வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 192 பட்டப்படிப்புகள் தகுதியானவை அரசாணை வெளியீடு

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 97 வட்டாரக்கல்வி அலுவலர் (பி.இ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த நவம்பர் 27-ந்தேதி வெளியிட்டது. வட்டாரக்கல்வி அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க 192 வகையான பட்டப்படிப்புகள் தகுதியானவை என்று தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணையின் படி, வெவ்வேறு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் 18 வகையான படிப்புகள் தகுதியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையின் படி, வெவ்வேறு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் 174 வகையான பட்டப்படிப்புகள் தகுதியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல ஆண்டுகளாக கற்றுத்தரப்படும் 96 வகையான பட்டப்படிப்புகளுக்கு, காலத்தின் தேவை கருதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொடர்புடைய 96 வகையான பட்டப்படிப்புகள் ஒன்றுக்கொன்று இணையானவை என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகள் மற்றும் 2019-ல் தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணைகளை மேற்கோள்காட்டி, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டப்படிப்புகளில் பட்டம் பெற்ற தகுதியான நபர்கள், வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||