Sunday, 25 July 2021

‘சைபர் கிரைம்’ உதவி எண் 155260

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ‘ஆன்லைன்’ மோசடி, சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது. எனவே ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவை தொடர்ந்து ‘சைபர் கிரைம்’ பிரிவும் தனியாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ‘சைபர்’ குற்ற சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட வாரியாக போலீசார் காணொலி காட்சிகளை தயாரிக்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி அனைத்து மாவட்ட போலீசார் சார்பில் தனித்தனியாக விழிப்புணர்வு காணொலி தயாரிக்கப்பட்டது. இந்த காணொலி தொகுப்புகளை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பார்வையிட்டார். பின்னர் அவரது உத்தரவின்பேரில் சிறப்பான காணொலியை தயாரித்ததற்காக நாமக்கல் மாவட்டத்துக்கு முதல் பரிசும், விருதுநகர் மாவட்டத்துக்கு 2-வது பரிசும், சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 3-வது பரிசும் கிடைத்தது.

‘சைபர்’ குற்ற தடுப்பு விழிப்புணர்வு காணொலிகளை தயாரித்த போலீஸ் அதிகாரிகளை டி.ஜி.பி. சைலேந்திர பாபு வெகுவாக பாராட்டினார். பின்னர் அவர் கூறுகையில், ‘சைபர் குற்றச்செயல்கள், குறிப்பாக கணினி தொடர்பான குற்றங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய 155260 என்ற போலீஸ் உதவி எண்ணை பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். இதில் போலீசார் அதிக கவனம் செலுத்த வேண்டும்.’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.கல்விச்சோலை முக்கிய செய்திகளை பார்க்க கீழ்கண்ட இணைப்புகளை கிளிக் செய்யுங்கள்.

Download | Click Here

What's App share  | Telegram Share

kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||

Popular Posts