Saturday, 24 July 2021

விழுப்புரத்தில் பெயரளவில் ஆரம்பிக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்றது அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

விழுப்புரத்தில் பெயரளவிற்காக ஆரம்பிக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்றது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா பல்கலைக்கழகம் என ஏற்கனவே நாகப்பட்டினத்தில் மீன்வள பல்கலைக்கழகம் இருக்கிறது. விழுப்புரத்தில் பெயரளவிற்காக ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தார்கள். அங்கு எதுவுமே நடக்கவில்லை, அறிவித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும், ஆரம்பித்தார்கள் என்று சொல்ல முடியாது. இந்த பல்கலைக்கழகம் தேவையற்றது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கல்லூரிகளை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைத்து ஒரு இணைப்பு பல்கலைக்கழகமாக மாற்றியிருக்கிறோம்.
 
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்த சட்டமன்ற வளாகத்தையே அ.தி.மு.க. ஆட்சியில் மாற்றவில்லையா? போகிற நேரத்தில் அவசரத்திற்கு ஏதாவது பெயர் வைப்பார்கள், எதையும் செயல்படுத்துவது கிடையாது, பெயர் வைப்பது அ.தி.மு.க.வினருக்கு பேஷன். உயர்கல்வியின் வளர்ச்சியை கருதியே இது செய்யப்பட்டுள்ளதே தவிர பெயருக்காக செய்யப்பட்டது அல்ல. 4 மாவட்ட கல்லூரிகளையும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இணைப்பதை மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும் வரவேற்கிறார்கள்.அண்ணாமலை பல்கலைக்கழக ஊழலை விசாரிக்க ஏற்கனவே கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தகுதிக்குறைவானவர்களாக நியமிக்கப்பட்ட பேராசியர்கள் குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.கல்விச்சோலை முக்கிய செய்திகளை பார்க்க கீழ்கண்ட இணைப்புகளை கிளிக் செய்யுங்கள்.

Download | Click Here

What's App share  | Telegram Share

kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||

Popular Posts