு பிரிவு ஒதுக்கப்பட்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்ற பாடசுழற்சி முறையில் ஆசிரியர்கள் நிர்ணயம் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.

11 மற்றும் 12-ம் வகுப்புகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் நிர்ணயம் செய்யப்படுகின்றனர் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருக்கிறது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குடிநீர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை

குடிநீர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. தமிழகத்தில் பரவலாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதை சமாளிக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஒரு சில தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்தநிலையில் தனியார் பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாட்டால் விடுமுறை விடக்கூடாது என்றும், அதற்கு ஏற்றாற்போல் மாற்று ஏற்பாடுகளை பள்ளிகள் செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன், அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை தனியார் பள்ளிகளும் தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் விதிகள் 1974 மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஒழுங்குப்படுத்தும் விதித்தொகுப்பு 1978, நர்சரி மற்றும் தொடக்க பள்ளிகளுக்கான விதிகள், மழலையர் பள்ளிகளுக்கான விதிகளின் அடிப்படையில் தொடக்க அனுமதி, தற்காலிக அங்கீகாரம், நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு அங்கீகாரம் வழங்கப்படும்போது, பள்ளிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை பள்ளி நிர்வாகி உறுதி அளித்துள்ள நிலையில், நிபந்தனைக்கு உட்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது குடிநீர் வசதி இல்லை என தெரிவித்து சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக பத்திரிகை செய்திகள் வாயிலாக தெரியவருகிறது. மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கும் வகையில் இவ்வாறு விதிகளுக்கு முரணாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது ஆகும். எனவே, குடிநீர் தட்டுப்பாடு உள்ள பள்ளிகளில் உரிய மாற்று ஏற்பாடுகள் செய்து பள்ளி தொடர்ந்து நடைபெற தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அந்தந்த பள்ளி நிர்வாகங்களின் கடமையாகும். அவ்வாறு செயல்பட தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து வகை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தவும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக விடுமுறை விடப்படாமல் தொடர்ந்து செயல்படுவதை கண்காணிக்குமாறும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும், மாவட்டக்கல்வி அலுவலர் களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 22 June 2019

ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை 8-ந்தேதி தொடங்குகிறது

ஆசிரியர் பொது இடமாறுதலுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான தொடக்க கல்வி இயக்ககத்தின்கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது இடமாறுதலுக்கு விண்ணப்பிப்பது நேற்று தொடங்கியது. 28-ந்தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். அதைத்தொடர்ந்து, வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அடுத்த மாதம் 8-ந்தேதியும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு 9-ந்தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு 10-ந்தேதியும், பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு 11-ந்தேதியும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு 12-ந்தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு 13-ந்தேதியும் நடக்கிறது. அதேபோல், இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 14-ந்தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 15-ந்தேதியும் நடைபெறுகிறது. பள்ளிக்கல்வி இயக்கத்தின்கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது இடமாறுதலுக்கு வருகிற 28-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். நகராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு 8-ந்தேதியும், அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு 9-ந்தேதியும், அரசு, நகராட்சி பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பணிநிரவல், மாறுதல் கலந்தாய்வு 10-ந்தேதியும் நடக்கிறது. இதேபோல், அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 11-ந்தேதியும், உடற்கல்வி, கலை, இசை, தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு 12-ந்தேதியும், அரசு, நகராட்சி பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு 13-ந்தேதியும், சிறுபான்மை மொழி, பாடம் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு 15-ந்தேதியும் நடைபெற உள்ளது. பொதுமாறுதல்கள் வழங்குவதற்கான நெறிமுறைகள் கல்வி தகவல் மேலாண்மை மையத்தின்(இ.எம்.ஐ.எஸ்.) இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேற்கண்ட தகவலை பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஹக்கிம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- கடந்த கல்வி ஆண்டிற்கான தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை தமிழக பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக்குழு நிர்ணயம் செய்தது. இதையடுத்து 2018-2021-ம் ஆண்டுகளுக்கான தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை இதுவரை தமிழக பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம் செய்யவில்லை. இதனால் தமிழகத்தில் இயங்கி வரும் 7 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணத்தை விட அதிகமாக வசூலித்து வருகின்றனர். எனவே 2018-2021ம் ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தமிழக பள்ளிகள் கல்விக்கட்டண நிர்ணய குழுவிற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, 2018-2021-ம் ஆண்டுகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கல்விக்கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிட 3 மாதம் அவகாசம் வேண்டும் என்று கோரினார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அடுத்த ஒரு மாதத்துக்குள் கல்விக்கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 20 June 2019

IBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு . பதவி : குரூப் ஏ அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 7900 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019 .

