Follow by Email

Saturday, 27 July 2019

Kalvisolai News | Kalvisolai Daily Updates Group



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 11 July 2019

மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) சிறப்புத் துணைத்தேர்வு ஜூன் 2019 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) சிறப்புத் துணைத்தேர்வு ஜூன் 2019 தேர்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளுதல், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்
செய்திக்குறிப்பு நடைபெற்ற, ஜூன் 2019, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) சிறப்புத் துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வுர்கள் உட்பட) தேர்வு முடிவினை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே 10.07.2019 (புதன்கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
வழிமுறைகள் பின்வருமாறு:
1. தனித்தேர்வர்கள் வருகிற 10.07.2019 முதல் தமது தற்காலிக மதிப்பெண்
சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2. மேற்படி இணையதள முகவரிக்குள் Login செய்தவுடன்
“Provisional Mark Sheet
HSE Second Year Result - June 2019" என தோன்றும் வாசகத்தினை "Click” செய்தால் தோன்றும் பக்கத்தில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்ததேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை
ஜூன் 2019, தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு 11.07.2019 மற்றும் 1207.2019 ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும்.
விடைத்தாள் நகல் (Copy of the Answer Sheet) பெறுவதற்கான கட்டணம்:
ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275/
மறுகூட்டல் (Re-totalling) கட்டணம் :
உயிரியல் பாடத்திற்கு மட்டும் ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) ரூ.305/ரூ.205/
விண்ணப்பித்தபின் வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Application Number) பயன்படுத்தியே தேர்வுத் துறையால் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் விடைத்தாட்களின் நகல்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். மறுகூட்டல் முடிவுகள் பற்றியும் அறிய இயலும். அரசுத் தேர்வுகள் இயக்ககம் சென்னை -6 


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் அறிவிப்பு பள்ளிகல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு காலஅட்டவணை 4 நாட்களில் வெளியிடப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார். அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் பணிகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில் ‘புதுமை ஆசிரியர்‘ விருது வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்சிசி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த 523 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'புதுமை ஆசிரி யர்' விருது வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கியபின் பள்ளிகல்வித் துறை அமைச் சர் செங்கோட்டையன் செய்தியாளர் களிடம் கூறியதாவது: பள்ளிக்கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை தமிழக அரசு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள கல்வி தொலைக்காட்சி சேனல் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதுதவிர மலேசியாவில் உள்ள தனியார் நிறுவனத்தின் உதவியுடன் அரசுப் பள்ளிகளில் பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு தொடுதிரை கணினி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் புத்தகங்கள் இல்லாமல் க்யூஆர் கோடு மற்றும் பிடிஎப் வடிவில் பாடங்களைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் வசதியைக் கொண்டுவர உள்ளோம். திறன் மேம்பாடு திட்டத்தின்கீழ் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த விரைவில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 4 நாட்களில் அட்டவணை வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குநர் கண்ணப்பன், ஒருங்கிணைந்த மாநில திட்ட இயக்குநர் சுடலை கண்ணன் பங்கேற்றனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 10 July 2019

எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழை கொண்டு மாணவர்கள் பள்ளியிலேயே இன்று முதல் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்

2019-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் இன்று (புதன்கிழமை) வழங்கப்பட உள்ளதை அடுத்து, இன்று முதல் 24-ந் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவுமூப்பு தேதி வழங்கி பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து செய்துள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம். ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம். மேற்கண்ட தகவல் தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வில் குளறுபடி 4 மாநில தரவரிசை பட்டியலில் 218 பேர் இடம்பெற்றது அம்பலம்

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டி யலில் இடம்பெற்றுள்ள 218 பேரின் பெயர்கள், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய வெளி மாநி லங்களின் தரவரிசைப் பட்டியலி லும் இடம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக் கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 11,741 மாணவர்கள், 19,612 மாணவிகள் என மொத்தம் 31,353 பேர் இடம் பிடித்தனர். இதேபோல், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 9,366 மாணவர்கள், 16,285 மாணவிகள் என மொத்தம் 25,651 பேர் இடம் பெற்றனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக் கான தரவரிசைப் பட்டியலில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இடம்பெற்றிருப் பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இதனை சுகாதாரத் துறை அதிகாரிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் அரசு ஒதுக் கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில், தரவரிசைப் பட்டியலில் இருந்த முதல் 10 மாணவ, மாணவி களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அனுமதி கடிதம் வழங்கினார். அப்போது தமிழக தர வரிசைப் பட்டியலில் வெளிமாநிலங் களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருப்பது அமைச்சர் சி.விஜய பாஸ்கரிடம் கேட்டபோது, “ஒருவர் 2 மாநிலங்களில் விண்ணப்பித் தால், அவர் தகுதி நீக்கம் செய்யப்ப டுவார்” என்று தெரிவித்தார். இந்நிலையில் 218 பேர் தமிழகம் உள்ளிட்ட இரண்டு மாநிலங்களில் விண்ணப்பித்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 218 பேரில் 77 பேரின் பெயர்கள் ஆந்திர மாநில தரவரிசைப் பட்டியலிலும், 130 பேரின் பெயர்கள் கர்நாடக மாநில தரவரிசைப் பட்டியலிலும், 12 பேரின் பெயர்கள் தெலங்கானா தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளன. இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “வெளிமாநில மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் படிப்பு, வேலை உள்ளிட்ட கார ணங்களால் வெளிமாநிலங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தால், அவர்கள் தமிழகத்தில் இருப்பிடச்சான்று பெற்று தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக் கலாம். இதேபோல் வெளிமாநிலங் களைச் சேர்ந்தவர்கள் படிப்பு, வேலை நிமித்தமாக தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர் கள், தமிழகத்தில் இருப்பிடச்சான்று பெற்று, தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக் கலாம். ஆனால், ஒருவரே இரண்டு மாநிலங்களில் போலியாக இருப்பிடச் சான்று பெற்று விண் ணப்பிக்கக்கூடாது” என்றனர்.2017-ல் நடந்தது என்ன? கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வுக்கான தரவரி சைப் பட்டியலில் கேரளா, ஆந்திரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் படித்த மாணவர்கள் அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர். போலியான இருப்பிடச் சான்று கொடுத்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்ததாகவும், அவர்களில் 4 பேர் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி சுகாதாரத் துறையும், காவல்துறையும் விசாரணை நடத்தியது. ஆனால், உண்மை நிலவரத்தை கடைசி வரை யாரும் தெரிவிக்கவில்லை.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 7 July 2019

