Monday, 23 August 2021

அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய 4000000மாணவர்களின் கணினி அறிவியல் கல்வி மற்றும் 65,000 கும் மேற்பட்ட பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் குடும்பங்களின்வாழ்வாதாரத்தை காக்கவும் கோரிக்கைகள்



தமிழகத்தில் வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப நடைபெற்று கொண்டிருக்கும்  சட்டமன்ற கூட்டத்தொடரில் காகிதமில்லா பட்ஜெட்டை அறிமுகம் செய்து இந்தியளவில் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. 

மாண்புமிகு முன்னாள் முதல்வர் கலைஞர் ஐயா அவர்களால் தொடங்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் 6 முதல் 10 வகுப்பு வரை பாடப்புத்தகம்  வழங்கப்பட்டது. ஆட்சி மாற்ற காரணத்தினால்  இந்த பாடத்திட்டம் செயல்படுத்தாமல் முடக்கப்பட்டது. அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் கழிவுகளாக கருதப்பட்டு அகற்றப்பட்டுவிட்டன. 

தற்பொழுது புதிய பாடதிட்டத்தில்  கணினி அறிவியல் பாடம் பெயரளவில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. 

கணினி அறிவியல் பாடத்தை 6 முதல் 10 வகுப்பு வரை தனி பாடமாக  வழங்கி தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சியை உருவாக்கி 65000 ஆயிரம் கணினி ஆசிரியர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்க ஆவன செய்யுமாறு வேண்டுகின்றோம். 

ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர் வீதம் நியமனம் செய்து அரசுப் பள்ளியின் தரத்தை காக்க ஆவன செய்ய வேண்டுகின்றோம். 

இதன் மூலமாக ஏழை எளிய மாணவர்களும் கணினிக் கல்வியை மேம்படுத்த செய்யலாம்

💢 பி.எட்., கணினி ஆசிரியர்களுக்கு விரைவில் விடியல் ‼️

🎓 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகளின் பிரதான கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.

🎓 தலைமைச் செயலகத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி,  உயர்கல்வித்துறை , தகவல் தொழில்நுட்பத் துறை  மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

💻 முதலமைச்சர் அவர்கள் விரைவில் இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என  உறுதியளித்துள்ளார் 🙏

கல்விச்சோலை முக்கிய செய்திகளை பார்க்க கீழ்கண்ட இணைப்புகளை கிளிக் செய்யுங்கள்.

Download | Click Here

What's App share  | Telegram Share

kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||

Popular Posts