பிளஸ்-2 மாணவர்களுக்கான துணைத்தேர்வை எழுதும் தேர்வர்களுக்கான அறிவுரைகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களின்படியே தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்ட நிலையில், அந்த தேர்வில் திருப்தி இல்லாதவர்களுக்கு தனியாக தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல், தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அதேநேரத்தில் தேர்வு நடக்கும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
அதன்படி, பிளஸ்-2 வகுப்பு துணைத்தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6-ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்வு எழுத இருக்கும் தேர்வர்களுக்கான அறிவுரைகளை அரசு தேர்வுத்துறை நேற்று வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
- 2020-21-ம் கல்வியாண்டுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி, 2021 பிளஸ்-2 துணைத்தேர்வு நடைபெறும். ஏற்கனவே பிளஸ்-2 பொதுத்தேர்வை பழைய பாடத்திட்டம், பழைய நடைமுறையில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், இந்த துணைத்தேர்வை புதிய பாடத்திட்டம், புதிய நடைமுறையிலேயே எழுதமுடியும்.
- பழைய பாடத்திட்டத்தில் கலைப்பிரிவில் கணினி அறிவியல், வணிக கணிதம், இந்திய பண்பாடு மற்றும் தொழிற்கல்விப்பிரிவில் உள்ள பாடங்கள் ஆகியவை புதிய பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அப்பாடங்களின் விவரங்களின் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
- ஒவ்வொரு பாடத்தேர்வுக்கும் தலா ரூ.50-ம், இதர கட்டணம் ரூ.35 மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50 என்ற அடிப்படையில் தேர்வு கட்டணம் செலுத்தவேண்டும்.
- ஒப்புகைச்சீட்டு
- நேரடி தனித்தேர்வர்களாக முதல் முறையாக பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத விரும்புவோர், பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதியபின்னரே, பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுத வேண்டும்.
- ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்த பிறகு, தேர்வர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசு தேர்வுத்துறை பின்னர் அறிவிக்கும் தேர்வுக்கூட அனுமதிசீட்டை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்ய முடியும். எனவே அதனை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்.
- தேர்வர்கள் அவரவர் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.
- ஆன்லைன் பதிவின்போது கேட்கப்படும் அனைத்து ஆவணங்களையும் முறையாக வழங்கினால் மட்டுமே தேர்வர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
- தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வு எழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது. தனித்தேர்வர்களின் தகுதி மற்றும் விண்ணப்பம் குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கல்விச்சோலை முக்கிய செய்திகளை பார்க்க கீழ்கண்ட இணைப்புகளை கிளிக் செய்யுங்கள்.
Download | Click Here
- Flash News Today | Click Here
- DSE Announcement | Click Here
- Education News | Click Here
- Tamil Nadu News Updates | Click Here
- India News Updates | Click Here
- G.O Download | Click Here
- TNPSC News Updates | Click Here
- TRB News Updates | Click Here
- Employment News Updates | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||