  • IBPS RECRUITMENT 2019 | IBPS  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு .
  • பதவி : குரூப் ஏ அதிகாரி உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 7900 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019 .
  • இணைய முகவரி : www.ibps.in .

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஆந்திர பிரகாதி கிராமிய வங்கி, தமிழ்நாடு கிராமிய வங்கி, கர்நாடக கிராமிய வங்கி, மணிப்பூர் ஊரக வங்கி, பஞ்சாப் கிராமி வங்கி என ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் 'இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (ஐ.பீ.பி.எஸ்)' நிறுவனம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுகிறார்கள். 
முதலில் முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். இவற்றில் விண்ணப்பதாரர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் தகுதிச் சான்று வழங்கப்படும்.நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது. இது தவிர மற்ற பொதுத்துறை மற்றும் கிராம வங்கிகளில் பணிபுரிய விரும்பும் இந்திய குடிமக்கள் அனைவரும் IBPS நடத்தும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தற்போது இந்தியா முழுவதும் உள்ள கிராம வங்கிகளில் உள்ள குரூப் ஏ அதிகாரி மற்றும் குரூப் பி அலுவலக உதவியாளர்(பல்நோக்கு) பணியிடங்களை நிரப்ப வங்கிப் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி விவரம் மற்றும் இந்தத் தேர்வில் கலந்து கொள்ள தேவையான தகுதிகள், வயதுவரம்பு பற்றிய விவரங்களை அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப தனித்தனியே பார்க்கலாம்.

பணி மற்றும் தகுதி விவரங்கள்​:
பணி: Office Assistant (Multipurpose) - 3688
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணிபுரிய விரும்பும் வங்கி அமைந்துள்ள மாநிலத்தின் அலுவலக மொழியில் பேச தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.06.2019 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: Officer Scale I - 3381
பணி: Officer Scale II (Agriculture Officer) - 106
பணி: Officer Scale II (General Banking Officer) - 693
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Banking, Finance, Marketing, Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Cooperation, Information Technology, Management, Law, Economics and Accountancy போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. கணினி குறித்தும் படித்திருக்க வேண்டும். மேலும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

வயது வரம்பு: 01.06.2019 தேதியின்படி 18 - 30, 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer Scale II (Marketing Officer) - 45
பணி: Officer Scale II (Treasury Manager) - 11
பணி: Officer Scale II (Law) - 19
பணி: Officer Scale II (CA) - 24
பணி: Officer Scale II (IT) - 76
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் Electronics, Communication, Computer Science, Information Technology போன்ற ஏதாவதொரு துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது CA அல்லது MBA (சந்தையியல், நிதி) முடித்திருக்க வேண்டும். அல்லது சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது விவசாயம், கால்நடை அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.06.2019 தேதியின்படி 21 - 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer Scale III - 157
தகுதி: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Banking, Finance, Marketing, Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Co-operation, Information Technology, Management, Law, Economics and Accountancy போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மேலும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

வயது வரம்பு: 01.06.2019 தேதியின்படி 21 - 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்காக வங்கிப் பணியாளர் தேர்வாணையம் IBPS-ஆல் நடத்தப்படும் முதல்நிலை தேர்வு, முதன்மை ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்படுவார்கள். பின்னர் தேவையான பயிற்சிக்குப் பின் நிரந்தரப் பணி வழங்கப்படும். நேர்முகத்தேர்வின்போது தேவையான சான்றுகளின் அசல் சான்றிதழ்கள் மற்றும் சுய கையொப்பமிடப்பட்ட நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட், கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.600/-. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100/-. இதனை கிரெடிட், டெபிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் ஆன்லைனில் மட்டும் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியவுடன் கணினியில் வழங்கப்படும் e-recepit-ஐ பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின் தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வு பற்றிய விவரங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும். தகவல் பெற்றவுடன் IBPS இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள Call Letter-ஐ பதிவிறக்கம் செய்து தேவையான இடத்தில் புகைப்படம் ஒட்டி எழுத்துத் தேர்வுக்கு கொண்டு வரவேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு விவரங்களை அறிய www.ibps.in அல்லது https://www.ibps.in/wp-content/uploads/CRP_RRB_VIII_ADVT_15_06_2019.pdf என்ற லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்

ஆன்லைன் தேர்வுக்கு உரிய Call Letterஐ ஜூலை 2019 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசித் தேதி:04.07.2019


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 19 June 2019

கடைநிலை ஊழியர்களையும் எழுத்து தேர்வு மூலம்தான் நியமிக்க வேண்டும் தலைமை செயலாளருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கடைநிலை ஊழியர்களையும் எழுத்து தேர்வு மூலம்தான் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தேனியை சேர்ந்த உதயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் மாற்றுத்திறனாளி. 1998-ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு அதே ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக வேலைக்காக காத்திருந்தேன். 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந்தேதியன்று காமயக்கவுண்டன்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலக இரவு காவலர் பணிக்கு நேர்முகத்தேர்வு நடந்தது. சேகர் என்பவர் அந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அங்குள்ள ஒரு அதிகாரியின் நெருங்கிய உறவினர்தான் சேகர். இதனால் தான் அவருக்கு இரவு காவலர் பணி வழங்கப்பட்டது. முறையான விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே இரவு காவலராக சேகரை நியமித்ததை ரத்து செய்துவிட்டு, என்னை அந்த பணியில் நியமித்து, 2011-ம் ஆண்டு முதல் உரிய பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- சேகர் என்பவரின் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார். சேகர் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அவரது நியமனத்தை ரத்து செய்ய முடியாது. இருந்தபோதும் இதுபோன்ற பணி நியமனங்கள் எந்த விதமான விதிகளையும் பின்பற்றி நடக்கவில்லை என்பது தெரியவருகிறது. உரிய விதிமுறைகள் இல்லாததால் பதவியில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை காலிப்பணியிடங்களில் நியமிக்க வாய்ப்பு உள்ளன. குறிப்பாக, கடைநிலை ஊழியர் பணியிடங்களில் தங்களுக்கு வேண்டியவர்களை அதிகாரிகள் நியமித்துக் கொள்கிறார்கள். இந்த நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும். மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், இரவு காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங்களுக்கு தமிழகத்தை பொறுத்தவரை நேர்முகத்தேர்வு அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த பணி நியமனங்கள் அனைத்தும் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள் பரிந்துரை அடிப்படையில் தான் நடைபெறுகின்றன. இதனால் ஒட்டுமொத்த பொதுநிர்வாகத்திலும் அடிப்படை பணியாளர் தேர்வு நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறாது. இதுபோல நியமிக்கப்படும் ஊழியர்களிடம் இருந்து நேர்மையையும் எப்படி எதிர்பார்க்க முடியும்? திறனற்ற நிர்வாகம் என்பது நாட்டின் முன்னேற்றத்தில் கரும்புள்ளியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே துப்புரவு பணியாளர், தோட்ட பணியாளர், கிராம உதவியாளர், மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், உதவி சமையலர், அலுவலக உதவியாளர் போன்ற கடை நிலை பணிகளுக்கு எழுத்து தேர்வு அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் வழிகாட்டுதல்களை தமிழக அரசின் தலைமை செயலாளர் பிறப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் வழிகளில் நேர்முகத்தேர்வுக்கான மதிப்பெண்கள் 15 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் உரிய உத்தரவு பிறப்பித்து, அதுகுறித்த அறிக்கையை அடுத்த மாதம் (ஜூலை) 24-ந்தேதி ஐகோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 14 June 2019

TNPSC குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் 24 கேள்விகளுக்கான பதில்கள் தவறு டிஎன்பிஎஸ்சி குளறுபடிகளுக்கு நீதிபதி கண்டனம் 

குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகளுக்கான பதில்களில் தவறு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனவும் சரியாக பதிலளிக்க கால அவகாசம் தேவை எனவும் டிஎன்பிஎஸ்சி தரப் பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக் கப்பட்டது. இதையடுத்து இது போன்ற குளறுபடிகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என டிஎன்பிஎஸ்சிக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, முதன்மைத் தேர்வுக்கு தடை கோரிய வழக் கில் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த எஸ்.விக்னேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டது. இத் தேர்வை தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர். மனித வள மேம்பாட்டு அதிகாரியாக தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நானும் இத்தேர்வை எழுதினேன். இத்தேர்வுக்கான உத்தேச விடைப்பட்டியல் தேர்வு முடிந்த சில தினங்களில் வெளியிடப்பட்டது. கேட்கப்பட்டிருந்த 200 கேள்வி களில், 18 கேள்விகளுக்கான பதில் களில் தவறு இருந்ததால் நான் உட் பட பலர் அதைச் சுட்டிக்காட்டி திருத் திய விடைப்பட்டியலை வெளியிடக் கோரினோம். ஆனால் எங்களது கோரிக் கையை டிஎன்பிஎஸ்சி கண்டு கொள்ளாமல், முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகளை கடந்த ஏப்.3-ம் தேதி வெளியிட்டு விட்டது. மேலும் குரூப் 1 பிரதானத் தேர் வையும் வரும் ஜூலை மாதம் நடத் தவுள்ளது. எங்களது கோரிக் கையை ஏற்று டிஎன்பிஎஸ்சி திருத் திய விடைப்பட்டியலை வெளி யிட்டு இருந்தால் 175.5 மதிப்பெண் பெற்ற எனக்கு 195 மதிப்பெண் கிடைத்து இருக்கும். எனவே முதல்நிலைத் தேர்வுக் கான திருத்திய விடைப்பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும். அதுவரை குரூப் 1 பிரதானத் தேர்வுக்கு தடை விதிக்கவும் வேண்டும்” என கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வி.பார்த்திபன் முன்பு நேற்று நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக் கறிஞர் எஸ்.எஸ்.மாதவன் ஆஜ ராகி, ‘‘குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் 18 கேள்விகளுக்கான பதில்களில் தவறு இருப்பதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியுள் ளோம். அவ்வாறு சுட்டிக் காட்டப் பட்டால் உடனடியாக நிபுணர்கள் குழுவை அமைத்து அந்த கேள்வி களுக்கான சரியான பதில் எது என்பதை மீண்டும் திருத்திய விடைப் பட்டியலாக வெளியிட வேண்டும். ஆனால் டிஎன்பிஎஸ்சி நாங்கள் விடுத்த கோரிக்கையை கண்டு கொள்ளாமல் முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகளை வெளி யிட்டுள்ளது’’ என்றார். அப்போது டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.தியாகராஜன் மற்றும் வழக்கறிஞர் நிறைமதி ஆகியோர், “குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகளுக்கான விடை களில் தவறு இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதுதொடர் பாக சரியாக பதிலளிக்க கால அவகாசம் தேவை” என்றனர். அதையடுத்து நீதிபதி, ‘‘குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் ஐஏஎஸ் தேர்வுக்கு இணையாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. குரூப் 1 தேர்வு, இளைஞர்களின் கனவாக உள்ளது. இதுபோன்ற முக்கியமான தேர்வுகளில் குளறு படிகள் நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தவறுகள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப் பட்ட பிறகும் எந்த அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி, முடிவுகளை வெளி யிட்டுள்ளது” என கண்டனம் தெரி வித்தார். மேலும் குரூப் 1 பிரதானத் தேர்வுக்கு தடை கோரிய மனுவுக்கு டிஎன்பிஎஸ்சி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 17-க்கு தள்ளிவைத்தார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 13 June 2019

