Monday, 14 June 2021

திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை மருத்துவம், பொறியியல் படிப்புகள் இந்த கல்வி ஆண்டு முதல் தொடக்கம்

திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.

இதுகுறித்து எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் திருச்சி வளாகத்தின் (கேம்பஸ்) செயல்பாட்டுக்கு மத்திய கல்வி அமைச்சகம் உயர் கல்வித்துறையின் 1.6.2021 அன்றைய ஆணையின்படி ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

இப்பல்கலைக்கழகம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ‘ஏ’ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. எஸ்.ஆர்.எம். திருச்சி வளாகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களுள் கூடுதல் அங்கமாக இணைக்கப்பட உள்ளது. எனவே வெளிமாநிலங்களுக்கு கல்வி பயில்வதற்காக சென்றுகொண்டிருந்த மாணவர்கள் தற்போது திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திலே படிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் திருச்சி வளாகத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள், பிசியோதெரபி, ஆக்குபேஷனல்தெரபி மற்றும் ஓட்டல் மேனேஜ்மெண்ட் இந்த கல்வி ஆண்டு (2021-22) முதல் வழங்கப்படும்.

பல்வேறு பி.டெக். படிப்புகளுக்கான சேர்க்கை எஸ்.ஆர்.எம். நுழைவுத்தேர்வு மூலம் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இத்தகைய நுழைவுத்தேர்வு சில வெளிநாடுகளிலும் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. 2-ம் கட்ட நுழைவுத்தேர்வுகள் வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். இதற்கு மாணவர்கள் www.ist.srmtrichy.edu.in என்ற இணையதள முகவரியில் வருகிற20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் திருச்சி வளாகத்தில் சேரும் மாணவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் உதவித்தொகைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கல்விச்சோலை முக்கிய செய்திகளை பார்க்க கீழ்கண்ட இணைப்புகளை கிளிக் செய்யுங்கள்.

Download | Click Here

What's App share  | Telegram Share

kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||

Popular Posts