பள்ளி நேரங்களில் தலைமை ஆசிரியர்கள் வெளியே செல்வதை தவிர்க்கவேண்டும் பள்ளி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை

பள்ளி கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் விவரங்கள் மற்றும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி விவரங்கள் இ.எம்.ஐ.எஸ். (கல்வியியல் மேலாண்மை தகவல் மையம்) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே இத்தகைய விவரங்களை முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் இ.எம்.ஐ.எஸ். இணையதளத்தின் மூலம் பெற்று அனுப்பவேண்டும். இதனால் பள்ளி வேலை நேரங்களில் விவரங்களை பெறுவதற்காக தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டத்தை நடத்தவேண்டிய அவசியம் இருக்காது. சூழ்நிலை ஏற்பட்டால் சனிக்கிழமை அல்லது மாலை நேரங்களில் ஆய்வு கூட்டத்தை நடத்தலாம். தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி வேலை நேரங்களில் விவரங்களை அளிக்கவும், பெறவும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் செல்வதை தவிர்க்கவேண்டும். விவரங்களை மின்னஞ்சல் (இ-மெயில்) மூலமாக அனுப்பலாம். இவ்வாறு செய்தால் கல்வி பணிகள் பாதிக்காது. எனவே பள்ளி நேரங்களில் விவரங்களை அளிப்பதற்காக வெளியே செல்வதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிர்க்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எஸ்.எஸ்.எல்.சி. அசல் மதிப்பெண் சான்றிதழ் 10-ந் தேதி முதல் வினியோகம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவு கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி வெளியானது. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை எழுதியவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் செய்யப்பட இருப்பதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மார்ச்-2019 எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கு வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 6 July 2019

‘டான்செட்’ நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு மதிப்பெண் சான்றிதழை 10-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க், எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கு ‘டான்செட்’ என்ற நுழைவுத்தேர்வை ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நுழைவுத்தேர்வு கடந்த மாதம் (ஜூன்) 22 மற்றும் 23-ந் தேதிகளில் நடந்தது. இந்த நிலையில் நுழைவுத்தேர்வு முடிவு www.annauniv.edu/tancet2019 என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது என்றும், அதே இணையதளத்தில் வருகிற 10-ந்தேதி முதல் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் ‘டான்செட்’ செயலாளர் கே.எஸ்.ஈஸ்வரகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல்: ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வில் மாற்றம் அரசாணை வெளியீடு

வேலூர் தொகுதி தேர்தல் நடத்தை விதிகள் தற்போது நடை முறையில் இருப்பதால், பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரின் கருத்துகளை ஏற்று அதன் அடிப்படையில் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ்உள்ள பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கு 8-ந்தேதி முதல் நடைபெறுவதாக இருந்த பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வினை வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முடிவடைந்து, தேர்தல் நடத்தைவிதிகள் முடிவிற்கு வந்தபின், காலாண்டு தேர்வு விடுமுறையில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோன்று உபரி ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணிநிரவல் வேலூர் மாவட்டத்தில் மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தபின், பணிநிரவல் கலந்தாய்வினை நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது. தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான அனைத்து கலந்தாய்வுகளை வேலூர் மாவட்டத்தில் ஒத்திவைத்தும், ஏனைய பிற மாவட்டங்களுக்கு வட்டாரக்கல்வி அலுவலர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) தவிர, ஏனைய பொதுமாறுதல் கலந்தாய்வுகள், இணையதள வழி பணிநிரவல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆகியவற்றை நடத்திட அனுமதி அளிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவல் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 3 July 2019

MHC RECRUITMENT 2019 | சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : COMPUTER OPERATOR, TYPIST, ASSISTANT உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 573 . விளம்பர அறிவிப்பு நாள் : 01.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.07.2019.

  • MHC RECRUITMENT 2019 | சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : COMPUTER OPERATOR, TYPIST, ASSISTANT உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 573 .
  • விளம்பர அறிவிப்பு நாள் : 01.07.2019.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.07.2019.
  • இணைய முகவரி : www.mhc.tn.gov.in


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts