வருகின்ற 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தஞ்சையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி: வருகின்ற 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. தீபாவளி விடுமுறை முடிந்த பிறகு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் முடிவு செய்தால், அதன்படியே அனுப்பலாம். தமிழகத்தில் உள்ள 31,000 பள்ளிகளில் 34 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு கற்றல் இடைவெளியை குறைக்கும் நோக்குடன் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் பிரச்னை சரி செய்ய வழி பிறக்கும். இந்த திட்டம் உன்னதமான திட்டம். மாலை நேரத்தில் 5 முதல் 7 மணி வரை இந்த சிறப்பு வகுப்பு நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறனை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். இந்த சிறப்பு இல்லம் தேடி கல்வி திட்டத்தில் மாணவர்களுக்கு கற்றல் வகுப்பு எடுக்க விரும்பும் தன்னார்வலர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள அழைக்கிறேன். நேற்று வரை 50 ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். ஓரிரு நாளில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிறார் என்றார்.
கல்விச்சோலை முக்கிய செய்திகளை பார்க்க கீழ்கண்ட இணைப்புகளை கிளிக் செய்யுங்கள்.
Download | Click Here
- Flash News Today | Click Here
- DSE Announcement | Click Here
- Education News | Click Here
- Tamil Nadu News Updates | Click Here
- India News Updates | Click Here
- G.O Download | Click Here
- TNPSC News Updates | Click Here
- TRB News Updates | Click Here
- Employment News Updates | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||