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி படிப்புகளுக்கு சேர்க்கை 

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் கணேஷ் தெரிவித்தார். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), யுனானி மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி (100), மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி (50 இடங்கள்) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்) என 6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. இதேபோல 27 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,200 இடங்கள் இருக்கின்றன. இந்திய மருத்துவ முறை படிப்புகளான சித்தா, ஆயுர்வேத, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH - பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎன் ஒய்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்பு களுக்கு கடந்த ஆண்டு வரை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாண வர் சேர்க்கை நடைபெற உள்ளது. ஒரு படிப்புக்கு நீட் இல்லை இதுதொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோ பதி இயக்குநர் கணேஷிடம் கேட்டபோது, “யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப்படிப்பு தவிர மீதமுள்ள 4 பட்டப்படிப்பு களுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாண வர் சேர்க்கை நடைபெறும். யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துக்கு தனியாக கவுன்சில் இல்லாததால், அந்த பட்டப்படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறு கிறது. இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார். ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வை கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு கட்டாயமாக்கியது. ஆனால், நீட் தேர்வு தொடர்பான திருத்தங்களை இந்திய மருத்துவ முறை குழுமம் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி கடந்த ஆண்டு தமிழகத்தில் ஆயுஷ் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப் பட்டது. இந்த ஆண்டு நாடுமுழுவதும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையி லேயே ஆயுஷ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும். பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. நீட் தேர்வு தொடர்பான தேவையான திருத்தங்களை இந்திய மருத்துவ முறை குழுமம் செய்துவிட்டது. அதனால், வேறு வழியின்றி தமிழகத்தில் ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப் பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் பாதிப்பு நீட் தேர்வு முடிந்துவிட்டது. தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. தற்போது ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதாத மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவர்கள், அவர்களின் பெற்றோரிடம் கேட்டபோது, “கடந்த ஆண்டு ஆரம்பத்திலேயே ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், விண்ணப்ப விநியோகத்துக்கு சில நாட்களுக்கு முன்பு, ஆயுஷ் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப் பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனால், நீட் தேர்வுக்கு கஷ்டப்பட்டு படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் கள் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று நினைத்து பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வு எழுதவில்லை. தமிழக அரசும் எந்த ஒரு தெளிவான முடிவையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், விண்ணப்ப விநி யோகம் தொடங்க உள்ள நிலையில் ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்திருப்பது என்ன நியாயம். தமிழக அரசை நம்பி இருந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது” என்றனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 12 June 2019

TRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : முதுகலை ஆசிரியர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2144 ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கான தேதி : 24.06.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019

  • TRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : முதுகலை ஆசிரியர்
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2144
  • ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கான தேதி : 24.06.2019
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019
  • இணைய முகவரி : http:// www.trb.tn.nic.in

TRB PG 2019 NOTIFICATION | முதுகலை ஆசிரியர்களுக்கான கணினி வழி போட்டித்தேர்வு அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விரிவான தகவல்கள்
காலி பணியிடங்கள்: 2144
தமிழ் : 319
ஆங்கிலம் : 223
கணிதம்: 279
இயற்பியல் : 210
வேதியியல் : 356
தாவரவியல் : 154
விலங்கியல் : 144
வரலாறு : 104
புவியியல் : 11
பொருளியியல்: 211
வணிகவியல் : 99
Political science : 14
Physical education : 16
Bio chemistry : 1
Micro biology : 1
Home science : 1
Indian culture : 1
கல்வித் தகுதி : PG with B.Ed.,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ANNA UNIVERSITY RECRUITMENT 2019 | ANNA UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : உதவி பேராசிரியர் பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : தேவைக்கு ஏற்ப விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.06.2019

  • ANNA UNIVERSITY RECRUITMENT 2019 | ANNA UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : உதவி பேராசிரியர் பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : தேவைக்கு ஏற்ப
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.06.2019
  • இணைய முகவரி : www.job.kalvisolai.com

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளுக்கு விண்ணப்பம். கடைசி நாள் : 13.6.2019

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு தொழில்நுட்ப கல்வி துறையினால் நடத்தப்படும் தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பப்படிவத்தை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் 13.6.2019 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 9 June 2019

DSE PG DISTRICT LEVEL TRAINING | பன்னிரண்டாம் வகுப்பு புதிய பாட நூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி - கால அட்டவணை

DSE PG DISTRICT LEVEL TRAINING | பன்னிரண்டாம் வகுப்பு புதிய பாட நூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி நடத்துதல் சார்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் செயல்முறைகள் பயிற்சி நடைபெற உள்ளது அதற்கான கால அட்டவணை

