ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை 8-ந்தேதி தொடங்குகிறது

ஆசிரியர் பொது இடமாறுதலுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான தொடக்க கல்வி இயக்ககத்தின்கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது இடமாறுதலுக்கு விண்ணப்பிப்பது நேற்று தொடங்கியது. 28-ந்தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். அதைத்தொடர்ந்து, வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அடுத்த மாதம் 8-ந்தேதியும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு 9-ந்தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு 10-ந்தேதியும், பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு 11-ந்தேதியும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு 12-ந்தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு 13-ந்தேதியும் நடக்கிறது. அதேபோல், இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 14-ந்தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 15-ந்தேதியும் நடைபெறுகிறது. பள்ளிக்கல்வி இயக்கத்தின்கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது இடமாறுதலுக்கு வருகிற 28-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். நகராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு 8-ந்தேதியும், அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு 9-ந்தேதியும், அரசு, நகராட்சி பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பணிநிரவல், மாறுதல் கலந்தாய்வு 10-ந்தேதியும் நடக்கிறது. இதேபோல், அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 11-ந்தேதியும், உடற்கல்வி, கலை, இசை, தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு 12-ந்தேதியும், அரசு, நகராட்சி பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு 13-ந்தேதியும், சிறுபான்மை மொழி, பாடம் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு 15-ந்தேதியும் நடைபெற உள்ளது. பொதுமாறுதல்கள் வழங்குவதற்கான நெறிமுறைகள் கல்வி தகவல் மேலாண்மை மையத்தின்(இ.எம்.ஐ.எஸ்.) இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேற்கண்ட தகவலை பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. Teachers general counselling2016-17 eligible this year counselling Sir .

    ReplyDelete

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||