தொழில்நுட்ப கோளாறு காரணமாக உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பது திடீர் ஒத்திவைப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. அந்தவகையில் 2340 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த மாதம் 28-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 4-ந் தேதி (இன்று) முதல் 24-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று முதல் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டு இருந்த உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நேற்று இரவு தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘உதவி பேராசிரியர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. விண்ணப்பிப்பது குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||