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 8 June 2019

TNTET 2019 PAPER 1 ORIGINAL QUESTION PAPER AND TENTATIVE ANSWER KEY DOWNLOAD

  1. TNTET 2019 PAPER 1 ORIGINAL QUESTION PAPER AND TENTATIVE ANSWER KEY DOWNLOAD
  2. TNTET 2019 PAPER 1 ORIGINAL QUESTION PAPER DOWNLOAD | DOWNLOAD
  3. TNTET 2019 PAPER 1 TENTATIVE KEY DOWNLOAD BY THENI IAS ACADEMY | DOWNLOAD
  4. TNTET 2019 PAPER 1 TAMIL TENTATIVE KEY DOWNLOAD. | DOWNLOAD
  5. TNTET 2019 PAPER 1 ENGLISH TENTATIVE KEY DOWNLOAD. | DOWNLOAD
  6. TNTET 2019 PAPER 1 ENGLISH TENTATIVE KEY DOWNLOAD 2 | DOWNLOAD
  7. TNTET 2019 PAPER 1 MATHS TENTATIVE KEY DOWNLOAD. | DOWNLOAD
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜிப்மர் எம்பிபிஎஸ் தேர்வு முடிவு வெளியீடு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக் கான எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு முடிவு நேற்று வெளி யானது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி 150 இடங்கள், அதன் காரைக்கால் கிளையில் 50 இடங்கள் என மொத்தம் 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப அகில இந்திய அளவில் ஆன்லைன் மூலம் நுழைவுத் தேர்வு கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஜிப்மர் இணையதளத் தில் (http://www.jipmer.edu.in) எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீடுக் கான பொதுப்பிரிவில் முதல் 3 இடங்களில் அருணாங்ஷு பட்டாச்சாரியா (99.998), பிரதீக் உபாத்யாய் (99.988), அர்யான் பன்சல் (99.997) ஆகியோரும் புதுச்சேரி ஒதுக்கீடுக்கான பொதுப்பிரிவில் முதல் 3 இடங்களில் மோனிஷா பிரியா (99.723), ஆனந்தகிருஷ்ணன் (99.491), குமரேஷ்வர் (99.080)ஆகியோரும் தேர்ச்சி பெற்றனர். வருகிற 26-ம் தேதி அகில இந்திய பொதுப்பிரிவு, மாற்றுத் திறனாளிகள், புதுச்சேரி மாற்றுத்திறனாளிகளுக்கும், 27-ம் தேதி ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும், 28-ம் தேதி புதுச்சேரி பொதுப்பிரிவு, ஓபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் என்ஆர்ஐ-ஓசிஐ பிரிவினருக்கான முதற் கட்ட கலந்தாய்வு ஜிப்மர் அகடாமிக் சென்டரில் நடக் கிறது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 7 June 2019

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24 ஜூன் 2019
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC GROUP IV NOTIFICATION | குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC GROUP IV NOTIFICATION |  குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வு செபடம்பார் 1 ஆம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. மேலும் காலியிடங்கள் உள்ளிட்ட விவரங்கள் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளனர். ஒரேநாளில் 7 போட்டித்தேர்வுகளின் முடிவுகளை வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி சாதனை புரிந்துள் ளது. அதில், 4 தேர்வுகளின் முடிவு கள் ஒரே மாதத்தில் வெளியிடப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ள தேர்வுக்கு ஜூன் 14 முதல் ஜூலை 14 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடந்த ஜனவரி 27-ம் தேதி நடைபெற்ற இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் தேர்வு, மார்ச் 2-ல் நடந்த தொழில் மற்றும் வணிகத் துறை விலை மதிப்பீட்டு உதவியா ளர் தேர்வு, ஏப்ரல் 27-ம் தேதி நடைபெற்ற வேலைவாய்ப்பு பயிற்சித்துறை விடுதி கண்காணிப் பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் மே 4-ம் தேதி நடந்த மீன்வள உதவி ஆய்வாளர் தேர்வு, மே 5-ல் நடைபெற்ற கருவூலம் மற்றும் கணக்குத் துறை கணக்கு அலுவலர் தேர்வு, அதே நாளில் நடத்தப்பட்ட தொழில் வணிகத்துறை வேதியியலர் தேர்வு மற்றும் சமூகப்பாதுகாப்புத் துறை உதவி கண்காணிப்பாளர் தேர்வு ஆகிய 7 போட்டித்தேர்வுகளின் முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வியா ழக்கிழமை ஒரேநாளில் வெளியிட் டது. இதில் 4 தேர்வுகளின் முடிவு கள் ஒரே மாதத்தில் வெளியிடப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. மேற்கண்ட தேர்வுகளில் அடுத்த நிலைகளான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டி யல் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளி யிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் தெரிவித்துள்ளார். குரூப்-4 தேர்வு இதற்கிடையே, குரூப்-4 தேர் வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. அதன்படி, குரூப்-4 தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஜூன் 14 முதல் ஜூலை 14 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க லாம். இதுதொடர்பான முழு விவ ரங்கள் அடங்கிய அறிவிக்கை தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வருகிற 14-ம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் அறிவித்துள்ளார்.
TNPSC GROUP IV NOTIFICATION 2019


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts