Sunday, 25 July 2021

போட்டித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சிவில் நீதிபதிகளுக்கு பணிமூப்பு ஐகோர்ட்டு உத்தரவு

போட்டித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சிவில் நீதிபதிகளின் பணிமூப்பை நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இளநிலை சிவில் நீதிபதிகள் பணிக்கு 2009-ம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டு, நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இத்தேர்வில் வெற்றி பெற்று நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள், பணிமூப்பு பட்டியலை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பணிமூப்புக்கு இடஒதுக்கீட்டு கொள்கையை அமல்படுத்த சுழற்சி நடைமுறையை பின்பற்றுவதன் மூலம், தகுதியான இடஒதுக்கீட்டு விண்ணப்பதாரர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவர். போட்டித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணிமூப்பை நிர்ணயிக்க வேண்டும்.

2009-ம் ஆண்டுக்குப் பின் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளநிலை சிவில் நீதிபதிகள் பணிமூப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்.

தற்போதைய பணிமூப்பு அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்ட பதவி உயர்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம். எதிர்வரும் காலங்களில் திருத்தியமைக்கப்பட்ட பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒருவேளை 2 பேர் ஒரே மதிப்பெண்களை பெற்றிருந்தால், வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.கல்விச்சோலை முக்கிய செய்திகளை பார்க்க கீழ்கண்ட இணைப்புகளை கிளிக் செய்யுங்கள்.

Download | Click Here

What's App share  | Telegram Share

kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||

Popular Posts